நானும் என் மருமக்களும்கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்னர் ஒரு  ஃபோரத்தில் அங்கத்தவராக இருந்தபோது  ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது

வணக்கம் வந்தி அண்ணா
நீங்கள் வடமராட்சியா? நானும் வடமராட்சி தான்.

என ஆரம்பித்த மெயில் நட்பு பின்னர் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தபின்னர், அதே பெண் சில நாட்களின் பின்னர் ,நீங்கள் பீகோனில் தான் ரீயூசன் போனீர்கள்? நீங்கள் படிக்கின்ற காலத்தில் சரியான குழப்படியாம் போன்ற என்னைப் பற்றிய சில தகவல்களையும் சொல்லி என்னை அசத்தினார். எப்படி இதெல்லாம் தெரியும்  எனக் கேட்டபோது என்னுடைய போட்டைவைப் பார்த்த தன் அத்தை முறையான ஒருவர் இவர் மயூரன் தானே என்னுடன் படித்தவர் என்றதுடன் என்னைப் பற்றிய சில குறிப்புகளையும் சொல்லியிருக்கின்றார். அதுவரை பச்சிளம் பாலகனாக உலாவிய என்னை மாமா என உறவு முறை சொல்லி அழைத்தவர் அந்தப் பெண் தான். (ஏன் மாமா எனக் கூப்பிட்டார், என்ற கேள்வி எல்லாம் கேட்ககூடாது, கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்).


அதன் பின்னர் முதலாவது பதிவர் சந்திப்பு அமைப்பு குழுவில் இருந்த புல்லட், லோஷன், ஆதிரை, சுபானு, மது, பால்குடி ஆகியோரை விட தான் வயதில் இளையவன் என்பதாலும் இந்த குழுவிலையே நான் பெரியவன் என்பதால் என்னை அண்ணா என அழைக்காமல் மாமா என அழைக்கத் தொடங்கினான்.

இப்படி சதீஸ் தொடங்கிய மாமா இப்போ வலையுலக நண்பர்களால் அன்பாக மாம்ஸ் என அழைக்கப்படும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டது. இதிலை கொடுமை என்னவென்றால் லோஷன் போன்ற வயதுபோனவர்களும் என்னை மாமா என அழைப்பதுதான்.

உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.

இவர்கள் சில வேளை பொது இடங்களில் அதுவும் அழகான பெண்களுக்கு முன்னாள் என்னை மாமா என அழைத்து, என்னைத் திரும்பிப் பார்க்க முயன்ற பெண்களை திரும்பிப்பாராமலே செய்துவிட்டார்கள். இதுதான் இவர்களுக்கு மாமாவாக இருப்பதால் நான் படும் ஒரே ஒரு கஸ்டம்.

ஒரு முறை டொக்டர் முருகானந்த‌ன் தன்னை ஒரு சிறுவன் தாத்தா என அழைத்ததாகவும் அதனால் தனக்கு வயதாகிவிட்டது என கவலை அடைந்ததாகவும் தன் பேஸ்புக்கில் இட்டிருந்தார். அதேபோல தான் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை சில சிறுவர்கள் அங்கிள் என அழைக்கும் போது முகம் கொஞ்சம் வாட்டமடையும். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றுவிட்ட விடவேண்டியதுதான்.

அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.

14 கருத்துக் கூறியவர்கள்:

Subankan சொல்வது:

அட! இதுதான் மாமாவான வரலாறா? :P

இனிய புதுவருட வாழ்த்துகள் மாம்ஸ் :-)

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
அட! இதுதான் மாமாவான வரலாறா? :P

இனிய புதுவருட வாழ்த்துகள் மாம்ஸ் :-)
//
நீங்கள் சின்னமாமாவான பெரிய வரலாறு அடுத்த வருடம் வரும்
இனிய புதுவருட வாழ்த்துக்கள் சின்னமாம்ஸ்

நிரூஜா சொல்வது:

ஹிஹிஹி! நீங்கள் அடைப்புக்குள் போட்டதைத் தான் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. :P


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

anuthinan சொல்வது:

//உலகிலையே தாய்க்கு அடுத்த உன்னதமான உறவு மாமா தான். அதனால் தானோ என்னவோ என் நண்பர்கள் என்னை அழைக்கும் போது எனக்கு அந்த உறவு முறை பிடித்துக்கொண்டுவிட்டது.//

இது இன்றுதான் எனக்கு தெரியும்!

//அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் 2012 ஆண்டு சகல செளபாக்கியங்களையும் கொடுக்க வாழ்த்துக்கின்றேன்.//

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

இனிய புது வருட வாழ்த்துக்கள் மாமா...

தர்ஷன் சொல்வது:

விடுங்கண்ணா பாசத்தாலத்தானே மாமான்னு கூப்பிடுறாங்க, வேறு விபரீதமான அர்த்தம் தராத வரையில பிரச்சினையில்லை
அப்புறம் புது வருட வாழ்த்துக்கள் மாம்ஸ்(எல்லோரும் கூப்பிடுறாங்கன்னா நானும் கூப்பிட்டுக்கிறேனே)

Hotlinksin.com சொல்வது:

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

என்றும் இனியவன் சொல்வது:

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Unknown சொல்வது:

ங்கொய்யால...புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமோவ்

mathi சொல்வது:

இந்தக் குமர்ப் பொடியனுக்கு இந்தப் பேராண்டியின் வாழ்த்துக்கள்...

நிரூபன் சொல்வது:

வணக்கம் சகோ,
இப்போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு!

உங்களை அங்கிள் என்று அழைக்கவா? இல்லே மாமா என்று அழைக்கவா என்று?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நினைவுகளை மீட்டியிருக்கிறீங்க.

பனையூரான் சொல்வது:

புது வருச வாழ்த்துக்கள் மாமோய்

பனையூரான் சொல்வது:

புது வருச வாழ்த்துக்கள் மாமோய்

Unknown சொல்வது:

வந்தி மாமோய்! எப்புடி இருக்கீக?

என்ன மாம்ஸ், புது வருசமெல்லாம் கமகமக்குது!... அட ஞாபகம் இருக்குங்க, முதல் பதிவர் சந்திப்பு முடிஞ்சு ஒய்யாரமா ருத்ரா மாவத்தை முழுதும் ஊர்வலம் போட்டது.. உங்களுக்கு இருக்கா ஞாபகம்??

போங்கங்குறன், பட்டைய கிளப்பியிருக்கீக!!

டுமீலு டுமீலு! ரெண்டாயிரத்து பனிரெண்டு!! ;)