2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி அடுத்த படத்திலையே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து பலரின் மனதைக் கவர்ந்தவர் பின்னர் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்க கவர்ச்சி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து இன்றைக்கும் இளைஞர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் நயன் பற்றிய சில குறிப்புகள்.
இயற்பெயர் : டயானா மரியம் குரியன்
பிறந்த நாள் : 18 நவம்பர் 1984.
பிறந்த இடம் : திருவல்லா, கேரளா (இன்னொரு கேரளத்து பைங்கிளி)
கல்வி : BA (ஆங்கில இலக்கியம்)
முதல் படம் : மனசின்னகரே(மலையாளம், 2003), ஐயா(தமிழ், 2005)
ஐயா படத்தில் "ஒருவார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தேன் என" சரத்குமாரை மட்டுமல்ல இளைஞர்கள் பலரையும் செல்வியாக தன் அழகாலும் புன்னகையாலும் கவர்ந்தவர். இன்னொரு மீரா ஜாஸ்மின், அசின் போல் ஹோம்லியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். பின்னர் சந்திரமுகியில் தர்கா மன்னிக்கவும் துர்காவாகி சூப்பர் ஸ்டாருடன் பட்டம் விட்டு இளைஞர்கள் மனதிலும் பட்டமாக ஒட்டிக்கொண்டவர்.
கஜனியில் சித்ராவாக "எக்ஸ் மச்சி வை மச்சி" என கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போட்டவர். பின்னர் சிவகாசியில் இளைய தளபதியுடன் "கோடம்பாக்கம் ஏரியா" என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
விரல் வித்தை நடிகர் சிம்புவின் வல்லவன் போஸ்டரிலையே அவரின் உதட்டைக் கடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சொப்னாவாக வல்லவன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சிம்புவுடன் அவருக்கு "காதல் வந்துடுச்சு". பின்னர் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் ஹரிதா என்ற மென்பொருள் பெண்ணாக வந்து பாடல்களில் கவர்ச்சி ஆட்டம்போட்டார்.
பின்னர் தலைமகனில் மீண்டும் சரத்குமாருடன் நடித்தார். ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோதி என்ற பாத்திரத்தில் நடித்தார்.
இந்த நேரத்தில் சிவாஜியில் "பல்லேலக்கா " பாடலுக்கு ரஜனியுடன் ஆட்டம் போட்டார்.
ஷாசா என்ற பெயரில் பில்லாவில் இவர் காட்டிய கவர்ச்சி, கூட நடித்த கவர்ச்சி சூறாவளி நமீதாவையே கவர்ச்சியில் மிஞ்சி, எப்படி இருந்த நயன் இப்படியாகிவிட்டார் என பலரையும் உச் கொட்டவைத்தார்.
பில்லாவின் பின்னர் வெளிவந்த யாரடி நீ மோகினியில் ஐயராத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்தார். மருமகனைத் தொடர்ந்து மீண்டும் மாமனாருடன் குசேலன் படத்தில் நயன்தாராவாகவே வந்து போனார்.
சத்யம் படத்தில் விஷாலுடன் இவர் காட்டிய நெருக்கம், கிசுகிசுவாக மாறியது. பின்னர் மீண்டும் தலையுடன் எகன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தலைக்கு ஜோடியானால் தளபதி விடுவாரா வில்லுவில் தனக்கு ஜோடியாக்கினார். இந்தப் படத்தை இயக்கிய பிரபுதேவாவுடனான காதல் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு இணையங்களுக்கும் நல்ல தீனி போட்டது. வில்லுவில் இவர் காட்டிய கவர்ச்சி, கவர்ச்சியின் எல்லை வரை இருந்ததாக நண்பர் லோஷன் தன் வில்லு பட விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து சூரியாவுடன் இணைந்து நடிக்கும் ஆதவனை இவர் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். திரிஷா, ஸ்ரேயா, தமன்னா என பலர் வந்தாலும், பல கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா இருக்கின்றார் என்பது மிகைப் படுத்தப்பட்ட உண்மையல்ல.
பின்குறிப்பு : என் அன்புத் தம்பி ஆதிரை நயன்தாராவின் தீவிர ரசிகன் என்பது நேற்று ஒரு பதிவினைப் பார்த்த பின்னர் தெரியவந்தது. ஆகவே நயனின் தீவிர ரசிகன் ஆதிரைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
போனஸ் படம் :
பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான்.
தகவல் மற்றும் பட உதவிகள் : பல இணையத் தளங்கள்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
20 கருத்துக் கூறியவர்கள்:
ஆராய்ச்சிக்கட்டுரை மாதிரி இருக்கு :)
ம்ஹூஹும்....
வந்தி யாரை கேட்டு என் பழைய காதலியின் பயோ டேட்டா போட்டுருக்கீங்க..
நல்ல வேளை எங்க காதல் கதையை போடவில்லை..
பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான். //
அதுதான் உங்களுக்கு இத்தனை காதல் தோல்விகளா?
அதுசரி.. நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற படங்கள் ஐயா சந்திரமுகியை தவிர வேறு ஏதாவது சொல்லுங்க பார்க்கலாம்?
சத்யம் படத்தில கோமாளி.. வில்லு படத்தில விபச்சாரி மாதிரி ஒரு பொஸ் .. பில்லா படத்திலி பிகினி.. எண்டு பாத்தாலே குமட்டுற கரக்கடர்களில் வந்திட்டு அவவுக்கு முன்னணி நடிகை கெக்குதா? அந்த மலையாள டிரெக்டரோட இருந்த கிளிப்ப ாப்பேல்லயா தல... குலவிளக்காம் குலவிளக்கு.. வெள்ளைக்காரியெல்லாம் பிச்சை வாங்கோணும்..
லோஷன் அண்ணாவிற்கு போட்டியாக நயன் புகழ் பரப்பும் வந்தி அண்ணர் வாழ்க. நயன்தாராவின் வால்கள் சைர்தத்த்டில் சிம்புவுக்கு முன் பின் என பிரிக்காமல் விட்டதை சிம்புவின் ரசிகர்கள் சார்பாக கண்டிக்கின்றேன். சுபெரப்பு........
மொத படத்துல கொல வெளக்கு மாரியும்...
கடைசி படத்துல குத்து வெளக்கு மாரியும் இருக்கு...
என்ன வெறுமனே படங்களை மட்டுமே போட்டு இருக்கிங்கபோல எனக்கு படங்கள் மட்டுமே கண்ணுக்குத்தெரிகின்றன. படங்கள் அழககாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது...
இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எதிர் கால மாணவர்களின் நலன் கருதி பாட புத்தகத்தில் சேர்க்க பரிந்துரை செய்கின்றேன்.
நல்ல ஆய்வு ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...
எங்கள் தானைத் தலைவி அழகுப்புயல் நயந்தாராவைக் கேலி செய்யும் புல்லட் அவர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம்,
// புல்லட் said...
பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான். //
அதுதான் உங்களுக்கு இத்தனை காதல் தோல்விகளா? //
வந்தியண்ணாவின் பரம இரகசியங்களைப் போட்டுடைக்கு புல்லட்டை கடுமையாக கண்டிக்கிறேன்...
அது சரி வந்தியண்ணா...
உங்களுக்கு கவர்சிப்பட பதிவர் எண்டு விருது குடுக்கலாம் எண்டு நினைக்கிறேன்...
அனேகமா ஒவ்வொரு பதிவிலயும் கவர்ச்சிப்படம் போடாம பதிவெ போடுறீங்க இல்லயே...
ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் மாதிரி இதுலமு் புது முறையோ?
ஹி ஹி ஹி நயன் படம்...முடியல ..
நயனை நீங்க விடமாட்டீங்க போலக்கிடக்கு.. முதல்ல லோசன் அண்ணா தொடங்கினார் இப்ப நீங்க முழுவிபரத்தோட பதிவு.. என்ன நடக்குது.. நாட்டில..
இப்பதான்யா புரயுது எப்பிடி blog ஹிட் ஆகுதுன்னு
நானே ரெண்டு பேர கூபிட்டு காண்பிச்சன்ன பாத்துகுங்களேன்
வந்தி.. நயனின் வேறு நல்ல படங்கள் வில்லு,வல்லவனில் இருக்கே.. ;)
மஜா நாயகன் ஆகிய உங்களிடமே ஸ்டோக் இல்லையா?
நயனைப் போட்டு நல்லா அலசி இருக்கிறீர்கள்.. சரத்,ரஜினி,சிம்பு,விஷாலுக்கு பிறகு நீங்கள் தான்.. (அப்பாடா நான் தப்பித்தேன்)
புல்லட்டுக்கு என் நயன் மீது இத்தனை வெறுப்பு? எவ்வளவு சேவை செய்யும் எங்கள் அக்காவை வெறுக்கலாமா?
ஆதிரையின் 'பிஞ்சு' (எழுத்தை மாற்றாதேங்கோ..)மனம் பொறுக்குமா?
அதுசரி வந்தி, நவம்பர் பேய் சாரி பேபி என்று சொன்னீங்க.. நயனையாவது பேபி என்று சொல்லலாம்.. தங்களுக்கு பேபி.. கொஞ்சம் ஓவராக இல்லை???? ;)
ஒரு Documentaryயே எடுத்திருக்கீங்க.. ம்.. ஆகட்டும் ஆகட்டும். ;)
இத்தால் சகலருக்கும் அறியத்தருவது,
பில்லா வரவுடன் நயனை சில பிரபலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டேன்... கச்சதீவை இந்தியா கொடுத்தது போல...
இளைப்பாறுவதற்கும் களைப்பாறுவதற்கும் எனக்குள்ள உரிமையை அந்த பிரபலங்கள் தட்டிக் கழித்து சுட்டுப் பொசுக்குவது தான் ஐயகோ கொடுமை...
பதிவில் உள்ள சிறந்த தரமான படங்களுக்காக பதிவுக்கு "A" சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்படுகிறது. மகிழ்வுடன் ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.
//பில்லா வரவுடன் நயனை சில பிரபலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டேன்... கச்சதீவை இந்தியா கொடுத்தது போல...//
யாரை யாரு தாரை வார்க்குறது? என்னமோ உங்க சொந்தமாட்டம்!
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
ஹோம்லியான படங்களைத் தவிர்த்து மற்ற படங்களை நீக்குமாறு கேட்டுக் கொ"ல்"கிறேன்!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
. .
!
X
Post a Comment