சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ

சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.

தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.

அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.

வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.

பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.

சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.

சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.

சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.


கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.

கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ

"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.

சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.

ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.

ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.

"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.

கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.

19 கருத்துக் கூறியவர்கள்:

ஆதிரை சொல்வது:

:-)

Vathees Varunan சொல்வது:

ஆஹா...அருமை அருமை...நான்கூட இவ்வளவுநாளும் சித்தூ கோக்தான் குடிக்கிறார் என்று நினைச்சுக்கொண்டு இருந்தேன் இப்பதானே தெரியுது அது கோக் இல்லை பியர் என்று...ஹி...ஹி... இந்தப்பதிவுக்கு பின்னூட்டமாக சிமைலி போட நான் ஒன்றும் அரியகுமார் சிறீதரன் இல்லை :P :P

Vathees Varunan சொல்வது:

:P

Subankan சொல்வது:

//சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன்//

வாவ், நைஸ் நேம். ஹரிகரன் நல்லா டூயட் எல்லாம் பாடுவாரே?

பி.கு - இந்தப் பின்னூட்டத்தில் நான் ஸ்மைலி போடவில்லை

ஆதிரை சொல்வது:

//அரியகுமார் சிறீதரன் இல்லை //

வதீஸ்,

இதுக்க எப்படி நான்??

சொல்லுங்க அனுகுருஸ்சாந்தி chat புகழ் வதீஸ் அவர்களே...!!! :P

நிரூஜா சொல்வது:

சித்தியால் பியரைத் தொடாமல் விட்ட சித்தூ இனிமேல் உண்மையான கோக்கையுமெல்லோ குடிக்காமல் விடப்போறார்...!

Vathees Varunan சொல்வது:

@Aathirai - ஹா ஹா உங்களுடைய மேலுள்ள pathilukki என்னுடைய குருக்களான மாம்ஸ் மற்றும் அனுதினனுடைய நிலைப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன :P என்னுடைய குருக்களான மாம்ஸ் மற்றும் அனுதினனுடைய நிலைப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன :P

ARV Loshan சொல்வது:

ஹா ஹா ஹா..
ஹரிஹரன்? ;)
பாவம் சித்தூ.. ;)

அவர் வங்கிக்குப் போறதெல்லாம் சரி..

இந்தப்பதிவுக்கு பின்னூட்டமாக சிமைலி போட நான் ஒன்றும் அரியகுமார் சிறீதரன் இல்லை :P //
இது எங்கப்பன் குதிருக்குள் கதையோ?? ;)
ஸ்ரீகரன் தானே? ;)

//ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான். //
அட அரோகரா

// விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.//
அட அவரா? ;)
இவ்வளவு கஷ்டமா குடுக்கிறீங்களே க்ளூ ;)


//கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன்.//

கலக்கல் மாமா.. ஆனால் இந்த சித்தூ ஒரு அக்டிவ் பதிவராக இருந்தால் உங்களுக்கு சூனியம் சர்வ நிச்சயம்...

கன்கொன் || Kangon சொல்வது:

:-)

சித்தி சொல்வது:

இன்று முதல் சித்தப்பூ தண்ணியடிப்பார்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

:)

Bavan சொல்வது:

//இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ. //

விள்ங்கலயப்பா..:P #அப்பாவி

//வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும். //

மாஸ்டர் பிளான், ஜாவா மூளை..:P

//நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ//

LMAO..:D

//சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.//

அட! எதிர்பார்க்கிங்

கோக்ககோல கம்பனி ஓனர் சொல்வது:

இப்பிடியானவர்களை நம்பித்தான் நாங்கள் காலந்தள்ளுறம், எங்கட பிழைப்பில மண்ணைப் போடப்பாக்கிறீங்களே.

anuthinan சொல்வது:

//பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். //

அடேடே அவர் போல இருக்கிற இவர் சொன்ன கதையை உவர நீங்க எழுதி இருக்கீங்க போல!!!! வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!

//சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்//

உங்கள் மெத்தை கதைகளை கேட்க ஆவலாக இருக்கிறேன் மாம்ஸ்

aotspr சொல்வது:

சூப்பர் கதை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

தர்ஷன் சொல்வது:

சுவாரசியத்திற்கு குறைவில்லாத அழகான் நடை
சூப்பர் வந்தியண்ணா
தொடருங்கள்

டக்கால்டி சொல்வது:

நல்லா இருக்குங்க...

குறிப்பா ஈட் ஜாவா ஸ்லீப் ஜாவா ட்ரின்க் ஜாவா...:-)

பி.அமல்ராஜ் சொல்வது:

இந்த கதைக்குள் இருக்கும் உள்குத்து வெளிக்குத்து என்ன எது என்று எங்களுக்கு தெரியாவிட்டாலும், உங்கள் கதை சொல்லும் பாணியும் சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாமல் சொல்லிக்கொண்டு போகும் விதமும் பிரமாதம் அண்ணா.

எஸ் சக்திவேல் சொல்வது:

ஆள் checkmate என்கிறீர்கள்.