இன்றைக்கு எதேச்சையாக தமிழ்மணத்தை வழக்கம் போல் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு தெரிந்த பெயர் லெனின் பொன்னுசாமி. முதலில் யாரோ நகுலன் பொன்னுசாமி என்ற எழுத்தாளரின் உறவினரோ என்ற அச்சம் ஆனாலும் இவரின் ஒரு பதிவின் தலைப்பான ஜோடிப்பொருத்தம்..சீசன் - தேனிலவு இது எனக்குத் தெரிந்த லெனின் தான் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த வலையைப் பார்த்தால் சாட்சாத் எங்கள் அனைவராலும் செல்லமாக பூக்குட்டி என அழைக்கப்பட்ட லெனின்.
ஏற்கனவே இவர் குழந்தைகளை கவரும் பெயரில் ஒரு வலை வைத்திருந்தார் என்ன காரணமோ அதனை விட்டுவிட்டு அல்லது வேறு யாருக்கோ விற்றுவிட்டு புதிதாக ஆரம்பித்துள்ளார்.
லெனினுடனான என் உறவு 2006 ஏப்ரலில் ஒரு விவாதக் களத்தில் ஆரம்பித்தது. நான் வலை ஆரம்பிக்க காரணமாக இருந்த கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அத்துடன் என் வலையை அழகுபடுத்தித் தந்த கலைஞர் இவர்.
சிறந்த எழுத்தாளாராக அதிலும் எந்த சீரியசான விடயத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய ஒருவர். நிச்சயம் இவரின் வலை பேசப்படும். இதற்க்கு இரண்டு காரணங்கள் :
முதலாவது இவரிற்க்கு மொக்கை போடுவது கும்மி அடிப்பது கைவந்தகலை.
இரண்டாவது சீரியாசகவும் பல சிந்திக்கத் தக்க விடயங்கள் எழுதுவார்.
வாழ்த்துக்கள் லெனின் இனி தினம் தினம் உன் வலையில் கொண்டாடு.
http://leninonline.blogspot.com/
செவ்வாய், நவம்பர் 25, 2008
தினம் தினம் கொண்டாடு
எழுதியது வந்தியத்தேவன் at இரவு 10:36 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் தினம் தினம் கொண்டாடு, லெனின்
புதன், நவம்பர் 12, 2008
கலாநிதி மாறன் ஏமாத்திப்போட்டார்.
இன்று விடுமுறை என்பதால் சன் டிவியின் அதீத விளம்பரத்தினால் காதலில் விழுந்தேன் பார்க்க கிடைத்தது.(திரையில் அல்ல சிடியில் தான்). எத்தனையோ விமர்சனம் வாசித்திருந்தாலும் குருவி, சத்யம் போன்ற படங்களை விடவா கொடுமைப் படுத்தப்போகின்றது என்ற அசட்டுத்துணிவில் களத்தில் இறங்கினேன்.
இப்படிக்கொடுமையான ஒரு படத்தை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை.
இதனைப்போய் சன் டிவியின் டாப் டென்னில் முதலாவது இடத்தில் வைத்திருக்கும் கலாநிதி மாறனின் ரசனையை என்ன சொல்வது.
இந்தப் படத்திற்க்கு எல்லாம் விமர்சனமா ஐயோ சாமி ஆளைவிடுங்க.
சர்வேசன் போன்ற எதற்க்கும் துணிந்தவர்கள் சன் குழுமத்தின் அடுத்த படமான தெனாவட்டையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இதனால் என்னைப்போன்றவர்கள் பலர் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு சன் குழுமம் விருது கொடுத்து கெளரவிக்கவேண்டும்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்க்கு என்ன படம் பார்க்கலாம்?
எழுதியது வந்தியத்தேவன் at மதியம் 3:09 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலாநிதி மாறன், காதலில் விழுந்தேன், சன் குழுமம்
புதன், நவம்பர் 05, 2008
கண்சிமிட்டும் நட்சத்திரம்
கண்சிமிட்டும் நட்சத்திரம்
எழுதியது வந்தியத்தேவன் at இரவு 11:12 5 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் பாடல், ரேவதி சங்கரன்