வீழ்ந்தது இந்தியா

இன்று மெல்பேர்னில் நடைபெற்ற 20க்கு 20 போட்டியில் உலக சாம்பியன் இந்தியாவை மிக இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு கால்கோளாக இன்றைய 20க்கு 20 போட்டி அமைந்துள்ளது.

சீனியர்கள் (ஹர்பயன் சிங் தவிரகாயம் காரணமாக யுவராஜ் சிங் இன்றைய போட்டியில் விளையாடவில்லை)யாருமற்ற நிலையில் இளம் வீரர்களுடன் (பலர் 20க்கு 20 போட்டியில் விளையாடியவர்கள்) களம் புகுந்த இந்தியா நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட விரும்பியது. தற்போது அவ்வளவு ஃபார்மில் இல்லாத சேவக்கும் கம்பீரும் களம் புகுந்தனர். முதலாவது ஓவரிலேயே தேவையற்ற ஓட்டம் ஒன்றை எடுப்பதற்க்காக ஓடி சேவாக் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். என்ன காரணத்துக்காக இந்திய கிரிக்கெட் சபை இவரைத் திரும்ப திரும்ப ஆட்டத்தில் சேர்க்கிறார்களோ வெங்சகாருக்குத்தான் வெளிச்சம்.

அடுத்த பிராக்கனின் ஓவரில் கம்பீரும் 9 ஓட்டங்களுடன் ஹோப்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஸ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார் பின்னர் மூன்றாவது ஓவரில் பிரட் லீயின் பந்தில் போல்ட்டாகி 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். நான்காவது ஓவரில் உத்தப்பா ஒரு ஓட்டம் போதும் என்ற மனநிலையில் பிராக்கனின் பந்துவீச்சில் டேவிட் ஹசியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவரில் இந்தியா எடுத்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 20.

பின்னர் ரோகித் சர்மாவும் அணியின் தலைவர் டோணியும் சிறிது நேரம் (3 ஓவர்கள்) விளையாடினார்கள். ஏழாவது ஓவரில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களுடன் ஹாப்சின் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். டோணியுடன் இணை சேர்ந்த பதான் கொஞ்சம் அடித்து ஆடத்தொடங்க அதுவரை டெஸ்ட் மேட் ஆடிய டோணி 9ஓட்டங்களுடன் டேவிட் ஹசியின் பந்துவீச்சில் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டோணி இன்னமும் டெஸ்ட் மேட்ச் மனநிலையில் இருந்து திரும்பவில்லை போல் தெரிகின்றது. டோணி எதிர்கொண்ட பந்துகளின் எண்ணீக்கை 27 எடுத்த ஓட்டங்கள் வெறும் 9 தான்.

அதன் பின்னர் ஆடவந்த பிரவீன் குமார் என்ற அறிமுக வீரரும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க. சர்ச்சை நாயகன் ஹர்பஜன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஹர்பஜனும் சைமன்ட்ஸ்சும் அருகருகில் சந்தித்தார்கள் ஆனால் எந்தவிதமான சர்ச்சைகளும் ஏற்படவில்லை. சைமண்ட்ஸ் தனது பொக்கட்டில் ரெக்கோடர் ஒன்று வைத்திருந்தார். ஹர்பயன் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணியினருக்கு தன்னைக் கண்டாலே பயம் என அறிக்கை விட்ட ஸ்ரீ சாந் வந்தார் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றுவிட்டார். ஹர்பயன் ஸ்ரீ சாந் இருவரும் வோஜசின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இறுதியாக‌ ப‌தான் மீண்டும் பிராக்க‌னின் ப‌ந்து வீச்சில் கில்கிறிஸ்டிட‌ம் பிடிகொடுத்து 26 ஓட்டங்களுடன் ஆட்ட‌மிழ‌ந்தார்.இந்திய‌ அணியில் ப‌தான் ம‌ட்டும் இரட்டை இல‌க்க‌ ஓட்ட‌ங்க‌ள் எடுத்தார். இந்திய‌ அணி மொத்த‌மாக‌ 74 ஓட்ட‌ங்க‌ளுக்கு 17.3 ஒவரில் ஆட்ட‌மிழந்த‌து. கென்யா அணி க‌ட‌ந்த‌ வ‌ருட‌ 20 க்கு 20 உல‌க‌ கிண்ண‌ப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக‌ எடுத்த‌ 73 ஓட்ட‌ங்க‌ள்தான் அதிகுறைந்த‌ மொத்த‌ ஓட்ட‌ எண்ணிக்கை. அத‌னை ஒரு ஓட்ட‌த்தால் தாண்டி இந்த‌ச் சாத‌னையை முறிய‌டிக்க‌ ப‌தானின் துடுப்பாட்ட‌ம் விட‌வில்லை. இல்லையென்றால் இச் சாத‌னை இந்தியாவிற்க்கு கிடைத்திருக்கும்

ஆரம்பவீரர்களான கில்கிறிஸ்டும் தலைவர் கிளார்க்கும் இந்த இலக்கை இலகுவில் எட்டிவிடுவார்கள் எனப் பலர் நினைத்தபோதும் புதுமுக வீரர் பிரவீன் குமாரின் பந்துவீச்சில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த கில்லி அடுத்த பந்தில் கம்பீரிடம் பிடிகொடுத்து 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிளார்க் கொடுத்த இலகுவான ஒரு பிடியை ஹர்பஜனும் பதானும் தம்மிடையே எந்த பேச்சுவார்த்தையும் இன்றி ஒருவரும் ஒருவருடன் மோதித் தவறவிட்டுவிட்டார்கள். 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகன் விருது ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் சேவாக்கை ரன் அவுட்டாக்கியதும் திறம் பட அணியை வழி நடத்திய கிளார்க்குக்கு கிடைத்து.

இந்தியாவின் தவறுகள்:
1. இதுவரை(இந்தப்போட்டி தவிர) 2 தடவை ஆஸியுடன் 20க்கு 20 போட்டியில் மோதி இரண்டுத்டவையும் வெற்றி பெற்றதனால் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்ற தலைக்கனம்.
2. சச்சினை சும்மா வைத்திருந்தது.
3. வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்.
4. இளம் வீரர்களால் எதனையும்சாதிக்க முடியும் என்ற இறுமாப்பு. ஆஸியில் பல அனுபவ வீரர்கள் விளையாடினார்கள்.
5. டோணியின் சவடால் பேச்சு. இந்த ஆட்டத்திற்க்கு முன்னர் இந்தப் போட்டி ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரு பயிற்சிப்போட்டியாக அமையும் எனக் கூறியது.

பொறுத்திருந்துபார்ப்போம் ஒரு நாள் போட்டிகளில் டோணியின் இளமை அணி என்ன செய்யப்போகின்றது என்பதை.

2 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

நீங்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்பவரா? அல்லது ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால் எட்டிப்பார்த்துவிட்டு எழுதுபவரா?

ஏன் கேட்கிறேன் என்றால் ஷெவாக் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் உறுத்துகின்றன.
அண்மையில் மிகநல்ல ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று விளையாடிய அணியில் ஷெவாக் மட்டுமே அண்மையில் தொடர்ச்சியாக நல்ல எண்ணிக்கையில் ஓட்டங்கள் எடுத்தவர். அதுவும் மிகவேகமான ஓட்டங்கள். ஒருநாட் போட்டியில் எடுப்பதுபோன்று டெஸ்ட் போட்டியில் ஓட்டங்கள் குவித்திருந்தார். ஒரு கிழமைக்கு முன் நடந்த இறுதியாட்டத்தில் அருமையான சதமொன்றையும் அடித்திருந்தார்.
இந்நிலையில் ஷெவாக் பற்றி உங்கள் கூற்று, ஏதோ பழைய ஆத்திரத்தில் எழுதிய குருட்டுத்தனமான வசையாகவே படுகிறது.

** சச்சின் இந்த 20-20 போட்டியில் கலந்துகொள்ளாமல் இருப்பதே அவருக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. அதை உணர்ந்ததால்தான் அவரே விலகிக்கொண்டார் (என்று டோணி சொல்கிறார்).

வந்தியத்தேவன் சொல்வது:

அனானி நான் குறிப்பட்டது சேவாக்கின் ஒரு நாள் 20க்கு20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் சதமடித்தவர் என்பது தெரியும். இவர் பலகாலமாக ஒரு நாள் போட்டிகள் 20க்கு 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பது பலருக்கும் தெரியும். முடிந்தால் வில் செய்துபார்க்கவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.