மெற்ரோ நியூஸில் வந்தியத்தேவன்.

மெற்ரோ நியூஸில் வந்தியத்தேவன்.
இன்றைய(23.01.2008) மெற்ரோ நியூஸில் வெப் சைட் என்ற பகுதியில் எனது வலையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். மெற்ரோ நியூசுக்கு நன்றிகள்.

அண்மையில் நண்பர் ஒருவர் எனது புனை பெயரின் காரணத்தைக் கேட்டிருந்தார். ஏற்கனவே வலையில் என்னுடைய பெயரையுடைய மூன்று பேர்கள் எழுதுகின்றார்கள் நாலாவதாக அவர்களுடன் சேர்ந்து நான் பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சிறுவயதில் நான் ரசித்துப் படித்த வீரபுருஷன் வந்தியத்தேவனின் பெயரை என் புனைபெயராக வைத்துள்ளேன். வந்தியத்தேவன் போல் வீரம் இல்லாவிட்டாலும் அவரைப்போல் அடிக்கடி ரகளை செய்யும் குணம் எனக்கு இருக்கிறது.

4 கருத்துக் கூறியவர்கள்:

Muruganandan M.K. சொல்வது:

செய்தி அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். பத்திரிகை பார்க்கவில்லை. இணையத்தில் பார்க்கமுடியுமா?

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் டொக்டர். இணையத்துல் மெற்ரோ நியூஸ் வருவதில்லை நாளை நான் ஸ்கேன் செய்து அந்தப் பகுதியைப் பிரசுரிக்கின்றேன்.

கானா பிரபா சொல்வது:

வாழ்த்துக்கள்

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி. நான் பத்திரிகையை நேற்றுப் பார்த்தேன். ஆனால் நீங்கள் பதிவிட்டிருக்கவில்லை. உங்களுக்கு சொல்லுமாறு மயூரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். வந்தியத்தேவனின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் செயல்வீரமும் அந்தப்பாத்திரத்தை எம்மை அறியாமலேயே விரும்பச்செய்யும். இந்த புனைப்பெயர் கொண்டு மேலும் சாதியுங்கள்.
ஈழத்து வலைப்பதிவாளர்கள் இப்போதுதான் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்படுத்தக் களம் இல்லாத வெளிப்படையாக சொல்லமுடியாத நிறையவிடயங்களை இங்குதானே பகிர்கிறோம் வந்தி? வாழ்த்துக்கள் சாதனைகள் தொடரட்டும். நம்நாட்டு வலைப்பதிவாளர்கள் சார்பில் மெட்ரோவுக்கும் நன்றிகள்.