முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?

முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?
மா பலா வாழை என்ற முக்கனிகளில் எந்தப்பழம் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது.
ஒவ்வொரு கனியாக எடுத்து ஒரு சின்ன ஆராய்ச்சி எனக்கு தெரிந்த விடயங்கள் மட்டும் தெரியாதவற்றை நண்பர்கள் அறியத்தரவும்.

மாம்பழம் :
மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா என கோன் பனேகா குரோர்பதியில் ஒரு முறை ஷாருக்கான் கூறியிருந்தார். இதனைப் பற்றிய மேலதிக தகவல்களை யாரும் அறியத்தரவும். மாம்பழத்தைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றில் முருகன் உலகைச் சுற்றிய கதை முதன்மையானது. பெரும்பாலும் இந்துக்கள் வீடுகளில் மாஇலை கூட விசேட வைபவங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

மாவில் பல வகை உண்டு மல்கோவா, பிலாட், கறுத்தக்கொழும்பான், வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, புளி மாங்காய், சேலம், செம்பாடு போன்றவை என் ஞாபகத்தில் இருக்கின்றவை. இவற்றில் சில காயாக சாப்பிட சுவையாக இருக்கும் பழம் அவ்வளவு சுவையானது அல்ல உதாரணமாக சேலம் வெள்ளிக்கொழும்பான் .

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் சுவையே தனிச் சுவைதான். அமுதத்தின் சுவை அறியவேண்டும் என்றால் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் சாப்பிட்டால் அறியலாம். அத்தனை சுவை மிகுந்த மாம்பழம். புட்டுடன் சாப்பிடுவதற்கு கறுத்தக்கொழும்பானை விட்டால் வேறு மாம்பழம் கிடையாது.

சில சீசன்களில் மட்டும் பெரும்பாலன மாம்ப்ழங்கள் கிடைக்கும். மாங்காய்ச் சம்பல் (சட்னி) சாப்பிட்டு இருக்கிறிர்களா? நல்ல சுவையான சட்னியாகும். பாடசாலைக் காலங்களில் பக்கத்து வீட்டு மாமரத்தில் களவாக மாங்காய் அடித்து உப்புத் மிளகாய்த் தூள் போட்டும் உண்ணுவது ஒரு தனி சுவை. இதனைப் பார்ப்பவர்களின் வாயில் அருவியாக ஜொள்ளூ வடியும்.

பலா:
பலாபழம் பார்ப்பதற்க்கு கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் சுளையின் சுவை தனி. இதன் பிறப்பிடம் தெரியவில்லை. அத்துடன் இதற்க்கு வாழை, மா மாதிரி வேறு வகைகளும் இருப்பதாக தெரியவில்லை. தேனுடன் கலந்து சிலர் சாப்பிடுவது உண்டு. இதுவும் மாம்பழம் போல பெரும்பாலும் சில சீசன்களில் மட்டும் கிடைக்கும். பால் உள்ள மரத்திலி இருந்து கிடைப்பதால் இப்பழமும் பால் உள்ள பழமாகும். பலாபழத்தின் சுளையை பிரித்து எடுப்பது என்பது கஸ்டமான ஒரு விடயம் சிலருக்கு கைவந்த கலை மிகவும் அழகாக பிரித்து எடுப்பார்கள். கத்திக்கு எண்ணெய் பூசி வெட்டினால் பால் ஒட்டாது.

வாழைப்பழம்:
பெரும்பாலும் வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் கரிபியன் தீவுகள் எனப் படித்த ஞாபகம். இதுவும் மாம்பழம் மாதிரி பல வகைகள் கொண்டது. கதலி, மொந்தன், சாம்பல், யாணை, கப்பல் என சில வகைகள் மட்டும் எனக்கு தெரிந்தவை. மிக இலகுவாக உண்ணக்கூடிய பழம் என்பதாலும் தினமும் கிடைக்கும் என்பதாலும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதாலும் அன்றாடம் உணவு வேளைகளில் சேர்க்கப்படும் பழவகையாகும். விற்றமின் சீ அதிகம் நிறைந்த பழம்.

இம்மூன்றையும் தேன் சர்க்கரை கலந்து பஞ்சாமிர்தமாக(ஹோட்டல்களில் புரூட் சாலட்) சாப்பிட்டால் அதன் ருசியே ருசி.

11 கருத்துக் கூறியவர்கள்:

லெனின் பொன்னுசாமி சொல்வது:

சூப்பர் பதிவு..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்வது:

எல்லாக்காலமும் கிடைப்பது எவருக்கும் கிடைப்பதால் வாழைப் பழத்துக்கே என் வாக்கு.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் பூக்குட்டி யோகன் பாரிஸ்.
எனக்கும் வாழைப்பழம் தான் அதிகம் பிடிக்கும். பலாப்பழம் பிடிப்பது குறைவு காரணம் கூழாம்பாணிப் பழம் என்றால் தொண்டையில் சிக்கிவிடும் அபாயம்.

Anonymous சொல்வது:

yummmmmmy post

சாமியார் சொல்வது:

sivagirirajan@gamil.com

Sir article is superb I am ready to eat three fruits please send it to me.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் தூயா கிரி இருவருக்கும், கிரி உங்களுக்கு நான் முக்கனிகளையும் அனுப்பத்தயார் ஆனால் கணணி ஊடாக அனுப்பும் முறை இன்னமும் வரவில்லை.

Chandravathanaa சொல்வது:

சுவையில் மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் அல்ல.

நல்ல பலாப்பழத்தின் தித்திப்பே தனி. மாம்பழமும் கறுத்தகொழும்பானாய் இருந்தால் சொல்லவே தேவையில்லை. இரதை வாழைப்பழம், கப்பல் வாழைப்பழம்.. என்று அவைகளும்
தனித்தனி தித்திப்பான சுவை கொண்டவை.

ஆனால் அளவுக்கதிகமான பலாப்பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குத்து வர வாய்ப்புண்டு. வேறு
பக்க விளைவுகளும் ஏற்படலாம்.

மாம்பழத்தில் விற்றமின் ஏ அதிகம் என்றாலும் புளித்தன்மை கூடிய மாம்பழங்களால் சிலருக்கு
அமிலப்பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. சில உணவுகளுடன் சேரும் போது பாரதூரமான பக்க விளைவுகளும்
ஏற்படுவதுண்டு.

வாழைப்பழம் ஒன்றுதான் பக்கவிளைவுகள் இன்றிய 5விற்றமின்களை ஒன்றாகக் கொண்ட ஒரு பழம்.

சிலர் தடிமன் என்றால் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லிப் பிள்ளைகளைத் தடுப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தடிமனின் போது வாழைப்பழம் சாப்பிட்டால் தடிமன் குணமாகும் என்பதுதான் உண்மை.

வயிற்றுக்குத்தின் போதும் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குத்து நின்று விடும். இப்படிப் பல மருத்வககுணங்கள்
கொண்ட, விக்கினமில்லாத, வைற்றின்கள் நிறைந்த ஒரே பழம் வாழைப்பழமே

வந்தியத்தேவன் சொல்வது:

உங்கள் வருகைக்கு நன்றிகள் அக்கா.
வாழைப்பழம் பற்றிய பல விடயங்களை அறிந்துகொண்டேன். நானும் தடிமன் கால்ங்களில் வாழைப்பழம் சாப்பிடாதவன் தான்,

காரூரன் சொல்வது:

என்ன தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் பஞ்சாமிர்தம் சாப்பிட்டனீங்களோ? பழ சுவையிலை ஆராச்சியிலை இறங்கிவிட்டீர்கள். என்ன இருந்தாலும் கறுத்த கொழும்பான் அப்பிடி ஒரு ருசி பாருங்கோ, ஊரை விட்டு வெளியிலை வந்ததாலை இன்னும் நாக்கு ஊறுது.

வந்தியத்தேவன் சொல்வது:

//என்ன தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் பஞ்சாமிர்தம் சாப்பிட்டனீங்களோ?//

அட நீங்களூம் கரவெட்டியா? மகிழ்ச்சியாக இருக்கின்றது.கறுத்தக்கொழும்பானுக்கு நிகர் கறுத்தக்கொழும்பான் தான் இது பற்றி கானாபிரபா பெரிய ஆராய்ச்சியே நடத்தியிருந்தார்.

Unknown சொல்வது:

//giri சொல்வது:
sivagirirajan@gamil.com

Sir article is superb I am ready to eat three fruits please send it to me. //

என்னாது சேரா?
என்ன கொடுமை நிக்கிறம் இது?
சேர் மோர் எண்டெல்லாடம் பதில் வருது?

டாக்குத்தர் கீக்குத்தர் பட்டம் ஏதும் 'குடுத்து' வாங்கீற்றியளோ?
சொல்லவே இல்ல?

நான் வாழைப்பழப் பக்கம்....
பலாப்பழம் எனக்கு டிபரிதாக பிடிப்பதில்லை...
பிடிக்காது என்றில்லை, ஆனா இரசிகன் என்று சொல்வதற்கில்லை.

மாம்பழம் அசத்தல்...
பழுத்த கறுத்தக் கொழும்பனும், நன்கு முற்றிய பழுக்கத் தயாரான விளாட்டும், நன்கு முற்றிய சேலனும் அசத்தலா இருக்கும்...
இங்க மாம்பழம் எண்டு சொல்லி வேற ஏதோ விக்கிறாங்கள்....
எனக்கு இங்க மாம்பழம் பிடிக்கேல...

வாழைப்பழத்தில இதரை நல்லா இருக்கும்...
கதலியும் பரவாயில்லை...
ஆனா எனக்கு மாம்பழமும் வாழைப்பழமும் தான்...

என் வாக்கு இரண்டிற்கும்...

உங்கள் பழப்பதிவுக்கு வாழ்த்துக்கள்...