நான்காம் ஆண்டும் நட்புகளும்

இன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.ஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.

முதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.

லக்கிலுக் :

என்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.

கானா பிரபா :
வலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.

லெனின் :
வலை எழுத முன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக்கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.

என் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.
அசோக்பரன் :
முதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.

அச்சுதன் :
பங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.

ஆதிரை :
முதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.

ஆயில்யன் :
வலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.

பவன் :
இதுவரை நேரில் கண்டிராத கலகலப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.

பாலவாசகன் :
நேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.

புல்லட் :
முதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).

டொன் லீ :
நீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.

ஜாக்கி சேகர் :
தன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்சத்திரம்.

கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்

என்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவதாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.

கரவைக் குரல் :
இலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.

கீர்த்தி :
முதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.

கிருத்திகன் :
பலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.

லோஷன் :
பாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.

மருதமூரான் :
பெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.

மு.மயூரன் :
வலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.

பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.

37 கருத்துக் கூறியவர்கள்:

கோவி.கண்ணன் சொல்வது:

நான்காம் ஆண்டுக்கு நல் வாழ்த்துகள் !

http://rkguru.blogspot.com/ சொல்வது:

வாழ்த்துகள்...

கன்கொன் || Kangon சொல்வது:

வாழ்த்துக்கள் குருவே...

சீரியஸ் பதிவாக இருப்பதால் அமைதியாக சென்றுவிடுவதாக உத்தேசம். ;)

என்னைப் பற்றியும் எழுதியமைக்கு நன்றிகள்...

தொடர்ந்து பல பதிவுகளையும் எழுத வாழ்த்துவதோடு எதிர்கால வாழ்விற்கும் வாழ்த்துக்கள்.
இலண்டன் கல்வியும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். :)))

Unknown சொல்வது:

யோவ்...
நீர் யூத்துதான். அதுக்காக உம்முடைய மகள்வயத்துப் பேரன் வயசில இருக்கிற என்னை தம்பியாக்கிப்போட்டீரே...

On a serious note:

நன்றிகள் பல.. என்னையும் பொருட்டாய் மதித்ததுக்கு. ஒரு விவகாரத்தில் நீங்களும் கானா பிரபாவும் எனக்குத் தோள்கொடுத்ததை மறக்க முடியாது... என்ன ஒரே ஒரு ஆசை, இணையம் தந்த எல்லா நட்புகளையும் ஒருமுறையாவது நேரில் சந்தித்திட வேண்டும். பார்க்கலாம்

Unknown சொல்வது:

///உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்///

இன்னொரு முறை ‘தல’யக் கிண்டல் பண்ணீங்க... நடக்கிறதே வேற :)) சொல்லிப்புட்டேன் ஆமா சீவிப்புடுவேன் சீவி

ஆயில்யன் சொல்வது:

நான்காம் ஆண்டு நட்புக்களுடன் வாழ்த்துக்கள் பாஸ் ! கலக்குங்க :))

ஆயில்யன் சொல்வது:

//நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு.//

தவழ்ந்துக்கிட்டிருந்த குழந்தையை அடிச்சு எழுப்பி உக்கார வைச்சது இந்த பார்ட்டீதானா என்ன ஒரு டெரர் பார்த்தீங்களா பாஸ் ? :))))

ஆயில்யன் சொல்வது:

//அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர்//

டோட்டால் டேமேஜ் ஆக்சுவலி ஐ டோண்ட் லைக் திஸ் டமிழ் ஆக்ட்ரஸ் ப்ரம் டமில் நாட்

என்க்கு ப்ரம் மல்லு வல்லிய இஷ்டமாக்கும் :)

ஆயில்யன் சொல்வது:

//பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர்///

ஒரு பெரிய குரூப்பே இருக்கும்போல ப.பா சொல்லிக்கிட்டு திரிய! எல்லாரையும் கெடுத்துவைச்சிருக்கிற அந்த பெருசு/குரு நீர்தானோ?:))))

Bavan சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியண்ணா..:D:D:D

//இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர். //

ROFL..:P

//எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம். //

ஆங்.. தகவலுக்கு நன்றி.. நானும் விஜய் மாதிரி கெட்டப் சேஞ்ச் பண்ணிவிட்டேன்.. என்னை இனிக்கண்டு பிடிக்க மாட்டார்கள்..:P

//நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது. //

பெண் அல்ல பாட்டி??

//(உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).//

ஆங்.. எனக்கு மட்டும் அந்த உள்க்குத்தை மெயிலவும் நான் அதை இங்கே சொல்லி அப்பம் வாங்கி உங்களுக்கும் அனுப்புகிறேன்..:P

//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்//

பேரே இவ்வளவு பெருசா இருக்கே................ (வசனம் தொடரவில்லை..:P)

//பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்//

அட அப்ப சரி அடுத்ததிலயும் கும்முவமுல்ல..:P

ஆதிரை சொல்வது:

நல்வாழ்த்துக்கள்

maruthamooran சொல்வது:

வணக்கம் பொஸ்.....!

வலையுலகில் நான்காவது வருடத்தைக் கொண்டாடும் தங்களுக்கு வாழ்த்துக்கள். அத்துடன், விரைவில் திருமண அழைப்பிதழையும் எதிர்பார்க்கிறேன்.

////மருதமூரான் :
பெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன். ////


என்னிடம் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா? தங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளை எழுத முனைகிறேன். நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:

அருமை......

வாழ்த்துகள்..........

என்.கே.அஷோக்பரன் சொல்வது:

நான்காவது அகவையை வலைப்பதிவெழுத்தில் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

இன்னும் நிறைய, தொடர்ந்து எழுதுங்கள் என்பது எனது அன்புக்கோரிக்கை!

SShathiesh-சதீஷ். சொல்வது:

நான்காம் ஆண்டுக்கு நல்வாழ்த்துக்கள். ஆதிரை அன்னார் விசா பிள்ளையார் போய் போய் விசா கேட்பதாய் கேள்வி.

புல்லட் அன்னார வேற ஒரு உலகத்தில் சன்சரிப்பதாய் கேள்வி

Jana சொல்வது:

பதிவுலகில் தொடர்ச்சியாக நான்கு அண்டுகள். உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். விடாமுயர்ச்சி, தேடல்கள், தொடர்ச்சி, எழுத்தின்மேல் உள்ள பிரியம், வாசிப்பு இன்ன பிற.. என அத்தனையும் சேர்த்தால்த்தான் இது சாத்தியம். சாத்தியப்படுத்திக்காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பரவாய் இல்லை உங்கள் முதல் அறிமுக எழுத்தை பதிவேற்றிய என் பதிவுக்கும் இப்போது ஒரு காரணம் வந்திருக்கின்றது.
வாழ்த்துக்கள்...தொடருங்கள்..தொடர்வோம்.

Chitra சொல்வது:

Congrats!

ஆதிரை சொல்வது:

பதிவுலகம், பதிவுலக நண்பர்கள் இதைப்பற்றியே அதிகம் மெனக்கெட்டு எழுதாமல் ஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-)

வழி மொழிகின்றேன்...

கலைஞர் கடிதம் எழுதுவது போல...
அதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...
ஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-)

கன்கொன் || Kangon சொல்வது:

//
கலைஞர் கடிதம் எழுதுவது போல...
அதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...
ஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-) //

நாட்டுக்கேற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும்.

ஆதிரை சொல்வது:

//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //

விமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.

ARV Loshan சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியத்தேவரே.. :)
நான்கு வருடங்கள் பொறுமையோடு இருப்பது என்றால் பெரிய விஷயம் தான்.:)

உங்கள் தேடல்,வாசிப்பு,நகைச்சுவை உணர்வு, எவ்வளவு தாக்கினாலும் பொறுமை காப்பது போன்ற விஷயங்களின் ரசிகன் நான்.


நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். நண்பர் தானே.. :)

நல்ல குருமாரைப் பெற்றுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.
மொக்கையான எம் போன்ற நண்பர்களையும் பெற்றுள்ளீர்கள். சகிப்பீர்கள்..

அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர்//
அங்கிளுக்கே அண்ணனா? என்ன கொடுமை மாமா இது..


உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர். //
இதெல்லாம் விட்டிட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதுங்கள்.. ;)

ARV Loshan சொல்வது:

பெரியவங்க எல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாங்களே.. கலக்கல் வந்தி,.. (சிவப்பு சால்வையுடன் ஒருவரின் படம் தெரிந்தது .. அதை சொன்னேன்)

ஒ நம்ம ஜனாவா அது.. ஓகே ஓகே..

ARV Loshan சொல்வது:

ஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்கள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்..
குரு சொன்னால் கேளுங்கைய்யா..

ஆதிரை said...
//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //

விமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.

உண்ணாவிரதமா அல்லது அவரா?

ஆதிரை சொல்வது:

//உண்ணாவிரதமா அல்லது அவரா? //

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பவர் கோரிக்கை நிறைவேறாவிட்டால் செத்துத்தான் போவாரோ???

கலைஞர் கருணாநிதி காலத்தில் வாழ்ந்தேன் என்று சொல்வதே வெட்ககேடு லோஷன்...

கன்கொன் || Kangon சொல்வது:

// ஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்கள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்.. //

இல்லை இல்லை...
அழுகாச்சிப் பதிவுகளை எழுதவும்.
வீர சாகசப் பதிவுகள் எழுதக்கூடாது.
அதற்கான காலம் கனியவில்லை இன்னும்.
அழுகாச்சிப் பதிவி எழுதினால் குருக்கள் இருக்கும் இடங்களிலிருந்து நிறைய ஆதரவு கிடைக்கும்., மீட்பர்கள் கிடைப்பார்கள்.

Atchuthan Srirangan சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியண்ணா...

சி தயாளன் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி...!

தங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

இப்ப எல்லாம் எனக்கு எழுதுவதற்கு பஞ்சியாக இருக்கு. ட்விட்டல் இலகுவாக இருக்கு :-)

தொடர்ந்து இணைந்திருப்பம் என்ன...:-))

anuthinan சொல்வது:

வந்தி அண்ணா!! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் முதலில்!!!

//பவன்://

இவர் பற்றி சொல்லுவதுக்கு முதல் என்னை தொடர்பு கொண்டிருக்கலாமே!!!
இன்னும் அதிகமாக வியந்து போகுமளவுக்கு சொல்லி இருப்பேன்!

//எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர்//

நேரில் இவர்.........

//பாலவாசகன் :
நேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது..//

எனக்கும் இவரை தெரியும் நல்ல அண்ணா!! இவர் கோபி அண்ணாவுக்கு தேடலாம்!!!

//புல்லட் ://
இவர் பற்றி சொல்ல கூடாது!!!!

//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்
//
NO COMMENTS

//லோஷன் ://

இவர் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை!!! அண்ணா! நேற்று யோசியத்தில் வென்று விட்டார்!

Muruganandan M.K. சொல்வது:

வலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீண்டு தொடரட்டும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

4வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள் வந்தி...

Subankan சொல்வது:

வாழ்த்துகள் வந்தியாரே :)

செ.சரவணக்குமார் சொல்வது:

வாழ்த்துகள் நண்பரே.

M.Thevesh சொல்வது:

வலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான் நல் வாழ்த்துக்கள்! உங்கள் பணி நீண்டு தொடரட்டும்.

ராசராசசோழன் சொல்வது:

வாழ்த்துக்கள்...

கானா பிரபா சொல்வது:

வந்தி

காலதாமதமாகவே பதிவைக் கண்டேன், மன்னிக்கவும். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்த ரசனை கொண்ட நண்பனை, சகோதரனை வலைமூலம் பெற்ற மகிழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தொடருங்கள், வாழ்த்துக்கள்

Guruji சொல்வது:

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

Sweatha Sanjana சொல்வது:

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!