தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman

ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.

சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை.



முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.

எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.

நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).

அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.

ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011

அரசியல்

இலங்கை

இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.


இந்தியா

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.

சினிமா

மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.

பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.

சிறுத்தை

சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.

தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?

விளையாட்டு

தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.

சந்தேகம்

"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"
என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில்
"உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு"
என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா
"வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"
என்றார். அதற்க்கு என் பதில்
"பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "

அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?

ரசித்த ஜோக்

ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.

அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.

கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".

பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக‌


சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.


ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்

பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.

நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு.

பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம்.

எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.

ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது.

அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது

குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும்.

சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது.

அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது.

புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும்.

வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது.

ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு.

இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம்.

அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான்.

சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.

பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.

ஹாட் அண்ட் சவர் ஆதிரை ஸ்பெசல் சூப் 19-01-2011

2009 ஆகஸ்ட் 3ந்திகதி வெள்ளவத்தை நளபாகம் வாசலில் புல்லட்டுடன் புன்சிரிப்புடன் நின்ற அந்த நண்பர் "ஹாய் நான் ஸ்ரீகரன் ஆதிரை என்ற பெயரில் புளொக் எழுதுகின்றனான். நீங்கள் ஹாட்லிதானே" இந்த வசனத்துடன் ஆரம்பமாகியது ஆதிரையுடனான என் நட்பு.

ஒரே பாடசாலையில் படித்த காரணத்தாலோ என்னவோ அடுத்த கேள்வியாக "நீங்கள் எந்த பேட்ச் வந்தி" எனக் கேட்டார், நான் பேட்சைச் சொன்னதும் வந்தி அண்ணா என்றார், அப்பவே நான் இவர் ஆப்படிக்கும் பார்ட்டி என விலகி இருக்கவேண்டும் விதி வலியது.

முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவில் ஒன்றாக இயங்கியபோது ஆதிரையுடனான நட்பு மேலும் மேலும் வளர்ந்தது.


அதன்பின்னர் ஆதிரையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பல சம்பவங்களுடன் நானும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றேன் என்பது மகிழ்ச்சியான விடயம். குறிப்பாக சிலநாட்கள் ஆதிரை எலித் தொல்லையினால் கஸ்டப்பட்டபோது நாம் அவருக்கு அளித்த உதவிகளும் ஆலோசனைகளும் பதிவுலகம் அறிந்தவை. ஆதிரையின் எலியினால் அவரைவிட அவரின் உற்ற நண்பன் ஓய்வுபெற்ற பதிவர் புல்லட் தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக பலதடவை புலம்பி இருக்கின்றார்.

லோஷனின் ஆதிரையின் எலிப் பதிவில் சுபாங்கன் இட்டிருந்த

"Subankan
எலியப்பத்தி எழுதுறதெண்டால் உங்களுக்குக் கொண்டாட்டம் போல. உந்த எலியை விரட்ட ஒரே வழி ஆதிரை அண்ணா ஒரு அண்ணியைத் தேடிக்கறதுதான். ( ஐடியா உபயம் - உங்கள் எலி வேட்டை பதிவு)."
என்ற பின்னூட்டம் தான் ஆதிரைக்கு இறுதியாக கைகொடுத்தபடியால் சுபாங்கனை அன்புடன் சின்னமாமா என அழைக்கின்றாராம்.

வெள்ளவத்தையில் லோஷன் திறந்துவைத்த தோசைத் திருவிழாவிற்கு(பொருத்தமானவர் )புல்லட்டின் ஏற்பாட்டில் சென்றபோது இரண்டாம் தடவை தோசை சாப்பிட வரிசையில் நின்ற இளம் பெண்களைப் பார்த்து ஆதிரை தன்னுடைய திருமணத்தை இட்டுக் கவலைப்பட்டது இப்போ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது.

தனது நண்பன் மதுவின் மதுயிசத்தைப் பார்த்து ஆதிரையும் ஆதிரையிசம்உருவாக்க முயன்றார். ஆனாலும் மதுவின் முன்னால் ஆதிரையால் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டு தன்னுடைய இசத்தை கைவிட்டதும் நண்பர்களுக்கு தெரிந்தவிடயம்.

மொரட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் இடியப்பம் சொதிக்குப் பெயர் போன மதுவிடம் பல்கலைக் கழகத்தில் கற்க முடியாத மதுயிசத்தை அலுவலகத்திலாவது கற்போம் என்ற நல்ல எண்ணத்தில் தன்னுடைய அலுவலகத்திலே மதுவையும் வேலைக்கு அமர்த்தி இருவரும் இப்போ ரூபியுடன் மல்லும் கட்டுகின்றார்கள். (யார் அந்த ரூபி என அறியத் துடிப்பவர்கள் இங்கே செல்லுங்கள் http://rubyonrails.org/).

அத்துடன் இவரின் அயராத உழைப்பும் விசாப் பிள்ளையாரின் அருளும்(பின்னே ஆரம்ப நாட்களில் இரவு 11 மணிவரை எல்லாம் அலுவலகத்தில் இருப்பார்)திறமையும் அவருக்கு பதவி உயர்வையும் கொடுத்துள்ளது.

ஆனால் இந்த பதவி உயர்வுக்கு விசாப் பிள்ளையாரைவிட தன்னுடைய பாஸ்வேர்ட்டைப் பறித்தவரின் ராசிதான் என ஆதிரை தனக்கு வேண்டிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி மகிழ்கின்றார்.

கந்தசட்டி விரத நேரத்தில் கூட தனது அபிமான நடிகை நயனுக்காக முதல் நாள் ஸ்பெசல் காட்சிக்கு தன்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்களுடன் ஆதவன் படத்தை (ஆண் நண்பர்கள் தான் என ஆதிரைத தான் சொன்னார் நம்பிட்டம்)ஃபொக்ஸில் அமர்ந்து பார்த்துவிட்டு நயனை எண்ணை படிந்த முகத்துடன் காட்டிய கே.எஸ் ரவிக்குமாரைத் திட்டிய பெருமையும் ஆதிரைக்கே சாரும்.

கடலேறியாக அறியப்பட்டவர் அண்மைக்கால பெளதீக இரசாயன மாற்றங்களினால் தன் வலைத்தளத்தை என் பார்வையில் என‌ மாற்றிய காரணம் மட்டும் யாம் அறியோம்.

ட்விட்டரில் தத்துவம் அரசியல் நையாண்டி என ட்விட்டுகின்றவர் சில காலமாக அடக்கிவாசிப்பதும் பேஸ்புக்கில் இடையிடையே மட்டும் தலை காட்டுவதும் ஜீமெயில் சட்டில் இன்விசிபிள் மோட்டில் இருப்பதும் பாஸ்வேர்ட் பறிபோனது மட்டும் தானா இல்லை இதன் பின்னால் "ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவர்" இருக்கின்றாரோ என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.

கங்கோனுடன் ஒருமுறை தானும் விரைவில் கிரிக்கெட் பதிவு இடுகின்றேன் என ஆதிரை இட்ட சவாலையும் இந்தவருடம் ஆகக்குறைந்தது 100 பதிவுகளாவது இடுவேன் என தனது நண்பர்களிடம் இட்ட சவாலையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

லோஷனுடன் சேர்ந்தபின்னர் தனக்கும் அவரைப்போல் தொந்தி வந்தது என அடிக்கடி என்னிடத்தில் புலம்பி இப்போ என் ஆலோசனையில் தினமும் வெள்ளவத்தை கடற்கரையில் அரைமணி நேரம் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஆதிரையின் நண்பர்களின் ஆலோசனைகளை உள்வாங்கும் உத்வேகம் அவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று. யாரோ ஒருவரின் வற்புறுத்தலில் ஜிம்முக்கு போகின்றேன் என இடையிடையே ஜிம்முக்குச் சென்று அங்குள்ள உபகரணங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றதா என மட்டும் பார்க்கின்றார்.

சிலுவை சுமந்த சிங்காரி, எழுதாத உன் கவிதை என தன் அனுபவங்களை கதைகள், கவிதைகளாக வடித்தவர் சிலநாட்களாக எதுவும் எழுதாமல் இருக்கும் காரணமும் புரியாத புதிர்.

சூடான அரசியல் பதிவுகளை எழுதுவதில் ஆதிரையின் பாணியே தனியாக இருக்கும் இதனால் தானே என்னவோ சிலவேளைகளில் தன்னுடைய பிற்காலத்தில் அரசியல்வாதியாக மாறுவேன் என அடிக்கடி சொல்லிக்கொள்பவர்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒன்றையாவது நேரடியாகப் பார்த்தால் தான் தன்னுடைய கிரிக்கெட் திறமைக்கு சிறப்பு என்கின்றார். ஏனென்றால் தானே பந்துவீசி தானே விக்கெட் காக்கும் திறமை ஆதிரையைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. தான் வீசிய பந்தைவிட வேகமாக ஓடக்கூடிய திறமை இது.

வழக்கமாக வரும் சூப்பில் அரசியல், சினிமா, விளையாட்டு எனப் பல விடயங்கள் வரும் ஏன் இன்றைக்கு மட்டும் ஒரே ஒரு பிளேவராக ஆதிரை மட்டும் இருக்கின்றது என்ற சந்தேகமா உங்களுக்கு ஹிஹிஹி.

ஆதிரையின் கவிதைகள் வலையில் மட்டுமல்ல பள்ளி கலைவிழாக்கள். பல்கலைக் கழக கலைவிழாக்களிலும் பிரசித்து பெற்றவை. பல்கலைக் கழகத்தை விட்டு விலகியும் இன்றும் கவியரங்கங்களுக்கு சிறப்பு கவிஞர் நம்ம ஆதிரைதான்.

இன்றுதான் எங்கள் சித்தப்பூ வலையுலக கவிஞர், கதாசிரியர், நீலக்கலர் நாயகன், ஆதிரை அவர்கள் இந்த உலகிற்க்கு அவதரித்த நந்நாள்.

என் சிறந்த நண்பன், விருப்புகுரிய வலைப்பதிவாளன், அன்புக்குரிய தம்பி, பாடசாலை பல்கலைக் கழக நண்பர்களிற்க்கு ஸ்ரீ, வலைப்பதிவு நண்பர்களுக்கு ஆதிரை அலைஸ் சித்தப்பூ அவர்களிற்க்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.



இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் பங்குச் சந்தை அச்சுதன் என்கின்ற அச்சுவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அச்சுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் லண்டன் ஒக்ஸ்போர்ட் சர்க்கசில் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கின்றது என்பதையும் அதில் கலந்துகொள்ள லண்டன்வாழ் பதிவர்களை அனைவரையும் அச்சுதன் அழைக்கின்றார்.

இன்னொரு வாழ்த்து.


பின்னூட்டப்புயல், சிரிப்புச் சுனாமி, கருப்பு நமீதா, பிரபல அனலிஸ்ட், பதிவுலகின் பாதுகாவலன், எங்கள் கும்மியின் குலவிளக்கு,கருத்து கற்பூரம் இரவு வேளைகளின் அணையா நிலவு, கிறிக்கட் பீரங்கி, ஆங்கிலத்தில் அடுத்த சேக்ஸ்பியர், தமிழின் பாரதி, எங்கள் பதிவுலக பெளர்ணமி, சிரித்தால் மாதவன், சிந்தித்தால் பார்த்தீபன். மொத்தத்தில் நீ ஒரு அடி தாங்கி, இடிதாங்கி, எங்கள் தண்ணி டாங்கி.. நேற்று வெட்டிகள் சங்கத்தலைமைப் பொறுப்பை தூக்கியெறிந்து காலை 10 மணிக்கு புதியதோர் விடியலில் காலடி எடுத்துவைத்த கன்கொன் எனப்படும் கோபிகிருஷ்ணா கனகலிங்கம் அவர்கள் வெற்றிமேல் வெற்றிபெற்று வீரத்திருமகனாக வலம்வர வாழ்த்துகின்றோம்.(வசன உதவி சுபாங்கு சக பவன்)

வாழ்த்துபவர்கள்
குரு, அங்கிள், சித்தப்பூ, சின்னமாமா, மது அண்ணா, சதீஸ் அண்ணா, குஞ்சு அதிகார மையத்தின் தூண்கள் வதீஸ் அவரின் நிருசா, மற்றும் அனுதினன்.

கொலைக் காற்று - இறுதிப்பாகம்

நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.

இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும்
கன்கோனிலும்

படித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லையென்றால் அவற்றைப் படித்தபின்னர் வாசியுங்கள்.

"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என சிஜடி அதிகாரி ராஜாவின் மொபைல் சிணுங்கியது.

"ஹலோ ராஜா ஹியர்"

மறுபக்கம் ஏதோ முக்கியமான‌ செய்தி என்பதை ராஜாவின் முகம் அப்பட்டமாக காட்டியது "ஒன் மினிட்" என அழைப்பில் இருந்தபடியே மீண்டும் தன் லப்டாப்பில் சூரியபிரகாசின் ஜீமெயிலை சேர்ச்சினார்.

"யுரேகா" என பலமாக சத்தமிட்ட ராஜாவை சூரியபிரகாஷ் உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"ஹரி அப் கைஸ் குற்றவாளி அரஸ்டாகிவிட்டான், நாம இப்போ குற்றத்தின் சூத்திரதாரியை அரஸ்ட் செய்யவேண்டும்" என்றபடியே தன்னுடைய மகேந்திராவில் ஏறினார் இல்லை பாய்ந்தார்.

ராஜாவின் ஜீப் மீண்டும் கெளதமின் அபார்ட்மெண்டில் நுழைந்தது. இம்முறை பாதுகாப்பு உத்தியோகத்தர் தானே கேட்டைத் திறந்ததுடன் ஐசி கேட்காமாலே அவர்களை பவ்வியமாக உள்ளே விட்டார்.

கெளதமின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த முன்னர் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான் கெளதம்.

"வர்ஷா எங்கே" என்றபடி உள்ளே நுழைந்தனர் ராஜாவும் அவரது சகாக்களும்.

"வாங்கோ மிஸ்டர் ராஜா குற்றவாளி பிடிபட்டுவிட்டானா?" என அவரைப் பார்த்து கேட்ட வர்ஷாவை

"ஆமாம் நான் அவளுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என பலத்த சிரிப்புடன் ராஜா.

முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியுடன் வர்ஷா "வாட் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை இது பொய்" எனக் கத்தினாள்.

"இதப்பாருங்க வர்ஷா நீங்களாக குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் இல்லை என்றால் கஸ்டம் தான் உங்கள் கூட்டாளிகள் எல்லோரையும் அரஸ்ட் பண்ணியாச்சு இனியும் உண்மையை மறைச்சு வேலையில்லை ஸ்பிக் அவுட்" ராஜா.

கொஞ்சம் பதட்டத்துடன் வர்ஷா பிளாஷ் பேக்கைச் சொல்லத் தொடங்கினாள்.

"என்னை பார்க்கின்ற எல்லோருக்கும் நான் நல்ல அழகி அறிவானவள் சகஜமாகப் பழகுகின்றவள் எனத் தான் தெரியும், ஆனாலும் என் மனசுக்குள் ஒரு சாத்தான் சின்ன வயதில் இருந்தே குடி இருக்கின்றது. நான் பணக்காரவீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் சிறுவயசில் இருந்தே நான் கேட்பது எல்லாம் கிடைக்கும், அதிலும் எனக்கு புதிசுதான் வேண்டும். இப்படியான ஒரு பொசசிவ் கரேக்டர்".

"எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டமில்லை. விதுரன், சூர்யபிரகாஸ், இருவரும் என் நெருங்கிய நண்பர்கள், சூர்யபிரகாசுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. இந்நிலையில் தான் எனக்கும் கெளதமுக்கு திருமணம் செய்ய என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். எனக்கு இந்ததிருமணத்தில் விருப்பமில்லை."

இடையில் குறுக்கிட்ட கெளதம் "அடிப்பாவி இதை முதலிலையே சொல்லி இருந்தால் நானும் ஜெனியுடன் சந்தோஷமாக இருந்திருப்பேனே" என கோபப்பட்டான்.

"கெளதம் கூல் அவளைப் பேசவிடுங்கள்" ராஜா

கம்மிப்போன தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் வர்ஷா.

"அப்போதுதான் என் பெற்றோருக்கு என் காதலைச் சொன்னேன் அவர்களோ ஒரு போலீஸ்காரனை உனக்கு கட்டித் தரமுடியாது கெளதத்தைக் கட்டினால் தான் உனக்கு சொத்துக் கிடைக்கும் என என்னை மிரட்டினார்கள். இதனால் நான் அவர்களின் இஸ்டத்துக்கு உடன்பட்டேன்."

"பின்னர் கெளதமும் சேகரும் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அடுத்தநாள் சேகர் என்னைத் தொடர்பு கொண்டு கெளதம் ஜெனி காதலைச் சொல்லி இந்த திருமணத்தில் இருந்து என்னை விலகச் சொன்னான். இந்த விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது, எல்லாவற்றிலும் புதுசு கேட்கும் எனக்கு கணவன் மட்டும் செகண்ட் ஹாண்டா என்ற அதிர்ச்சியும் இந்த விஷயம் என் நண்பர்கள் நண்பிகளுக்குத் தெரிந்தால் பெரிய அவமானமும் நேரும் என்ற குழப்பத்தில் விதுரன், சூர்யபிரகாஷ் இருவரையும் வெளியில் சந்திக்க விரும்பினேன். அடுத்த நாளே நான் சூர்யபிரகாஷ், விதுரன், இந்தக் கதையில் முதன்முதலாக அறிமுகமாகும் தாஸ் என்ற சூர்யபிரகாசின் நண்பர் நால்வரும் கொள்பிட்டியிலுள்ள ஒரு ரெஸ்டோரண்டில் சந்தித்தோம். அங்கே... "

"இதைப் பார் ஹனி நீ ஒண்டுக்கும் கவலைப் படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துகொள்கின்றேன்" சூர்யபிரகாஷ்.

"கொய்யாலே இவ்வளவு நாளும் நீ கிழிச்சாய் " விதுரன்

"உங்கடை சண்டையை நிப்பாட்டுங்கோ, நானே குழம்பிப்போய் இருக்கிறன், இப்ப என்ன செய்யலாம்" வர்ஷா.

"ஓகே எல்லோரும் கவனமாக கேளுங்கோ" எனச் சொல்லிய சூர்யபிரகாஷ் சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையில் இருந்த வொட்காவை ஒரு உறிஞ்சு உறிஞ்சுபோட்டு தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினான்.

"வர்ஷா நாம எல்லோரும் பக்கா பிளானாக இரண்டு கொலைகள் செய்யவேண்டும், அந்த கொலைகளை செய்தது கெளதம் என அவனை மாட்டிவிட்டால் போதும் உனக்கும் உன் திருமணத்தில் இருந்து விடுதலை, எனக்கும் நீ கிடைப்பாய் விளங்குதோ."

"ஓம் விளங்குது ஆனால் யார் அந்த கொலைகளைச் செய்வது? எப்படிச் செய்வது? " வர்ஷா

"என் நண்பன் தாஸ் தான் எல்லாவற்றையும் செய்யப்போகின்றான், இவன் ஒரு ஹைடெக் கிரிமினல் " சூர்யாபிரகாஸ்.

"அப்போ நான் எப்படியும் கெளதத்தை திருமணம் செய்யத்தான் வேண்டுமா?" தன் சந்தேகத்தை வர்ஷா கேட்டாள்.

"இந்தப் பிளானுக்கே அதுதான் முக்கியம் இல்லையென்றால் கெளதத்தை மாட்டிவிடமுடியாது அத்துடன் நீ விவாகரத்து பெறும் போது கெளதத்திடம் இருந்து ஒரு தொகைப் பணத்தை ஜீவனாம்சமாகப் பெறலாம் இல்லையா you know matrimony may not be good but alimony is good" சூர்யபிரகாஷ்.

"திருமணம் முடிந்தபின்னர் நீயும் கெளதமும் கண்டி, காலி என கொழும்புக்கு வெளியில் ஹனிமூன் போங்கோ, நாங்கள் இங்கே எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்கின்றோம்" விதுரன்.


"ம்ம்ம் நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்கின்றேன், ஆனாலும் இன்னொருத்தியுடன் லிவிங் டுகெதரில் இருந்தவனுடன் சில நாட்களாவது வாழவேண்டும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை." வர்ஷா

"இன்னொரு முக்கிய விஷயம் ஹனி நீ கெளதமுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுடன் அன்னியோன்யமாகத் தான் இருக்கவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் அவனுக்கு சந்தேகம் வந்திடும். More Over அவனுக்கு நீயும் செகண்ட் ஹாண்ட் தானே " மெல்லிய நக்கலுடன் சூர்யபிரகாஷ்.


"எல்லாம் எங்கடை பிளானின் படி ஒழுங்காக நடந்தது. எங்கடை ஹனிமூன் நேரத்தில் வர்ஷாவை தாஸ் கொலை செய்துவிட்டான். அடுத்தநாளே சேகரையும் போட்டாச்சு, சேகர் ஜெனி இருவரையும் யாழ் சேவகன் என்றவன் தான் கொலை செய்தான் என்ற அலிபியை ஏற்படுத்தவே அந்த பேக் புரொபைலை அவன் உருவாக்கினான். ஆனாலும் அந்த முட்டாள் ஸ்கிறின் ஷொட் எடுக்கும் போது மாட்டிக்கிட்டான்".

"அப்போ விதுரனை ஏன் கொன்றீர்கள்?" சிஜடி ராஜா

"அது அவன் செய்த துரோகத்திற்க்கு பரிசு விதுரன் ஒருமுறை நான் ட்ரிப் போனபோது பாத்ரூமுக்குள் எடுத்த படங்கள் அவை அதை வைத்து என்னை மிரட்டத் தொடங்கினான், அதைவிட அவனுக்கு இந்தக் கொலைகளால் தனக்கும் ஆபத்து எனத் தெரிந்து எம்மைவிட்டு விலகவும் முயன்றான்"

"ஏன் அவனை உங்கடை காசாலை சமாளிக்கமுடியவில்லையோ" சிஜடிராஜா

"அவனுக்கு காசைவிட என் உடம்பைப் பார்த்தபின்னர் என் உடம்பின் மீதுதான் ஆசை, தன்ரை சபலத்தினால் தனக்கு தானே ஆப்படித்துவிட்டான்"

"இதுதான் சொந்த செலவில் சூனியம் "

ஜோக்கடித்த கெளதத்தை முறைத்துப் பார்த்த ராஜா வர்ஷாவை தன் கண்களாலேயே மேலே சொல்லவும் என்றார்.

"விதுரனை சூர்யபிரகாஷ் கொன்றுவிட்டார் அத்துடன் அவனின் லப்டாபில் என்னுடைய படங்களும் சூர்யபிரகாசின் படங்களும் இருந்தன அதனால் அவனுடைய லப்டாப்பையும் உடைக்கவேண்டி வந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது சூர்யபிரகாஷ் எப்படி அரெஸ்ட்டானான் என்பதுதான் எனக்கு புரியவில்லை" என முடித்தாள் வர்ஷா.

"இனி நான் சொல்கின்றேன்" என்ற ராஜாவை

"ஒரு நிமிடம் மிஸ்டர் ராஜா இப்போ மை டேர்ன்" என்றான் கெளதம்.

"வர்ஷா உன்னை உன் பணத்திற்காகவும் அதைவிட உன் அழகிற்காகவும் ஜெனியை கைவிட்டுவிட்டு கட்டியது என் தப்புத்தான். ஆனாலும் திருமணத்தின் பின் நான் உனக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன் ஹனிமூனிலும் ஓய்வு கிடைத்த சில நிமிடங்களுக்கு நீ உடனடியாக உன் லாப்டாப்பைத் திறப்பதும் பேஸ்புக்கையும் உன் மெயிலையும் செக் பண்ணுவது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் நான் சந்தேகப்படவில்லை"

"எஸ்க்யூஸ் மீ" என்றபடி பிரிட்ஜில் இருந்து ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணி குடித்தபின்னர் கெளதம் தொடர்ந்தான்.

"நாங்கள் கொழும்பு வந்தபின்னரும் வீட்டில் தங்காமல் ஹோட்டலின் இன்னும் கொஞ்ச நாள் என்ஜோய் பண்ணுவம் என்றபோது எனக்கு உன் மேல் மெல்லிய சந்தேகம் வந்தது, விதுரன் உன்னைச் சந்தித்த இரவில் நான் நித்திரைபோல் நடித்தேன், ஆனாலும் வெளியில் வந்து நீங்கள் கதைத்ததை கேட்கவில்லை. அதே நேரம் அடுத்த நாள் நீ உன் லாப்டாப்பில் பேஸ்புக்கில் ஆதவன் என்றவனுடைய வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலின் லிங்குக்கு லைக் பண்ணுவதைப் பார்த்துவிட்டேன்,அத்துடன் ஆதவனின் காதல் பாடல்களுக்கு நீ அடித்த கொமெண்டுகளும் லைக்குகளும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தந்தன. அதே நேரம் அந்தப் பெயரில் இருப்பர் யார் எனப் பார்த்தால் அவரின் புரொபைல் படம் நடிகர் கமலஹாசன் ஈமெயில் ஐடியும் athavansp@yahoo.com என இருந்தது இருவருக்கும் பொதுவான நண்பராக‌ விதுரன். அடுத்தநாள் விதுரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த நான் இந்த விடயத்தை சிஜடி ராஜாவிடம் ரகசியமாகத் தெரிவித்தேன். "

"ஓக்கே கெளதம் இனி என் டேர்ன்" என சிஜடி ராஜா தொடங்கினார்.

"கெளதம் ஆதவன் பற்றிச் சொன்னதும் அவரின் புரொபைலை கொஞ்சம் நோண்டினேன் அதில் சூர்யபிரகாசும் யாழ் சேவகனும் ஆதவனின் நண்பன் என இருந்தது. அப்போதுதான் என் சந்தேகம் சூர்யபிரகாசின் மேல் வரத்தொடங்கியது. இடையில் யாழ் சேவகன் போலி என்பதும் தெரிய வந்தது, சூர்யபிரகாசின் மேல் சரியான ஆதாரம் கிடைக்காமல் அரெஸ்ட் செய்யமுடியாது என்பதால் ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். அந்த ஆதாரமும் உடனேயே கிடைத்தது விதுரனின் பேர்சில் கிடைத்த போட்டோவில் வர்ஷாவின் தோளின் மேல் சூர்யபிரகாஷ் கைபோட்டபடி அருகே விதுரன் நிற்கும் படம் தான் அது"

"வர்ஷா, விதுரன், சூர்யபிரகாஷ் என எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்ததும் உடனடியாகவே சூர்யபிரகாசை கைது செய்யும் படி ஆணையிட்டேன், ஆனாலும் அவன் எங்கள் எந்த ட்ரீட்மெண்டுக்கும் அசையவில்லை. சூர்யபிரகாஷ் தான் கொலையாளி என நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் அவனின் போலி புரொபைல்கள் கோர்ட்டில் எடுபடாது. அதே நேரம் சூர்யபிரகாசின் வீட்டைச் சோதனைப் போட்ட எமக்கு வர்ஷா வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற இன்னொரு துப்பாக்கியும் சில தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் கிடைத்தது."

"இவ் யூ டோண்ட் மைன்ட்" என்ற படி ஒரு கோல்ட் லீவை பத்த வைத்தபடி தொடர்ந்தார் ராஜா.

"விதுரனை தன்னுடைய இன்னொரு துப்பாக்கியால் கொன்றுவிட்டு வர்ஷாவின் துப்பாக்கி போன்ற துப்பாக்கியால் அவனின் உடமைகளைச் சேதப்படுத்தினான் சூர்யபிரகாஷ், இதுவும் கெளதமை மாட்டவைக்கும் சதிதான். இங்கே தான் சூர்யபிரகாசுக்கு எதிராக விதி விளையாடியது கெளதம் வடிவில். கெளதம் என்னுடன் கதைத்திருக்காவிட்டால் நாங்களும் கேஸ் முடியவேண்டும் என்ற எரிச்சலில் கெளதத்தை கைது செய்து கேசை மூடியிருப்போம்."

"எல்லாம் சரி மிஸ்டர் ராஜா நேற்று இங்கே எம்மைச் சுட்டவர்கள் யார்?" கெளதம்.

"அதுவும் வர்ஷா அண்ட் கோவின் நாடகம் தான் தாஸும் அவனது கூட்டாளிகள் சிலரும் தான், வர்ஷாவிற்க்கு மெல்லிய காயத்தை ஏற்படுத்துகின்றது போல் சுடுவதுடன் முடிந்தால் என்னை போடுவதும் அவர்களின் திட்டம். சகல மாஸ்டர் பிளானும் சூர்யபிரகாசின் மெயிலில் இருக்கின்றது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய மூளைசாலிகள் என்றாலும் ஒரு இடத்தில் எப்படியோ தடுமாறுவார்கள். சூர்யபிரகாசும் அப்படித் தடுமாறிய இடம் தான் அந்த ஈமெயில். தாஸ் குழுவின் போலீசிடம் அகப்பட்டால் கெளதம் தான் இதன் மாஸ்டர் மைன்ட் எனச் சொல்லி மாட்டிவிடுவது என சகல திட்டமும் அதில் இருந்தது, அவர்களின் திட்டத்திற்க்கு அப்பால் பட்ட கொலைதான் விதுரனின் கொலை ஆனாலும் அந்தக் கொலையால் தான் குற்றவாளிகள் அகப்பட்டும் கொண்டார்கள்." என தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ள இருந்த ராஜா

"ஓஓ மறந்துபோனேன் அந்த ஈமெயிலை மடையன் சூர்யபிரகாஷ், விதுரன், தாஸ், வர்ஷா என அனைவரிடைய பெயரையும் போட்டிருந்தது தான் எல்லோரையும் சிக்கவைத்தது" என்றபடி அந்த ஈமெயிலின் பிரிண்டை கெளதத்துக்கு காட்டினார்.



"Subject KK எனப்போட்டிருக்கே KK என்றால் என்ன?" கெளதம்.

"கொலைக்காற்று" வர்ஷா

"மிஸ்டர் ராஜா கிரேட் இன்வெஸ்டிகேசன்" என்ற கெளதம் கண்கலங்கியபடி ஆனாலும் என் லைவ்தான் இப்படிப்போய்விட்டது என விம்மினான்.

"டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு சில நாட்களில் நீங்கள் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையை தேடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பேச்சிலார் லைவ்வை என்ஜோய் பண்ணுங்கள், எனிவே கேஸ் முடியும் வரை என்னுடன் தொடர்பில் இருங்கள்"

"வர்ஷா லெட்ஸ் கோ" என்றபடி அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் வர்ஷாவை அழைத்துவரும் படி கண்காட்டினார் ராஜா.

தன்னுடைய வரட்டுக்கெளரவத்தாலும் பிடிவாதத்தாலும் வாழ்க்கையை ஜெயிலில் கழிக்க‌ முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு போகும் வர்ஷாவை அந்த அப்பார்மெண்ட் மக்கள் பரிதாபம் கோபம் அனுதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள்.

சில நாட்களில் நீதிமன்றமும் நேரடிக்குற்றவாளிகளான சூர்யபிரகாஷ், தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனையும் குற்றத்துக்கு உடந்தையான வர்ஷாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், சிறப்பாக துப்புத் துலக்கிய சிஜடி ராஜாவுக்கு பாராட்டையும் அள்ளிவழங்கியது.

நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது அனுப்பியவரின் பெயரைப் பார்த்த ராஜாவிற்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முற்றும்.

பின்குறிப்பு : ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு KK தான்.

ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011

இலங்கை

கிழக்கு மாகாணம் வ‌ரலாறு காணாத மழையும் வெள்ளமுமாக கடந்த சிலநாட்களாக அல்லோல கல்லோலப்படுகின்றது. தொடர்ந்துபெய்துவரும் அடைமழையினால் வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தும் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்.

அரச. அரசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக நிவாரணப் பணிகளை தொடங்கியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, கட்சி பேதமின்றி உதவி வழங்குவது அனைவரின் தார்மீகக் கடமையாகும்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இலங்கைப் பதிவர்கள் முன்வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அறிவித்தல் இலங்கைப் பதிவர்கள் குழுமத்தில் நிரூஜாவினால் வெளியிடப்பட்டுள்ளது. வலையுலகிற்க்கு அப்பால் பதிவர்கள் செய்யும் இந்த உதவிக்கு ஏனையவர்களினது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள்.

மேலதிக தகவல்களுக்கு நிரூசா, வதீஸ், சிதறல்கள் ரமேஸ், சந்ரு ஆகியோரையும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கூல் போய் கிருத்திகன், மதிசுதா ஆகியோரையும் தொடர்புகொள்ளவும்.

இந்தியா

தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஆ,ராசாவின் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்களும் இலவசங்களுக்காக தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவிருக்கின்றார்கள். சீமானால் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இம்முறையும் காங்கிரசை தோற்கடிப்பதே தமது நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறியிருந்தாலும் சீமானின் விடுதலையும் அதன் பின்னரான சில நிகழ்வுகளுடம் சீமான் எண்ணைய் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.

ஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லை என்பது தெரிந்தவிடயம், ஆனாலுன் இந்த தேர்தலிலும் மீண்டும் ஈழம், ஈழத்தாய், 3 மணி நேர மனைவி, துணைவி சமேத உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் பலரின் திரைக்கதை வசனத்தில் நடத்தப்படலாம்.

சீமான் கருணாநிதியை எதிர்க்கின்றேன் என ஜெயலலிதாவிடம் சோரம் போனது கண்டிக்கத்தக்கதே. எப்படி வைகோ தன்னைச் சிறைவைத்த ஜெயலலிதாவிடம் மண்டியிட்டாரோ அதேபோல் சீமானும் மண்டியிட்டுவிட்டார். கருணாநிதியின் ஈழவேசம் அண்மைக்காலத்தில் அம்பலத்துக்கு வந்தாலும் ஜெயலலிதாவின் ஈழஎதிர்ப்பு அவரின் கருவிலையே இருக்கின்றது(எந்தப் பார்ப்பனர் ஈழத்துக்கு ஆதரவு). தன்னைப் பெரியாரின் பேரன் என்கின்ற சீமானும் கடைசியாக கூழ்பானைக்குள் தான் போய்விழுந்துவிட்டார்.

இதே நேரம் சீமான் தனித்தோ அல்லது வேறு எதாவது கட்சிகளின் கூட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்திருந்தால் இத்தாலிக்காரியின் சொல் கேட்டு மீண்டும் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழிவாங்கப்பட்டோ அல்லது தா,.கிருஷ்ணனுக்கு நடந்தது போல சீமானுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். சீமான் எவரை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். நம்ம தலை கவுண்டரின் பாசையில் சொன்னால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா".

இந்த வருட நகைச்சுவை

வைகோவை 40 கோடி என நக்கலடிக்கும் திமுக அடிப்பொடிகள் 1.76 லட்சம் கோடி திருடிய ஆ.ராசாவை உத்தமன் என்கின்றார்கள்

வைரமுத்து

அண்மையில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் புத்தகவெளியீட்டுவிழா நடைபெற்றது. கருணாநிதி புத்தகத்தை வெளியிட கமலும் ரஜனியும் பெற்றுக்கொண்டார்கள். வைரமுத்துவை திரையுலகத்திற்க்கு அழைத்துவந்த பாரதிராஜா, இளையராஜா இருவருக்கும் அழைப்பில்லை. இவர்களுக்கிடையில் என்னதான் பிரச்சனை என்றாலும் தன்னை அறிமுகப்படுத்திய இருவரையும் இன்னாத செய்தாரை ஒறுத்தல் போல் செய்திருக்கவேண்டும் ஆனால் வைரமுத்து ஏனோ செய்யவில்லை. வைரமுத்து சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த மனிதரோ என்றால் இல்லை அவரும் மிகச் சாதாரண அற்ப மனிதர் என இந்த செயலின் மூலம் காட்டிவிட்டார். அவர் அழைத்திருந்து பாரதிராஜாவும் இளையராஜாவும் வரவில்லை என்றால் அது அவர்கள் இருவருக்கும் தான் அவமானம் என்பதை ஏனோ இந்தக் கவிபேரரசு உணர்ந்துகொள்ளவில்லை, சிலவேளை தன்னை சோழமன்னனின் கவிஞன் என்ற இறுமாப்போ தெரியவில்லை.

ஆனந்தவிகடனில் வாசகர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றிய கட்டுரைக்கு கொடுத்த பின்னூட்டம் "அந்த நாட்களில் சாணிக் கலர் பேப்பரில் விற்பனையாகும் படங்களின் பாட்டுப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?"

இதுவும் வைரமுத்து சம்பந்தப்பட்ட விடயம் தான். அண்மையில் வாலி எழுதிய பாடல்கள் 1000 புத்தகவிழாவில் வைரமுத்து பேசும் போது தான் ஒருமுறை கமலைக் கேட்டாராம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரமுயலவில்லை என்று அதற்க்கு கமல் சொன்னாரம் நான் ஒரு சுமாரான நடிகன் என்னால் அரசியலில் நடிக்கமுடியாது. மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தவர் சாட்சாத் தமிழக முதல்வர்.

கமல்

மன்மதன் அம்பு படம் சிலநாட்களுக்கு முன்னர் பார்க்கனேர்ந்தது. ஒளியமைப்பு கொடுத்த இதத்தை ஏனோ படம் கொடுக்கவில்லை. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போல எதிர்பார்த்துப்போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. கமலின் அதிமேதாவித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்திலும் வசனம் எழுதுகின்றேன் என பல இடங்களில் ஆங்கிலம். அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. அதிலும் அந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் ஈழத்தமிழர்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளூம் அரசியல் கட்சிகளோ அல்லது சினிமாக்காரர்களோ இதற்க்கு வாயும் திறக்கவில்லை. தயாரிப்பாளர் உதயநிதி என்ற காரணமோ யாம் அறியோம் அரங்கநாதன் தான் இதற்கும் பதில் கூறவேண்டும்.

பார்த்ததில் அதிர்ச்சி
கடந்த வருடம் வெளியான படங்களில் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண் சிங்கம் படமும் நூறு நாட்கள் ஓடியது எனக் கூசாமல் பொய் சொன்னார்கள். இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் பெண் சிங்கம் ஓடிய படம் அல்ல ஓட்டிய படம் என்றார், நண்பர் ஒருவர் அப்படி ஓடியிருந்தால் அது அசிங்கம் என்றார். சன் குழுமத்தின் ஓடிய அல்லது ஓட்டிய படங்களின் பட்டியல் கலைஞரில் காண்பிக்கப்படவில்லை. வெகுவிரைவில் தமிழ் சினிமாவும் தமிழர்கள் கட்சி பேறுபாட்டால் பிரிந்து இருப்பதுபோல சன் குழுமப் படம் கலைஞர் பேரன்களின் படம் என இரண்டாகப் பிரியும் சாத்தியம் இருக்கின்றது.

விளையாட்டு

இலங்கை அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சிவில் பாதுகாப்புப் படை லீக்கை எதிர்கொண்ட பருத்தித்துறை லீக் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தது. பருத்தித்துறை லீக் சார்பில் பிறேம் குமார் இரண்டு கோல்களையும், சாரங்கன் ஒரு கோலையும் அடித்து வெற்றிக்கு வழிகோலினார்கள்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது, பருத்தித்துறை லீக் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தைத் தனாதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இலங்கைத் தேசிய அணிக்கு தெரிவான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

சின்ன சந்தேகம்
பேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களின் அழகான நண்பிகள் எல்லாம் திருமணமானவர்களாக இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை.

ஜொள்ளும் லொள்ளும்

உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை ஏன் நான் என் மாமாவாக மாற்றக்கூடாது #ஸ்ருதி

இந்தப் படம் மூலம் தான் ஸ்ருதி என்னைக் கவர்ந்தார். பட உதவி சுபாங்கன்.



பின்குறிப்பு

நீண்ட நாட்களின் பின்னர் சூப். கடந்த ஆண்டு கவர்ந்த பதிவுகளின் அடுத்த பகுதி ஓரிரு நாட்களில் வெளியாகும்.

2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

வணக்கம் நண்பர்களே

சென்ற ஆண்டில் நான் படித்து ரசித்த பதிவுகளின் பட்டியலை இட்டிருந்தேன். அதனைப்போலவே இந்த முறையும் டிசம்பர் கடைசியில் இடலாம் என நினைத்திருந்தால் வேலை, படிப்பு, குளிர், ஸ்னோ, சோம்பேறித்தனம், எனப் பல காரணங்களினால் தள்ளிப்போனது. இன்றைக்கு கிடைத்திருக்கும் நேரத்தில் முதல் பகுதியை எழுதினால் எப்படியும் அடுத்தபகுதி நாளையோ அல்லது சில நாட்களிலோ எழுதப்படும் என நினைத்து எழுதியதுதான் இந்தப் பதிவு,



இவை நான் ரசித்துப் படித்தவையே தவிர அந்தப் பதிவரின் முத்திரைப் பதிவோ அல்லது சிறப்புப் பதிவோ அல்ல. நான் குறிப்பிடுகின்ற பதிவைவிட அவர்கள் மிகவும் சிறந்தவற்றை எழுதியிருக்கலாம் ஆனால் எனக்கு அந்தப் பதிவர்களின் பெயர் நினைவில் வந்தால் இந்தவருடம் அவர்க:ள் எழுதிய இந்தப் பதிவுதான் ஏனோ ஞாபகத்தில் வருகின்றது.

இவ்வளவு முன்னுரை போதும் இனி நான் ரசித்தவை உங்களுக்காகவும்....

அசோக்பரன்

அண்மையில் இலங்கைத் தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்ககூடாது என அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலத்திற்கு எதிராக தனது உள்ளக்குமறல்களை அசோக் இதில் கொட்டித் தீர்த்துள்ளார். அசோக்கின் பதிவுகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதுபோல் அசோக்கின் இந்தப்பதிவும் சில அரசியல்வாதிகளை சாடுகின்றது.

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.


அச்சுதன்

செல்லமாக பங்குச் சந்தை என எம்மால் அழைக்கப்படும் அச்சுவால் சென்ற வருடம் எழுதப்பட்ட கட்டுரைகளில் பங்குச் சந்தையுடன் பொதுவான நாணயம் பற்றிய விடயங்களும் வந்தமை, என்னைப்போன்ற சாதாரண வாசகனைக் கூட ஈர்த்துவிட்டது. உலகில் சீனாவின் வல்லாதிக்கத்தையும் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது.

உலக வல்லரசுகளின் நாணயப் போர்


ஆதிரை

செம்மொழி மாநாட்டின் மறுபக்கத்தை அலசிய இந்தப் பதிவில் ஆதிரை சொன்ன பாட்டி பற்றிய உருவக கதை பலருக்கு புரிந்திருக்கும். கருணாநிதியின் புகழ் பாட நடத்திய இந்தமாநாட்டைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியின் பல்டி பற்றியும் பாட்டியின் கதையூடாக ஆதிரை கொண்டு சென்ற பாங்கு சிறப்பானது.

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்


பாலவாசகன்

நகைச்சுவை, கிரிக்கெட் போன்றவை அதிகம் பிடித்த எனக்கு இவர் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கி எழுதியது மட்டும் பிடிக்காமலா போகும். அதிலும் காதல் கவிதைகளை கிரிக்கெட் பாசையில் சொன்ன பாணியில் இவரது திறமையைப் பார்த்து நான் கிளீன்போல்ட் ஆகிவிட்டேன். மருத்துவரின் இந்தக் கவிதையைப் பார்த்து யார் யார் கிளீன்போல்ட்டானார்களோ சுபாங்கனுக்குத் தான் வெளிச்சம்.

கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !!


பவன்

மொக்கை என்றால் பவன் தான். எத்தனையோ மொக்கைகள் போட்டிருந்தாலும் சிலவற்றை நினைச்சு நினைச்சு சிரிக்கலாம். அதிலும் மன்மதன் அம்பு பாடலையும் தற்போதைய ஆஸி அணியின் நிலையையும் வைத்து பவன் செய்த சித்து விளையாட்டு அதிலும் திருகோணமலை வேகாத வெயிலில் உஷா ஃபேனுக்கடியில் இருந்து எழுதிய இந்தக் கவிதை பவனுக்கு ஒரு மைல் கல்தான்.

பொன்டிங்கின் சொம்பு..:P


புல்லட்

ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுக்கு வற்புறுத்தப்பட்ட முன்னாள் பதிவர் புல்லட்டின் பெண்கள் பற்றிய பதிவுகள் எனக்கு எப்பவும் பிடித்தவை.(சிலவேளைகளில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதோ தெரியவில்லை). இந்தப் பதிவும் சில பெண்களுக்கு கடுப்பை கிளப்பி புல்லட்டினை அடக்கியதோ யாம் அறியோம். புல்லட்டின் மீள் வருகையை அவரின் கோடிக்கணக்கான(?) வாசகர்கள் சார்பில் நானும் எதிர்பார்க்கின்றேன்.

கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3


கேபிள் சங்கர்

வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிளாரின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். (எந்த மொக்கைப் படத்தையும் முதல் நாள் பார்க்கும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு). சினிமாவில் இருப்பதாலோ என்னவோ பல பதிவுகள் சினிமாவைச் சார்ந்தவைதான். இடைக்கிடை எண்டர் கவிதை எழுதி அசரவைக்கின்றார். சன் டிவி விஜய் டிவி போட்டி பற்றியும் சூப்பர் சிங்கர் பற்றியும் எழுதிய இந்தப் பதிவில் நடுநிலையாக எழுதிய பதிவு இது.

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி


சேரன் கிரிஷ்

காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர். இடைக்கிடையே எழுதினாலும் அந்த எழுத்துக்களில் ஒரு அனல் அடிக்கும். சேரனிடம் இருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இலங்கையின் பொற்சிறையில் வாடும் பிராமணர்களைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

பிராமணன்

சித்ரா

அமெரிக்காவில் இருந்து எழுதும் பெண் பதிவர். வெட்டி பேச்சு என வலை இருந்தாலும் சிரிப்பினூடாக பல சிந்தனைகளையும் எழுதுகின்றவர். பெண் பார்க்கும் படலத்தை தனக்கே உரிய படங்கள் போடும் பாணி நகைச்சுவை என அழகாக எழுதியிருக்கின்றார். இந்த வடைபோச்சே பலருக்கு பலவிதமாக ஏற்பட்ட அனுபவமாக இருக்கும்.

ஒரு வினாடியில் "வடை" போச்சே!


கெளபாய் மது

மதுயிசம் என்ற புதுவிடயத்தை என்னைப்போன்ற பச்சிளன் பாலகன்களுக்கு பரப்பியவர் நம்ம கெளபாய். இடையிடையே எழுதும் வேலைப்பளு கூடிய பதிவர். இவரின் பெரும்பாலான கதைகள் ரியலாகவே இருக்கும் அல்லது உண்மைக்கதைகளுக்கு கொஞ்சம் கற்பனை சாயம் பூசியிருப்பார். இந்தக் கதையும் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும்.

நீ ஒரு ரிச்சு கேள், நான் ஒரு பிச்சை போய்


டயானா

தன்னுடைய பாடசாலை அனுபவங்களை துறு துறு திருதிரு என எழுதியவர் ஏ.ஆர்.ரகுமானின் கொள்கைபரப்பாளராக (சும்மா தான் எந்த உள்குத்தும் இல்லை) ட்விட்டர் பேஸ்புக்கில் மாறியபின்னர் தன் வலைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கின்றாரில்லை. அவரின் பாடசாலை அனுபவங்கள் போல் பல்கலைக்கழக வானொலி அனுபவங்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!


ஈழத்துமுற்றம்

ஈழத்துமுற்றம் நான் புகுந்த வீடுகளில் ஒன்று. எத்தனையோ ஈழத்து வட்டார வழக்கு பதிவுகள் வந்தாலும், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விடியோ படம் போடுகின்ற நிகழ்வை தம்பி வடலியூரான் அழகாக வர்ணித்திருப்பார். இதனை வாசித்தபோது அட இது நான் அனுபவித்த விடயம் என்ற எண்ணமே வந்தது.

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்


ஜாக்கி சேகர்

இவரின் சாண்ட்விஜ் நாண்ட்வெஜ் எப்படி காரமோ அதுபோல் இடையிடயே எழுதும் சில பதிவுகளிலும் அனலடிக்கும். தமிழக அரசைச் சாடி எழுதிய இந்தப் பதிவு அவரின் சமூக அக்கறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...


ஜனா

காத்திரமான பதிவுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இந்தவாரப் பதிவர் அறிமுகம் என எழுதியவர், பதிவர்களை வைத்து நடக்கும் மொக்கைகளில் பெரும்பாலும் சிக்குபவர்களில் நானும் கங்கோனும் சதமடிக்கும் நிலையில் இருக்கும் போது மன்மதன் அம்பு கமல் கவிதையில் ஈர்க்கப்பட்டு நம்ம மருத்துவர் பாலவாசகனை பாட்டுடைத் தலைவனாக்கி எழுதிய மெஹா மொக்கைக் கவிதை இது. அந்தக் கவிதையின் மெட்டில் ஜனாவின் வார்த்தைகள் அமர்ந்தமை ஜனாவிற்க்கே கைவந்த வார்த்தை ஜாலம்.

வாசகன் வம்பு!!


கானா பிரபா

என் பதிவுலக அண்ணா. எந்த விடயத்தையும் அநாயசமாக எழுதுவது இவருக்கு கைவந்த கலை. நாம் எல்லாம் ஒரு வலையை வைத்துக்கொண்டே கஸ்டப்படும்போது பலவிதமான வலைகளை வைத்திருக்கும் வலைஞன். உலகம் சுற்றும் வாலிபன் இவர். அண்மையில் யாழ் சென்றுவந்தபோது அங்கேயுள்ள தியேட்டரில் படம் பார்த்த கதையை தனக்கே உரியபாணியில் எழுதியிருந்தார். ஆனாலும் சூப்பர் பல்கனியில் எவருடனோ இருந்துபார்த்ததை மட்டும் என்னைப்போன்ற பாலகர்கள் மனம் நோகக்கூடாது என மறைத்தமை அவரின் நல்ல மனசுக்கு எடுத்துக்காட்டு.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை


கரவைக்குரல்

லண்டனில் நான் சந்தித்த முதல்ப் பதிவர். நம்ம மண் மணம் கமிழ எழுதும் இன்னொரு ஊடகவியளாளர். விரைவில் ஒரு குறும்படத்திலும் கதாநாயகனாக வலம்வரவிருக்கின்றார். பலரின் நன்மை கருதி இவர் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதவில்லை என அண்மையில் சந்தித்தபோது சொன்னார். ஆனாலும் இந்த பதிவில் அவர் எழுதியிருக்கும் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

பட்ட பாடு பெரும்பாடு


கங்கோன்

என்னைக் குரு எனச் சொல்லி என்னைக் கலாய்க்கும் பெரிய்ய மனதுக்காரர். நித்திரையால் எழுப்பி 1986ல் மெல்பேர்ன் டெஸ்ட்டில் ஆஸி சார்பில் யார் சதமடித்தது என்றால் உடனே சரியான பதில் கொடுக்கும் கிரிக்கெட் அகராதி. இவரின் தேடுதல் பாராட்டுக்கு அப்பால்பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லசமூக, மொக்கை, கதை கூட எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆனாலும் சில நாட்களாக முகனூலிலும் ட்விட்டரிலும் பொழுதைப்போக்குகின்றார். இந்தப் பதிவு விளையாட்டுப் பதிவு ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்று.

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.


கீர்த்தி

தன் கவிதைகளால் பலரைக் கவர்ந்தவர். அதனால் தானோ என்னவோ இந்தவருடம் பெரும்பாலும் கவிதைகளாகவே எழுதி இருக்கின்றார். எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால் கீர்த்தி தன் மொக்கைத் திறமையைக் காட்டிய இந்தப் பதிவு ஏனோ பிடித்துவிட்டது. ஸ்ரேயா என்ற மாட்டை வைத்து நம்ம பதிவர்கள் சிலர் மாட்டுப்பொங்கல் செய்கின்றார்கள் என தன் கற்பனையில் சிறப்பாகவே எழுதியிருந்தார்.

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்


கீத்

கிருத்திகனின் பதிவுகள் அண்மைக்காலமாக பெரும்பாலும் சமூகம் சார்ந்தே காணப்படுகின்றது. சில இடங்களில் பேசாப் பொருளைக்கூட துணிச்சலாக பேசியிருந்தார். அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவு இன்னொரு இணையத்தில் கூட உசாத்துணையாகச் சேர்த்திருந்தார்கள். இந்தப் பதிவில் சமூகவலைப்பின்னல்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டு மோகத் திருமணங்கள் பற்றியும் அலசியிருக்கின்றார்.

சில சமபவங்கள், வருத்தங்கள்


லோஷன்

அதிகார மையத்தின் முன்னாள்த் தலைவர். சகலவிதமான பதிவுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதுகின்றவர். நண்பர்களைக் கிண்டலடித்து பதிவு எழுதுவது என்பது இவருக்கு தனி இன்பம். யாழ் சென்றுவந்தபோது அந்த பயணத்தை படங்களுடன் இட்டிருந்தார். இவரின் எழுத்துக்கள் சொல்லாத பல விடயங்களை இவரின் கமேரா சொன்னது.

A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு


மருதமூரான்

இவரின் பதிவுகள் மட்டும் தான் சீரியசானவை,ஆனால் இவரோ பழகுவதற்க்கு இனிமையானவர். தனக்குப் பட்டதை எந்தவித பூசிமொழுகலும் இல்லாமல் சொல்லும் தைரியம் தான் இவரிடம் எனக்கு பிடித்தது. இந்தப்பதிவிலும் சொந்த ஊருக்கு சென்ற வலிகளைச் சொல்கின்றார்.

இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.


மு.மயூரன்

கட்டற்ற கணணிக்காதலன் இவர், சர்ச்சைகளில் சிக்கும் பதிவுகள் எழுதுவது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. இவரின் சில வரிகளே பல கதைகளைச் சொல்லும். இந்தப் பதிவின் தலைப்பே பல விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றது. அதையே மு,மயூரனும் முதல் வரியில் குறிப்பிடுகின்றார். "ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார்". இந்த வரிகளை இப்போதைய காலநிலையில் சிந்தித்தால் பலவிடயங்கள் புரியும்.

செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது


மயூரேசன்

இன்னொரு கணணிக் காதலன். கணணி தொழில்நுட்ப பதிவுகள், இடையிடையே சினிமா விமர்சனம் என எழுதுகின்றவர் எழுதிய வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பதிவு இது. இரண்டாம் உலகயுத்தம் பற்றிய இந்தப் பதிவு மயூரேசனின் தேடலை பறைசாற்றுகின்றது.

இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்


மதிசுதா

குறுகிய காலத்தில் பதிவுலகம் முழுவது பிரபலமடைந்த பெருமை நம்ம சுடு சோற்றுப் புகழ் மதி சுதாவிற்கே சாரும். பதிவு எழுதி பிரசுரித்த கையுடன் இவரின் முதல் பின்னூட்டம் வந்துவிடும். பிரபல இயக்குனர் ஒருவரின் கதைத் திருட்டை அம்பலப்படுத்திய பதிவு இது.

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..


டொக்டர் எம்,கே.முருகானந்தன்

மருத்துவக் குறிப்புகளுடன் நல்ல நகைச்சுவைகள் சினிமா நூல் விமர்சனம் எனச் எழுதும் எங்கள் மருத்துவர். அண்மைக்காலமாக தன்னுடைய கமேராவினால் சுட்ட சில விடயங்களையும் பதிவாக்கியிருக்கின்றார். யாழ் மண்ணுக்கே உரிய தோட்டக்காணிகளை அழகாக படம் பிடித்ததுடன் மட்டுமல்லாமல் சின்னச் சின்ன குறிப்புகளுடன் அவற்றைத் தந்திருப்பது ரசனை.

யாழ்ப்பாணத் தோட்டங்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும். அப்படி அதிலும் இல்லையென்றால் நான் உங்கள் பதிவுகளை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. சிலவேளைகளில் என் ஞாபகத்துக்கு உங்கள் பதிவுகள் வரவில்லை என்பதுதான் நிஜம்.