வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும்

பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா?

சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

குந்தவை

"சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி."

என குந்தவையை கல்கி அறிமுகம் செய்கின்றார் அவளின் அழகை

"ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். பூரண சந்திரன்;ஆடும் மயில்; இந்திராணி; வேகவாஹினியான கங்காநதி;"

என வர்ணிக்கும் கல்கி இளையபிராட்டியின் அழகை வர்ணிப்பதைவிட அவரை ஒரு அரசியல் சாணக்கியம் மிகுந்தவராகவும், வீராங்கனையாகவுமே வாசகர்களிடம் உலாவவிடுகின்றார்.

இதனால் தான் என்னவோ வீராதிவீரனான வந்தியத்தேவனுக்கு ஆதித்த கரிகாலன் தன்னுடைய சகோதரியைப் பற்றி அவனுக்கு காஞ்சியில் கூறியபோதே ஒரு மெல்லிய மையல் ஏற்பட்டதும் அது பின்னர் அரிசிலாற்றங்கரையில் சந்தித்த முதல் சந்திப்பில் காதலாக மாறவும் காரணமாக இருந்திருக்கலாம். அதே நேரம் வந்தியத்தேவன் எப்போதும் கடமையே கண்ணானவன், குந்தவைக்கோ, தனது குடும்ப மற்றும் நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நேரம் போதவில்லை ஆகவே இவர்கள் இருவருக்கும் காதலிக்க நேரம் கிடைக்கவில்லை.

புத்திசாதுரியமான, தனது சகோதரனின் வெற்றிக்கு பாடுபட்ட , தலைமைத்துவத்துக்குரிய பெண்ணுக்கு சிறந்த உதாரணமாக குந்தவையை கூறலாம்.

வானதி

"கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு ஒப்பிடுவார்கள் வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை, குமுத மலரின் இனிய அழகை உடையவள், காலைப் பிறை, பாடும் குயில், மன்மதனின் காதலி, குழைந்து நெளிந்து செல்லும் காவேரி."

என வானதியைப் பற்றி வர்ணிக்கும் கல்கி இவரை ஒரு இளவரசி என்பதை விட சாதாரண பெண்ணாகவே பல இடங்களில் காட்டியிருக்கின்றார். எல்லாவற்றிற்கும் பயந்த, தானாகவே எந்த முடிவும் எடுக்கமுடியாத காதலில் விழுந்த ஒரு பேதையாகவே வானதி உலாவருகின்றாள். இப்போதைய நடிகைகளில் சிறுத்தை தமன்னா போல அல்லது லைலா போல் வானதி இருந்திருப்பாள்.

அதே நேரம் வாழ்ந்தாள் அருள்மொழிவர்மனுடன் தான் வாழுவேன் என காதல் பைத்தியம் பிடித்ததும் இவருக்குத் தான்.

அதே நேரம் சிற்றரசின் இளவரசி சோழப்பேரரசின் பட்டத்து ராஜாவை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் தகுதி, அந்தஸ்து போன்றவை அந்தக்காலத்தில் இல்லையோ என்ற ஐயமும் வாசிப்பவர்களுக்கு வரும். வந்தியத்தேவன் குந்தவை காதலும் இதேபோல் ஒரு சிற்றரசன் பேரரசி காதல் தான்.

நந்தினி

பொறாமை, கோபம், சுயநலம் என பல கெட்டகுணங்களை உடையவள், ஆனானப்பட்ட பழுவேட்டரையரையே கவிழ்த்ததுடன் ஆதித்தகரிகாலன், வந்தியதேவன், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன் போன்ற வீரர்களையும் ஒரு கணமேனும் தன் அழகில் மயக்கிய பெண் வடிவில் வந்த மாயப்பிசாசுதான் நந்தினி. நாகபாம்பின் நஞ்சும் பாயும் புலியும் ஆக்ரோசமும் பழுவூர் இளையராணியான நந்தினியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்ட குணங்கள்.

தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல).

நந்தினியின் அழகை வந்தியதேவன் வாயிலாக நம்பிக்கும் வாசகர்களுக்கும் கல்கி இவ்வாறு சொல்கின்றார்.

"அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இந்திராணி, சந்திராணி எல்லோரும் அவளுக்கு அப்புறந்தான்!"

அதே நேரம் கல்கி நந்தினியின் அழகை வர்ணித்ததுபோல் குந்தவையையோ வானதியையோ வர்ணிக்கவில்லை.

"குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது."


"இப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்."

ஒருவரின் பொறாமை கோபம் பழிவாங்கும் உணர்ச்சி அவருக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நந்தினி. குந்தவையிடம் அரசியல் சாணக்கியம் இருந்தது என்றால் நந்தினியிடம் அரசியல் சூழ்ச்சி இருந்தது.


பூங்குழலி

அருள்மொழிவர்மனையும் வந்தியத்தேவனையும் சமுத்திரராஜனிடம் இருந்து காப்பாற்றிய ஓடக்காரி. சேந்தன் அமுதனின் மைத்துணி. அருள்மொழிவர்மனுடன் தான் பட்டத்துராணியாக இருப்பதுபோல் கனவு கண்ட ஒருதலைக்காதல்காரி. பொன்னியின் செல்வனில் இன்னொரு சராசரிப் பெண். ஓடக்காரியாக இருந்தபடியாலோ என்னவோ இவளின் காதல் நிறைவேறவேயில்லை.

இவளின் அழகை சேந்தன் அமுதன் வந்தியதேவனுக்கு கூறும்போது "மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்." என்கின்றான்.

ஒருதலைக் காதலுக்கு சிறந்த உதாரணம் என்றால் பூங்குழலி அருள்மொழிவர்மன் மேல் வைத்திருந்த காதலையும் சேந்தன் அமுதன் பூங்குழலி மேல் வைத்திருந்த காதலையும் கூறலாம்.

இந்த நான்கு பெண்கள் மூலம் கல்கி பெண்களின் குணாதிசயங்களை பெரிதும் எடுத்தியம்பியிருக்கின்றார்.

எனக்கு குந்தவையை விட வானதியைத் தான் அதிகம் பிடித்திருக்கின்றது. குந்தவை பேரழகியாக இருந்தாலும் வானதியைப்போல் அடக்கம், அமைதி, விட்டுக்கொடுத்தல் போன்ற சில குணங்கள் அவரிடம் இல்லை. உங்களுக்கு பிடித்த அழகி யார்? பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோங்கள்.

பின்குறிப்பு :
தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை.

24 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

யோவ்....

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

///பின்குறிப்பு :
தலைப்பைப் பார்த்து எனது வழக்கமான சொசெசூ கதை என நினைத்து வந்திருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. இந்த நான்கு பெண்களில் வானதியைத் தவிர்த்து ஏனைய மூவர் மேலும் வந்தியதேவனுக்கு ஈர்ப்பு வந்தது மட்டும் உண்மை///

நம்பிட்டம், இன்னும் தமன்னா மோகம் போகலையா?

கன்கொன் || Kangon சொல்வது:

#%&$^*^%*&(@#$#$%^(%#

ம.தி.சுதா சொல்வது:

அழகாயிருக்காங்க பொண்ணுங்க அழகாயிருக்காங்க வந்தியர் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் அழகாயிருக்காங்க.....

கானா பிரபா சொல்வது:

பழைய வந்தியத்தேவனின் நான்கு அழகிகளின் பெயரை ஒத்த குமருகளைத் தேடி புதிய வந்தியத்தேவன் டியூஷன் டியூஷனா அலைந்த கதை வருமா பாஸ் ;-)

வந்தியத்தேவன் இரசிகைகள் மன்றம் சொல்வது:

>> கானா பிரபா said...

பழைய வந்தியத்தேவனின் நான்கு அழகிகளின் பெயரை ஒத்த குமருகளைத் தேடி புதிய வந்தியத்தேவன் டியூஷன் டியூஷனா அலைந்த கதை வருமா பாஸ் ;-) <<

இதென்ன புதுக்கதையா இருக்கு?
கொஞ்சம் விம் போட்டு விளக்க முடியுமா?

ஆயில்யன் சொல்வது:

அடப்பாவி மக்கா! ஜொள்ளுடன் வந்தேன்! :(((((((

//
கானா பிரபா சொல்வது:

பழைய வந்தியத்தேவனின் நான்கு அழகிகளின் பெயரை ஒத்த குமருகளைத் தேடி புதிய வந்தியத்தேவன் டியூஷன் டியூஷனா அலைந்த கதை வருமா பாஸ் //

வாவ் இண்ட்ரஸ்டிங்க் வருமாவா - வரவைக்கிறோம் பாஸ் வரவைக்கிறோம்!

ஆதிரை சொல்வது:

விம் போட்டு விளக்கினால், தவறவிடக்கூடாது என்பதற்காக...

ஆதிரை சொல்வது:

//#%&$^*^%*&(@#$#$%^(%#

வந்தியத்தேவா,

உங்கள் சீடனுக்கு என்ன நடந்தது?

Subankan சொல்வது:

மாம்ஸ், நாங்கள் பார்ட் - 2 எழுதவா? ;-)

Chitra சொல்வது:

வாவ்! ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.... ரசித்தேன்.

ARV Loshan சொல்வது:

அட அட..
நான்கு தானா? ;)

Vanthiyathevan fan's club, women division சொல்வது:

// Subankan said...
மாம்ஸ், நாங்கள் பார்ட் - 2 எழுதவா? ;-) //

We like this deal...
Long live Subankan....

குந்தவை சொல்வது:

வந்தியத்தேவன் என்னை மட்டும் தான் மனதார விரும்பினார்.

வடலியூரான் சொல்வது:

//LOSHAN சொல்வது:

அட அட..
நான்கு தானா? ;)
அது தானே.. நானும் எக்கச்சக்கம் என்றெல்லோ யோசிச்சன்

Mohandoss Ilangovan சொல்வது:

வரலாற்றைப் போலில்லாமல், பொன்னியின் செல்வனில் வரும் அழகிகளும் வந்தியத்தேவனின் உள்ளத்தைக் கவர்ந்தவர்களிலும் மணிமேகலைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

குந்தவை-வந்தியத்தேவன், அருண்மொழி-வானதி, பூங்குழலி-அருண்மொழி, நந்தினி-(யாருடனும்) ஐ விடவும் மணிமேகலை-வந்தியத்தேவன் காதல் பொன்னியின் செல்வனில் உயர்ந்தது.

குந்தவை வந்தியத்தேவன், என்கிற பெயரை நான் உபயோகிப்பவன் என்கிற போதிலும் நான் மணிமேகலையைத் தான் வந்தியத்தேவனுக்கு அருகில் உணர்கிறேன்.

PS: வரலாற்றை வைத்தல்ல பொன்னியின் செல்வனை வைத்து.

நிரூஜா சொல்வது:

grrrrrrrrr

Unknown சொல்வது:

// தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு இனத்தையே(சோழர்கள்) பழிவாங்க முயன்று தோற்ற இராட்சசி. (இந்தவரிகள் பிரபல அரசியல்வாதியை இனம் காட்டினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல). // முற்றுமுழுதாக அப்படிச் சொல்ல முடியுமா ?

இன்னுமொன்று, இக்கதையில் சில நிகழ்வுகள் தற்போதுள்ள மெகா தொடர்கள் போல் என்ன நடந்துவிட்டதென குறிப்பிடாமலே அமரர் கல்கி அவர்கள் முடித்துவிட்டாரல்லவா ?
உதாரணமாக கதை முழுதும் நம்முடன் பயணித்த வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் நிலை என்ன ?

ஆங்காங்கே தோன்றிய ஆபத்துதவிகள் என்ன செய்தார்கள்?

வந்தியத்தேவர் இளவரசி குந்தவையை எப்படி, எப்போது மணந்தார்? அல்லது மணந்தாரா ? இல்லை வேறுயாரையாவது மணந்தாரா ? அவர் மன்மதன் ஆயிற்றே ?

Unknown சொல்வது:

மற்றும், உங்கள் பார்வை அழகு :))

Unknown சொல்வது:

அண்ணா கடைசியாக ஒரு கேள்வி ::)

நந்தினி - வீரபாண்டியன் உறவு என்ன ?

நந்தினி வீர பாண்டியனின் காதலியா? or நந்தினி வீர பாண்டியனின் மகளா ?

TamilTechToday சொல்வது:

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

லோ. நிலா சொல்வது:

சொல்லப் போனால் எனக்கு பூங்குழலியின் மேலத் தான் ஈர்ப்பு இருந்தது. சமுத்திரத்தின் நடுவில் அருண்மொழிக்காக படகு விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், யானையில் அருண்மொழியுடன் சவாரி செய்யும் சந்தர்ப்பத்திலும் பூங்குழலி பூங்குழலி தான் ! எந்த ஒரு பட்டத்து இளவரசிகளாலும் நெருங்க முடிவதில்லை. அத்தனைக்கும் அதையொரு உறங்கும் பாத்திரமாகப் படைத்தது வருத்தமே.
குறிப்பாகச் சொல்லப் போனால், மணிமேகலை வந்தியத் தேவன் காதல் தான் உணமையானதாகவும் இருந்தது.
குந்தவை, வந்தியத் தேவன் காதல் ஒரு வித அரசியல் மணம் /மனம் கொண்டது,
பொன்னியின் செல்வனில் வரும் பாத்திரங்களோடு எனக்கு அதிகப் படியான முரண்பாடுகள் உண்டு.

இருந்தாலும் இது ஒரு நல்ல ஆராய்ச்சி !:D

தடம் மாறிய யாத்ரீகன் சொல்வது:

இதில் நண்பர் மணிமேகலையை விட்டுவிட்டீர்! எந்த பிரதிபலனும் பாராமல் வந்தியதேவனை காதலித்த பேதை பெண் அவள். கடைசியில் விசராக போனது மனதை பாதிக்கிறது. கந்தமாறனால் வந்த வினைதான் இவை எல்லாம். எனக்கு பிடித்தவள் மணிமேகலைதான்.

சுபானு சொல்வது:

நன்றாக இருக்கின்றது.. மச்சக்காரனப்பா நீங்க.. ;-)