ஜாதி, மத, பேதங்கள் எதுவும் இல்லாத இடங்களில் பாடசாலைகளும் ஒன்றாகும். இங்கே இந்த பேதங்களை தவிர்க்கத் தான் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படுகின்றது.
ஆனால் தற்போது சில பாடசாலைகள் அந்தப் பாடசாலையின் மதத்தை தவிர ஏனைய மதச் சின்னங்கள் அணிந்துவருவது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில பாடசாலைகளில் மாணவர்களை மதம் மாறினால் சலுகைகள் தருவதாகவும் ஆசைகாட்டுகின்றார்கள்.
நான் படித்தது ஒரு கிறிஸ்தவக் கல்லூரி, முன்னைய காலத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கத்தில் இருந்தாலும் பின்னர் அரச பாடசாலையாகி எந்தவித பிரச்சனைகளும் இன்றி காலை மாலை இரு வேளைகளும் இரண்டு நிமிடம் மெளனமாக அவர் அவர் இஸ்ட தெய்வங்களை வழிபடும் முறை காணப்படுகின்றது.
வெள்ளிக்கிழமைகளில் காலை வேளைப் பிரார்த்தனையில் சைவ மாணவர்களுக்கு சிவபுராணமும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு பைபிளும் போதனை செய்யப்படுகின்றது. எந்தவித மதப் பாகுபாடும் இல்லை.
அதே நேரம் தலைநகரில் உள்ள சில அரச பாடசாலைகளில் அந்தப் பாடசாலைகள் எந்த மதத்திற்க்கு சார்பானதோ அதன் ஆதிக்கம் தான் அதிகமாக காணப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்னர் யூடூயூப்பில் ஒரு சிறிய ஒளிப்படம் பார்க்க கிடைத்தது. இரண்டு இஸ்லாமிய மாணவிகள் தங்கள் கலாச்சார உடைகளுடன் பாடசாலைக்குச் செல்கின்றார்கள். பாடசாலைக்குள் நுழையும் முன்னர் அருகில் உள்ள பெரிதாக மறைவிடம் அற்ற ஒரு இடத்தில் தங்கள் கலாச்சார உடைகளை மாற்றிக்கொண்டு பாடசாலைக்குள் செல்கின்றனர்.
அவர்கள் கல்வி கற்கும் பாடசாலை ஒரு பெளத்தமத பாடசாலை, அங்கே எந்த மத அடையாளமும் இருக்ககூடாது என்பது பாடசாலையின் விதி. அதே நேரம் அந்த மாணவிகளுக்கு சிலவேளை அருகில் இஸ்லாமிய பாடசாலை இருந்திருக்வில்லையோ இல்லை அந்தப் பாடசாலையின் பெயரிற்காக கல்வி கற்கின்றார்களோ என்பது தெரியாத விடயம்.
இன்னொரு பாடசாலை இஸ்லாமியர் அல்லாத ஒரு மாணவி ஒரு இஸ்லாமியப் பாடசாலையில் கல்விகற்கச் செல்கின்றார்,அவரது சீருடை இஸ்லாமிய மாணவிகளின் சீருடையாக இருக்கின்றது. அதே நேரம் அவருக்கு அந்தப் பாடசாலையில் இஸ்லாம் தான் சமயமாக கற்பிக்கப்படுகின்றது.
சில நாட்கள் முன்னர் கண்ட ஒரு காட்சி ஒரு பிரபல கிறிஸ்தவப் பாடசாலையின் முன்னால் இரண்டு ஆறு அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு பாடசாலையினுள் செல்கின்றார்கள். ஏன் என அவர்களிடம் வினாவ விபூவி சந்தணம் கையில் நூல் கட்டியிருத்தல் எல்லாம் தங்கள் பாடசாலையில் தடை என்றார்கள். அதே நேரம் கழுத்தில் சிலுவையுடன் மாணவர்கள் தாராளமாக வரலாமாம்.
இதே நேரம் சகல மத மாணவர்களின் வசதி கருதி பெளத்த விகாரை, சைவக் கோவில், இஸ்லாமிய பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாலயம் என நான்கு மத வழிபாட்டுத் தலங்களும் உடைய பாடசாலையாக கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி விளங்குகின்றது.
பல மத சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் ஏனைய சமய பாடம் போதிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாக இருப்பதால் ஏனைய சமய மாணவர்கள் பாடசாலை எந்த சமயம் சார்ந்ததோ அந்த சமயத்தைப் படிக்கும் நிர்ப்பந்ததிற்க்கு ஆளாகின்றார்கள்.
சில பாடசாலைகளில் பிற சமய மாணவர்கள் அந்தப் பாடசாலையின் மதத்திற்க்கு மதம் மாறினால் அவர்களுக்கு புலமைப்பரிசில்கள், விளையாட்டு வீரர் என்றால் பாடசாலை அணியில் இடம் எனப் பல நன்மைகள் கொடுப்பதாகக் கூறி மதம் மாற்றுகின்றார்கள்.
இவை பெரும்பாலும் தனியார் பாடசாலைகள் என்பதால் அரசால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாதுள்ளது.
எது எப்படியோ சிறுவயதிலையே மதம் என்ற நச்சுவிதையைத் தூவும் முயற்சியில் சில பாடசாலைகள் ஈடுபட்டிருக்கின்றன என்ற உண்மை மட்டும் நிதர்சனம்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
30 கருத்துக் கூறியவர்கள்:
//அதே நேரம் அந்த மாணவிகளுக்கு சிலவேளை அருகில் இஸ்லாமிய பாடசாலை இருந்திருக்வில்லையோ இல்லை அந்தப் பாடசாலையின் பெயரிற்காக கல்வி கற்கின்றார்களோ என்பது தெரியாத விடயம்.//
மத ஆதிக்கம் உள்ள பாடசாலை கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மாணவிகளின் இந்த உடை மாற்றும்
விடயத்தில் பாடசாலையை விட பெற்றோர்கள் தான் அக்கறை கொள்ள வேண்டும்.
உடை விடயம் தெரிந்து தானே அவர்கள் அந்த பாடசாலையில் சேர்க்கிறார்கள்.
அந்த பாடசாலை தான் வேண்டும் என்று சேர்க்கும் பெற்றோர் வீட்டில் இருந்தே அந்த பாடசாலை
சீருடை அணிந்து செல்ல பிள்ளைகளை அனுமதிக்கலாமே. பெற்றோர்களுக்கே பிள்ளையின் உடை
பிரச்சினையை விட தமது மதம் பெரிதாக இருக்கிறது என்றால் பாடசாலையை குறை சொல்லி
என்ன செய்ய முடியும்.
சேன நாயக்க பாடசாலை பாராட்டப்பட வேண்டியது தான்.
<<<
எது எப்படியோ சிறுவயதிலையே மதம் என்ற நச்சுவிதையைத் தூவும் முயற்சியில் சில பாடசாலைகள் ஈடுபட்டிருக்கின்றன என்ற உண்மை மட்டும் நிதர்சனம்.
>>>
உண்மைதான்...
சிறுவர்களுக்கு நச்சு விதைகளை விதைக்கின்றனர். :(
ஸ்கூலில் எந்த விதமான மத/ஜாதி அடையாளம் இருக்க கூடாது என்று தடை செய்யலாம்.
என்ன சொன்னாலும் முஸ்லிம் பெண்களின் பாடசாலைச் சீருடை அழகானது. மற்றவர்களில் இருந்து தனித்து தெரிவதாலோ என்னவோ அது பாரக்க ரொம்ப நல்லாயிருக்கும். நான் படிச்ச பாடசாலைகளில் எல்லாம் எல்லா மதங்களுக்கும் மரியாதை இருந்தது.
பாவந்தான் அந்தப்பிள்ளைகள். அதுவும் சலுகை காட்டி காக்கா பிடிக்கிறது ம்.
இவனுங்கள ஒரு காலத்திலேயும் திருத்த முடியாது.
நான் படித்த பாடசாலையில் நான் படித்த காலத்தில் அளவுக்கதிகமான மத சின்னங்கள் அணிந்து வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. (அதாவது 4 இஞ்சிக்கு பட்டை, அல்லது இஸ்லாமியர்களின் தொப்பி போன்றவை)
அத்தோடு கையில் கோவில் நூல் கட்டுவதாக இருந்தால் பெற்றோரின் அனுமதி தேவை. காரணம் பல கோயில் நூல்கள் Friendship Bandsஐ விடவும் வண்ணமயமாகவும் வடிவாகவும் இருப்பதால் பல ஏனைய மாணவ தலைவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை.
நான் படித்த பாடசாலை அனைத்து மதங்களை சார்ந்த மாணவர்களும் மும்மொழிகளிலும் கற்கும் ஒரு அரச பாடசாலை.
சில பாடசாலைகளில் மட்டும் இந்த பிரச்சினை இருக்கிறது என கூறலாம். மற்றைய ஏராளமான பாடீசாலைகளில் இவ்வாறு இல்லை.
நான் படித்தது ஆரம்பத்தில் ஒரு கிறிஸ்தவ பாடசாலை ஆனால் இப்போது அது அரசாங்கத்தின் கீழ் உள்ள சகல மதங்களும், இரு மொழிகளும் உள்ள பாடசாலை.
ஆனால் இப்போ எங்கள் பாடசாலையில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் இந்துக்களாக இருப்பதால் எமது பாடசாலையை ஒரு தமிழ் இந்து பாடசாலையாக மாற்ற ஒரு சாரார் முயன்று வருகின்றனர். நாம் அதை எதிர்த்து போராடுகிறோம். நானும் ஒரு இந்துவாக இருந்தாலும் இதற்கு நான் உடன்பட முடியாது..
கொழும்பில் இது கொஞ்சம் அதிகம் என?
நான் படித்தது யாழ் மத்திய கல்லூரியில். (உயர்தரம் 1ம் வருடம் வரை)
பெரும்பான்மை சைவர்கள்.
நான் மாணவத்தலைவனாக இருந்தேன். எங்கள் பாடசாலையில் கையில் நூல், கழுத்தில் உருத்திராட்ச மாலை, சிலுவைகள் அணிய முடியாது. ஆனால் திருநீறு அணியலாம். ஆனால் ஓரிரு முஸ்லிம்கள் படித்தார்கள். அவர்களுக்கு அவர்களின் கலாசார ஆடை அணிய அனுமதி வழங்கப்பட்டது.
அருமையான கட்டுரை வந்தி!
சிலாபம் புத்தளம் ஏன் பல சிங்கள மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் தமிழ்பேசும் மாணவர்கள் சிங்கள மொழியிலும் கிறீஸ்தவ மற்றும் பௌத்த சமய பாடங்களைக் கல்வி பயின்று வருகிறார்கள். தழிழர்களாயிருந்தாலும் தமிழ் தெரியாத சிங்கள மொழிபேசும் மாணவர்கள் நீர்கொழும்பில் இருப்பதை நான் 1990களில் நேரடியாக சென்று கண்டவன். தென்மாகாணங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் தமிழர்கள் படித்துவருகிறார்கள். மலையகத்திலும் இந்நிலை இருக்கிறது. நான் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 1975 முதல் 1977 வரை கற்ற காலத்தில் சாகிராக் கல்லூரி அருகில் இருந்தும் என்னுடன் ஒரு முஸ்லிம் நண்பனும் கல்வி கற்றார். அதேபோல பாடசாலையிலும் பலர் கற்றனர்.
ம்..., சிந்திக்க வேண்டிய விசயத்த பதிஞ்சிருக்கிறீங்க. எனக்கு மதங்களிலும் அதன் கோட்பாடுகளிலும் நம்பிக்கை இல்லை ஆனால் மதத்தை பின்பற்றுவதோ, மதம் சார்ந்த சின்னங்களை அணிவதோ அவரவர் உரிமைகளாகும். அது மறுக்கப்படும் இடத்து கண்டிப்பாக கண்டிக்கத்தக்க விடயம்.!!!!
//எது எப்படியோ சிறுவயதிலையே மதம் என்ற நச்சுவிதையைத் தூவும் முயற்சியில் சில பாடசாலைகள் ஈடுபட்டிருக்கின்றன என்ற உண்மை மட்டும் நிதர்சனம்.//
இங்கு "சிறுவயதிலையே மத வேறுபாடு" என்பதே பொருத்தம்.
இதை விட எம்மதமும் சம்மதம் எனும் மனநிலையை இவ்வயதிலேயே உருவாக்குவதே! நாளைய உலகில்
இக்குழந்தைகள் சகிப்பும்;சகோதரத்துவத்துடனும் வாழ ஏதுவாக அமையும்.
இந்த மதம் பிடித்த அனைவரும் இதைச் சிந்திக்கவேண்டும்.
சேன நாயக்க பாடசாலை பாராட்டப்பட வேண்டியது.
சில நாட்கள் முன்னர் கண்ட ஒரு காட்சி ஒரு பிரபல கிறிஸ்தவப் பாடசாலையின் முன்னாள் இரண்டு ஆறு அல்லது ஏழாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு பாடசாலையினுள் செல்கின்றார்கள்.
முன்னால் என்று மாற்றி விடுங்கள்.
முன்னாள் மாணவர்கள் என்ற ரீதியில் கருத்தையே மாற்றி விடும்.
நல்ல கட்டுரை வந்தியத்தேவரே..
பாடசாலைக் காலம் முழுவதுமே நான் திருநீறு அணிந்து பள்ளிக்கூடம் சென்றவன்தான். நல்ல வேளையாக எங்கள் பாடசாலைகளில் இந்தத் தொல்லைகள் இருக்கவில்லை. இனியும் இருக்காது என்றே நம்புவோம்.
மற்றது யோகன் பாரிஸ் சொன்ன ‘எம்மதமும் சம்மதமே' கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா மதங்களும் சன்னதம் ஆடச் சொல்லிக் கொடுக்குமே ஒழிய, மதங்களை ஏற்றுக் கொண்டால் சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் எல்லாம் வராது. எம்மதமும் சம்மதமே என்பது தன்னுடைய மதத்தை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், மற்றவன் மதத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருக்கும் குழம்பிய மனத்தின் வெளிப்பாடு என்பது என் கருத்து. இந்த விஷயத்தில் மட்டும் Be Black or White.... don't be grey....
இன்னொரு விஷயம்... ஒன்றில் டி. எஸ். சேனநாயக்க எல்லா மதங்களுக்கும் இடம் கொடுங்கள், இல்லையேல் பாடசாலை வளாகத்துக்குள் மதக் குறியீடுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்
//nonymous சொல்வது:
மத ஆதிக்கம் உள்ள பாடசாலை கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மாணவிகளின் இந்த உடை மாற்றும் விடயத்தில் பாடசாலையை விட பெற்றோர்கள் தான் அக்கறை கொள்ள வேண்டும். //
நிச்சயமாக பல பெற்றோர் தெரிந்தோ தெரியாமலோ பிரபல பாடசாலைகளில் சில பிரச்சனைகள் இருந்தும் கல்வி கற்க அனுப்புகின்றார்கள். இது மாறவேண்டும்.
//அந்த பாடசாலை தான் வேண்டும் என்று சேர்க்கும் பெற்றோர் வீட்டில் இருந்தே அந்த பாடசாலை சீருடை அணிந்து செல்ல பிள்ளைகளை அனுமதிக்கலாமே. //
அப்படி அனுமதிதால் அவர்களின் சமூகத்தில் அல்லது இனத்தில் குழப்பம் ஏற்படும்.
//சேன நாயக்க பாடசாலை பாராட்டப்பட வேண்டியது தான்.//
ஆமாம் அதனால் தான் அந்தப் பாடசாலையை பெயர் குறிப்பிட்டு எழுதினேன்.
// Mãstän said...
ஸ்கூலில் எந்த விதமான மத/ஜாதி அடையாளம் இருக்க கூடாது என்று தடை செய்யலாம். //
நாடுகளே மத ரீதியான அடையாளங்களுடன் இருக்கும் போது பள்ளிகளில் எப்படித் தடை செய்யமுடியும். பெற்றோர்களாக உணர்ந்து அந்தப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் விட்டால் சரி.
//சினேகிதி said...
என்ன சொன்னாலும் முஸ்லிம் பெண்களின் பாடசாலைச் சீருடை அழகானது. மற்றவர்களில் இருந்து தனித்து தெரிவதாலோ என்னவோ அது பாரக்க ரொம்ப நல்லாயிருக்கும். நான் படிச்ச பாடசாலைகளில் எல்லாம் எல்லா மதங்களுக்கும் மரியாதை இருந்தது. //
உங்கள் கருத்துகளுக்கு நன்றி சினேகிதி.
//பாவந்தான் அந்தப்பிள்ளைகள். அதுவும் சலுகை காட்டி காக்கா பிடிக்கிறது ம்.//
பாவம் மட்டுமல்ல இதனூடு ஒரு மதம் மாற்றமே நிகழ்கின்றது.
//குடுகுடுப்பை said...
இவனுங்கள ஒரு காலத்திலேயும் திருத்த முடியாது.//
அதே தான் இவனுங்கள் மதம் பிடித்து அலைகிறார்கள்.
// நிமல்-NiMaL said...
நான் படித்த பாடசாலையில் நான் படித்த காலத்தில் அளவுக்கதிகமான மத சின்னங்கள் அணிந்து வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. (அதாவது 4 இஞ்சிக்கு பட்டை, அல்லது இஸ்லாமியர்களின் தொப்பி போன்றவை)//
அனைவருக்கும் பொது விதி என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.
//அத்தோடு கையில் கோவில் நூல் கட்டுவதாக இருந்தால் பெற்றோரின் அனுமதி தேவை. காரணம் பல கோயில் நூல்கள் Friendship Bandsஐ விடவும் வண்ணமயமாகவும் வடிவாகவும் இருப்பதால் பல ஏனைய மாணவ தலைவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை.//
அதே தான் அதே தான் சிலர் ஜெயசூரியா போல் கைமுழுவதும் பட்டையாக பல நூல்கள் கட்டியிருப்பார்கள்.
10:28 AM
//யோ வாய்ஸ் (யோகா) said...
சில பாடசாலைகளில் மட்டும் இந்த பிரச்சினை இருக்கிறது என கூறலாம். மற்றைய ஏராளமான பாடீசாலைகளில் இவ்வாறு இல்லை.//
இல்லை யோ பெரும்பாலான பிரபல பாடசாலைகளில் இந்தச் சிக்கல் இருக்கின்றது.
//ஆனால் இப்போ எங்கள் பாடசாலையில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் இந்துக்களாக இருப்பதால் எமது பாடசாலையை ஒரு தமிழ் இந்து பாடசாலையாக மாற்ற ஒரு சாரார் முயன்று வருகின்றனர். நாம் அதை எதிர்த்து போராடுகிறோம். நானும் ஒரு இந்துவாக இருந்தாலும் இதற்கு நான் உடன்பட முடியாது..//
அது தப்பு ஒரு பாடசாலையில் பெரும்பாலானவர்கள் யார் இருந்தாலும் அந்தப் பாடசாலை நடுநிலைமையாக இருந்தால் தான் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.
உங்கள் சமூக அக்கறைக்கு பாராட்டுகள்.
//கனககோபி said...
கொழும்பில் இது கொஞ்சம் அதிகம் என?//
கொழும்பில் இதுமட்டுமல்ல ஒழுக்கம் என்ற பெயரில் மாணவர்களின் மீசையை எடுப்பது, தலைமுடி பிடரியைத் தொடவிடாது வெட்டுவது, எனப் பல காட்டுமிராண்டி விடயங்கள் ஒழுக்கம் என்ற பெயரில் செயல்ப் படுத்தப்பட்டன. அதே நேரம் கொழும்பில் தான் மாணவர்களிடையே மோதலும் அதிகம். வெளிமாவட்டங்களில் இப்படியான விடயங்கள் இல்லை.
//எங்கள் பாடசாலையில் கையில் நூல், கழுத்தில் உருத்திராட்ச மாலை, சிலுவைகள் அணிய முடியாது. ஆனால் திருநீறு அணியலாம்.//
எங்கள் பாடசாலை கிறிஸ்தவப் பாடசாலை ஆனாலும் சகல மதச் சின்னங்களுக்கும் அனுமதி. சில பொதுவான நிகழ்வுகள் கூட முதலில் தேவாரம், பின்னர் பைபிள் படித்தல் என நடைபெறும்.
// ஆனால் ஓரிரு முஸ்லிம்கள் படித்தார்கள். அவர்களுக்கு அவர்களின் கலாசார ஆடை அணிய அனுமதி வழங்கப்பட்டது.//
இது தேவை தான் கொழும்பு இந்துக் கல்லூரியில் அவர்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
// தங்க முகுந்தன் said...
அருமையான கட்டுரை வந்தி!//
நன்றிகள் முகுந்தன் அண்ணா.
//சிலாபம் புத்தளம் ஏன் பல சிங்கள மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் தமிழ்பேசும் மாணவர்கள் சிங்கள மொழியிலும் கிறீஸ்தவ மற்றும் பௌத்த சமய பாடங்களைக் கல்வி பயின்று வருகிறார்கள். தழிழர்களாயிருந்தாலும் தமிழ் தெரியாத சிங்கள மொழிபேசும் மாணவர்கள் நீர்கொழும்பில் இருப்பதை நான் 1990களில் நேரடியாக சென்று கண்டவன். தென்மாகாணங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் தமிழர்கள் படித்துவருகிறார்கள். மலையகத்திலும் இந்நிலை இருக்கிறது. நான் அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 1975 முதல் 1977 வரை கற்ற காலத்தில் சாகிராக் கல்லூரி அருகில் இருந்தும் என்னுடன் ஒரு முஸ்லிம் நண்பனும் கல்வி கற்றார். அதேபோல பாடசாலையிலும் பலர் கற்றனர்.//
உண்மைதான் அதுமட்டுமல்ல, சில தமிழ் கிறிஸ்தவ மாணவர்கள் ஏஎல்லில் இந்துநாகரீகத்தை ஒரு பாடமாகப் பயில்கின்றார்கள், காரணம் இலகுவானதும் அத்துடன் கிறிஸ்தவ நாகரீகம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் பற்றாக்குறையுமாகும்.
//நிரூஜா said...
ம்..., சிந்திக்க வேண்டிய விசயத்த பதிஞ்சிருக்கிறீங்க. எனக்கு மதங்களிலும் அதன் கோட்பாடுகளிலும் நம்பிக்கை இல்லை ஆனால் மதத்தை பின்பற்றுவதோ, மதம் சார்ந்த சின்னங்களை அணிவதோ அவரவர் உரிமைகளாகும். அது மறுக்கப்படும் இடத்து கண்டிப்பாக கண்டிக்கத்தக்க விடயம்.!!!!//
அதே தான். மதத்தில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ இன்னொருவரின் மதத்திற்க்கும் மரியாதை கொடுக்கவேண்டியது முக்கியமானதாகும்.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இங்கு "சிறுவயதிலையே மத வேறுபாடு" என்பதே பொருத்தம்.//
நீங்கள் சொல்வதும் சரி யோகன் அண்ணை.
//இதை விட எம்மதமும் சம்மதம் எனும் மனநிலையை இவ்வயதிலேயே உருவாக்குவதே! நாளைய உலகில் இக்குழந்தைகள் சகிப்பும்;சகோதரத்துவத்துடனும் வாழ ஏதுவாக அமையும்.
இந்த மதம் பிடித்த அனைவரும் இதைச் சிந்திக்கவேண்டும்.//
எந்த மதமும் சம்மதம் என்பதைவிட சகல மதங்களும் சமமானவை என்ற கருத்தை சிறுவயது முதலே குழந்தைகளிடம் விதைத்தால் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால் மதங்களிடையே உட்கட்சி பூசல்கள் அதிகம்.
// Chandravathanaa said...
சேன நாயக்க பாடசாலை பாராட்டப்பட வேண்டியது. //
நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய பாடசாலை.
//முன்னால் என்று மாற்றி விடுங்கள்.
முன்னாள் மாணவர்கள் என்ற ரீதியில் கருத்தையே மாற்றி விடும்.//
மாற்றிவிட்டேன் அக்கா, தவறைச் சுட்டிக்காட்டியதற்க்கு நன்றிகள்.
// Kiruthikan Kumarasamy said...
நல்ல கட்டுரை வந்தியத்தேவரே..//
நன்றிகள் கீத்
//பாடசாலைக் காலம் முழுவதுமே நான் திருநீறு அணிந்து பள்ளிக்கூடம் சென்றவன்தான். நல்ல வேளையாக எங்கள் பாடசாலைகளில் இந்தத் தொல்லைகள் இருக்கவில்லை. இனியும் இருக்காது என்றே நம்புவோம்.//
இல்லை இல்லை நாங்கள் படித்த காலத்தில் இல்லை ஆனால் அப்பா படித்த காலத்தில் அனைவருக்கும் கிறிஸ்தவ மதம் போதிக்கப்பட்டது. இனியும் இருக்காது.
//மற்றது யோகன் பாரிஸ் சொன்ன ‘எம்மதமும் சம்மதமே' கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா மதங்களும் சன்னதம் ஆடச் சொல்லிக் கொடுக்குமே ஒழிய, மதங்களை ஏற்றுக் கொண்டால் சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் எல்லாம் வராது. எம்மதமும் சம்மதமே என்பது தன்னுடைய மதத்தை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், மற்றவன் மதத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இருக்கும் குழம்பிய மனத்தின் வெளிப்பாடு என்பது என் கருத்து. இந்த விஷயத்தில் மட்டும் Be Black or White.... don't be grey.... //
இதுவும் ஒருவகையில் சரியான விடயம். மற்ற மதங்களை மதிக்கத் தெரிந்தால் எந்தப் பிரச்சனையும் வராது. அன்பே சிவம்.
பாடச்ச்லைகள் எல்லாமே மத சார்பற்றவையாக மாற்றப்படவேண்டும்..
அடிப்படையில், பாடசாலை பாடவிதானத்திலிருந்து மத பாடங்கள் நீங்கப்பட்டு, பதிலாக சமூகவியல் கற்கைகள் அறிமுகப்படுத்தவேண்டும்..
உதாரணத்துக்கு, இந்திய தமிழ் நாட்டு பாடவிதானத்தை பார்த்தீர்களானால், அதிலே மதத்துக்கு இடமில்லை.
அப்போது தான் இந்த மத அடிப்படையிலான பாரபட்சங்கள் இல்லாதொழியும்..
பெரும்பாலான கொழும்பு தேசிய பாடசாலைகளில் இந்தப்பிரச்சினை இல்லை என்றே நம்புகிறேன்...டிஎஸ்..பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாடசாலைகள் மதச்சார்பை தவிர்த்தல் நல்லது.
can u tell in which muslim school "Non muslim girls" forced to wear Muslim Dress?
And reason why those girls change dress close to school is, school is only for girls and by wearing muslim dress all the way from home to school is to safe guard themself and they are practicing islam at their best. And they go to that school for education and it may be the school they could get admission too.
And you didnt write a single word about Batticalo College of Education and its racism. Any Reason?
அஷார் அவர்களுக்கு
நான் குறிப்பிட்ட பாடசாலை வெளிமாவட்டப் பாடசாலை. மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி பற்றி எனக்குத் தெரியாது. அங்கே என்ன நடக்கின்றது என்பதை அறியத் தாருங்கள்.
சிலபாடசலையின் அதிபர்களிடமும் நிர்வாகத்திடமும் மதவெறி உள்ளது.மற்றைய மதமாணவர்களை அனுமதிக்காதபாடசாலைகளூம் உள்ளன.
அன்புடன்
வர்ம
//Azhar said...//
And you didnt write a single word about Batticalo College of Education and its racism. Any Reason?//
நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் பிரச்சனை இருப்பதாக நான் அறியவில்லை. சிலர் சில வதந்திகளைப் பரப்புவதாக அறிந்தேன். ஒரு வலைப்பதிவர். இது தொடர்பில் நான் ஒரு பதிவிடுகின்றேன்.
Post a Comment