முதல் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 1
இரண்டாம் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 2
மூன்றாம் பகுதி :புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 3
எமது பதிவர் சந்திப்புக்கான ஆயித்தங்கள் மும்முரமாக நிகழ்ந்துகொண்டிருந்தபோது, நிகழ்ச்சி நிரல்களை ஆராயாவும் புல்லட்டின் வடை, பற்றீஸ் உணவுகளுக்கு ஓடர் செய்யவும், லோஷனால் பதிவர் சந்திப்புக்கு முன்னர் 20ந்திகதி வியாழன் ஒரு சிறிய சந்திப்பு தமிழ்ச் சங்க வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டது.
நான் கொஞ்சம் தாமதமாகவே சென்றேன், காரணம் வரும் வழியில் பாதை சில நிமிடங்களுக்கு போக்குவரத்திற்க்கு தடை செய்யப்பட்டிருந்தது. நான் அங்கே சென்ற போது ஏற்கனவே அறிமுகமான சதீசுடன், அந்நியன் முடி ஸ்டைலில் ஒருவர் நின்றார், இன்னொரு சின்னப்பொடியன், அடுத்தவர்கள் லோஷன், ஆதிரை மற்றும் பரபரப்பாக புல்லட்.
அந்நியன் முடிக்காரர் தான் நம்ம கெளபாய் மது, சின்னப்பொடியன் இளைஞர்களின் இதயங்களை இணைக்கும் சுபானு இணையத்தளத்திற்க்கு சொந்தகாரரான சுபானு, பின்னர் அனைவரும் தமிழ்ச் சங்க மண்டபத்தில் அனுமதி பெற்றுச் சென்று என்ன செய்யவேண்டு என்பவற்றை ஆராய்ந்தோம்.
சிறிது நேரத்தில் முகத்தில் புன்னகையுடன் பனைமர உயரத்தில் ஒருவர் வந்தார் யார் என்றால் அவர் தான் பால்குடி. அவரை எங்கேயோ கண்ட ஞாபகம் எனக்கு பின்னர் தான் தெரிந்தது அவரும் என்னுடைய பாடசாலை மாணவன் என்று. அவரது அண்ணன் எங்கடை பேட்சுக்கு அடுத்த பேட்ச் எனப் பின்னர் அறிந்தேன்.
இடையில் சதீஸ் வெற்றியில் நிகழ்ச்சி செய்யவேண்டும் எனக் கூறிச் சென்றுவிட்டார். அன்றிரவுதான் மது சொந்தச் செலவில் தனக்குத் தானே சூனியம் வைத்தார்(கந்தசாமி ஸ்பெசல் ஷோவிற்க்கு சென்றார்).
ஒருமாதிரி இரவு எட்டரை வரை ஊர் வம்புகளையும் புல்லட்டின் தாக்குதல்களையும் சாமாளிச்சுக்கொண்டு கூட்டம் கலைந்தது.
புல்லட் சிற்றுண்டிகளுடன், சந்திப்பு பற்றிய பனரை ஏனையவர்களுடன் சேர்ந்து செய்வதாக வாக்களித்தார். ஆதிரை புளொக்கர் பிறந்த தினத்தை ஒட்டி கேக் சம்பந்தமான விடயங்களைத் தான் கவனிப்பதாகச் சொன்னார்.
சனிக்கிழமை பகல் புல்லட்டின் தொலைபேசி அழைப்பு "அண்ணே பனர் எழுத ஒரு துணி வாங்கினேன் அது குஞ்சி ஆச்சியின் செத்தவீட்டிற்க்கு செய்த துணிபோல் கலராக இருக்கு என்ன செய்வது" எனக்கேட்டார், நானும் " நீங்கள் என்ன செய்தாலும் சரி முடிந்தால் கஸ்டப்படாமல் செய்யுங்கள்" என புல்லட்டிடம் கூறினேன்.
பிறகு இரவு 9 மணிபோல் ஆதிரையிடம் இருந்து குறும் செய்தி மது நேரடி ஒளிபரப்புச் செய்ய சகல ஏற்பாடுகளும் தயார் என்றும் இந்த லிங்கில் சென்றுபார்த்தால் பரீட்சார்த்த ஒளிபரப்பு நடைபெறுகின்றது என்றும் சொன்னார். உடனே மின்னஞ்சலில் இந்த நிகழ்வையும் அது தொடர்பான சுட்டியையும் நண்பர்களுக்கு அனுப்பியதுடன், இது தொடர்பான அறிவித்தலை ஆதிரையின் வலையிலும் மதுவின் வலையிலும் கண்டேன்.
நள்ளிரவு 1 மணியளவில் புல்லட் இன்னும் பனர் செய்துமுடியவில்லை, வேறு ஒருவிதமாகச் செய்கின்றேன் என்றார். அத்துடன் தன்னை அதிகாலை 6 மணிக்கு எழுப்பிவிடவும் சொன்னார். நானே ஞாயிற்றுக்கிழமைகளில் 10 மணிக்கு எழும்புகிற ஆள், 6 மணிக்கு புல்லட்டை எழுப்பவேண்டும் என்றால் அலார்ம் வைத்துதான் நான் எழும்பவேண்டும் என அலார்ம் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டேன்.
ஒருமாதிரி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அரக்கப்பரக்க எழுந்து வெள்ளவத்தை நோக்கிய என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
எட்டு மணியளவில் தமிழ்ச் சங்கத்தை அடைந்தால் அங்கே ஆதிரையும் மதுவும் மாத்திரம் நின்றார்கள். புல்லட் சில நிமிடங்களுக்கு முன்னர் பார்த்து ஒருதரும் இல்லை என்றுவிட்டு குறை நித்திரையைத் தொடர வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் அவரை போன் பண்ணி மீண்டும் நித்திரையால் எழுப்பி அழைக்கவேண்டியதாகிவிட்டது.
சிறிது நேரத்தில் லோசன் காலையிலையே கமகம என்ற வாசனையுடன் வந்தார்.(அடப்பாவி காலையிலையே செண்டா),லோசனையும் ஆதிரையும் கேக் எடுத்துவர பேக்கரிக்கு அனுப்பிவிட்டு நிற்க, மது கரும்பலகையில் பதிவர் சந்திப்பு பற்றிய அறிவித்தலை அழகாக எழுதி சங்கத்தின் முன்னால் வைத்தார்.
புல்லட்டும் வந்துவிட்டார், நான், மது, புல்லட் மூவரும் வீதியில் நிற்கின்றபோது எழில் அண்ணா சொன்னபடி 9 மணிக்கு முன்னரே வந்துவிட்டார். அவரை உள்ளே அனுப்பிவிட்டு நிற்க கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போதுதான் புல்லட்டிற்க்கு மூச்சே வந்தது.
நண்பர்கள் வரத் தொடங்க அனைவரையும் மண்டபத்தில் கொண்டுபோய் அன்புடன் இருத்தினோம். சிலரை ஏற்கனவே தெரியும், சிலரை புதிதாக் அறிமுகபப்டுத்திக்கொண்டோம்.
தமிழ்ச் சங்க வாசலில் நிற்க ஒரு சற்றே உயரமான ஜெல் வைத்த முடியுடன் ஒருவர் இரண்டு பேருடன் வந்துகொண்டிருந்தார், அவரது கண்ணாடியை ஏற்கனவே பார்த்த ஞாபகத்தில் மருதமூரான் என அழைக்க அவர் திரும்பிப் பார்த்தார். அட என் கணிப்பு பிழைக்கவில்லை அவர் தான் மருதமூரான் நான் எதிர்பார்த்ததை விட இளைமையாகவே இருந்தார்.
அவருடன் கூட வந்தவர்களில் கொஞ்சம் பருமனாக இருந்தவர் சேரன் கிரிஷ்( வலையில் தன்னுடைய 10 வருடத்திற்க்கு முன்னைய படத்தைப் போட்டிருக்கின்றார்), இன்னொருவர் மகேஷ் பிரசாத், மூவரையும் அழைத்துச் சென்றால் ஆதிரைக்கு அறிமுகபபடுத்த அவருக்கு மருதமூரானை புருசோத்தமனாகத் தெரியும் என்றார். பால்குடி, பனையூரான் என பழைய நண்பர்கள் குழு தங்கள் பழைய கால நினைவுகளை சில நிமிடங்கள் மீட்டார்கள் என பின்னர் அறிந்தேன்.
இடையில் லோசன் பரபரப்பாக இருந்தார். என்னவென்று விசாரித்தால் நிகழ்ச்சிக்கு வந்த சதீசைக் காணவில்லை என்றார், அதாவது சங்க மண்டபம் வரை வந்த சதீஸ் திடிரென்று காணாமல் போய்விட்டார். பின்னர் புதிய சப்பாத்து ஒன்றுடன் வந்துசேர்ந்தார். செருப்புடன் வந்தவர் சப்பாத்து மாத்த வீட்டுக்குச் சென்றாராம். வரும்வழியில் அவர் சந்தித்த திடுக்கிடும் அனுபவம் சதீஸின் பாதுகாப்பு கருதி தணிக்கை செய்யப்படுகின்றது.
இப்படி பல நாட்களாக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு சரியாக 9.13 மணிக்கு ஆரம்பமாகியது. அதன் பின்னர் நடந்தவை வரலாற்றுப் பதிவுகள்.
பின்குறிப்புகள்:
1. இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடும் இனிய நண்பன், பிரபல நக்கல் மன்னன், நையாண்டிச் சிங்கம் புல்லட் என்றழைக்கப்படும் பவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
2. இந்தத் தொடர் யாரையும் புண்படுத்தவல்ல, சும்மா பகிடிக்காக நடந்தவற்றை அப்படியே எழுதியது.
3. சில நாட்களாக எந்தப் பதிவும் எழுதாமல் சில சிறுவர்களால் சூழப்பட்ட புல்லட் நாளை முதல் தன் கைவரிசையைக் காட்டுவார் என்றும் முதல் பதிவு ஒரு பின் நவீனத்துவப் பதிவு எனவும் நளபாகத்தில் அப்பம் சாப்பிட்ட சில அன்பர்கள் சொல்லக்கேள்வி.
இத்துடன் இந்த தொடர் முடிவடைந்துள்ளது. இடையில் விடுபட்ட கமல், பாடல்கள் தொடர் சில நாட்களில்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
//பனைமர உயரத்தில் ஒருவர் வந்தார் யார் என்றால் அவர் தான் பால்குடி.//
அவர் ஒரு உயர்ந்த மனிதர்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் புல்லட்!
//அவருடன் கூட வந்தவர்களில் கொஞ்சம் பருமனாக இருந்தவர் சேரன் கிரிஷ்( வலையில் தன்னுடைய 10 வருடத்திற்க்கு முன்னைய படத்தைப் போட்டிருக்கின்றார்) //
நானும் சின்னப் பெடியனா இருப்பார் எண்டு தான் நினச்சன். பிறகு அவரின்ர வலைப்பதிவில வேற யாரின்ர படத்தயும் போட்டிருக்கிறார் எண்டு நினச்சன். அது அவரின்ர படம் தானா?
///அவரது அண்ணன் எங்கடை பேட்சுக்கு அடுத்த பேட்ச் எனப் பின்னர் அறிந்தேன்///
பொய் பொய் முழுப்பொய்... பால் குடியின்ர அண்ணா 2002 ஏ.எல். பட்ச்... வந்தியண்ணாவின் வயதைக் குறைக்கும் சதிகளில் இதுவும் ஒன்று என்பதை அறியத்தருகிறேன்
//பொய் பொய் முழுப்பொய்... பால் குடியின்ர அண்ணா 2002 ஏ.எல். பட்ச்... வந்தியண்ணாவின் வயதைக் குறைக்கும் சதிகளில் இதுவும் ஒன்று என்பதை அறியத்தருகிறேன் //
வந்தியண்ணா... மன்னிக்கவும்...
வந்தி மாமா...
பொய் சொன்னா பேய் வந்து பிடிக்கும்...
பொய் பொய் முழுப்பொய்... பால் குடியின்ர அண்ணா 2002 ஏ.எல். பட்ச்... வந்தியண்ணாவின் வயதைக் குறைக்கும் சதிகளில் இதுவும் ஒன்று என்பதை அறியத்தருகிறேன்
ச்சா.... இதையெல்லாம் கண்டுக்கப்படாது என எங்களிடம் வேண்டிய நீங்கள், கீத் இடம் ஏனய்யா சொல்லாமல் விட்டீர்கள்???
//அவரது கண்ணாடியை ஏற்கனவே பார்த்த ஞாபகத்தில் மருதமூரான் என அழைக்க அவர் திரும்பிப் பார்த்தார்.
இரவல் கண்ணாடியோ???
எங்கையடா ஒருத்தன் மாட்டுவான் இழுத்து வச்சுக் கும்மலாம் எண்டு பாத்துக் கொண்டிருந்தன். முறையா மாட்டினீங்கள் வந்தியண்ணே... எனக்கு அண்ணா இருக்கிறார். ஆனால் நீங்கள் ஊகித்துக் குறிப்பிடும் நபர் என்னுடைய அண்ணா இல்லை. (இது எப்புடி இருக்கு?) என்னுடைய உருவத்தை ஒத்து அந்நபர் இருப்பது... இல்லை இல்லை அவரின் உருவத்தைப் போல நான் இருப்பது (நான் தான் பிறகு பிறந்தவன்) உண்மைதான். இந்தக் குழப்பத்தை எதிர்கொள்ளுவது எனக்கு இது முதன்முறையல்ல.
இதுக்குள்ள சிக்கல் என்னண்டா அவரும் என்னுடைய ஊரவர்.(ஒருத்தரும் தப்பா நினைக்க வேண்டாம்) அவருக்கும் ஒரு தம்பி இருக்கிறார். (நான் அவனில்லை). வழமையா நான் எதிர் கொள்ளும் உரையாடல்கள் இவை.
‘தம்பி, உங்களுக்கு அண்ணா இருக்கிறாரோ?’
‘ஓம்’
‘இன்ன இடம் தானே’
‘ஓம்’
‘ஹாட்லியிலயோ படிச்சவர்?’
‘ஓம்’
‘அவர் எப்பிடி இருக்கிறார்? கண்டு கன காலம். நான் இன்னார் கேட்டதா சொல்லுங்கோ. நீங்கள் என்ன செய்யுறியள்?...’
என்னைப் பற்றிய விசாரணை தொடரும்.... சில வேளை நீண்ட நேர உரியாடலில் இடையில்தான் நான் அவனில்லை எண்ட முடிவுக்கு வருவன். பிறகென்ன, ‘மன்னிக்கோணும்... ஆள் மாறிக் கதைச்சுப்போட்டன்...’ ‘பரவாயில்லை...’
சில முக நெளிவுகளுக்குப் பின்னர் இருவரும் பிரிவோம். நல்லவேளை அந்த நபரை எனக்கு நல்லாத் தெரிஞ்சதால் ஆள்மாறாட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் என்னால என்ன பாடு பட்டாரோ?
கடைசியாகவும் சொல்லுறன் நான் அவனில்லை.
மு.கு. வந்தியண்ணா மீதான மரியாதை கருதி (மூத்தோருக்கு மரியாதை குடுக்கோணுமெண்டு பள்ளிக்கூடத்தில சொல்லித்தந்தாங்கள் - கீத் தாக்கியதும் போதும் எண்டு நினைக்கிறன்) மிகச் சுருக்கமாக இத்துடன் முடித்துக் கொள்ளுறன்.
//இன்னொரு சின்னப்பொடியன்..
:(
அன்புடன் வந்தி
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர் பதிவையும் வாசித்தேன். இலங்கை சந்திப்பு நிலவரங்களை விரும்பி தேடி தேடி வாசித்தேன். எமது சூழ்நிலையில் சில சிக்கல்களால் கடந்த சில நாட்களாக கணனியை அணுக முடியாமல் போட்டுது என்பது பெறும் கவலையாக இருகின்றது.
இருப்பினும் உங்கள் ஒருமித்த முயற்சி மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது. நானும் இலங்கையில் இருந்ததைப் போன்ற ஒரு மனநிலையை தோற்றுவித்தது.
மிக்க நன்றி
Kiruthikan Kumarasamy said...
///அவரது அண்ணன் எங்கடை பேட்சுக்கு அடுத்த பேட்ச் எனப் பின்னர் அறிந்தேன்///
பொய் பொய் முழுப்பொய்... பால் குடியின்ர அண்ணா 2002 ஏ.எல். பட்ச்... வந்தியண்ணாவின் வயதைக் குறைக்கும் சதிகளில் இதுவும் ஒன்று என்பதை அறியத்தருகிறேன்//
ஆஹா இப்படி எல்லாம் சதி நடக்குதா?
எப்படியோ இந்த தொடர் சந்திப்புக்கான உங்கள் கஷ்டங்களை அழகாக எடுத்து காட்டியது..
Post a Comment