"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" : ஆயில்யன்
கானா என்றால் இசைப் ப்ரியர்களுக்கு கானா உலகநாதனும் இசையமைப்பாளர் தேவாவும் நினைவுக்கு வருவார்கள் ஆனால் வலைப்பதிவர்களுக்கோ கானா பிரபா என்ற அழகான வதனத்தையும் சிரிப்பையும் கொண்டு உலகம் சுற்றும் உலாத்தல் பதிவர் தான் ஞாபகம் வருவார்.
ஒரு கறுத்தகொழும்பான் மாம்பழத்துடன் எங்கள் உறவு ஆரம்பித்தது. அதன் பின்னர் நான் வலையெழுத வந்தமைக்கும் கானாவின் நட்பும் ஒரு காரணம்.
நேரடியாக இதுவரைக் காணாவிட்டாலும் தினமும் இவரின் சிட்னியில் காலை இனிதே விடிந்தது என்ற ட்விட்டைப் படித்துவிட்டு தான் நான் நித்திரைக்கே போவது, தொலைபேசியில் உரையாடி இருந்தாலும் ஈமெயில்களீனூடும் சமூக வலைத்தளங்களினூடும் கானாவுடன் உரையாடுவது என்பது இனிமையானது.
வலையுலகில் உலாத்தல் கட்டுரைகள், இசைப்பிரிப்புகள், நேர்முகங்கள், ஈழத்து மரபுகள், தமிழ் சினிமா விமர்சனம் எழுதாவிட்டாலும் மலையாள சினிமா விமர்சனம் ஆங்கில சினிமா விமர்சனம் என பலதரப்பட்ட காத்திரமான பதிவுகளை எழுதும் சீரியசான பதிவர்.
என்னைப்போன்ற யூத்துகளுக்காக தனது லுமாலா சைக்கிள் காலக் காதல் கதையை எழுதி மேலிடத்தில் இருந்து வந்த செல்ல மிரட்டலுக்காக அதனை நிறுத்திய காதல் இளவரசன்.
ட்விட்டருக்கு வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எனச் சொல்லியபடி கானா வரும் அழகை ரசிக்கவே அவரின் நட்புகள் காத்திருப்பது வழக்கம். அதிலும் கானா வந்தால் தான் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் எங்கள் அன்புச் சின்னப்பாண்டி ஆயில்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்கவர்(சின்னப்பாண்டி அண்ணோய் விரைவில் உங்களுக்கும் ஸ்பெசல் போஸ்ட் ரெடி ).
சினிமாப் பாடல்களில் அண்ணன் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். எந்தப்படத்தில் எந்தப்பாட்டு எனச் சந்தேகம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார். அதிலும் எங்கள் இசைஞானியின் பரமரசிகர்(இது ஒன்றே எம் இருவரையும் பிணைக்கும் இன்னொரு சங்கிலி). அதனால் தான் என்னவோ இராமராஜனின் தீவிர விசிறி.
ஆஸியில் தமிழ் வானொலி ஒன்றில் கானாவின் நிகழ்ச்சியை பல தடவை கேட்டு மகிழ்ந்துள்ளேன். எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தை அதிகம் நேசிப்பதனாலோ என்னவோ இவரின் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு முத்துமணி மாலை எனப் பெயரிட்டிருக்கின்றார். முத்துமணி மாலையும் அதில் அண்ணனின் பாடல் தெரிவுகளும் சிறப்பாகவே என்றைக்கும் இருக்கின்றது. அத்துடன் அண்ணன் சிறந்த மிமிக்ரிக் கலைஞரும் கூட, முத்துமணிமாலை நிகழ்ச்சி முன்னோட்ட விளம்பரத்தில் சிறுகுழந்தையின் குரலில் பேசுவது வேறுயாருமல்ல எங்கள் அண்ணன் கானாவே.
சரோசா அக்காவின் சாப்பாட்டுக்காகவே பகல் பந்தி என்ற வெற்றியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர். இணையத்தில் சகல வானொலிகளையும் கேட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் எந்த வானொலியில் நடக்கின்றதோ அதனை ஏனையோருக்கு அறியத் தந்து தான் பெற்ற இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கர்ணன் இவர்.
அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).
நடிகைகள் ரசனையைப் பொறுத்தவரை அந்தகாலத்து பத்மினி வரை இந்தக்காலத்து ஹன்சிகா மேத்வானி வரை பாரபட்சமின்றி யூத்தாக மாறி ரசிப்பார். வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம்.
அண்மைக்காலமாக தனது உடம்பைத் தேர்த்திக்கொள்ள ஜிம்முக்கும் மனதைத் ஒருமுகப்படுத்த கோவிலுக்கும் செல்கின்றாராம்.
கானாவைப் பற்றி நிறைய எழுதலாம் ஆனாலும் இப்படியான பாராட்டுகளை அவர் என்றைக்கும் விரும்புவதில்லை.
இன்று (14.05.2011)தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அண்ணன் ட்விட்டர் மன்னன் உலாத்தல் பொடி கானா பிரபாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் அதே கள்ளச்சிரிப்புடனும் கலகலப்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல மடத்துவாசல் பிள்ளையாரையும் சிட்னி முருகனையும் வேண்டுகின்றேன்.
Box Office Report This Week Jul-4
-
*Box Office: Paranthu Po, 3BHK, Maargon, *
1 Day: Paaranthu Po - 40L (Approx)
1 Day: 3BHK - 80L (Approx) Inclusive of Telugu
8 day: Maargon- 7.5 Cr (Approx)...
13 hours ago
12 கருத்துக் கூறியவர்கள்:
அவ்வ்வ் ;) நன்றி நண்பா என் பெயரை எடுத்து விட்டு உங்கள் பெயரைப் பொருத்திப் பார்க்கிறேன் ஒரே அலைவரிசை ;)
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா....
கானா பிரபா அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
கானா அண்ணாவிற் எனது வாழ்த்துக்கள்
கனாஸுக்கு அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
//அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவு எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).//
கிகிகிகி என்னை போல ரகசியம் காக்கும் சக்தி யாரிடமும் இல்லை என்பதை இன்றாவது இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்..
ஒரே ஒரு தடவை தான் என் புளொக்கில் இவரை சந்தித்துக் கொண்டாலும் அதுவே நம் இனிய நட்பின் ஆரம்பமானது அதிசயமே... என்றும்அதே பண்புடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என் உளங்கனிந்த இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?
தங்கள் நட்பைக் கண்டு வியந்து போனேன் வாழ்த்துக்கள் அண்ணா..
:)) இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !
கடைசி படம் - அண்ணே எம்புட்டு அழகு -
ஊரு கண்ணு உலகத்து கண்ணு எல்லாம் படப்போவுது திருஷ்டி சுத்திப்போடச்சொல்லணும்!
கானா அண்ணனுக்கு எம் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
//வெள்ளைக் கரப்பான் தமன்னாவினை ரசிப்பது எங்களின் இன்னொரு உறவான முன்னாள் பதுங்குகுழிப் பதிவர் டொன்லீக்கு பிடிக்காமல் தமன்னாவை தனது தம்பிக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டாராம்.
//
யார் அந்த துர்பாக்கியவத தம்பி?
கானா அண்ணனின் அபிமான வித்யா பாலனை பற்றி எதுவும் குறிப்பிடாததற்கு என் கண்டனங்கள்.
இங்கையும் தலக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
\\அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவை எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம். (அண்ணே பிடிபடாமல் புனைவு எழுதுவதற்க்கு என்னிடம் வரவும்).\\
நோட் பண்ணிக்கிட்டேன் ;)
கானா பிரபா அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...:)
Cha!.. Naan ivara youth-nu nenachiten boss!..
\\அண்மையில் ஒரு கதையை அல்லது புனைவு எழுதிப் பலரின் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்தார். அண்ணனுக்கு பிளே ஸ்டேசன் விளையாடும் வயதில் ஒரு குழந்தை இருக்கின்றதாம்\\
:(
Anyway, Happy b'day kaana!.. Have a great year ahead!..
Post a Comment