ஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09

நமீதாவும் மீனாவும்

தமிழச்சியான மீனாவும் குஜராத்திக்காரியான நமீதாவும் தமிழ்த் திரையுலகத்திற்க்கு நன்கு தெரிந்தவர்கள். இருவரும் தற்போது இருவேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக இருக்கின்றார்கள்.

மீனா விஜய் தொலைக்காட்சியின் Boys Vs Girls நிகழ்ச்சியிலும் நமீதா கலைஞரில் மானாட மயிலாடவிலும் நடுவர்கள். நமீதா கஸ்டப்பட்டு பெரும்பாலும் தன் நடனம் பற்றிய கருத்துக்களை தமிழிழையே சொல்கின்றார். இந்தத் தமிழை மச்சான்ஸ் தமிழ் என்கின்றார்கள். ஆனால் பச்சைத் தமிழச்சியான மீனாவோ மறந்தும் தமிழில் பேசாமல் ஏதோ பிரித்தானியாவில் பிறந்துவளர்ந்தவர் போல் பீட்டர் விடுகின்றார். அதிலும் அவருக்கு நடனத்தைப் பற்றி கொஞ்சம் தெரியும் போல் இருக்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட சொற்களை வைத்து ஜல்லி அடிக்கின்றார். இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமீதாவிற்க்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் ஏன் மீனாவிற்க்கு இல்லை.

Boys Vs Girls என்ற நிகழ்ச்சியில் பெண்கள் போடும் கத்தல்கள் மிகவும் கேவலமாக இருக்கின்றது. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் வரவில்லை. சீசன் 1 ல் இருந்த பிரியதர்ஷினி, பிருந்தா தாஸ் போன்றவர்களுக்கு இருந்த அடக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எதுவும் இல்லாத அடங்காப்பிடாரிகளாக இருக்கின்றார்கள் அந்தப் பெண்கள். ஒரு சிலர் திருமணமானவர்கள்(அவர்களின் கணவர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள்).

விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை கிடைக்கவில்லையா? எதற்காக கிழவி மீனாவை நடுவராக்கினார்களோ?

உன்னைப் போல் ஒருவனும் சில பதிவர்களும்

வழக்கம் போல் கமல் படம் சிலரிடம் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. உன்னைப்போல் ஒருவனில் கமல் முஸ்லீம்களைத் தூற்றுகின்றார் என ஒரு குறூப் கமல் மேல் காண்டுடன் திரிகிறது.

ஐயா அறிவுஜீவிகளே உன்னைப் போல் ஒருவனின் கதை A Wednesday படத்தில் நீராஜ் பாண்டே எழுதிய கதை. ஹிந்தியில் முஸ்லீம்களை தீவிரவாதியாக்கியபோது உங்கள் கீபோர்ட்டுகள் எங்கே போனது? (இப்போ பேனையால் எழுதுபவர்களை விட கீபோர்ட்டில் தட்டுபவர்கள் தான் அதிகம்). ஹிந்தியை பக்கம் பக்கமாக உங்களால் கிழிக்கமுடியாமல் ஹிந்திப் படத்தை ஆஹோ ஓஹோ எனப் புகழ்கின்றீர்கள், ஆனால் ஒரு தமிழன் அந்தப் படத்தை அப்படியே தந்தால்( ஹிந்தி பார்த்த பலரின் விமர்சனம்) உடனே அவரை பார்ப்பன் என இகழ்கின்றீர்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு சல்மான் கான், ஷாருக் கான், அமீர்கான் போன்ற ஹிந்தி நடிகர்கள் முஸ்லீம் என நினைவுக்கு வருகின்றது. அந்தக் கான்களே ஹிந்திப் படத்தில் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியபோது அமைதியாக இருக்கின்றார்கள். இந்தியப் படங்களில் காட்டப்படும் முஸ்லீம் தீவிரவாதிகள் பெரும்பாலும் பாகிஸ்தானிகளாகத் தான் இருக்கின்றார்கள். அண்மையில் வெளிவந்த நியூயோர்க் உட்பட பல படங்களில் அப்படித்தான் காட்டுகின்றார்கள் ஆனால் நீங்கள் மட்டும் கமல் காட்டியவுடன் துடித்துப் போவீர்கள்.

நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.

தேசிய அவமானங்கள்

நேற்று இலங்கை எதிர் தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்க முன்னர் இரு நாட்டுத் தேசிய கீதங்களையும் இசைத்தார்கள். வழக்கம் போல் மக்கள் தேசியகீதத்திற்க்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தார்கள். சிலரை கமெரா காட்டியபோது அதிர்ச்சியடைந்தேன், காரணம் அவர்கள் கைகளில் பியருடன், சிலர் குடித்தபடி தேசியகீதத்திற்க்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இந்த பியர் விடயம் ஏற்கனவே ஐசிசியின் இங்கிலாந்தில் நடந்த இருபதுக்கு 20 போட்டிகளிலும் இடம் பெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு கொடுக்கும் மரியாதை அற்றுப்போன நிலையில் (சில விளையாட்டுப் போட்டிகளில் குத்தக்கூடாத இடங்களில் பெண்கள் தேசியக் கொடியைக் குத்தியிருப்பார்கள்) தேசியகீதத்திற்க்கும் இப்போது அவமானம் ஏற்படத்தொடங்கிவிட்டது.

போட்டிகளில் விளையாடும் நாடுகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தால் இந்த அவமானங்கள் குறையலாம் இல்லையென்றால் நீடிக்கும் அபாயமே இருக்கின்றது.

பின்குறிப்பு : தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை.

ஒரு குட்டிக் கதை

ஒரு காட்டிலை பெரிய சிங்கம் ஒன்று ராஜாவாக வாழ்ந்து வந்தது. அந்த சிங்கத்தின் காலத்தில் புலியும் மானும் ஒன்றாக ஆற்றில் தண்ணீர் குடிக்கும். யானையும் கரடியும் ஓடிப்பிடிச்சு விளையாடும் என சகல மிருகங்களும் ஒற்றுமையாக இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் அந்தச் சிங்கம் இறந்துபோனது. அந்தக் காடு மட்டுமல்ல பக்கத்துக் காடுகள் கூட செய்தி அறிந்து சோகமாக இருந்தன.

அந்த சிங்கத்தின் இறப்பின் பின்னர் சிங்கத்துடன் நல்ல உறவாக இருந்த கழுதை ஒன்றை அனைவரும் ஏகமனதாக ராஜாவாக்கினார்கள். கழுதையும் சில காலம் நல்லாத்தான் காட்டை ஆட்சி செய்தது. நாளாக நாளாக கழுதைக்கு தான் என்ற அகங்காரம் வந்து தன்ரை காட்டைவிட சகல காட்டில் இருக்கும் மிருகங்களுக்கு தான் ராஜா என தானே அறிவித்துக்கொண்டது. ஏனைய மிருகங்களும் சிங்கத்துக்கு வேண்டப்பட்டவர் கழுதை என்றபடியால் பொறுத்துக்கொண்டனர்.

ஒருநாள் அந்த சிங்கத்தின் நினைவுநாள் அந்தக் காட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. சகல காடுகளில் இருந்தும் மான், குரங்கு, நரி என சகல விலங்குகளும் வந்தன. ஆனால் அவை அனைத்தும் சிங்கத்தை மறந்துவிட்டு கழுதையைப் பற்றியே பேசின, பாடின, ஆடின.

இதைப் பார்த்த அந்த சிங்கத்தின் தம்பி முறையான சிங்கம் ஒன்று சொன்னதாம் "நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".

சதீஸ் ஜோக்:


சதீசும் அவரது வெளிமாவட்டத்து ஆளும் அண்மையில் இராமகிருஷ்ணமிசனில் கண்ணாமூச்சி விளையாடினார்கள். அப்படி விளையாடும் போது நம்ம சதீஸ் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டினார். " நீ என்னைக் கண்டுபிடிச்சா முத்தம் கொடுக்கலாம், கண்டுபிடிக்கின்றது கஸ்டமாக இருந்தால் நான் மேடைக்குப் பின்னால் இருக்கின்றேன்"

11 கருத்துக் கூறியவர்கள்:

நிரூஜா சொல்வது:

//"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".

லோசன் அண்ணாவை சொல்லலயே... :P

//இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நமீதாவிற்க்கு தமிழ் மேல் இருக்கும் ஆர்வம் ஏன் மீனாவிற்க்கு இல்லை
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருட்டை மட்டுமல்ல..., இது போன்ற விடயங்களையும் தான்....!!!

ARV Loshan சொல்வது:

////"நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".

லோசன் அண்ணாவை சொல்லலயே... :P//
சதீசை நிரூஜா இவ்வாறு சொன்னது வருத்தமளிக்கிறது.. ;)

--
//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.
//

முழுமையாக ஆமோதிக்கிறேன்..

முன்பே நான் சொன்னது போல, கண்ட கழுதையெல்லாம் கமல் பற்றிக் கத்தும்.. கணக்கெடுக்க வேண்டாம்..

//தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை//

இது வந்தியத்தேவனின் வலைத்தளம் தானா? நம்ப முடியலையே ராஜா.. (படம் கிடைக்கலையா? ;))

அந்தக் கழுதை சிங்கம் கதை அண்ணா நூற்றாண்டு -கலைஞர் நிகழ்ச்சி பற்றி இல்லை தானே??? ;)

பாவம் சதீஸ்..

மோனிகா என்ன சோப் போடுகிறார்?

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//விஜய் தொலைக்காட்சியினருக்கு நல்ல இளமையான நடிகை கிடைக்கவில்லையா? எதற்காக கிழவி மீனாவை நடுவராக்கினார்களோ?//

விஜய் டீவி பரவாயில்லை ஐயா கலைஞர் ஐயாவின் தொ(கொ)லை காட்சியில் குஷ்பு ஆண்டியை அல்லவா போட்டு உயிரை வாங்குறாங்க. அவங்க என்னமோ அகில உலக நாட்டியமணி லெவலுக்கு பேசுறாங்க தாங்க முடியல

//கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.//

கமல் ஏதாவது செய்தால் அதை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. அதை பற்றி கவலைபடாதீர்கள். மாற்றுகருத்துகளை எதிர்கொள்ள தயங்கும் இவர்களை பற்றிதான் நேற்று ஒரு பதிவு போட்டேன். சிலர் எல்லாவற்றையுமே கண்மூடி கொண்டு எதிர்ப்பார்கள். கமலை எதிர்ப்பவர்கள் அநேகமானோர் அவ்வாறானோரே!

//தேசியகீதத்திற்க்கும் இப்போது அவமானம் ஏற்படத்தொடங்கிவிட்டது.//

போகிற போக்கில் தென்னாபிரிக்காவில் நடக்கும் கிரிக்கட் போட்டிகளை பார்க்க முடியாது போல. என்னை போன்ற பிஞ்சு மனதை அவை கெடுக்கின்றன

// "நம்ம அண்ணாச்சி சிங்கம் கழுதையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை".//

யாரைப்பற்றியோ சொல்லியிருக்கீங்க, யாருன்னு தெரியல. யாரை பற்றி சொல்லியிருக்கீங்க?

//சதீஸ் ஜோக்// பாவம் ஐயா உங்க மருமகன இப்படி கலாய்கிறதா? அதுவும் பொது இடத்தில

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

மறந்துட்டேன் ஆமா அந்த அக்காவின் படம் நல்லாயிருக்கு. அக்காவின் போன் நம்பர் தர இயலுமா?

Busooly சொல்வது:

தணிக்கை குழுவிற்கு கண்டனங்கள்............ஒரு பிட்டு சரி அந்த குத்த கூடாத இடத்தில குத்தினத போஸ்ட் (Post) பண்ண மாட்டிங்களா...........?

வேந்தன் சொல்வது:

//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? //
நான் இன்னும் படம் பார்க்கவில்லை அதனால் இது பற்றி கருத்து சொல்லவில்லை. :)
//படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை.//
என்னங்க இப்படி ஏமாத்திட்டிங்க... :(
//ஒரு குட்டிக் கதை//
உள் குத்து.....?
//சதீஸ் ஜோக்://
:))))))

புல்லட் சொல்வது:

அநத் படதைத் இணுுக் சூபாடாவடிட்ால ்நுணீக்ள ்நலல் பளிைள் எனற்ாகவிுடிமா? உதேலல்ாம ்சேலல்ாது சேலல்ாது,,

எனகுக் தனியே மெயிலில் அனுப்பிய அந்த போட்டோவை பப்ளிக்கில் போட்டு மளமளவென்று சனத்தொகையை கூட்டுங்கள்.. ( நான் உங்கள் வலைப்பதிவுக்கு வரும் சனங்களின் தொகையை சொன்னேன். )

மேலும் கடைசியா முழு நீள ஆடையணிந்திருக்கும் மொனிக்கா ஏன் பதிவில வந்திருக்கார்? என்பதற்குரிய விளக்கத்தை தரவேண்டும்

Unknown சொல்வது:

புல்லட் சொல்வது:
///மேலும் கடைசியா முழு நீள ஆடையணிந்திருக்கும் மொனிக்கா ஏன் பதிவில வந்திருக்கார்? என்பதற்குரிய விளக்கத்தை தரவேண்டும்///
அதானே!!!!

Subankan சொல்வது:

//நஷ்ருதீன் ஷாவிற்க்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா? முட்டையில் மயிர் பிடுங்காமல் படத்தைப் பார்த்தால் பிடித்துதா? இல்லையா என எழுதுவதை விட்டுவிட்டு கமலைப் பார்ப்பன் எனத் திட்டுவதையும் கமலின் ரசிகர்களை பூணூல் போடாத பார்ப்பனியவாதிகள் எனத் திட்டுவதையும் விட்டுவிடுங்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள்.
//

ஆமோதிக்கிறேன். ஒருவனின் படைப்பை விட்டு படைப்பாளியை விமர்சிப்பது எந்தவகை விமர்சனம் என்று தெரியவில்லை.

//தேசியக்கொடியைக் குத்தக்கூடாது இடத்தில் குத்திய பெண்ணின் படம் சென்சார்ப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தணிக்கை//

எனக்குமட்டும் மெயில் ப்ளீஸ்.

//சதீசும் அவரது வெளிமாவட்டத்து ஆளும் அண்மையில் இராமகிருஷ்ணமிசனில் கண்ணாமூச்சி விளையாடினார்கள். அப்படி விளையாடும் போது நம்ம சதீஸ் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டினார். " நீ என்னைக் கண்டுபிடிச்சா முத்தம் கொடுக்கலாம், கண்டுபிடிக்கின்றது கஸ்டமாக இருந்தால் நான் மேடைக்குப் பின்னால் இருக்கின்றேன்"//


ஏதோ புகைஞ்சு மணக்குது. என்னண்டு பாருங்க.

ஆதிரை சொல்வது:

கழுதைக்கு இப்போது வாரிசு அரியணை ஆசையாம்

King of mars சொல்வது:

நமீதாவுல என்ன ஒரு அக்கறை உமக்கு... ;)

மீனாவுக்கு வயது அதிகம்னாலும் பார்க்க கூடியமாதிரி இருக்கிறார், மீனா கிழவி எண்டால் வந்தி அங்கிள் தானே...

:)