தீ இன்னொரு மசாலா


நேற்று சன் பிக்சர்சினால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தீ வெளியானது. ட்ரைலரிலேயே சுந்தர்.சியை வாய்ஸ் சித்தார்த் கெட்டப்போல் நிர்வாணமாக காட்டியும் வழக்கறிஞர் ஒருவரை போலீஸ்காரரான சுந்தர்.சி மிரட்டுவதுபோலவவும் காட்டினார்கள். (இன்றிலிருந்து அந்த காட்சிகள் காட்டப்படவில்லை).

நீண்ட நாட்கள் திரையில் படம்பார்க்கவில்லை என்பதனால் இன்றைக்கு காலைக்காட்சிக்கு போனால் தியேட்டரில் கூட்டத்தையே காணவில்லை. போகும் வழியில் நான் கடவுள் திரையிடப்பட்ட தியேட்டரில் ஓரளவு சனம் நின்றது.

படத்தின் டைட்டிலில் தான் நமீதாவும் இன்னொரு மலேசியப் புதுமுகமும் நடிப்பதையே அறிந்துகொண்டேன். வடிவேல், விவேக் இருவரும் இல்லை என்றவுடனேயே சப்பென்று ஆகிவிட்டது. வையாபுரி வில்லனின் அல்லக்கையாக வருகின்றார் சிரிக்கவைக்கவில்லை. முதல்காட்சியே சுந்தர்.சியின் நிர்வாணம் தான். படத்தின் கதையைச்(?) சொல்லவிரும்பவில்லை.

முதல்பாதி சத்யராஜின் மகாநடிகன், அமைதிப்படை படங்களை அப்படியே காப்பி பண்ணியது. இயக்குனர் கிச்சா சத்யராஜ் ரசிகரோ தெரியவில்லை நன்றாக காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றார்.

நீதிமன்றக் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் நடித்த ஒருபடம் போல் சாட்சி சொல்பவர் ஊமை என எதிர்க்கட்சி வக்கீல் வாதம் செய்கின்றார். இந்தப்படத்திலும் வில்லன் சத்யராஜ் என நினைக்கின்றேன். படம் ஞாபகம் வரவில்லை.

சுந்தர்.சி ஆக்சனில் இறங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படம் எடுத்திருக்கின்றார்கள். ஆனாலும் அவருக்கு ஆக்சன் ஒத்துவரவேயில்லை. சிலவேளைகளில் இந்தப்படத்தில் விக்ரம் அல்லது அர்ஜீன் நடித்திருந்தால் ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கலாம். சுந்தர்.சி போலீஸ்காரரான பின்னர் வேட்டையாடு விளையாடு ராகவன் பாடல் போல் ஒரு பாடல் எடுத்திருக்கின்றார்கள். இந்தப் படத்தின் நகைச்சுவைக்காட்சியே இதுதான். கானமயிலாட பழமொழி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.


நமீதா ரசிகர்களுக்கு கிளுகிளுப்பான விருந்தையே தந்திருக்கின்றார். நீச்சல்க் குளக் காட்சியில் நீச்சல் உடைக்கு மேல் ஏன் இன்னொரு உடைபோட்டுக்கொண்டு நீந்துகின்றார் என்பதுதான் தெரியவில்லை. ருச்சிதேவி என்ற நடிகையாக வந்துபோகின்றார் அல்லது முழுத்திரையையும் ஆக்கிரமிக்கின்றார்.

நமீதாவுடன் சுந்தர்.சி நடிக்கும் காட்சிகள் குஷ்வுவின் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்படியொரு கெமிஸ்ரி இருவருக்கிடையில் இந்தப் படத்தில். நமீதாவுக்காக இந்தமொக்கைப் படத்தைப் பார்க்கலாம் என வெளியில் வந்தவர்கள் காதுபடக் கூறினார்கள்.

இன்னொரு நடிகையான மலேசிய இறக்குமதி இரண்டுபாடல்களுக்கு ஆடுகின்றார் நாலு வரி வசனம் பேசுகின்றார், அவ்வளவுதான். நடிகைக்குரிய எந்தவொரு அறிகுறியும் அவரிடம் இல்லை. தமிழ் சினிமாவில் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

தளபதி தினேஷ் சண்டைக்காட்சிகளில் நன்றாக உழைத்திருக்கின்றார். டாக்டர் விஜயின் சண்டைகள் போல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக சண்டை இல்லாதது கொஞ்சம் ஆறுதல்.

இசை ஸ்ரீகாந்த் தேவா முதல் பாடலில் தந்தை பெயரைக் காப்பாற்றிவிட்டார், வேறை என்ன தேவாவின் கானாப்பாடல் சாயலில் வரிகளைமாற்றி ஒரு பாடல். ஏனைய பாடல்கள் கேட்கும்
ரகமாகவே இல்லை.

பல வசனங்கள் ஆளும்கட்சிக்கு எதிராகவே இருக்கின்றன. இதயம் இனிக்கமுன்னர் தயாரித்த படம்போல இருக்கின்றது. இறுதிக்காட்சியில் சுந்தர்.சி வசனம் பேசியே கொல்கின்றார். தலைவாசல் விஜயும் தானும் வசனம் பேசிவதில் சளைத்தவர் இல்லை என்பதுபோல் அதிகமாகவே நடிக்கின்றார். கெட்டவார்த்தைகள் சகஜமாக வந்துபோகின்றன.

சூப்பர் ஸ்டாரின் கலக்கல் படமான தீயின் பெயரைவைத்தது ஏனோ தெரியவில்லை. படத்திற்க்கு தீ என்ற பெயரைவிட இரத்தம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் அவ்வளவு இரத்தக்களரி. கமலின் சண்டியர் பெயருக்கு அரிவாள் இரத்தம் வன்முறை என கூச்சலிட்டவர்கள் இப்படையான வன்முறை நிறைந்த படங்கள் கண்களுக்குத் தெரியாது.

சன் பிக்சர் மொக்கைப்படம் எடுப்பது என்றே சபதம் செய்திருக்கின்றார்கள் போல் தெரிகின்றது. வரும்வாரங்களில் இவர்களின் டாப் டென்னில் தீ முதல் இடம் பிடிப்பது என்னவோ உண்மைதான்.

படிக்காதவன், தெனாவட்டு, வில்லுப் படங்களை விட தீ ஓரளவு பரவாயில்லை.

தீ புகைமட்டும்.  


நமீதா பட உதவி விகடன்.கொம்

6 கருத்துக் கூறியவர்கள்:

தமிழ் மதுரம் சொல்வது:

முதல்பாதி சத்யராஜின் மகாநடிகன், அமைதிப்படை படங்களை அப்படியே காப்பி பண்ணியது. இயக்குனர் கிச்சா சத்யராஜ் ரசிகரோ தெரியவில்லை நன்றாக காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றார். //

நக்கல் அருமை....

தமிழ் மதுரம் சொல்வது:

சுந்தர்.சி ஆக்சனில் இறங்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படம் எடுத்திருக்கின்றார்கள். ஆனாலும் அவருக்கு ஆக்சன் ஒத்துவரவேயில்லை. சிலவேளைகளில் இந்தப்படத்தில் விக்ரம் அல்லது அர்ஜீன் நடித்திருந்தால் ஓரளவு ஏற்றுக்கொண்டிருக்கலாம். சுந்தர்.சி போலீஸ்காரரான பின்னர் வேட்டையாடு விளையாடு ராகவன் பாடல் போல் ஒரு பாடல் எடுத்திருக்கின்றார்கள். //

அது சரி குரங்கின் கையிலை பூமாலையைக் குடுத்தால் என்னாவது?? எல்லோரும் அக்ஸனிலை இறங்கினால் எப்பிடியப்பா தாங்க முடியும்??

தமிழ் மதுரம் சொல்வது:

நமீதாவுடன் சுந்தர்.சி நடிக்கும் காட்சிகள் குஷ்வுவின் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்படியொரு கெமிஸ்ரி இருவருக்கிடையில் இந்தப் படத்தில். நமீதாவுக்காக இந்தமொக்கைப் படத்தைப் பார்க்கலாம் என வெளியில் வந்தவர்கள் காதுபடக் கூறினார்கள்//

ஆங்,,,,,,,,,,,,,,,,தாங்க முடியவில்லை.........

தமிழ் மதுரம் சொல்வது:

ஏனோ தெரியவில்லை...இப்போதைய படங்கள் இந்த வட்டத்திற்குள் தான் பயணிக்கின்றன....எப்போது தான் இந்த சமூகம் மாறுமோ??

விமர்சனம்...நறுக்கென இருந்தது...

தொடருங்கள்...

Muruganandan M.K. சொல்வது:

படிக்காதவன் மட்டுமே பார்த்தேன். விவேக் ஜோக்ஸ் மட்டும் ஓரளவே சகிக்க முடிந்தது.
சுந்தர் சீயின் தீ பார்க்க தைரியமில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

கமல் டொக்டர் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
டொக்டர் படிக்காதவன் கொஞ்ச நேரமாவதுபார்த்த உங்கள் பொறுமைக்கு பாராட்டுக்கள்.