ஏற்கனவே கந்தசாமி பார்த்து நான் நொந்தசாமியாக மாறியிருந்தாலும் கந்தசாமியை விமர்சிப்பவர்கள் அனைவரும் முட்டாளகள் பைத்தியக்காரர்கள் என தாணு குற்றம் சாட்டியதில் நான் படத்தைச் சரியாகப்பார்க்கவில்லையோ என்ற நினைப்பில் மனதில் மீண்டும் ஒரு தடவை பார்த்த போது சில விடயங்கள் பளிச்சிட்டன் அவற்றின் தொகுப்புத் தான் இது.
முதல் காட்சியிலையே ஒருவர் கந்தசாமி கோவிலில் வந்து அழுவார் அவரிடம் கோயில் ஐயர் கந்தசாமியிடம் முறையிட்டு ஒரு கோரிக்கையை எழுதி மரத்தில் கட்டச் சொல்வார். இந்தக் காட்சியின் மூலம் இயக்குனர் எந்த கோரிக்கை என்றாலும் ஒரு மூன்றாம் தரப்பினூடு எழுத்தின் மூலம் விடுத்தால் தான் அதுவே கடவுளுக்கே என்றாலும் ஒழுங்காகச் சேரும் என்ற அரசியலை விளக்குகின்றார்.
விக்ரம் கோழியாக வருவதற்கான காரணமாக என்னால் புரிந்துகொள்ளப்படுவது கோரிக்கை கட்டிய கோவில் முருகன் கோவில் முருகனின் கொடி சேவல்கொடி ஆகவே முருகனின் வழிவந்தவர் தான் என்பதைக் காட்டுகின்றார். அத்துடன் சேவல் கோழி வேடம் போட்டால் தண்டனையிலும் இருந்து தப்பலாம் என்ற சாணக்கியமும் இதில் இருக்கின்றது. எந்தக்கோட்டிலும் மிருகங்களுக்கு தண்டனை இல்லை.
அத்துடன் கதாநாயகியை உரிச்ச கோழியாக காட்டும்போது கதாநாயகனை அவருக்கு ஈடாக காட்டவே அவருக்கு அந்த வேடம், யாரும் பெண்ணினவாதிகள் சுசி கணேசன், ஸ்ரேயாவை மட்டும் உரிச்சுக்காட்டினார் ஆனால் விக்ரத்தை காட்டவில்லை என்ற பிரச்சனை எடுக்காமல் இருக்க அவரை உரிக்காத கோழி வேடத்தில் காட்டினார்.
இந்தியப்பொண்ணு தங்கம் பாடலில் ஸ்ரேயாவின் ஆட்டத்தை விக்ரம் இந்தியாவில் இருந்து பார்த்தது இணையத்தின் இன்றைய முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. தொழில்நுட்ப வசதிகளை சாதாரண பாமரனும் விளங்கவே இந்தப் பாடல் என்பது தொழில்நுட்பபுலிகளுக்கு மாத்திரம் விளங்கும்.
இந்தப் படம் சிறுவர்களுக்கான படம் என்பதை ஏனோ பெரியவர்கள் மறந்துவிடுகிறாகள் அதற்க்கு ஆதாரமாக "மியாவ் மியாவ் பூனை" பாடலில் ஒன், டூ, த்ரியை என்ன அழகாக "வன் நம் இதயம் ஒன்னு, டூ நம் உடல் தான் இரண்டு, த்ரி நாம் ஒண்ணாகச் சேர்ந்தால் ஆவோம் மூணு" என அழகாக சொல்கின்றார்கள் ஒன், டூ, த்ரி தெரியாத குழந்தைகள் இந்தப்பாடலில் ஒன், டூ, த்ரியை இலகுவாக கற்றுவிடுவார்கள்.
அதுமட்டுமல்ல பூனை மியாவ் மியாவ் என சத்தம் போடும் என்பதையும் எப்படி நடக்கும் எப்படி கைகளை வைத்திருக்கும் என்பதை ஸ்ரேயாவின் அங்க அசைவுகள் மூலம் குழந்தைகளுக்கு இலகுவாக புரியவைக்கின்றார்கள்.
ஆனால் "த்ரி நாம் ஒண்ணாகச் சேர்ந்தால் ஆவோம் மூணு" என்ற வரிகளில் தான் சாதாரண குழந்தைகள் குழம்பிப்போகின்றன ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்.
விக்ரத்தை அவரது அலுவலகத்தில் முதன்முறையாக சந்திக்கவரும் ஸ்ரேயா தன் ஆடைகளை தன் நகங்களால் கிழிப்பதன் மூலம் மஹாத்மா காந்தியின் ஒரு பெண்ணிற்க்கு அவரது நகங்களே ஆயுதம் என்ற எண்ணக்கருத்தை அப்படியே கடைப்பிடிக்கின்றார். இந்த இடத்தில் ஸ்ரேயாவை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே பார்க்கவேண்டும் என்பதை சொல்கின்றார்கள்.
மெக்சிகோ காட்சியில் வில்லனிடம் அகப்படும் விக்ரத்தை காக்க வருபவர் யார் என்றால் (சுசி)கணேசன், எப்படி வள்ளியை யானை வடிவம் எடுத்து வந்து முருகனிடம் சேர்ப்பாரோ அதேபோல் கணேசன் என்ற கந்தசாமியின் அண்ணன் தன் தம்பியை கெட்டவர்களிடம் இருந்து காக்கின்றார்.
விக்ரம் பணக்காரர்வீடுகளில் கறுப்புபணத்தைத் தேடும் போது ஏன் சுட்டியல் கொண்டுபோகின்றார் தெரியுமா? சுட்டியலுக்குப் பதிலாக ஒரு அலவாங்கோ, மண்வெட்டியோ கொண்டுபோயிருக்கலாம் தானே? சுட்டியை அங்கே வைத்த காரணம் சுட்டியல் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வைத்திருக்கும் ஒரு கருவி, சுத்தியைக் கையில் எடுத்ததன் மூலம் அந்த இடத்தில் ஒரு நீதிமானாக உருவகிக்கப்படுகின்றார்.
இப்படிப் பல நல்ல விடயங்கள் படத்தின் பல காட்சிகளிலும் கொட்டிக்கிடக்க அந்தப் படத்தை நொந்தசாமி, கந்தல்சாமி, சூப்பர் ஷீரோ என விமர்சித்த வலையுலக விமர்சகர்களை என்ன செய்யலாம். மீண்டும் ஒரு முறை அவர்களைப் படத்தைப் பார்க்கசெய்யலாமா? (இலவச டிக்கெட் என்றாலும் ஒருதனும் வரமாட்டான் என்பது வெளிப்படை உண்மை).
டிஸ்கி: தாணுவின் விசர்த்தனமான அறிக்கையைப் பார்த்தபின்னர் வந்த கோபத்தை அடக்கவே இந்த விசமத்தன்மான பதிவு. இதில் எந்த பின்நவீனத்துவமும் இல்லை. பின்நவீனத்துவவாதிகள் மன்னிக்கவும்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
46 கருத்துக் கூறியவர்கள்:
இது தான் பின்னவீனத்துவமா....? சூப்பர்...!
கந்தசாமியை திட்டி எழுதிய வந்தி, தாணு என்கிற தயாரிப்பாளருக்கு பயந்து அதே படத்தை மீள் விமர்சனம் செய்கிறேன் என்கிற பேரில் கடித்து குதறியதற்கு எங்கள் பதிவுல சட்டப்படி விக்ரம் நடித்த சேதுக்கு முன்னைய படங்களை தொடர்ந்து ஒரு மாதம் பார்க்க தண்டனை கொடுக்கிறேன். அப்படி விக்ரம் படம் இல்லாத பட்சத்தில் பிரசாந்த், ரித்தீஷ் படங்களை பார்த்தாவது திருந்த வேண்டும்
கந்தசாமியை அசட்டுத் தனமாக மீண்டும் விமர்சித்த வந்தியத்தேவன் என்னும் மனநோயாளியின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்.
ஸ்ரேயாவின் முன்னாலே பாத்துவிட்டு 'பின்' நவீனத்துவம் என்று புலம்புகிறீரே..
உமக்கு வேட்டைக்காரன் படத்துக்கான முதல் ஷோ டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலப் பிரதமர் இளைய தளபதி விஜயுடன் ஒன்றாக இருந்து என்ஜோய் பண்ண அழைக்கிறோம்.
//கலைப்புலி தாணு said...
கந்தசாமியை அசட்டுத் தனமாக மீண்டும் விமர்சித்த வந்தியத்தேவன் என்னும் மனநோயாளியின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்.//
கலைப்புலி தாணு என்னும் பெயரில் அனானியாக வந்தவரே ஒரு தனிமனிதனின் விமர்சனத்தின் மேல் எந்த வழக்கும் தொடரமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? எனக்கும் சட்டம் தெரியும்.
இந்த விமர்சனத்தில் எந்தவிதமான பின்நவீனத்துவத்தையும் காணவில்லை.
arumai..:)
சும்மா இருந்த பதிவர்களைச் சீண்டிய தாணுவின் உரை.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=221
// இந்தியப்பொண்ணு தங்கம் பாடலில் ஸ்ரேயாவின் ஆட்டத்தை விக்ரம் இந்தியாவில் இருந்து பார்த்தது இணையத்தின் இன்றைய முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. தொழில்நுட்ப வசதிகளை சாதாரண பாமரனும் விளங்கவே இந்தப் பாடல் என்பது தொழில்நுட்பபுலிகளுக்கு மாத்திரம் விளங்கும்.
// அதே அதே!!!!
வெளிநாட்டுக்காட்சிகளில் ஏன் செம்மஞ்சள் நிறத்தில் எடுத்தார்கள் என்று எழுதல்லை அண்ணா ?
தம்பி எப்படியப்பா இப்படியெல்லாம் யோசிக்கறிங்க??-.
வந்தி ஏறி போகுது போல உங்க விமர்சனம்...
haahaa....:-)))
விக்ரம் படத்தில் ஷ்ரீயா வக்கிரமாக நடித்தார்
super brother
நடக்கட்டும் நடக்கட்டும்
பின், முன்,நடு, நண்டு என்று எப்படி எழுதினாலும் ஒன்று மட்டும் நிச்சயம் வந்தி.. உங்களைத் திருத்தவே முடியாது.. ;)
பார்க்கிறது எல்லாம் (ஸ்ரேயா) பார்த்திட்டு இப்படியா எழுதுவது? நெஞ்சை (உங்களின்) தொட்டு சொல்லுங்கள்.. இன்று கொன்கொர்டுக்கு குறிப்பிட்ட அந்த நபரோடு போனது இந்த பின்(!!!!) நவீனத்துவம் எழுதவா? இல்லை ஸ்ரேயாவையும் முமைத்தையும் மீண்டும் பார்க்கவா??? இல்லை??? ஹி ஹி ஹி...????
ஆனால் உண்மையில் நீங்கள் இந்தப் பதிவு போட்டதன் பின்னர் நான் கோடா இத்தனை நல்ல விஷயங்களைத் தவற விட்டுவிட்டேன் என்று புரிந்தது.
தாணு உங்களை இனிமேலும் மனநோயாளி என்று திட்டமாட்டார்.. அவர்கள் தாணு மேல் தங்களை அவமானப்படுத்தியதாக வழக்குப் போடக்கூடும்.. ;)
வந்தியின் அடுத்த பதிவுக்கு தலையங்கமும் தயார்...
'சொந்த செலவுல பதிவு போட்டு சூனியம் செய்யும் வந்தி..'
எப்பூடி?
நான் நினைக்கிறேன் நீங்கள் கடைசியாக ரசித்த புதிய படம் கமலின் தேவர் மகனாக இருக்குமெண்டு.. பேசாமல் 80,90களில் வந்த படங்களையே பாருங்கள்.. அவை தான் உங்களுக்கு சரி..
p.s - ஆனால் உங்கள் குறும்புகளை ரொம்பவே ரசித்தேன்.. :)
ஆ.... இதுவா பின்நவீனத்துவம்??
சூப்பர்... சூப்பர்...
பின்னவீனத்துவம் என்று சொல்லி சொல்லி எல்லாரையும் மற்றவர்கள் சாகடிப்பது போதாதென்று நீங்களும் வேறயா..?
நான் படம் பார்க்கவில்லை அதனால் முழுதும் வாசிக்கவில்லை. பார்த்தபின்னர் வாசித்துவிட்டு முன்னவீனத்துடன் வருகிறேன்.
லீனாரோய்.
//நிமல்-NiMaL said...
இது தான் பின்னவீனத்துவமா....? சூப்பர்...!//
யாருக்குத் தெரியும் நக்கலடிக்கவேண்டும் என வெளிக்கிட்டால் பின், முன் , நடு நவீனத்துவம் எல்லாம் தானாகவே வருகிறது. நன்றிகள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
பிரசாந்த், ரித்தீஷ் படங்களை பார்த்தாவது திருந்த வேண்டும்//
யோ ஏன் இந்தக் கொலை வெறி.
//என்ன கொடும சார் said...
ஸ்ரேயாவின் முன்னாலே பாத்துவிட்டு 'பின்' நவீனத்துவம் என்று புலம்புகிறீரே..//
ஸ்ரேயாவைப் பார்த்து நண்பர் ஒருவர் பயந்து காய்ச்சலில் விழுந்தவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.
//உமக்கு வேட்டைக்காரன் படத்துக்கான முதல் ஷோ டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலப் பிரதமர் இளைய தளபதி விஜயுடன் ஒன்றாக இருந்து என்ஜோய் பண்ண அழைக்கிறோம்.//
ஐயா இதனைவிட நீங்கள் எனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாம்.
//சாரு நிவேதிதா said...
இந்த விமர்சனத்தில் எந்தவிதமான பின்நவீனத்துவத்தையும் காணவில்லை.//
இது நக்கல் நவீனம், சாருவின் பெயரில் யாரோ கிண்டல் செய்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது.
//Cable Sankar said...
arumai..:)//
வசிட்டர் வாயால் பிரம்மரிசி. நன்றிகள் விமர்சனக்குருவே
// நக்கீரன் said...
சும்மா இருந்த பதிவர்களைச் சீண்டிய தாணுவின் உரை. //
நன்றிகள் நக்கீரன் நீங்கள் கொடுத்த தொடுப்பைப் பார்த்துதான் நான் காண்டானேன்.
//மாயா said...
வெளிநாட்டுக்காட்சிகளில் ஏன் செம்மஞ்சள் நிறத்தில் எடுத்தார்கள் என்று எழுதல்லை அண்ணா ?//
மாயா இந்தவிடயங்களை ஹில்டனில் ரூம் போட்டு யோசித்தால் தான் புரியும். யோசித்துவிட்டுச் சொல்கின்றேன்.
// jackiesekar said...
தம்பி எப்படியப்பா இப்படியெல்லாம் யோசிக்கறிங்க??.//
எல்லாம் உங்களிடம் இருந்து கற்றவை தான் அண்ணாச்சி.
//யோ வாய்ஸ் (யோகா) said...
வந்தி ஏறி போகுது போல உங்க விமர்சனம்...//
ட்விட்டரில் ஏத்திவிட்டதே நீங்கள் தானே :-)
// ’டொன்’ லீ said...
haahaa....:)))//
டொன் லீயின் சிரிப்புக்கு நன்றிகள்
//உடன்பிறப்பு said...
விக்ரம் படத்தில் ஷ்ரீயா வக்கிரமாக நடித்தார்//
உடன்பிறப்பே உங்களையும் படம் சோதித்துவிட்டதா? உண்மைதான் ஆனால் இதுவரை யாரும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லையே ஏன்?
//Anonymous said...
super brother //
Thanks Brother நீங்கள் உங்கள் பெயரில் வந்திருக்கலாமே
// Kiruthikan Kumarasamy said...
நடக்கட்டும் நடக்கட்டும்//
கித் நீ இன்னும் படம் பார்க்கவில்லை என நினைக்கின்றேன்
//LOSHAN said...
பின், முன்,நடு, நண்டு என்று எப்படி எழுதினாலும் ஒன்று மட்டும் நிச்சயம் வந்தி.. உங்களைத் திருத்தவே முடியாது.. ;)//
நாலு பேருக்கு நல்லது செய்தால் தப்பா? அதனை நெட்டில் நானூறு பெயர் படித்து சொந்தச் செலவில் சூனியம் வைக்காமல் தடுப்பது தப்பா?
////பார்க்கிறது எல்லாம் (ஸ்ரேயா) பார்த்திட்டு இப்படியா எழுதுவது? நெஞ்சை (உங்களின்) தொட்டு சொல்லுங்கள்.. இன்று கொன்கொர்டுக்கு குறிப்பிட்ட அந்த நபரோடு போனது இந்த பின்(!!!!) நவீனத்துவம் எழுதவா? இல்லை ஸ்ரேயாவையும் முமைத்தையும் மீண்டும் பார்க்கவா??? இல்லை??? ஹி ஹி ஹி...????///
ஐந்தாவது விடையான யாவும் சரியானவை என்ற பதிலைக் காணவில்லை. கேள்வி பிழை.
//ஆனால் உண்மையில் நீங்கள் இந்தப் பதிவு போட்டதன் பின்னர் நான் கோடா இத்தனை நல்ல விஷயங்களைத் தவற விட்டுவிட்டேன் என்று புரிந்தது.//
சரி சரி வெளிக்கிடுங்கோ நாளைக்கு ஒரு குறூப்பாக சென்றுபோய்ப் பார்ப்போம் நான் படத்தினதும் பாடல்களினதும் பொழிப்புரை செய்கின்றேன்.
//தாணு உங்களை இனிமேலும் மனநோயாளி என்று திட்டமாட்டார்.. அவர்கள் தாணு மேல் தங்களை அவமானப்படுத்தியதாக வழக்குப் போடக்கூடும்.. ;)//
தாணுவிற்க்கும் எனக்குமான பகை பல காலப் பகை( அப்படியே வேட்டையாடு விளையாடு முதல் காட்சியில் கமல் மணிக்கு சொல்லும் ஸ்டைலில் வாசிக்கவும்)
//'சொந்த செலவுல பதிவு போட்டு சூனியம் செய்யும் வந்தி..' //
இதனை யார் எழுதப்போகின்றது, நீங்களா? கஞ்சிபாயா?
//நான் நினைக்கிறேன் நீங்கள் கடைசியாக ரசித்த புதிய படம் கமலின் தேவர் மகனாக இருக்குமெண்டு.. பேசாமல் 80,90களில் வந்த படங்களையே பாருங்கள்.. அவை தான் உங்களுக்கு சரி.. //
ஆமாம் அந்தப் படங்களில் நிறைய நல்ல கருத்துகள் இருக்கின்றன.
//p.s - ஆனால் உங்கள் குறும்புகளை ரொம்பவே ரசித்தேன்.. :)//
நன்றிகள் நானும் உங்கள் குறும்புகளை இரவிரவாக ரசித்தேன் :)
//ஆதிரை said...
ஆ.... இதுவா பின்நவீனத்துவம்??
சூப்பர்... சூப்பர்...//
ஓம் ஓம் இதுதான், நன்றிகள்
வந்தி.........
தங்களின் பின்னூட்ட நவீனத்துவம் வாசித்தேன்.... ரசித்தேன். வேறுகருத்துக்கள் கிடையது தங்களின் பதிவு குறித்து. ஆனால், பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை அடுத்த பதிவில் விளக்கவும். இல்லாவிடில் தங்களின் கணினி வைரஸ் தாக்கத்துக்கு திட்டமிட்டு உள்ளாக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
////loshan said...நான் நினைக்கிறேன் நீங்கள் கடைசியாக ரசித்த புதிய படம் கமலின் தேவர் மகனாக இருக்குமெண்டு.. பேசாமல் 80,90களில் வந்த படங்களையே பாருங்கள்.. அவை தான் உங்களுக்கு சரி.. ////
மீண்டும் மீண்டும் வந்தியின் உண்மையான வயதினை அறிவிக்க வேண்டாம்.... அவர் இன்னும் இளைஞன் என்ற நினைப்பில் திரிகிறார். பாவம் விட்டு விடுங்கள்.
// karthick said...
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com //
ஐயா கஸ்டப்பட்டு படம் பார்த்து விமர்சனம் எழுதிய எங்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்கப்படாதா?
// Anonymous said...
பின்னவீனத்துவம் என்று சொல்லி சொல்லி எல்லாரையும் மற்றவர்கள் சாகடிப்பது போதாதென்று நீங்களும் வேறயா..?//
ஆஹா இதெல்லாம் நீங்கள் முன்னர் கற்றுக்கொடுத்தப் பாடங்கள், அது சரி ஏன் நீங்கள் என்ற மரியாதை நான் என்றைக்கும் நீ தான் உங்களுக்கு.
//நான் படம் பார்க்கவில்லை அதனால் முழுதும் வாசிக்கவில்லை. பார்த்தபின்னர் வாசித்துவிட்டு முன்னவீனத்துடன் வருகிறேன்.//
அண்ணே படம் பார்த்தால் நீங்கள் திரிஷாவில் இருந்து ஸ்ரேயாவிற்க்கு மாறிவிடும் அபாயம் இருக்கின்றது/
ஆஹா.. இம்புட்டு நல்ல படத்தை தான் நல்லா இல்லைனு நான் விமர்சனம் பண்ணிட்டேனா? :((
ஆனாலும் வந்தியாரே.. இது செம விமர்சனம் போங்கோ :))
இந்த படத்தால தான் மாட மாளிகை எல்லாம் வாங்கினாராம். கம்போடியா கவன்மெண்ட் செமத்தியா குடுத்திருக்காங்க போல, அங்க கருப்பு பணம் பதிக்கலாம்னு இந்தியாவுல எடுத்து சொன்னதுக்காக.. :)
// மருதமூரான். said...
பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை அடுத்த பதிவில் விளக்கவும். இல்லாவிடில் தங்களின் கணினி வைரஸ் தாக்கத்துக்கு திட்டமிட்டு உள்ளாக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் //
பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை நம்ம புல்லட் சாருவின் இணையத்தில் ஆராய்ச்சி செய்கின்றார்? விரைவில் புல்லட் பின் நவீனத்துவ பதிவு ஒன்றுடன் வருவார் என நினைக்கின்றேன்.
வைரஸ் என்றால் இளைய தலைவலியின் படங்கள் தானே, குறை நினைக்காமல் சதீஸ்க்கு அனுப்பவும்.
//மீண்டும் மீண்டும் வந்தியின் உண்மையான வயதினை அறிவிக்க வேண்டாம்.... அவர் இன்னும் இளைஞன் என்ற நினைப்பில் திரிகிறார். பாவம் விட்டு விடுங்கள்.//
உங்கள் அனைவருக்கும் நான் இன்னும் யூத்தாக இருப்பது பொறாமை.
//SanjaiGandhi said...
ஆஹா.. இம்புட்டு நல்ல படத்தை தான் நல்லா இல்லைனு நான் விமர்சனம் பண்ணிட்டேனா? :((
ஆனாலும் வந்தியாரே.. இது செம விமர்சனம் போங்கோ :))//
வாங்கோ சஞ்சே ஆமாம் நானும் பார்க்கும் போது மிஸ் பண்ணியவை இவை. உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
//SanjaiGandhi said...
இந்த படத்தால தான் மாட மாளிகை எல்லாம் வாங்கினாராம். கம்போடியா கவன்மெண்ட் செமத்தியா குடுத்திருக்காங்க போல, அங்க கருப்பு பணம் பதிக்கலாம்னு இந்தியாவுல எடுத்து சொன்னதுக்காக.. :)//
ஓம் ஓம் நிறைய சொல்கின்றார் சில நாளில் குமுதத்திலோ விகடனிலோ சுசியும், விக்ரமும் தன் சொத்துகளை அழித்துவிட்டார்கள் என ஒப்பாரி வைப்பார்,
//ஆமாம் நானும் பார்க்கும் போது மிஸ் பண்ணியவை இவை//
எது? இந்தப் பதிவில் போட்டிருக்கும் ஷ்ரேயா படங்களா? :))
உங்களில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது வந்தி. கந்தசாமியை முதலில் திட்டினீர்கள் அப்புறம் இந்த பதிவு. அடுத்து எப்படியும் வாழ்த்தி சிறந்த படம் என ஒரு பதிவு போட்டு விடுவீர்கள். அது எப்ப?
கந்தசாமிக்கு தொடர்ந்து அலுக்காமல் விமர்சனம் எழுதும் வந்தி வாழ்க....
அழகான கற்பனைங்க...
(இலவச டிக்கெட் என்றாலும் ஒருதனும் வரமாட்டான் என்பது வெளிப்படை உண்மை).
ரசித்தேன் அண்ணா
//ஆனால் "த்ரி நாம் ஒண்ணாகச் சேர்ந்தால் ஆவோம் மூணு" என்ற வரிகளில் தான் சாதாரண குழந்தைகள் குழம்பிப்போகின்றன ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது ஒன்றும் ஒன்றும் இரண்டுதான் //
எனக்கும் விளங்கேல...
அப்பிடி எண்டா என்ன??? ;)
ஆனாலும் அசத்தல் பதிவு...
Off course the dhanu commented against the reviewers is not good. And also people like vandhiyathevan has to change their mindset from pointing out only bad things. The theme of kandasamy film is very good. The way they try to convey it may be not good.
Post a Comment