அண்மைக்காலங்களாக வெள்ளி, சனி இரவுகளில் பெரும்பாலான நகரங்களில் இரவு களியாட்ட விடுதிகளில் நடக்கும் கூத்துகள் பிரபலமடைந்திருக்கின்றன. சில இடங்களில் அரசியல்புள்ளிகளின் பிள்ளைகள் அடித்த கூத்துகள் கொலை வரை வந்திருக்கின்றன.
ஒருமுறை என் நண்பர்கள் இருவர் இந்த அனுபவத்தைப் பெற்றிருந்தார்கள், அவர்களின் அனுமதியுடன்(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)அவர்கள் எனக்குச் சொன்ன கதை உங்களுக்காக. ஒரு முன்னெச்சரிக்கைப் பதிவு இது.
ஹரியும் சுதாவும் பிரபல மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். அத்துடன் இருவரும் கூட்டாகவும் சில மென்பொருட்களை வடிவமைத்து சில சிறிய தனியார் நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் விநியோகிப்பார்கள். இருவரும் வார இறுதியில் மட்டும் சந்திப்பார்கள், மற்றும்படி, நெட்டும் மொபைலும் தான் அவர்களுக்கு துணை.
பெரும்பாலும் இவர்கள் இருவரையும் பம்பலப்பிட்டியுள்ள ஒரு பிரபல பாரிலும், வெள்ளவத்தையிலுள்ள பிரபல ஹோட்டலிலும் சனிக்கிழமைகளில் சந்தித்து ஒன்று அல்லது இரண்டு பியர் மட்டும் குடிக்கும் மன்னிக்கவும் அடிக்கும் சிறிய குடிகாரர்கள்.
ஒருமுறை இருவரும் சேர்ந்து வடிவமைத்த புரொஜட்டிற்க்கு ஒரு தொகை பணம் கிடைக்கவே நீண்ட நாள் ஆசையான ஹரோக்கி பாரில் சென்று பார்க்கமுனைந்தார்கள்.
சனிக்கிழமை மாலையே ஹரி பரபரப்பாக இருந்தான், முதல்முறை ஹரோக்கி பாருக்குப் போவதால் கொஞ்சம் படபடப்பும் இருந்தது. சுதா ஒரு 7 மணியளவில் பிக்கப் பண்ண காரில் வருவதாகச் சொன்னபடியால் அவன் வரும் வரை நெட்டில் சிங்கையிலுள்ள நண்பனிடம் அவனின் அனுபவங்களைக் கேட்டு தன்னை கொஞ்சம் தயாரிக்கொண்டான். அத்துடன் எப்படியும் ஒரு ஐந்தாயிரத்திற்குள் சகல செலவுகளும் முடிந்துவிடும் என நினைத்து 5 பச்சை நோட்டுகளை பேர்சிற்க்குள் வைத்திவிட்டு முகத்தைக் மீண்டும் ஒரு தடவை குளித்துவிட்டு தலைக்கு ஜெல் எல்லாம் இட்டு ஏதோ பொம்பிளை பார்க்கபோற நினைப்புடன் காத்திருக்க,வீட்டு வாசலில் சுதாவின் கார்க் ஹோர்ன் கேட்டது.
இருவரும் காரில் ஏறி கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹரோக்கி பாரினுள் நுழைய வாசலிலையே காவலாளி எட்டு மணிக்குத் தான் திறப்போம் என்று விட்டு, செருப்பு அணிந்திருந்த சுதாவைப் பார்த்து "செருப்புடன் உள்ளே விடமாட்டோம், சப்பாத்து மாத்திக்கொண்டு வாருங்கள்" என்றார்.
"என்ன மச்சான் உனக்கு இது தெரியாதா?" என ஹரி நக்கலடித்தான்.
"ஓமாடா நான் டெய்லி வாறவன் தானே, சும்மா பகிடிபண்ணாமல் வா வீட்டைபோய் மாத்திக்கொண்டு வருவோம்" என்ற படி சுதா காரை வீடு நோக்கித் திருப்பினான்.
மீண்டும் அந்த பாருக்கு ஒரு 8 மணியளவில் வந்தார்கள். வாசலில் நுழைவு அனுமதி என ஆளுக்கு ஆயிரம் ரூபா பிடிங்கினார்கள்.
"என்ன மச்சான் இங்கே உள்ளே போறதற்கே காசு பிடுங்குகிறான்" ஹரி.
"டேய் அப்படித்தான்டா சும்மா வாயை மூடிக்கொண்டுவா" சுதா.
இருவரும் அரக்கப் பரக்க உள்ளே போனால் ஒருதரையும் காணோம் மேசைகள் அனைத்தும் காலியாகவே இருந்தன.
"மச்சான் என்னடா இது ஒருதரையும் கணோ " என ம் மை ஹரி முடிக்கமுன்னர்
"ஹாய் வெல்கம் ரு அவர் ஹெவன்" என்ற படி ஒரு கறுப்புடைத் தேவதை சினேகா புன்னகையுடன் வந்தது.
ஹரியின் காதில் "டேய் வரவேற்பே பலமாக இருக்கு" என்றான் சுதா.
இருவரையும் அந்த சினேகா சிரிப்புக்காரி ஒரு மூலையிலுள்ள மேசையில் அமரும்படி சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற சில செக்கன்களில் இரண்டு அதே கறுப்பு உடைத் தேவைதைகள் வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தார்கள்.
" ஹாய் கைய்ஸ் ஐயாம் கயனி" என்றாள் ஸ்லிவ்லெஸ் பனியனுடன் இருந்த கயனி.
"ஹாய் ஐயாம் சமந்தி" என்ற இன்னொரு பனியன்காரி கையுடன் கொண்டந்த மெனு கார்ட்டை ஹரியிடம் நீட்டினாள்.
" ம்ம் எமக்கு இரண்டு போத்தல் பியர், ஹாட் பட்டர் கட்டில் பிஸ் ஒரு போர்ஷன், சிப்ஸ் ஒரு போர்ஷன்" ஹரி
இவர்கள் பியர் ஓடர் பண்ணியதைப் பார்த்து கஜனி சமந்தியைப் பார்த்து மெல்லிதாக சிரித்தாள்.
"ஓ ஐ நீட் வன் பாக்கெட் கோல்ட்லீவ்" சுதா. அவன் கம்பஸில் கற்றுக்கொண்ட நல்லபழக்கத்தில் புகைபிடித்தலும் ஒன்று. ஹரி புகைக்கு எதிரி.
கஜனி ஹரியின் அருகில் இருக்க, சமந்தி அந்த ஓடரை எடுத்துவரச் சென்றாள்.
" ஏன் நீங்கள் நேரத்திற்க்கு வந்தீர்கள், இங்கே கஸ்டமர்ஸ் ஒரு பத்து மணியளவில் தான் வருவார்கள், அதிகாலை 3 மணிவரை டான்ஸ் எல்லாம் ஆடுவார்கள்" கஜனி.
"அடியே உனக்கு எங்கே தெரியும் நாங்கள் பிந்தி வீட்டைபோனால் வழியில் எத்தனை டொக்கியூமெண்ட்ஸ் காட்டவேண்டும் என்று" என மனதில் நினைத்த ஹரி
" நோ நோ நாளைக்கு எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதுதான் கொஞ்சம் ஏர்லியாக வந்து ஏர்லியாக கிளம்பப்போகின்றோம்" என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கவே அவர்களின் ஐட்டங்கள் வந்துசேர்ந்தன.
சமந்தியே கிளாஸ்களில் விட்டு இருவரிடம் கொடுத்துவிட்டு, ஒன் மினிட் வெயிட் பண்ணுங்கள் என்று விட்டு இன்னும் இரண்டு கிளாஸ்களில் கொண்டுவந்த திரவத்தில் ஒன்றை கஜனியிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை தான் வைத்திருந்தாள்.
நால்வரும் சியர்ஸ் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அருந்தத் தொடங்கினார்கள்.
"மச்சான் உவளள் என்னடா குடிக்கிறாளாள்" என மெல்ல சுதாவின் காதைக் கடித்தான் ஹரி.
"பொறடா கேட்பம்"
"நீங்கள் குடிப்பது கோக் தானே" என ஹரி அசட்டுத்தனமாக கேட்க, இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.
"யூ ஆர் சோ பனி மேன், இது கோக் அல்ல, கஜனி குடிப்பது வொட்கா, நான் குடிப்பது விஸ்கி" சமந்தி.
அப்போதுதான் தாம் பியர் ஓடர் பண்ணும் போது அவளள் மெல்லிதாக சிரித்ததன் அர்த்தம் இருவருக்கும் புரிந்தது.
அடுத்த பெக் குடிக்கமுன்னரே சுதாவின் பாக்கெட்டிலிருந்த சிகரட்டை எடுத்து கஜனி பத்தவைத்தாள். அந்த சிகரட்டிலேயே சமந்தியும் இன்னொன்றை பத்தவைத்தாள்.
"அடப்பாவியள் இவளள் படு மொடேர்ன் பெண்களாக இருக்கிறாளளே" என மனதி ஹரி நினைத்தான்.
ஒரு சில நிமிடங்கள் கழிந்ததும்
"டின்னர் என்ன ஓடர் செய்யப்போகின்றீர்கள்" சமந்தி.
"டின்னரா? நோ எமக்கு டின்னர் வேண்டாம், நாங்கள் வீட்டில் சாப்பிட்டுக்கொள்கின்றோம்" ஹரி.
"இட்ஸ் ஓக்கே எனிவே, நாங்க டின்னர் சாப்பிடப்போகின்றோம்" என்ற சமந்தி தனக்கும் கஜனிக்கும் சிக்கன், மட்டன், பிஸ், புரியாணி என பல ஐட்டங்கள் ஓடர் செய்தாள்.
சிறிது நேரத்திலையே ஓடர் செய்த டின்னரை இவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டார்கள்.
சாப்பிட்டுமுடிந்ததும் சமந்தி "லெட்ஸ் டான்ஸ்" என ஹரியை இழுத்தாள்.
ஹரி வெட்கப்பட்டுக்கொண்டே " நோ நோ ஐ கான்ட் டான்ஸ் சோ சொறி" என்றான்.
"ஓ மை கோட் தீஸ் டமில்ஸ் நெவர் டான்ஸ்" என கஜனி இனத்தையே சாடினாள்.
பின்னர் அவர்கள் இருவரும் சாப்பிட்டது சமிப்பதற்க்காக அங்கே ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கெட்ட ஆட்டம் போட்டார்கள்.
ஒரு பதினொரு மணியளவில் ஹரி சுதாவிடம்
"மச்சான் இனி நாங்க கிளம்புவம்" என்றான்
"ஓமடா இனி இங்கே இருந்தால் எங்கடை டவுசரை உருவிப்போட்டுத்தான் உவளள் விடுவளள்" சுதா.
சுதா கஜனியைக் கூப்பிட்டு பில்லைத் தரவும் என்றான்.
ஒரு நிமிடம் என்றபடி சென்ற கஜனி, சமந்தியுடன் கூட பில்லுடன் வந்தாள்.
பில்லை ஹரியிடம் நீட்டினாள், பில்லைப் பார்த்த ஹரிக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. ஹரியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த சுதா பில்லை வாங்கிப் பார்த்தால் ரூபாய் பன்னிரண்டாயிரம்.
கஜனி, சமந்தி சாப்பிட்ட குடித்த ஐயிட்டங்களுக்கும் இவர்கள் தலையில் பில் வந்த உண்மை அப்போதுதான் இருவருக்கும் உறைத்தது.
இருவரிடம் இருப்பதோ எட்டாயிரம் மட்டும் ஏற்கனவே இரண்டாயிரம் வாசலில் பிடிங்கிப்போட்டார்கள்.
உடனே சுதா கஜனியிடம் "நீங்கள் கார்ட் எடுப்பீர்களா" என்றான்
" ஓ யெஸ்"
நல்ல காலம் கார்ட்டிருந்தபடியால் தப்பிவிட்டோம் என நினைத்து கார்ட்டில் பணத்தைச் செலுத்திவிட்டு இருவரும் தப்பினோம் பிழைத்தோம் என வீட்டுக்குச் சென்றார்கள்.
ஒரு 18+ கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல வகையில் எழுதியிருக்கின்றேன்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
30 கருத்துக் கூறியவர்கள்:
ஹரி = மயூரன் பெரி
சுதா = ???
எங்கே போனாலும் உந்த காரை விட மாட்டீங்களே...!!!
//வெள்ளவத்தையிலுள்ள பிரபல ஹோட்டலிலும் சனிக்கிழமைகளில் சந்தித்து ஒன்று அல்லது இரண்டு பியர் மட்டும் குடிக்கும் மன்னிக்கவும் அடிக்கும் சிறிய குடிகாரர்கள்
இன்றைக்கு நீங்கள் வெள்ளவத்தை வந்தீர்கள்தானே....
//ஏதோ பொம்பிளை பார்க்கபோற நினைப்புடன் காத்திருக்க
உங்களுக்கும் விரைவில் கலியாணம் என ஊர்ச்சனங்கள் பேசிக் கொள்கிறார்கள்
//செருப்பு அணிந்திருந்த சுதாவைப் பார்த்து "செருப்புடன் உள்ளே விடமாட்டோம், சப்பாத்து மாத்திக்கொண்டு வாருங்கள்" என்றார்
ஓ செருப்பு -> சப்பாத்து. அப்ப அவரோ???
மொத்தத்தில், மூன்றாமவர் பேசும் சம்பவமாக இது இல்லை. ஹரி எனும் பாத்திரப்படைப்பு அனுபவித்து சொல்கின்ற சம்பவங்களின் தொகுப்பே இப்பதிவு
இவ்வளோ பணத்தை கொடுத்து .....எனக்கு தெரிந்த வரை அத்தனை பணம் வாங்குவது வேற ஒன்றுக்கு......இவங்க மிஸ் பண்ணிட்டாங்க போல இருக்கு ;-)
சுதா லோஷன்
ஹரி வந்தி
சரியா என் கண்டுபிடிப்பு
ஐயோ ஐயோ... இப்பவும் சின்னப்பிள்ளையாயே இருக்கீங்க... (வந்தி அண்ணா... ரண்டொரு பந்திகள் ரிப்பீட் செய்யப்பட்டு இருக்கிறன. கவனியுங்கள்)
//ஆதிரை said...
ஹரி = மயூரன் பெரி
சுதா = ???//
சுதா = ஆதிரை, அடப்பாவி நான் இல்லையென்று சொன்னால் நம்பவேண்டும்.
//ஆதிரை said...
எங்கே போனாலும் உந்த காரை விட மாட்டீங்களே...!!!//
என்ன செய்வது விடாமல் துரத்துகின்றது.
//ஆதிரை said...
இன்றைக்கு நீங்கள் வெள்ளவத்தை வந்தீர்கள்தானே....//
இல்லை, புல்லட் வரச் சொன்னார் ஆனால் நான் வரவில்லை. ( நளபாகத்தில் அப்பம் சாப்பிடத்தான்)
//ஆதிரை said...
உங்களுக்கும் விரைவில் கலியாணம் என ஊர்ச்சனங்கள் பேசிக் கொள்கிறார்கள்//
வதந்திகளை நம்பவேண்டாம். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடியவருக்குத் தான் விரைவில் திருமணம்.
//ஆதிரை said...
ஓ செருப்பு -> சப்பாத்து. அப்ப அவரோ???//
இந்தக் கேள்வி அவருக்குத் திருப்பிவிடப்படுகின்றது.
//ஆதிரை said...
மொத்தத்தில், மூன்றாமவர் பேசும் சம்பவமாக இது இல்லை. ஹரி எனும் பாத்திரப்படைப்பு அனுபவித்து சொல்கின்ற சம்பவங்களின் தொகுப்பே இப்பதிவு//
அப்படிச் சொன்னால் தான் கதை சுவாரசியமாக இருக்கும். இவ்வளவும் வாசித்த நீங்கள் கதை நல்லாயிருக்க சொன்ன விதம் சரியா என நாலு நல்ல கருத்துச் சொல்லியிருந்தால் நானும் சிறுகதைகள் எழுதிப்பழகலாம். (ஏன்டா வந்தி உனக்கு ஏன் இந்தக் கொலைவெறி)
//கிரி said...
இவ்வளோ பணத்தை கொடுத்து .....எனக்கு தெரிந்த வரை அத்தனை பணம் வாங்குவது வேற ஒன்றுக்கு......இவங்க மிஸ் பண்ணிட்டாங்க போல இருக்கு ;)//
இல்லை கிரி, பப்புகளில் வெளி இடத்தை விட விலைகள் மிகமிக அதிகம். அத்துடன் 12% வரி, 10% சேர்விஸ் சார்ஜ் என நண்பன் சொல்கின்றான்.
//Anonymous said...
சுதா லோஷன்
ஹரி வந்தி
சரியா என் கண்டுபிடிப்பு//
அனானியாரே உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் தவறு.
//Kiruthikan Kumarasamy said...
ஐயோ ஐயோ... இப்பவும் சின்னப்பிள்ளையாயே இருக்கீங்க... (வந்தி அண்ணா... ரண்டொரு பந்திகள் ரிப்பீட் செய்யப்பட்டு இருக்கிறன. கவனியுங்கள்)//
திருத்திவிட்டேன் கீத். இதுவரை வாசித்தவர்கள் ஒருதரும் இந்த தவற்றைச் சுட்டிக்காட்டவில்லை. சிலவேளை பதிவே அவர்களுக்கு போதை கொடுத்ததோ தெரியவில்லை, இரவு ஆதிரையைக்கேட்டால் தெரியும்.
புல்லட்டின் பாமன்கடைப் பதிவிலேயே கேட்டேன்.. அடுத்தது வந்தியா என்று.. வந்தி பின்னாலேயே வந்து ஆமாம் என்று சொல்லி இருந்தார்..
இப்ப விளங்குது..
வந்தி ஹரியோ சுதவாவ், நான் யாரும் இல்லப்பா.. நான் அவன் இல்லை.. ;)
அது சரி நண்பர்கள் இத்தனை விஷயமும் சொன்னாங்களோ? இது நம்புற மாதிரி இல்லையே..
வந்தி நிறைய உளரிட்டீங்களோ? ;)
another சொந்த செலவில் சூனியம்????
ஆதிரை என்ன இது? இப்படி நம்ம அண்ணரை பார்த்து கேட்கலாமா? இது அடுக்குமா?
நம்ம வந்தியர் போகுமிடங்களில் கஜினி வந்து காள்ஸ்ப்பேக் அடிக்கும் என எதிர்பாரப்பது எவ்வளவு அபத்தம்?
ஏதாவது குப்பம்மா வந்து கசிப்போ கள்ளச்சாராயமோ அடிச்சதெண்டால் நம்பலாம்..
இது அவராயிருக்காது..
Very Bore. I dont know what you are trying to say. Please write something intersting or informative. Othewise plase avoid posting. It will prevent us to vist next time to your blog
2 பேருக்கு 12 ஆயிரம் சாதாரணமானது தான். ஆனால் செய்யும் செலவுக்கு உச்ச பயனை பெறுவது பயனரிலேயே தங்கியுள்ளது. அதில் இந்த இருவரும் தவறியிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் தவறுகளை திருத்தி சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்....!
:)
18+ எண்டு போட்டபடியா நான் வாசிக்கேல்ல... ஆராச்சும் எனக்கேற்ற மாரி இந்தக் கதையை சொல்லேலுமே... (ஹி..ஹி..ஹி..)
வந்தி உண்மையை சொல்லுங்கள் இது சொந்த அனுபவம் தானே?
மற்றையவர் யார்?
நான்கு பேருக்கு நைட் க்ளப் வித் டிரிங்க்ஸ் அன்ட் டின்னர் 12 000 என்பது மிகச் சாதாரணமானது. நான் நினைக்கின்றேன் நீங்கள் கொள்பிட்டியிலுள்ள லோக்கள் கரோகே பாருக்குப் போயிருக்கிறீர்கள் என்று, அது தான் உங்களை உருவி எடுத்துவிட்டார்கள். சாதாரணமாக நல்ல ஹை க்ளாஸ் (யூத் போகின்ற) நைட் க்ளப்ஸ்ல நீங்கள் சொன்ன மாதிரி அடெண்டன்ஸ் பெண்கள் இருப்பதில்லை. நாங்கள் தான் கப்பிள்ஸ்ஸாகப் போக வேண்டும் (உண்மையாக கப்பிள்ஸ்ஸாகப் போகத் தேவையில்லை - ஜோடி இல்லாமல் வாசலில் நின்றால் இன்னொரு ஜோடி இல்லாமல் வந்த பொம்பிளைப் பிள்ளையை கூட்டிக்கொண்டு போக வேண்டியது தான்). பிறகு உள்ளுக்குள்ள யார் யாரோட ஆடினம் எண்டு ஒரு நேரத்துக்குப் பிறகு யாருக்குமே தெரிவதில்லை. ஆனாலும் சில பல சண்டைகள் நடப்பதும் உண்டு. கிழவர்கள் போகின்ற நைட் க்ளப்ஸ்ல தான் பெண் அடெண்டன்ஸ் வைத்திருக்கிறவை ஏனெண்டால் இந்தக் கிழடுகள் வேறெங்க ஜோடியைத் தேடிப்பிடிக்கிறது?
மற்றது நுழைவுச்சீட்டு 1000 ரூபா என்பது எல்லா க்ளப்ஸ்ஸிலயும் ஸ்டான்டட் ரேட்.
சத்தியமா எனக்கு ஒன்று விளங்கவில்லை. இராத்திரி 8மணிக்குச் சாப்பிட்டுட்டு 10மணிக்குத் தூங்கிற எங்கட ஆக்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசைகள் எல்லாம் வாரது எண்டு...
//கிழவர்கள் போகின்ற நைட் க்ளப்ஸ்ல தான் பெண் அடெண்டன்ஸ் வைத்திருக்கிறவை ஏனெண்டால் இந்தக் கிழடுகள் வேறெங்க ஜோடியைத் தேடிப்பிடிக்கிறது??//
இது எமது 'யூத்' அண்ணன், தன்மான 'சிங்கிள்' சிங்கம், வந்தியத்தேவனை நேரடியா தாங்கும் வகையில் இருப்பதால் அஷோக்பரன் வரைமுறையற்ற வகையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணன் வந்தியின் கோடானு கோடி தொட்டர்கள் சார்பில் எச்சரிக்கிறேன்...!!!
இது கட்டளை இல்லை, எச்சரிக்கை மட்டும் தான்...!!!
ஆகா இந்த அளவுக்கு முன்னேற்றமா :(
பாவம் பொடியள்... ஹிக் ஹிக்.. நைட் கிளப் போக முதல் அதுக்குப் போயி நல்லா எக்ஸ்பேர்ட்டாக இருக்கிறவையளிட்ட அட்வைஸ் எடுத்திட்டுப் போகவேணும். எனக்கென்னவோ வந்தி தன்ட சொந்த அனுபவத்தை எழுதியிருக்கார் மாதிரித் தெரியுது ;)
ஹா ஹா.....
எனக்கு நீங்க யாருன்னெல்லாம் தெரியாது.....எனக்கு blog படிக்கிற இல்லை....பதிப்பிக்கும் பழக்கமும் கிடையாது.
உன்னை போல் ஒருவன் அப்படின்னு கூகுள்ல்ல சேர்ச் பண்ணினப்போ....உங்க மேட்டரும் வந்தது. சரின்னு படிச்சேன்.....
ஹா ஹா...நல்லாவே இருக்கு....உங்களுக்கு நண்பர்கள் குழாம் ஜாஸ்தியாவே இருக்கு...
அப்புறம்...இன்னோரு பாட்டு....அட....அதுக்குள்ள அந்த பாட்டை மறந்துட்டேன்....கனடால யாரோ ரெண்டுபேரு...ஒரு நல்ல தமிழ் பாட்டுக்கு....
ஹா ஹா.....நல்லாவே...ஹா ஹா....இருந்தது....
Post a Comment