தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு தொலைக் காட்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடுநிலையான நடுவர்) கலந்துகொள்ள புதியவர்கள் அந்த தொலைகாட்சிக்கே தேவைப்படுகின்றது. அந்த நிகழ்சிக்கு விண்ணப்பிக்கும் நடுவர்களுக்கு இருக்கும் தகைமைகள் எவை என அவர்கள் வெளியிட்ட இணைய விளம்பரம் தான் இது. உங்களுக்குத் அந்த தகைமை இருப்பின் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
நாயாட நரியா நடுவர்கள் தேவை விளம்பரம்
தேவையான தகைமைகள்:
1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.
2.ஆண்களாயின் தலைமுடி நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம். பெண்களாயின் கட்டையாகவெட்டிய முடி அந்த முடிக்கு கலர் அடித்திருந்தால் கூடுதல் தகைமை.
3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம் பெயர் கிடைக்கும்.
4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.
5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினீர்கள் என ஆண்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :
கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3 க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும். நடனமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம் அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஓர்கானிக் கெமிஸ்ரி, போன்றவை மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்தபின்னர் தான் நடனம் ஆடவும் கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.
2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்
3. ஃபன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன் ஃபன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.
4. எனர்ஜி : கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர் சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என ஆடியவரையே ஆச்சரியப்பட வைக்கவேண்டும்.
5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள் எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் சொல்லவேண்டும்.
6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.
7. ஹெவி : நீங்கள் கொஞ்சம் ஹெவியாக ஆடியிருக்கலாம், அல்லது ஹெவியாக ஆடிவிட்டீர்கள் என நடனமாடியவர்களை வெறுப்பேத்தவேண்டும். அப்படி ஹெவியாக ஆடாமல் விட்டவர்கள் அடுத்த முறை ஒரு 10 அல்லது 20 கிலோ எடைகொண்ட எடைக்கற்களை கையில் வைத்துக்கொண்டு ஆடினால் ஹெவிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
8. சான்ஸே இல்லை : இது பொசிட்டிவான வார்த்தையா? இல்லை நெகட்டிவான வார்த்தையா என புரியாமல் இருக்கும். நன்றாக ஒருவர் ஆடினால் சான்ஸே இல்லை நீங்கள் வழக்கம் போல கலக்கிட்டீர்கள் எனவும், கொஞ்சம் சொதப்பலாக மாறினால் உங்களுக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல சான்சே இல்லை என கொஞ்சம் குரலில் மென்மையை அல்லது அழுகையைக் கூட்டிச் சொல்லவேண்டும்.
9. ஆங்கிலம் : முக்கியமாக நீங்கள் பச்சைத் தமிழன் அல்லது தமிழச்சியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பிரபலமான சில வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டும் அவை ஜோஷ், ஜிவ், கலக்கல்ஸ்( கலக்கல் தமிழ், ஒரு ஸ் கூடச் சேர்த்து அதனை ஆங்கிலமாக்கிவிடவும்), ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட இந்த வார்த்தைகளை வைத்து வீடே கட்டலாம். Jive, Performance, Cool, Understanding, Awesome, Mind blowing, etc.
இது ஒரு மீள்பதிவின் திருத்திய வடிவம். அதாவது வேர்ஷன் 1.1
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
48 கருத்துக் கூறியவர்கள்:
வெர்ஷன் 1.1 பிரமாதம்..
உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டி விட்டிருக்கிறேன்.
காதல் - அழகு - கடவுள் - பணம்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_15.html
வந்து தொடருங்க
நீங்க சொல்ற அத்தனை தகுதியும்.... நான் தினமும் போய் வருகிற மின்சார ரயிலிலே பிச்சை எடுக்குற ஒரு ஆளுகிட்டே இருக்கு.... அதனாலே அவரு பக்கதிலே போய் கேட்டேன்... அவரு சொன்னாரு... அவரு பஸ்ட்டு ஒழுங்கா தான் டான்சர் தொழில் பார்த்து கிட்டு இருந்தாராம்... அப்புறம் இதை மாதிரி ரெண்டு புரோகிராமுக்கு போய் தான் அப்படி ஆகிட்டாராம்... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வந்தி……..
இன்றைய பதிவில் தாங்கள் இட்ட (நமிதாவின்) படம் பெரிய அளவில் என்னைக் கவரவில்லை. அதனால் தாங்கள் என்னுடைய கண்டனத்துக்கு உள்ளாகுகிறீர்கள்.
கலக்கல் வந்தி..
முதலாவது தகுதியான இரசயாயணவியல் மற்றும் சக்தி (எனர்ஜி) போன்றவற்றை கல்லூரியில் படித்திருக்கிறேன். நான் நடுவராக வரமுடியுமா?..
சான்ஸே இல்லை வந்தி..
//இது ஒரு மீள்பதிவின் திருத்திய வடிவம்.//
அதுதானே பார்த்தேன் முதல் வாசித்த மாதிரி கிடந்துச்சு :)
பிரபல பதிபவர்கள் என்றா கட்டாயம் ஒரு மீள் பதிவாவது போடவேண்டுமாம். இது உண்மையா வந்தி அண்ணே?
ஆவ்...உந்த கோதாரி நிகழ்ச்சி எல்லாம் இன்னுமா போகுது....?
//அதாவது வேர்ஷன் 1.1//
No, it is season-2!!!!!
///எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஓர்கானிக் கெமிஸ்ரி, போன்றவை மட்டும்தான் தெரியும்///
ஆஹா, ஆஹா, ஆஹா... என்னைவிட கெமிஸ்ட்ரீல வீக்கான ஒருத்தர் இருக்கிறார். எனக்கு அணு எண், திணிவெண், இனோர்கானிக், ஓர்கானிக், பேசிக் ஆகிய கெமிஸ்ட்ரிகள், பென்சீன் வளையம், ஆவர்த்தன அட்டவணை எண்டு கொஞ்சம் கூடவே தெரியும்...lol..
ஸ்சப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ..
வந்தி இதை நான் முந்தியே வாசித்திருந்தாலும், இப்பவும் பொருத்தமா ஒரு மாற்றமும் இல்லாமலேயே நிலைமை இருக்கு.. நிகழ்ச்சியை சொன்னேன்.. :)
குஸ்பு மாமியின்ட படத்தையும் எடுத்துப் போட்டிருந்தா பக்கமே நிறைஞ்சிருக்குமே. ;)
//’டொன்’ லீ said...
ஆவ்...உந்த கோதாரி நிகழ்ச்சி எல்லாம் இன்னுமா போகுது....?
//
ha ha ha
WOW!!! Excellent! Marvelous!Fantastic! சான்ஸே இல்ல வந்தி அண்ணா!
என்னத்தச் சொல்ல?..... இந்த தொலைக்காட்சிகளை நினைத்தாலே தலை சுற்றுகிறது.
ஒரு முடிவோடதான் எழுதி இருக்கிறிங்க. என்னுடன் சக நடுவராக ஸ்ரேயா வருவார் என்றால் நானும் நடுவராக தயார். அதேபோல ஏதோ போனால் போகட்டும் நம்ம யோகாவையும் நடுவரா போடுங்க நீங்கள் இந்த நிகழ்ச்சியில் உங்கள் உண்மையான ஜோடியுடன் பங்குபற்ற போவதாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. மூத்த பதிவர் வந்தி அண்ணா வாழ்க
கலக்கல் பதிவு!!
உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்த்டில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.
sooperuuuuuuuuuuuuuu
உங்க கிட்ட நல்ல எனெர்ஜி இருக்கு...ஏன் னீங்க ஹேவிய எடுத்து எலுத கூடாது...
நல்ல வேளை, நான் இதெல்லாம் பாக்கறதில இருந்து தப்பிச்சேன்.
இது நடக்கற விஷயம்தானே இதில் நகைச்சுவை என்று குறித்திருக்கிறீர்கள்.
நிகழ்வுகள், அனுபவம் என்றல்லவா போட்டிருக்கவேண்டும்
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்களே வந்தியண்ணா...
ரொம்ம்பபப நல்லவங்களா இருக்கிறாங்களே?
Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
அந்த " கிழி - கிழி - கிழி " வார்த்தையை விட்டுடீங்களே.
சான்ஸே இல்லை! சூப்பர்! Awesome! கலக்கல்! கூல்!
//முக்கியமாக நீங்கள் பச்சைத் தமிழன் அல்லது தமிழச்சியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பிரபலமான சில வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டும்//
உண்மையாக ஆங்கிலம் கலந்து கதைச்சால் அதிலை ஒரு நாகரிகம் இருப்பதாக எண்ணுகிறார்களோ என்னவோ?
ஆங்கில வார்த்தைப்பிரயோகங்கள் நம் மொழியில் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்படுத்தினாலும் தவிர்க்கக்கூடிய இடங்களிலாவது தவிர்க்கலாம் என்பதை சிந்திக்க தவறும் ஊடகங்களை நினைக்கும் போது மிகக்கவலையளிக்கிறது,
நகைச்சுவையாக பதிவு இட்டாலும் இது சரியானவர்களை சென்றடைந்து அவர்களை உணரச்செய்யவேண்டும் என்பதுதான் எல்லோருடையதும் எதிர்பார்ப்பு
எனக்குப் பிடிக்கல்லையை விட்டிடிங்களே பாஸ்
// சூரியன் said...
வெர்ஷன் 1.1 பிரமாதம்..//
நன்றிகள்
//நையாண்டி நைனா said...
நீங்க சொல்ற அத்தனை தகுதியும்.... நான் தினமும் போய் வருகிற மின்சார ரயிலிலே பிச்சை எடுக்குற ஒரு ஆளுகிட்டே இருக்கு.... அதனாலே அவரு பக்கதிலே போய் கேட்டேன்... அவரு சொன்னாரு... அவரு பஸ்ட்டு ஒழுங்கா தான் டான்சர் தொழில் பார்த்து கிட்டு இருந்தாராம்... அப்புறம் இதை மாதிரி ரெண்டு புரோகிராமுக்கு போய் தான் அப்படி ஆகிட்டாராம்... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அப்படியென்றால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினாரக மட்டும் தான் கலந்துகொள்ளமுடியும்.
//மருதமூரான். said...
இன்றைய பதிவில் தாங்கள் இட்ட (நமிதாவின்) படம் பெரிய அளவில் என்னைக் கவரவில்லை. அதனால் தாங்கள் என்னுடைய கண்டனத்துக்கு உள்ளாகுகிறீர்கள்.//
உங்களைக் கவருகின்ற நமீதாவின் படம் இருந்தது ஆனால் கையில் மைக்குடன் இருக்கும் படமே நிகழ்ச்சிக்கு இல்லை பதிவிற்குப் பொருத்தம் என இட்டிருக்கின்றேன். உங்களை மகிழ்விக்க விரைவில் ஜெகன்மோகினி நமீதா வருவார்.
// யோ வாய்ஸ் (யோகா) said...
கலக்கல் வந்தி..//
நன்றிகள் யோ/
//முதலாவது தகுதியான இரசயாயணவியல் மற்றும் சக்தி (எனர்ஜி) போன்றவற்றை கல்லூரியில் படித்திருக்கிறேன். நான் நடுவராக வரமுடியுமா?..//
உங்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கின்றோம்.
//சான்ஸே இல்லை வந்தி.//
நன்றி நன்றி.
// வேந்தன் said...
அதுதானே பார்த்தேன் முதல் வாசித்த மாதிரி கிடந்துச்சு :)//
ஓ நீங்கள் அப்பவே வாசித்துவிட்டீர்களா? நன்றிகள்
//பிரபல பதிபவர்கள் என்றா கட்டாயம் ஒரு மீள் பதிவாவது போடவேண்டுமாம். இது உண்மையா வந்தி அண்ணே?//
வலையம்மன் மேல் சத்தியமாக இதுதான் உண்மை. இல்லையென்றால் உங்களைப் பதிவர் என மன்னிக்கவும் பிரபல பதிவர் என அழைக்கமாட்டார்கள்.
//டொன்’ லீ said...
ஆவ்...உந்த கோதாரி நிகழ்ச்சி எல்லாம் இன்னுமா போகுது....?//
இந்த கோதாரிகள் மட்டுமில்லை இன்னும் பல கோதாரிகளும் நடக்கின்றது. Boys Vs Girls என ஒரு நிகழ்ச்சி, மீன் சந்தையைவிட அந்தப் பெண்கள் போடுகின்ற சத்தம் அதிகம்.
// Anonymous said...
//அதாவது வேர்ஷன் 1.1//
No, it is season-2!!!!!//
நன்றிகள் அனானி நண்பரே நீங்கள் நடுவராக சகல தகுதிகளும் இருக்கின்றது. நிகழ்ச்சியின் அடிநாதமான சீசன் என்ற வார்த்தையை ஞாபகமாக வைத்திருப்பதால் உங்களை செலக்ட் செய்கின்றோம்.
//Kiruthikan Kumarasamy said...
ஆஹா, ஆஹா, ஆஹா... என்னைவிட கெமிஸ்ட்ரீல வீக்கான ஒருத்தர் இருக்கிறார். எனக்கு அணு எண், திணிவெண், இனோர்கானிக், ஓர்கானிக், பேசிக் ஆகிய கெமிஸ்ட்ரிகள், பென்சீன் வளையம், ஆவர்த்தன அட்டவணை எண்டு கொஞ்சம் கூடவே தெரியும்...lol..
ஸ்சப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ..//
வெறுமனே கெமிஸ்ரி மட்டும் தெரியும் என்பதால் நீங்கள் நடுவராகத் தெரிவாகவில்லை. Rejected
// LOSHAN said...
வந்தி இதை நான் முந்தியே வாசித்திருந்தாலும், இப்பவும் பொருத்தமா ஒரு மாற்றமும் இல்லாமலேயே நிலைமை இருக்கு.. நிகழ்ச்சியை சொன்னேன்.. :)//
சரி சரி என்ன செய்வது.
//குஸ்பு மாமியின்ட படத்தையும் எடுத்துப் போட்டிருந்தா பக்கமே நிறைஞ்சிருக்குமே. ;)//
சுந்தர்.சி மாமா கோபிப்பார். குஷ்பு மாமியா? அடப்பாவி படிக்கின்ற காலத்தில் சிங்காரவேலன் குஷ்புவின் படத்தை பர்ஸில் வைத்திருந்தவர் அல்லவா நீங்கள்.
//யாழினி said...
WOW!!! Excellent! Marvelous!Fantastic! சான்ஸே இல்ல வந்தி அண்ணா!//
அதிகப்படியான வார்த்தைகள் தெரிந்துவைத்திருக்கின்ற உங்களை தெரிவுசெய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
//சந்ரு said...
என்னத்தச் சொல்ல?..... இந்த தொலைக்காட்சிகளை நினைத்தாலே தலை சுற்றுகிறது.//
அப்போ மெஹா சீரியல் பார்த்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் உங்களுக்கு. 2 பனோடோல் போடவும் இல்லையென்றால் எனர்ஜி தொலைக்காட்சியின் இன்னொரு நிகழ்ச்சி பார்க்கவும்.
//SShathiesh said...
ஒரு முடிவோடதான் எழுதி இருக்கிறிங்க. என்னுடன் சக நடுவராக ஸ்ரேயா வருவார் என்றால் நானும் நடுவராக தயார். //
தம்பி நீங்கள் கென்டிசன் போடக்கூடாது. ஸ்ரேயாவை இன்னொருவர் கொத்திக்கொண்டுபோய்விட்டார்.
//நீங்கள் இந்த நிகழ்ச்சியில் உங்கள் உண்மையான ஜோடியுடன் பங்குபற்ற போவதாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. மூத்த பதிவர் வந்தி அண்ணா வாழ்க//
ஓம் ஓம் நானும் அசினும் பங்குபெற்றப்போகின்றோம். அசினுக்கு முடியவில்லையென்றால் தமன்னாவும் வாறன் என்றார்.
// Mrs.Menagasathia said...
கலக்கல் பதிவு!!//
மிக்க நன்றிகள்.
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sooperuuuuuuuuuuஉஉஉஉ//
நீங்கள் ரொம்ப நல்லவராக இருப்பதால் சத்தியமா நம்பிட்டேன் நன்றிகள்.
// Karna said...
உங்க கிட்ட நல்ல எனெர்ஜி இருக்கு...ஏன் னீங்க ஹேவிய எடுத்து எலுத கூடாது...//
நன்றிகள் ஏதோ நானும் முயற்சி செய்கின்றேன். நீங்களும் 2 அல்லது 3 வார்த்தைகள் தெரிந்தபடியால் வெயிட்டிங் லிஸ்டில் இடப்பட்டிருக்கின்றீர்கள்.
//சின்ன அம்மிணி said...
நல்ல வேளை, நான் இதெல்லாம் பாக்கறதில இருந்து தப்பிச்சேன்.//
நீங்கள் ரொம்ப நல்லவர். தப்பிவிட்டீர்கள்.
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது நடக்கற விஷயம்தானே இதில் நகைச்சுவை என்று குறித்திருக்கிறீர்கள்.
நிகழ்வுகள், அனுபவம் என்றல்லவா போட்டிருக்கவேண்டும்//
உண்மைதான் சுரேஷ் அப்படித்தான் இட்டிருக்கவேண்டும், அடுத்த சீசனில் மாத்திவிடுகின்றேன்.
//கனககோபி said...
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்களே வந்தியண்ணா...
ரொம்ம்பபப நல்லவங்களா இருக்கிறாங்களே?//
என்ன சொல்ல வாறீர்கள், யார் நல்லவன் நானா? இல்லை நிகழ்ச்சி செய்பவர்களா?
//அஹோரி said...
அந்த " கிழி - கிழி - கிழி " வார்த்தையை விட்டுடீங்களே.//
என்ரை கடவுளே முக்கியமான இந்த வார்த்தையை எப்படி விட்டேன். நீங்கள் தெரிவாகிவிட்டீர்கள் அஹோரி.
//ரவிஷா said...
சான்ஸே இல்லை! சூப்பர்! Awesome! கலக்கல்! கூல்!//
பல வார்த்தைகளை ஞாபகப்படுத்திய ரவிஷா அவர்களும் தெரிவு செய்யபப்ட்டுள்ளார்.
//கரவைக்குரல் said...
உண்மையாக ஆங்கிலம் கலந்து கதைச்சால் அதிலை ஒரு நாகரிகம் இருப்பதாக எண்ணுகிறார்களோ என்னவோ?/
அதே தான்.
//ஆங்கில வார்த்தைப்பிரயோகங்கள் நம் மொழியில் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்படுத்தினாலும் தவிர்க்கக்கூடிய இடங்களிலாவது தவிர்க்கலாம் என்பதை சிந்திக்க தவறும் ஊடகங்களை நினைக்கும் போது மிகக்கவலையளிக்கிறது,//
நாம் கவலைப் பட்டு என்னாவது தமிழை வளர்க்கின்றோம் என பல ஊடகங்கள் தமிழைக் கொலைதான் செய்கின்றார்கள். இதில் எங்கள் நாட்டு ஊடகங்களும் விதி விலக்கல்ல.
//நகைச்சுவையாக பதிவு இட்டாலும் இது சரியானவர்களை சென்றடைந்து அவர்களை உணரச்செய்யவேண்டும் என்பதுதான் எல்லோருடையதும் எதிர்பார்ப்பு//
சும்மா பகிடி விடாதையுங்கோ, நாங்கள் நிகழ்ச்சிகளின் பெயரை தமிழில் வைப்போம் ஆனால் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் தான் நடத்துவோம் என அனைவரும் கங்கணம் கட்டி நிற்கும் போது எங்கள் குரல்கள் கேட்காது.
//சிம்பு said...
எனக்குப் பிடிக்கல்லையை விட்டிடிங்களே பாஸ்//
இன்னுமொன்றையும் மறந்துவிட்டீர்கள், எனக்கு நடிக்கத் தெரியாது.
இதை நான் முன்னாடியே பாத்திருந்தேன்னா, நா இந்த post eh போட்டிருக்க மாட்டேன். பிண்ணிட்டீங்க.
Post a Comment