இலங்கைப் பதிவர் சந்திப்பு

முதலாவது சந்திப்பின் தித்திப்பான அனுபவங்கள் மறையும் முன்னர் இதோ இன்னொரு இனிமையான பதிவர் சந்திப்பு. முதலாவது சந்திப்பில் அறிமுகத்துடன் சில விடயங்கள் மட்டுமே எம்மால் கலந்துரையாடப் பட்டதனால் இரண்டாவது சந்திப்பில் பல காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்படுவிருக்கின்றன. முதல் சந்திப்பை தவறவிட்ட நண்பர்களையும் ஏனைய நண்பர்களையும் சந்திக்க நல்லதொரு வாய்ப்பு.இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
  • கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
  • கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
  • கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
  • உங்களுக்குள் உரையாடுங்கள்

உங்களின் வருகையை முற்கூட்டியே ஏற்பட்டுக்குழுவினர்களிடம் தெரிவிக்கவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவில் கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகிய நண்பர்கள் கலக்கவிருக்கின்றார்கள்.

9 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

அப்படியே நண்பர்கள் பதிவர் சந்திப்புச் சம்பந்தமான அசையும் படங்களை தங்கள் தங்கள் வலைப்பதிவுகளில் html குறிகளை பதிப்பதன் மூலம் இட்டால் நன்றாக இருக்கும்....

படங்களுக்கு http://projects.techt3.com/files/itps2/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்....

சந்திப்புப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா....

இது பதிவர்களுக்கு பதிவர்களால் நடத்தப்படும் சந்திப்பு என்பதால் இது எமது நிகழ்வு...
அனைவரும் ஒத்துழைத்து சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை உண்டு....

வாருங்கள் நண்பர்களே சந்திப்போம்....

ஆயில்யன் சொல்வது:

//உங்களின் வருகையை முற்கூட்டியே ஏற்பட்டுக்குழுவினர்களிடம் தெரிவிக்கவும்.///

உள்ளேன் ஐயா! :)

myspb சொல்வது:

இலங்கை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்கள் கலக்குங்கள் அன்பர்களே.

maruthamooran சொல்வது:

//உங்களின் வருகையை முற்கூட்டியே ஏற்பட்டுக்குழுவினர்களிடம் தெரிவிக்கவும்.///

உள்ளேன் ஐயா! sir

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

கண்டிப்பாக கலந்து கொள்கின்றோம் ஐயா

என்றும் அன்புடன் கரன்... சொல்வது:

Present Sir...

Subankan சொல்வது:

சந்திப்புக்கான தினத்துக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்

கருணையூரான் சொல்வது:

அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறது..அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

கானா பிரபா சொல்வது:

கலக்குங்கப்பா