லெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்

நண்பர் சந்ரு என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சந்ருவுக்கு நன்றிகள்

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்தவர் : லெனின்பிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்

2 . எழுத்தாள‌ர்

பிடித்தவர் : சுஜாதாபிடிக்காதவர் : ரமணிசந்திரன்


3. க‌விஞ‌ர்

பிடித்தவர்: தபூசங்கர் (இவரின் காதல் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும்)பிடிக்காதவர் : மொழிக்கொலை செய்யும் கவிஞர்கள்

4. பாடகர்

பிடித்தவர் : கே.ஜே.ஜேசுதாஸ்பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது )


5. பாடகி

பிடித்தவர் : சித்ராபிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி

6. இய‌க்குன‌ர்

பிடித்தவர் : ஷங்கர்பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை


7. நடிகர்

பிடித்தவர் : கமல், கமல், கமல் (அனைவருக்கும் தெரியுமே)பிடிக்காதவர் : பெரும்பாலும் எல்லா நடிகரையும் பிடிக்கும்


8. நடிகை

பிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்பிடிக்காதவர் : த்ரிஷா

9. விளையாட்டு

பிடித்தது : Eat Cricket, Drink Cricket, Sleep Cricketபிடிக்காதது : WWF

10. பேச்சாளர்

பிடித்தவர் : கம்பவாரிதி இ.ஜெயராஜ்

பிடிக்காதவர்: பேச வந்த விடயத்தை விட்டுவிட்டு எதையோ பேசுபவர்கள்


ஏற்கனவே சில தொடர்விளையாட்டுகளில் சிலரை அழைத்து இன்னும் அவர்களால் அந்த விளையாட்டு விளையாடப்படாததால் நான் யாரையும் அழைக்க விரும்பவில்லை.

36 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//////பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது ) ///

வந்தி ரகுமானின் பாடல்களில் உதித் தமிழ் கொலை செய்வது இல்லபை என்றே கூறலாம். இவர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாடும் போது தான் அதிகமாக வசனங்களை பிழை விட்டுள்ளார்.

ARV Loshan சொல்வது:

நல்ல தெரிவுகள். :)
எனக்கு உங்கள் தெரிவுகளில் அநேகரைப் பிடிக்கும்.. எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)

தொடர்வோரில் சதம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

maruthamooran சொல்வது:

////LOSHAN சொல்வது:

நல்ல தெரிவுகள். :)

எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)////

எனக்கும் தான்

kethees சொல்வது:

//பிடித்தவர்: தபூசங்கர் (இவரின் காதல் கவிதைகள் ரொம்பவே பிடிக்கும்)//

எனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்..
/////"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்/////

http://www.facebook.com/group.php?gid=91314740453

balavasakan சொல்வது:

என்னதான் ரமணிசந்திரன் ஒரே கதையை திருப்பி திருப்பி சொன்னாலும் சொல்லும் விதம் அழகு.....

sanjeevan சொல்வது:

நல்லதெரிவுகள்
தமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்
கவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.
தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுவது விற்பனைத்தமிழ் ஆகவே உதித்நாராயணனை மன்னிக்கலாம் தானே
அவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :)

Subankan சொல்வது:

சத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, என்னுடன் சில விடயங்கள் ஒத்துப்போகின்றன. எழுதியவுடன் பாருங்களேன்!

Unknown சொல்வது:

இது திட்டமிட்ட சதி....
என்ர உது பற்றிய பதிவ நான் பதிவிட முன்னரே கொப்பி அடிச்சிற்றியள்....
ஹி ஹி....

//பிடிக்காதவர் : உதித் நாராயணன் (ரகுமான் செய்த செய்கின்ற மாபெரும் தவறு இவரை அடிக்கடி பாடவைப்பது )//

ஓம்...
உரித்நாராணனண் (வேண்டுமென்று தான் எழுத்துப் பிழை.) பாடியதில் சகானாப் பாடல் தான் ஓரளவுக்குப் பரவாயில்லை....

என்ன பட்டணம் பாடலில் காசு என்பதை சீன மொழியில் தான் உச்சரிக்கிறார்...

எஸ்.ஜே.யேசுதாஸ் தான் எனதும்...

எப்பிடி இப்பிடி ஒரே விருப்பங்கள் பெரும்பாலும்? (நடிகைகளைத் தவிர... ஹி ஹி...)

தொடர்வோரில் சதம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....

கமல் கமல் கமல் தான்....

Unknown சொல்வது:

சொல்ல மறந்துவிட்டேன்...
கமலின் படம் அற்புதம்....
மிக இளமையாக இருக்கிறது....

ஏனைய படங்களும் போட்டு பதிவு அழகாக இருக்கிறது அண்ணா....

Unknown சொல்வது:

// sanjeevan said...
நல்லதெரிவுகள்
தமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்
கவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.
தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுவது விற்பனைத்தமிழ் ஆகவே உதித்நாராயணனை மன்னிக்கலாம் தானே
அவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :) //

இதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என்று நிறையக் குழப்பம்....
ஏற்கனவே நான் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய விரும்புவதாக ஓர் குற்றச்சாட்டு...

ஆனாலும்,
சகோதரே...
கொச்சைத் தமிழ் என்பது குழந்தை கதைப்பதற்கும் பெரியவர்கள் கதைப்பதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. (இந்தச் சொல்லுக்கு மாற்றீடு கண்டுபிடிக்கோணும். ;) )

உங்களுடைய பெயரை சுன்ஜீவன் என்று யாரும் கூப்பிட்டால் உங்களுக்கு பிடித்தமாக இருக்குமா?
இல்லைத் தானே?
அதே போலத் தான் தமிழும்...
அதற்கான உச்சரிப்புக்கள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும்.

அந்தத் தமிழ் உச்சரிப்பை நாகரிகமாகக் கருதாதீர்கள்...
உங்கள், எங்கள் வயது சந்ததி பிழையான எண்ணங்களுடன், கொள்கைகளுடன் வாழப் பழக்கப்படுகிறது...

தயவுசெய்து சிறிது யோசியுங்கள்...
இது எனது அன்பு வேண்டுகோள்....

கலையரசன் சொல்வது:

எனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு 10து...

Admin சொல்வது:

நல்ல தெரிவுகள்....

//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//

எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது.


தபுசங்கரின் கவிதை அருமை

root சொல்வது:

//6. இய‌க்குன‌ர்
பிடித்தவர் : ஷங்கர்//
இப்படி இருந்தால் நல்லா இருக்கும்...
past:-Manirathanam
Present:-Shankar
Future:-Gowtham

இது எப்படி இருக்கு....

but
//
பிடிக்காதவர் : ரமணிசந்திரன்//
உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....

//
பிடித்தவர் : ஐஸ்வர்யா ராய்//
நல்ல வேளை
அப்ப சுருதி எனக்கு தான்....

//
பிடிக்காதவர் : மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் //
அப்பிடி எண்டா?

பேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...

Unknown சொல்வது:

2ஃஃசந்ரு said...
நல்ல தெரிவுகள்....

//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//

எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //

உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....

Admin சொல்வது:

//கனககோபி said...
2ஃஃசந்ரு said...
நல்ல தெரிவுகள்....

//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//

எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //

உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//


மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.

என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்

sanjeevan சொல்வது:

நன்றி கோபி :)
கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.
ஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.
எனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.

Unknown சொல்வது:

// சந்ரு said...
//கனககோபி said...
2ஃஃசந்ரு said...
நல்ல தெரிவுகள்....

//பிடிக்காதவர் : ஸ்ரீலேகா, மாதங்கி//

எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //

உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//


மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.

என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம் //

ஹலோ...
திருத்தம்...
எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....
கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

வந்தி ரகுமானின் பாடல்களில் உதித் தமிழ் கொலை செய்வது இல்லபை என்றே கூறலாம். இவர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாடும் போது தான் அதிகமாக வசனங்களை பிழை விட்டுள்ளார்.//

ம்ம்ம் இருக்கலாம் ஆனால் சகாரா பாடலை இவரை விட விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
நல்ல தெரிவுகள். :)
எனக்கு உங்கள் தெரிவுகளில் அநேகரைப் பிடிக்கும்.. எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)//

என்ன ஐஸ்வர்யா ஆண்டியா? உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள். ஐஸ் என்றைக்கும் இளம் பெண்தான்

//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//

நன்றிகள் நன்றிகள்

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...

நல்ல தெரிவுகள். :)//

நன்றிகள் மருதமூரான்

//எனக்கும் முன்பு ஐஸ்வரியா ஆண்டியைப் பிடிக்கும்.. இப்போ இல்லை.. ;)////

எனக்கும் தான் //

உங்கள் இருவரின் கண்களையும் பரிசோதிக்கவேண்டும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// kethees said...
எனக்கும் இவரை ரொம்ம பிடிக்கும்..//

நன்றிகள் கேதீஸ், அந்த குழுமத்தில் இணைந்துவிடுகின்றேன்

வந்தியத்தேவன் சொல்வது:

// Balavasakan said...
என்னதான் ரமணிசந்திரன் ஒரே கதையை திருப்பி திருப்பி சொன்னாலும் சொல்லும் விதம் அழகு.....//

அப்படியா ஏனோ எனக்கு அவரைப் பிடிக்காது

வந்தியத்தேவன் சொல்வது:

//sanjeevan said...
நல்லதெரிவுகள்//

நன்றிகள் சஞ்ஜீவன்

//தமிழை கொலை செய்யும் அனைவருக்கும் எதிராக இருக்கிறீர்கள்//
அப்படியில்லை மொழிப் பற்று அனைவருக்கும் வேண்டும்.

//கவிஞர் வாலி கூட சொல்லியிருந்தார் ஒன்று கற்பனைத்தமிழ் மற்றையது விற்பனைத்தமிழ் என்று.//

ஆமாம் ஆமாம் வாலியின் சினிமாப் பாடல்களை விட எனக்கு அவரின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும்,.

//அவரது கொச்சைத்தமிழ் நல்லாத்தானே இருக்கு :)//
ஐயோ நல்லாஇருக்கா? தமிழ் மொழிமேல் அவர் புல்டோசர் விடுகின்றார். ஹிந்தியில் இப்படி கொச்சையாக பாட விடுவார்களா?

வந்தியத்தேவன் சொல்வது:

// Subankan said...
சத்ததிற்கு வாழ்த்துகள் அண்ணா, என்னுடன் சில விடயங்கள் ஒத்துப்போகின்றன. எழுதியவுடன் பாருங்களேன்!//

நன்றிகள் சுபாங்கன், ஆமாம் உங்களை நேரில் கண்டு பேசியபோதே உணர்ந்திட்டேன் பல விடயங்கள் ஒத்துப்போகும் என ஹிஹிஹி

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
இது திட்டமிட்ட சதி....
என்ர உது பற்றிய பதிவ நான் பதிவிட முன்னரே கொப்பி அடிச்சிற்றியள்....
ஹி ஹி....//

ஹாஹா எனக்கு தெரியும் நீங்களும் என்னைப்போல் ஒருவன் என.

//ஓம்...
உரித்நாராணனண் (வேண்டுமென்று தான் எழுத்துப் பிழை.) பாடியதில் சகானாப் பாடல் தான் ஓரளவுக்குப் பரவாயில்லை....//

ஆமாம் ஆமாம் ஆனால் சகானாவை விஜய் ஜேசுதாஸ் அழகாப் பாடியிருந்தார்.

//என்ன பட்டணம் பாடலில் காசு என்பதை சீன மொழியில் தான் உச்சரிக்கிறார்...//

ஹாஹா நல்லதொரு அவதானிப்பு

//எப்பிடி இப்பிடி ஒரே விருப்பங்கள் பெரும்பாலும்? (நடிகைகளைத் தவிர... ஹி ஹி...)//

எல்லாம் ஒரே ராசி என்பதால்

//தொடர்வோரில் சதம் பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....//

நன்றிகள் தம்பி

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
சொல்ல மறந்துவிட்டேன்...
கமலின் படம் அற்புதம்....
மிக இளமையாக இருக்கிறது....//

அவர் என்றைக்கும் இளமை இதோ இதோ தான்.

//ஏனைய படங்களும் போட்டு பதிவு அழகாக இருக்கிறது அண்ணா....//

படம் போடும் ரகசியம் நேரில் சந்திக்கும் போது சொல்கின்றேன் :-)

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...

இதற்குப் பதிலிடுவதா வேண்டாமா என்று நிறையக் குழப்பம்....
ஏற்கனவே நான் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலமடைய விரும்புவதாக ஓர் குற்றச்சாட்டு...//

சூடு கண்ட பூனை. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.

//கொச்சைத் தமிழ் என்பது குழந்தை கதைப்பதற்கும் பெரியவர்கள் கதைப்பதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. (இந்தச் சொல்லுக்கு மாற்றீடு கண்டுபிடிக்கோணும். ;) )//

அடுத்த சந்திப்பில் ஒரு பிரேரணையாக கொண்டுவாருங்கள்/

//அந்தத் தமிழ் உச்சரிப்பை நாகரிகமாகக் கருதாதீர்கள்...
உங்கள், எங்கள் வயது சந்ததி பிழையான எண்ணங்களுடன், கொள்கைகளுடன் வாழப் பழக்கப்படுகிறது...

தயவுசெய்து சிறிது யோசியுங்கள்...
இது எனது அன்பு வேண்டுகோள்....//

நல்லதொரு பதில் கோபியின் சிந்தனைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

5:59 PM, November 10, 2009

வந்தியத்தேவன் சொல்வது:

//கலையரசன் said...
எனக்கும் பிடிச்சிருக்கு 10க்கு 10து...//

நன்றிகள் கலையரசன்

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...
நல்ல தெரிவுகள்....//

நன்றிகள் சந்ரு

//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //

அவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.

//தபுசங்கரின் கவிதை அருமை//
அவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...
நல்ல தெரிவுகள்....//

நன்றிகள் சந்ரு

//எனக்கு மாதங்கியை பார்க்கவே பிடிக்காது. //

அவர் பாடும் போது முகத்தை கோணலாக்கி அசிங்கியமாக பாடுவார். கொலைவெறிதான் வரும் இதனை ஒரு ஸ்டைலாக எண்ணியுள்ளாரரோ தெரியவில்லை.

//தபுசங்கரின் கவிதை அருமை//
அவரின் தேவதைகளின் தேவதை வாசித்துப்பாருங்கள் காதல் மயப்படுவீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//root said...
//6. இய‌க்குன‌ர்
பிடித்தவர் : ஷங்கர்//
இப்படி இருந்தால் நல்லா இருக்கும்...
past:-Manirathanam
Present:-Shankar
Future:-Gowtham

இது எப்படி இருக்கு....///

நல்லாத்தான் இருக்கு இதுதான் உண்மையும் கூட‌

//உங்கள் இடம் இருந்து எதிர் பார்க்க வில்லை....//

ஏன் நீ அவரின் ரசிகனோ

//நல்ல வேளை
அப்ப சுருதி எனக்கு தான்....//

எந்த சுருதி ருத்ரா மாவத்தை சுருதிதானே ஹிஹிஹி

//அப்பிடி எண்டா?//
இதெல்லாம் வெளியில் சொல்லமுடியாது

//பேச்சாளரும் எதிர் பார்த்த ஆள் இருந்த நல்ல இருக்கும்...//
புரிகின்றது ஆனால் சொல்லமுடியாது

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...
உங்கள யார் சந்ரு அண்ணா மாதங்கியப் பாக்கச் சொன்னது.. பாடுறத மட்டும் கேளுங்கோ... ஹி ஹி ஹி....//

ஐயோ சிலவேளைகளில் அவர் பாடுவதும் சகிக்கமுடியாது.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...

மாதங்கி பாடுகிறார்? கேட்கணும் என்று நினைத்தாலும் அவரின் தலைக்கனத்தைப் பார்த்தால் இவரது பாடல்களைக் கேட்கவே கூடாது எனத்தோன்றுகிறது.//

ஆமாம் அவரின் தலைக்கனத்தைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன்.

//என்ன செய்ற பார்க்கவேண்டிய வயசு. ஆனா பார்த்தா சகிக்க முடியல.... உங்களுக்குத்தான் பார்க்கக்கூடிய வயசு போய்விட்டதே. போறாமைப்படவேண்டாம்//

என்ன பார்க்கவேண்டிய வயசா? ஹாஹா நல்ல ஜோக்

வந்தியத்தேவன் சொல்வது:

// sanjeevan said...
நன்றி கோபி :)
கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.
ஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.
எனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.//

அப்பாடா ஒருமாதிரி கோபியும் சஞ்ஜீவனும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...
திருத்தம்...
எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....
கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//

ஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...
திருத்தம்...
எனக்கு பாக்க வேண்டிய வயசு வரேல....
கதைக்கும் பொது கவனமாகக் கதைக்கோணும்...//

ஐயோ ஐயோ உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லைத்தான் (பார்க்க வேண்டிய) ஆனால் உங்கள் உருவத்திற்க்கு எத்தனை வயசு தம்பி ஆனால் முகம் பால்வடியும் முகம் தான் அதனால் தான் இன்னும் பபாவாக இருக்கின்றீர்கள்.