முன்குறிப்பு : நான் இந்தப் படத்தின் ஆதாரமான ஹிந்திப்(A Wednesday) படம் பார்க்கவில்லை. தசாவதாரத்தின் பின்னர் ஒரு படம் முதல் நாள் முதல் காட்சி.
நாம் தினமும் பத்திரிகைகளில், சில தொலைக்காட்சிகளில வாசிக்கும் பார்க்கும் சம்பவங்கள் எம்மை சமூகத்தின் மீதும் சில மக்களின் மீதும் தார்மீக கோபம் கொள்ளச் செய்யும், அப்படிக் கோபம் கொண்ட ஒரு சாமனியனின் கதைதான் உன்னைப் போல் ஒருவன்.
கதை :
வழக்கம் போல் சொல்லமாட்டேன், திரையில் பார்க்க.
திரைக்கதை :
கமலின் வேகமான திரைக்கதை படத்தின் அச்சாணி. எத்தனை காலமாகிவிட்டது இப்படியொரு வேகமான திரைக்கதையைப் பார்த்து. பிரேசில் அர்ஜென்ரீனா விளையாடும் கால்பந்து இறுதி ஆட்டம் போன்ற விறுவிறுப்பான திரைக்கதை. நான் இங்கே கால்பந்தைக் குறிப்பிடக் காரணம் படம் முதல் பாதி 50 நிமிடங்கள், இரண்டாம் பாதி 50 நிமிடங்கள் (கால்பந்தில் 45+45). மோகன்லால், கமல், மற்றும் இன்னும் இரண்டு போலீஸ்காரர்களினூடு கதையைக் கொண்டுபோகும் உத்தி என கமல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.
வசனம் :
சுஜாதாவின் பின்னர் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு நல்ல வசனகர்த்தாவாக இரா.முருகன் மிளிர்கின்றார். எள்ளலுடன் கூடிய வசனங்கள் அனைத்தும் கூர்மையானவை. பல இடங்களில் வசனங்கள் ரசிகர்களைக் கை தட்ட வைக்கிறது. எந்த இடங்கள் எனச் சொன்னால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரசியம் கெட்டுவிடும். சில இடங்களில் வரும் ஆங்கில வசனங்கள் கூட மிகவும் கூர்மையானவை. அத்துடன் சாதாரண ரசிகனுக்கும் புரியும் எளிமையான வசனங்கள் என இரா.முருகன் முதல் படத்திலையே சதமடித்திருக்கிறார்.
இயக்கம் :
சலங்கை ஒலியில் கோணங்கித் தனமாக படம் எடுத்த சின்னப் பொடியனான சக்ரி டொலட்டி இதை இயக்கியிருக்கிறார் (பின்னர் தசாவதாரத்தில் ஷிட்ராமாக மன்னிக்கவும் ஸ்ரீராமாக கோவிந்த் கமலுடன் அமெரிக்க காட்சிகளில் வருபவர்). கமல், மோகன் லால் என இரண்டு பிரமாண்டங்களை காட்சிகளில் பிரமாண்டம் இல்லாத படத்தில் திறமையாக இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு :
மனோஜ் சோனியின் ரெட் ஒன் கமேராவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். சமீபத்தில் பார்த்த ஒரு பிரமாண்ட படத்தின் ஒளிப்பதிவுடன் ஒப்பிடும்போது மிகமிகமிக அருமை. அதிலும் எந்த மொட்டை மாடிகளில் இருந்து கழுகுக் பார்வையாக சில காட்சிகள், ஒரு பானை சோற்றுக்குப் பதமான ஒரு சோறு.
இசை :
கமலின் தயாரிப்பான ஸ்ருதியின் அறிமுகம். பாடல்களும் பாடல் வரிகளும் பலராலும் ஏற்கனவே பாராட்டப்பட்டவை, ஆனால் படத்தில் பாடல்களே இல்லை. அல்லா ஜானேயின் சில வரிகள் மட்டும் ஒரு தடவை மட்டும் வருகின்றது. பின்னணி இசையில் ஸ்ருதி கம்பன் வீட்டுக் கட்டுத் தறியாக கலக்கியிருக்கிறார். கமல் மாடிப் படிகளில் ஏறும் காட்சிகளிலும் மோகன் லால் சம்பந்தப்பட்ட சில காட்சிகளிலும் ஸ்ருதி பிரமாதம். இன்னொரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவிற்க்கு தயார்.
நடிப்பு :
கமல், மோகன் லால் இருவரினதும் மிகையில்லாத இயல்பான நடிப்புகளை பாராட்டுவது என்பது சூரியனுக்கு டோர்ச் அடிப்பது போன்றது(வரிகள் உதவி கேபிளார், வேறை வார்த்தைகள் தேடினேன் கிடைக்கவில்லை), இவர்களுடன் இந்த இரண்டு போலிஸ்காரர்களும் மிகவும் திறமையாக தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார்கள். லக்ஸ்மியும் தன் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்(லக்ஸ்மிக்கு வயது போய்விட்டது என பக்கத்து இருக்கை நண்பர் கவலைப்பட்டார்). சதிலீலாவதி சின்னப் பையன், எங்கேயோ போய்விட்டீர்கள் சிவாஜி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன் போன்றவர்களும் வந்துபோகின்றனர். சிகரட்டும் கையுமாக நவநாகரீக பெண்ணாக வரும் அனுஜா ஐயரும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
படத்தில் உள்ள சிறப்புகள் :
1. ஹீரோ அறிமுகப் பாடல், குத்துப்பாடல், குத்தாத பாடல் எனப் பாடலே இல்லை.
2. கதாநாயகி இல்லை, கத்துக் குட்டி ஹீரோக்களே இரண்டு ஹீரோயின் கேட்கும் போது ஹீரோயினே இல்லாத படம்.
3. முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டயலாக் இல்லை. இரண்டு தடவைகள் கமல் மொபைல் போனைப் பார்த்து "your time starting now " என்பார் அதுதான் உண்மையான பஞ்ச்.
4. திணிக்கப்பட்ட நகைச்சுவைகள் இல்லை. திரைக்கதையுடன்மெல்லிய நகைச்சுவையும் பயணிக்கின்றது.
5. கதாநாயகன் 20 பேருடன் சண்டைபோடுவது இல்லை, வில்லன் இல்லை.
இப்படிப் பல தமிழ்சினிமாவின் பாரம்பரியங்களை உடைத்திருக்கின்றது இந்தப் படம். படத்தின் பல காட்சிகளில் நிறைய உள்குத்துகள் பின்நவீனத்துவமாக தெரிகின்றது.
மொத்ததில் பொன்விழா நாயகன் கமலின் மகுடத்தில் இன்னொரு வைரம் உன்னைப்போல் ஒருவன்.
உன்னைப் போல் ஒருவன் வேறு யாரும் அல்ல நீங்களும் நானும் தான்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
23 கருத்துக் கூறியவர்கள்:
கச்சிதம்!
arumai boss
விமர்சனம் அருமை.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. என் கருத்தை, படத்தை பார்த்துட்டு சொல்கிறேன்...
அதுக்குள்ள பாத்துட்டீங்களா பாஸ்? சூப்பர். அப்ப பாத்துட்டாப் போச்சு!
நல்ல விமர்சனம்.
இப்படி படத்தை 1 மணி நேரம் முதல் போய் நிண்டு வெயிட் பண்ணி பாக்கலாம்...
என்ன நான் சொலுறது சரி தானே???
நண்பரே! சிறப்பான அலசல்.
எனது கவலையெல்லாம் இந்த அரிய கலைப் படைப்பை இந்த தமிழ் சமுதாயம் வெற்றி பெறசெயுமா? குறைந்தது சினிமா எனும் கலையின் மகுடத்தில் இருக்கவேண்டிய மாணிக்கமாக நான் கருதும் இப்படத்துகுரிய மரியாதையை கொடுப்பார்களா?
கமலை பற்றி பேச நான் ஒன்றும் அவரை போல் Genius இல்லை, நான் உங்களை போல் ஒருவன். :-)
கமல் எனும் மனிதன் வாழ்ந்த காலப்பகுதியில் நானும் வாழ்ந்ததை எண்ணி நான் பெருமை படுகிறேன்.
நன்றி
\\முகத்தை குளோசப்பில் காட்டி பயமுறுத்தும் பஞ்ச் டயலாக் இல்லை. இரண்டு தடவைகள் கமல் மொபைல் போனைப் பார்த்து ----------------என்பார் அதுதான் உண்மையான பஞ்ச்.
\\
mobile phone ஐப் பார்த்து என்ன சொல்லுவார்????
ஆங்கிலப்படங்களை ஒத்த படம்.. நானும் வெட்னிஸ்டே பார்காகதததால் விறுவிறுப்பாக இருந்தது.. சிறுவயதில் உண்மை என்றொரு மம்முட்டி நடித்த திரைப்படத்திற்கு பிறகு விறுவிறுப்பு குன்றாமல் பார்த்த ஒரே தமிழ்ப்படம் உன்னைப்போல் ஒருவன்.. அருமையான விமர்சனம்.. ... அனைவரும் இதை தியேட்டரில் பார்த்து ரசிக்கவேண்டும்..
அடுத்த வார இறுதியில் அடியேன் திரையரங்க வாசலில் இருப்பாராக்கும். ;)
விமர்சனத்திற்கு நன்றி. அனேகம் ரீ-மேக் திரைப்படங்கள் எனக்கு அவளவாகப் பிடிப்பதில்லை. ஆனால் இதில் கமல் நடித்திருப்பதால் கட்டாயம் பார்க்கவேண்டும்.
உன்னைப் போல் ஒருவன் தமிழ் சினிமாவை வேறொரு வடிவத்துக்கு இட்டுச் செல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். (நானும் வெட்னிஸ்டே பார்க்காதவன்)
படம் ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொரு முறை திரையில் பார்க்க ஆவல்...
புல்லட் said... "நானும் வெட்னிஸ்டே பார்காகதததால் விறுவிறுப்பாக இருந்தது"
ஆதிரை said... "(நானும் வெட்னிஸ்டே பார்க்காதவன்)"
चीईईई
அதை பார்த்தாலும் இது வித்தியாசம்... இதில் உள்ள spead, Acting, editing ext.. "A whensday" இல இல்ல
பார்த்திட்டு ஒரு விமர்சனம் போடுங்க புல்லட்,ஆதிரை
mayooran anna(வந்தி) உங்கள் விமர்சனம் பத்தாது.... சில நேரம் மிச்ச பேர் பார்க்கணும் எண்ட நல்ல எண்ணமோ??
கமலின் மற்றொரு முத்திரைப் படம்..
கதை சொல்லாமல் சில நல்ல விஷயங்கள், முக்கிய அம்சங்கள் பற்றி மட்டும் சொன்னதுக்கு பாராட்டுக்கள்..
நான் இன்று பதிவிடுவதாக இருக்கிறேன்.. ஆதலால் தான் இந்த சுருக் பின்னூட்டம்
நாளை படம் பார்த்திட்டு இந்த பதிவ வாசிக்கிறேன். அப்புறம் மீண்டும் பின்னூட்டுகிறேன்..
பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html
இந்த சாமுண்டி என்பவர் காட்டாமணக்கு வலைப்பதிவை எல்லோர் வலைப்பதிவிலும் போட்டுத் தொலைக்கிறார்.
இது ஒரு நியூசென்ஸா இல்லை நான்சென்ஸா என்று தெரியவில்லை ?
நல்ல விமர்சனம், நன்றி.
நேர்த்தியான பதிவு அன்பரே :-)
vanakam...naanum hindi version innum paarke villai. i'watch it soon. but, plz dont compare hindi version to tamil version. for me, kamal has done vry good job and me and my family realy enjoyed the movie. i used to think that why tamil industry nvr released any movie as english movie. but, UNNAI POL ORUVAN had satisfied me 100%. when i came out, i felt like watched an english movie..WOW..!!
ரசிக்கும் படியான நிறைய விசயங்கள் இருக்கின்றது. மோகன்லால் நடிப்பு சிறப்பு.
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் அழிக்க முடியும் என்பது கருவாக உள்ளது. இந்தக் கோட்பாட்டில் யாரும் வெற்றி பெற முடியாது ஏனெனில் திவிரவாதியாய் வருபவர்களும் குஜராத் கலவரத்தில் மனைவி பிள்ளைகளை இளந்தவர்கள். அவர்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்ததற்கும் காரணம் இருக்கின்றது.
தீவிரவாதத்தை ஒழிப்பது இந்த திரைப்படத்தின் நோக்கம் இல்லை.
பகவத் கீதையின் யுகே யுகே என்ற இந்துத்துவ பாடலை படத்துடன் சம்மந்தம் இல்லாமல் அறிமுகமாக்கியிருக்கின்றார்கள்.
நல்ல சினிமா. நல்ல நடிப்பு நல்ல காட்சி அமைப்புக்கள் ஆனால் நேர்மையற்ற செய்தி.
சாமானிய இந்தியனின் உணர்வுகள் இந்துத்துவத்தை கடந்து வர முடியாமல் தோற்பது பரிதாபமான நிலை.
//Any
நல்ல சினிமா. நல்ல நடிப்பு நல்ல காட்சி அமைப்புக்கள் ஆனால் நேர்மையற்ற செய்தி.
Ithai nan varvetkirean....
Kamal ena periya actoraa irunthalum sola vantha vishaym pila....
for me U.P.O is not an ordinary film but also not an extraordinary film.
உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)
எங்கெல்லாம் அடக்குமுறை உள்ளதோ அங்கெல்லாம் தீவரவாதம் பிறந்தே தீரும் என அடித்துச் சொன்னவர் கமல்..
அப்படிப்பிறக்கிற தீவிரவாதத்தை வெட்டிச் சாய்க்கிற சாமானியனான கமல்... தீவிரவாதம் உருவாக காரணமான அடக்குமுறையை என்ன செய்ய இருப்பதாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே...
இன்னும் சொல்லப்போனால்
கமலுக்கு வந்த கோபத்தைப் போலவே அடக்குமுறைக்கு எதிரான ஒரு சாமானியனின் கோபம்தானே தீவிரவாதம்..
அப்பிடிப்பார்த்தால் இந்தப் படத்தில் கமல் பயன்படுத்திய தீவிரவாதத்திற்கான பதிலடியாக யாரும் காமன்மான் கமலைக் கடத்திக் கொல்லக்'கூடுமோ...........?
Post a Comment