1. நயன்தாரா
ஐயா படத்தில் குத்துவிளக்காக அறிமுகமாகி, சந்திரமுகியில் இடத்தைப் பிடித்து பில்லாவில் கவர்ச்சி சுனாமியில் இறங்கி, இன்றைக்கு ஏகன், சத்யம்,வில்லு என முதலாம் இடத்தில் இருப்பவர் நயந்தாரா.
சம்பளம் : 75 லகரங்கள்
குறிப்பு : பிரபுதேவா சர்ச்சையால் புதுப்படங்கள் குறையும் வாய்ப்புகள் உண்டு ஆதவன் வெற்றி பெற்றால் முதலாம் இடம் சில காலத்துக்கு நிரந்தரம்.
2. ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு பதினெட்டில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, சிவாஜியில் கவர்ச்சி காட்டி, இந்திர லோகத்தில் நா. அழகப்பனில் ஒரு பாட்டுக்கு மட்டும் 15 லகரத்தில் வடிவேலுடன் ஆடி இன்றைக்கு சுப்புலட்சுமியாக கந்தசாமியில் கவர்ச்சி பூனைக்குட்டியாக வலம் வருகிறார்.
சம்பளம் : 70 லகரங்கள்
குறிப்பு : கந்தசாமி வெற்றி பெற்றால் சம்பளமும் உயரலாம். நயனின் முக்கிய போட்டியாளர்.
3. திரிஷா
ஆரம்பத்தில் பிக்கப் ஆகாவிட்டாலும் கில்லியின் வெற்றியால் சில நாட்கள் வெற்றிக்கொடி நாட்டியவர். பின்னர் வந்த குருவியால் சற்று சறுக்கல், சர்வம் இன்னும் கொஞ்சம் சறுக்கல். சர்ச்சைகளின் நாயகி.
சம்பளம் : 60 லகரத்திலிருந்து 50 க்கு குறைந்துவிட்டது.
குறிப்பு : சுனைனா, தமன்னாவின் வரவினால் இடம் பறிபோகும் அபாயம்.
4. அசின்
ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்பாடவிட்டாலும் கஜனி,போக்கிரி ஹிட்களால் தசாவதாரம் வரை வெற்றிக்கொடி நாட்டினாலும் ஹிந்திக்குப் போனதால் இவரின் இடம் வெற்றிடம் தான்.
சம்பளம் : 60 லகரம்
குறிப்பு : ஹிந்தியில் இருந்து மீண்டும் தமிழிற்கு வந்தால் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்கலாம்.
5. பாவனா
குடும்பப் பாங்கான பாத்திரங்களில் மக்களின் மனதை வென்றவர். தீபாவளி, வாழ்த்துகள், ஜெயம் கொண்டான் எனப் பல படங்கள் நடித்தாலும் இன்னும் சொல்லும் படியான ஹிட் கொடுக்கவில்லை.
சம்பளம் : 40 - 45 லகரம்
குறிப்பு : கொலை ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருப்பதனால் வாய்ப்புகள் குறையும் அபாயம்.
6. ஜெனிலியா
பாய்ஸ்சில் அறிமுகமாகி சச்சினில் கொஞ்சம் பேசப்பட்டாலும் சந்தோஷ் சுப்பிரமணியம் மூலம் ஹிட் அடித்தவர்.
சம்பளம் : 35 லகரம்
குறிப்பு : அக்கட பூமியிலை அடிக்கடி தங்குவதை நிறுத்திவிட்டு தமிழ்ப் பக்கமும் வந்துபோகவும்.
7. சினேகா
இன்னொரு குடும்ப குத்துவிளக்கு. பல படங்கள் நடித்தாலும் ஏனோ முதல் இடம் இன்னும் கிடைக்கவில்லை(சம்பளத்தில்). பாண்டி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியை கையில் எடுத்து சூடுபட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் என்றைக்கும் ஜொலிப்பவர்.
சம்பளம் : 20 - 25 லகரம்
குறிப்பு : எம்எம்எஸ், செருப்பு என பல சர்ச்சைகளில் சிக்குகிறார்.
8. நமீதா
எங்கள் அண்ணாவில் அறிமுகமான சூறாவளி. ஆண்களின் மச்சாள். பில்லாவில் நயனுக்கு நிகராக கவர்ச்சி காட்டினார். சொல்லிக்கொள்ளும் படி எந்த படங்களும் ஹிட் அடிக்கவில்லை. மானாட மயிலாடவில் ஒரு எபிசோட்டிற்க்கு 1 லகரம் என கலைஞர் தொகா வட்டாரங்கள் தகவல்.
சம்பளம் : 20 - 25 லகரம்
குறிப்பு : ஜெகன்மோகினியின் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
9. ப்ரியாமணி
பாரதிராஜா அறிமுகம். பருத்திவீரனில் முத்தழகாக அடக்க ஒடுக்கமாக வந்தாலும் மலைக்கோட்டையில் கவர்ச்சிக் கோட்டை கட்டியவர்.
சம்பளம் : 15 - 20 லகரம்
குறிப்பு : தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை ஏனோ தமிழில் காட்டுகின்றார் இல்லை.
10. ரீமா சென்
மின்னலாக வந்தவர். தூள் வல்லவன் போன்ற படங்களி கவர்ச்சி காட்டினாலும் வல்லவனில் சிம்புவின் நயன் மோகத்தால் எடிட் செய்யப்பட்டவர். ஆயிரத்தில் ஒருவனை நம்பியிருக்கின்றார்.
சம்பளம் : 12 - 15 லகரம்
குறிப்பு : பெரிதாக ஹிட் கொடுக்காத படியால் முதலாம் இடத்தில் வரவேண்டியவர் 10ல் இருக்கின்றார்.
Box Office Report -Aug 16th
-
𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁, 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲, 𝗪𝗮𝗿𝟮,
𝟯[image: 🇩][image: 🇦][image: 🇾]- 𝗖𝗢𝗢𝗟𝗜𝗘-[image: 🇨][image: 🇴]
[image: 🇱][imag...
16 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
கடைசியாக உங்கள் சம்பளத்தை எதிர்பார்த்தேன்.. ;)
பாவனா கொலைக்கேசா? யம்மாடி! அவளுடைய தொப்பையினுள் இவ்வளவு ரகசியம் ஒளிந்திருக்கிறதா?
10வருடங்களாக திரிசா பீக்கில் இந்தால் எப்படியும சினிமா அட் துறைகளுடேயும் திறப்பு விழாக்களாம் திறந்த விழாக்களாலும் 100கோடிக்கு மேல் உழைத்துவிடுவார்.. வந்த காசை வட்டிக்கு விட்டுட்டு சிவனே எண்டு வாழலாம்..
அழகுதான் இஙகே மூலதனம்..
ம்....
நல்ல பல சமூக கருத்துகளை கொடுக்கும் உங்கள் பதிவு நன்றிகள்
எப்படி இந்த ஆராய்வெல்லாம் செய்றீங்க. வாழ்த்துக்கள் வந்தி
நயன் தாரா வுடன்1 படம் பண்ணும் செலவில் ரீமாவுடன் 6-7 படம் பண்ணலாம் போல???
:)))
படங்களுக்காகவே இந்த பதிவை அடிக்கடி படிக்கலாம்...
:)))
டாப் 10ல முக்கியமா இப்ப இருக்க தமன்னாவ சேக்க மறந்துட்டேங்கலே!
Post a Comment