ரீமிக்ஸ் இசையமைப்பது எப்படி?

கடந்த சில ஆண்டுகளாக மீழ்கலவை இசை எனப்படும் ரீமிக்ஸ் கலாச்சாரம் திரைப்படங்களிலும் ஏனையவர்களிடமும் அதிகமாக வேரூண்டிவிட்டது. கணணி இயக்கத் தெரிந்த நண்டு சிண்டுகள் கூட ரீமிக்ஸ் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்களோ பழைய பாடல்களைக் கெடுப்பதற்காக மீண்டும் அந்தப் பாடலின் கற்பை அழிக்கின்றார்கள்.

பெரும்பாலான ரீமிக்ஸ் பாடல்கள் அந்தகால அல்லது இடைக்கால ஹிட்டான பாடலை அழிப்பதையே நோக்கமாககொண்டிருக்கின்றது. அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் படத்தில் இடம் பெற்ற‌" என்னை ஆசை மைதிலியே" பாடல் ரீமிக்ஸ் இல்லை அச்சு அசல் என்றே சொன்னான். தான் பிடித்த முயலுக்கு காலே இல்லாதவர்களிடம் நான் விவாதிப்பதில்லை அப்படியே விட்டுவிட்டேன்.

ரீமிக்ஸ் செய்வது எப்படி. இதொன்றும் பெரிய விடயம் இல்லையென்று பழைய பாடல்களைக் கெடுக்கின்ற நண்பனும் சொன்னான். ஏதோ சில மென்பொருள்கள் இருந்தால் சரி அதனை விட பழைய அசல் பாடலும் வேண்டும் என்றான்.

என் பார்வையில் ரீமிக்ஸ் இசைய‌மைப்பவர்கள் ஒருவிதமான டெம்லேட் பாவிக்கின்றார்கள். அந்த டெம்லேட் செய்முறை விளக்கம் கீழே:

1. முதலில் ரீமிக்ஸ் செய்யவேண்டுய ஒரிஜினல் பாடலை தேர்ந்தெடுங்கள். எதற்க்கும் ஆறு அல்லது ஏழு தடவை திரும்ப திரும்ப கேளுங்கள்.

2. பாடல் ஆரம்பிக்க முன்னர் வேறு ஏதாவது ஒரு பாடலின் முதல் இசையை அல்லது அதேபாடலின் இசையை சற்றே மாற்றி பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் இஅய்ங்கவிடுங்கள்.

3. பின்னர் ஒரிஜினல் பாடலின் சரணத்தை இதேபோல் பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் பாடவிடுங்கள் அல்லது வித்தியாசம் தெரியாமல் இருக்க அதே பாடலுக்கு பின்னணியில் வேறு இசைக்கருவிகளை இசைக்க விடுங்கள்.
உதாரணம் "ஆசை நூறுவகை" பாடல் கொஞ்சம் பாஸ்மோட், "காதல் வைபோகமே" அதே பாடல் பின்னணி இசை கர்ணகடூரம்.

4. பல்லவி முடிந்தபின்ன வரும் முதல் சரணத்தின் இடையில் வரும் முதல் பிஜிஎம்முக்கு வேறு ஏதாவது பாடலின் பிஜிஎம் அல்லது ராப் பாடுவதுபோல் ஏதாவது ஆங்கிலம் அல்லது வேறுமொழி வரிகளை கொஞ்சம் முக்கிமுனகிக் கொண்டு அல்லது காட்டுக்கத்தலாக இசைக்கவும்.
உதாரணம் :பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" பாடல் வேறு பிஜிஎம் ரகம் பிரேம்ஜி அமரன் இசையமைத்த ஒரு படத்தில் பாடலுக்கு "இளமை இதோ இதோ" பாடலின் பிஜிஎம் அப்படியே சுட்டுப்போட்டிருப்பார்.

5. குறிப்பு நாலில் உள்ளதுபோல் இரண்டாவது சரணத்தின் பிஜிஎம்முக்கும் செய்யவும்.

6. இறுதியாக பாடல் முடிந்தபின்னர் கூல், கமோன், ஸ்வீட்டி என ஏதாவது வசனம் சேர்த்து முடிக்கவும் பாடல் தயார்.

பின்னர் சேர்க்கவேண்டிய இசையையையும் பாடகரையும் தயார் செய்த்து நல்லதொரு ரீமிக்ஸ்சை ரசிக மஹா ஜனங்களுக்கு பரிமாறவும்.

ஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்.

7 கருத்துக் கூறியவர்கள்:

ILA (a) இளா சொல்வது:

அது அவ்வளவு சுலபம் இல்லீங்க. ஒரு DJ சாப்ட்வேரை வெச்சு முயற்சி பண்ணி பாருங்க தெரியும்.

Subankan சொல்வது:

//ILA said...
அது அவ்வளவு சுலபம் இல்லீங்க. ஒரு DJ சாப்ட்வேரை வெச்சு முயற்சி பண்ணி பாருங்க தெரியும்.
//

ஆமாம், நானும் முயன்று தோற்றிருக்கிறேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

இளா, சுபாங்கன் நான் இந்த முயற்சி செய்யவில்லை ஜஸ்ட் ரீமிக்ஸ்ச இசையமைப்பாளர்களின் ஒருமாதிரியான இசையை கிண்டல் செய்யவே இந்தப் பதிவு. ஏனோ தெரியவில்லை பலராலும் கவனிக்கப்படவில்லை.

ஆ.ஞானசேகரன் சொல்வது:

கொஞ்சம் கடினம்தான், ஆனால் நாம் மகிழ்ச்சியடைய செய்துப்பார்க்கலாம்,. மற்றவர்கள் ரசிப்பார்கள்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியாது.

Anonymous சொல்வது:

Personally I think ARR's 'Ponmagal vandhaal" remains one of the best remixes done till date. Mmmm...ovvoru manushanukkum ovvoru feeling!

Anonymous சொல்வது:

Personally I think ARR's 'Ponmagal vandhaal" remains one of the best remixes done till date. Mmmm...ovvoru manushanukkum ovvoru feeling!

கானா பிரபா சொல்வது:

ஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்//
படத்தின் சீடியில் ரஹ்மான் என்று குறிப்பிட்டிருந்தாலும் பொன் மகள் வந்தாள் பாட்டு யோகி B இன் கைவண்ணம் மட்டுமே. தொட்டால் பூ மலரும் மட்டும் தான் ரஹ்மான் இசை. ரஹ்மானும் சரி ஜி.வி.ப்ரகாஷ்குமாரும் சரி ரீமிக்ஸ் செய்ய விரும்பாத இசையமைப்பாளர்கள்.