முன்னைய ராசிகள்- பகுதி 1
துலாம் :
நினைத்ததைச் சாதிக்கும் குணமுள்ள துலா ராசிக்காரர்களே ஏழரைச் சனி தற்போது உங்களுக்கு தொடங்குகின்றது, கவனமாக இருக்கவும்.
பதிவர்களின் பலன் :
மருதமூரான் : புதிய முயற்சிகள் சர்ச்சரவைக் கொடுத்தாலும் உங்கள் மனோபலத்தாலும் பேஸ்புக் நண்பர்களாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உங்கள் பாடசாலை மாணவர்களை அதிகம் நம்பவேண்டாம். தலைமுடியின் ஸ்டைலை மாத்தினால் காலிவீதியில் பலரைக் கவரலாம். கோட்டடிப் பிள்ளையாரை வணங்கவும்.
ஜாக்கி சேகர் : திரையிலகில் புதிய எதிர்பார்புகள் நிகழும். அதிகமாக 18+ ஆங்கிலப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுக்கவேண்டாம். நீங்களும் கோடம்பாக்கம் அம்மனை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
சினேகிதி : உண்மைகளை எழுதிப் பலரிடம் நீங்கள் யார் என அறியப்படுவீர்கள். பெண்களுக்காக அடிக்கடி குரல்கொடுக்கவேண்டிவரும். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி கலாய்க்கப்பட்டாலும் நல்ல நட்பு நிலவும். குமிழடிப் பிள்ளையாரை அடிக்கடி நினைக்கவும் நல்ல பலன்களைத் தருவார்.
விருச்சிகம் :
மனித நேயமுள்ள விருச்சிக ராசி அன்பர்களே இதுவரை 10 வீட்டில் நின்ற சனிபகவான் இனி லாப ஸ்தானமாகிய 11 ஆம் வீட்டில் வந்து அமர்ந்து உங்களை ஆளப்போகின்றார்.
பதிவர்களின் பலன் :
கிருத்திகன் (கீத்) : மெய் சொல்லுகின்றேன் என பொய் சொன்ன நீங்கள் இனி மெய்யே சொல்வீர்கள், அரசியலில் நுழையக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பாடசாலை சக மாணவர்களிடம் கவனமாக இருக்கவும். மூத்த விநாயகரை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும்.
பனையூரான் : தோற்றத்தில் அமைதியாக இருக்கும் நீங்கள், புதிய முயற்சிகள் சிலவற்றினால் நல்ல பலன் கிடைக்கும். ட்விட்டரில் நேரத்தை அதிகம் செலவிடவேண்டாம். தெகிவளை விஷ்ணுகோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் தவறாது செல்லவும்.
சுபானு : அடிக்கடி ஊஞ்சலாடி விழுந்தாலும், நீங்கள் செய்யும் தொழிலால் நல்ல பெயர் கிடைக்கும். காதல் வெற்றியில் முடியும், உங்கள் காதல் கவிதைகளை காதலிக்கு காட்டினால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும். 10 பதிவர்களுக்கு இலவசமாக சேவை செய்தால் பரிகாரம் கிடைக்கும்.
தனுசு :
நல்லதைச் செய்யும் மனமுடைய தனுசு ராசி நண்பர்களே, 9 ஆம் வீட்டில் இருந்துகொண்டு உங்கள் திறமைகளை மழுங்கடித்த சனி பகவான் இனி 10 வீட்டில் இருந்துகொண்டு நல்ல பலன்களைத் தருவார்.
பதிவர்களின் பலன் :
சந்ரு : அனானிகளினால் பட்ட துன்பங்கள் விலகும், மொழியினை நேசிக்கும் உங்கள் குணத்தால் பல நண்பர்கள் கிட்டுவார்கள். தொலைகாட்சி நண்பர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவீர்கள், புதிய முயற்சிகள் வெற்றிதரும்.
நிமல் : தொலைந்துபோன தொலைபேசிக் காதலி மீண்டும் கிடைப்பார். உங்கள் தொழில்நுடப் அறிவால் நண்பர்களைக் கவர்ந்தாலும் காதல் கதைகளினால் அவர்கள் காண்டாவார்கள்.
சிகே.மயூரன் : விளையாட்டுத் திறமையுடைய நீங்கள், சில நாட்களாக வெறுப்பாக இருந்தாலும் மீண்டும் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். தலைப்பாகை கட்டியவர்களை வம்புக்கு இழுக்கவேண்டாம், வேண்டாத விபரீதம் ஏற்பட்டு உலகப் புகழ் அடையலாம். கெத்தாராமா சிவனை வழிபடுங்கள்.
மகரம் :
எந்தச் செயலையும் திறமையாகச் செய்யும் மகர ராசி அன்பர்களே இதுவரை காலமும் அட்டமத்தில் உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான், 9 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தருவார்.
பதிவர்களின் பலன் :
குசும்பன் : மற்றவர்களைச் சந்தோசப்படுத்தி இன்பம் காணும் உங்களுக்கு, தளபதிகள், தலைகள் மூலம் மீண்டும் மீண்டும் சந்தோசப்படுத்தும் வாய்ப்புகள் கூடுகின்றன. திரையுலகினரின் கண்டனத்திற்க்கு உள்ளானாலும் கோடம்பாக்கம் அம்மன் அருளால் சகலதும் நல்லபடியாகவே நடக்கும்.
கனக கோபி : நக்கல், நையாண்டிக்கு பெயர் போன நீங்கள் உங்கள் எழுத்துகளில் இடையிடையே ஆட்சி செய்பவர்களை சீண்டுவதால் தொல்லைகள் நேரலாம். மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிய ஆராய்ச்சிகள் பிரச்சனை கொடுத்தாலும் நீங்கள் சிறுவன் என்பதால் அவ்வளவு கண்டுகொள்ளமாட்டார்கள். பம்பலப்பிட்டி மாணிக்கபிள்ளையாரை அடிக்கடி வணங்குங்கள், கோவிலில் உங்கள் எதிர்காலம் தென்படலாம்.
வந்தி : கலாய்ப்பதையும் கலாய்க்கப்படுவதையும் அதிகம் விரும்பும் நீங்கள் அடிக்கடி சொந்தச் செலவில் சூனியம் வைத்து மாட்டுப்படுவீர்கள். நண்பர்களே காதல் விவகாரங்களில் எதிரியாகும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரலாம். மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் வரக்கூடும். பேஸ்புக் கிருஷ்ணனும் ட்விட்டர் முருகனும் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் இரட்டிப்பாகத் தருவார்கள்
கும்பம் :
எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படும் கும்ப ராசி நண்பர்களே இதுவரை 7 ஆம் வீட்டில் இருந்துவந்த சனிபகவான் இனி அட்டமத்துச் சனியாக உங்களைத் தொல்லை பண்ணப்போகின்றார்.
பதிவர்களின் பலன் :
கரவைக் குரல் : பல்திறமையுடைய நீங்கள் பலராலும் பாராட்டப்படுவீர்கள், கூடிய விரைவில் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கும்மியைக் குறைக்கவும். சந்நிதி முருகன் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தருவார்.
உண்மைத் தமிழன் : உங்கள் குணத்தாலும் எழுத்தாலும் பதிவுகளின் நீளத்தாலும் பலரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் திரை விமர்சனங்களினால் திரையுலகத்தினரின் எதிர்ப்பைப் பெறுவீர்கள். கோடம்பாக்கம் அம்மனை ஒரு தடவை தரிசியுங்கள் முடியவில்லை என்றால் ஸ்ரேயாவை ஒரு தடவை நேரில் தரிசியுங்கள்.
சாயினி : உங்கள் எழுத்தாற்றலுக்கு கிடைத்துவந்த மரியாதை அண்மையில் நீங்கள் பெற்ற பட்டம் மூலம் மேலும் கிடைக்கும். நண்பர்கள் தொல்லை தந்தாலும் பரீட்சைகளில் கொடி நாட்டுவீர்கள். சாமத்தில் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கவும். கோட்டடி அம்மன் உங்களுக்கும் அருள் புரிவார்.
மீனம் :
உழைப்பின் மதிப்புத் தெரிந்த மீன ராசி நண்பர்களே இதுவரையும் 6 ஆவது வீட்டில் இருந்த சனீஸ்வரர் இனி உங்கள் 7 ஆம் வீட்டில் நுழைந்து அருட்காடட்சம் கொடுப்பார்.
நையாண்டி நைனா : நக்கல், நையாண்டியில் பெயர் பெற்ற நீங்கள் இன்னும் பெயர் அடைவீர்கள். சீரியஸ் பதிவுகள் எழுதி பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.
அருண்மொழிவர்மன் : காணாமல் போன பழைய நண்பர்களை பதிவுலகின் மூலம் கண்டுபிடித்திருப்பீர்கள். அவர்களுடன் தொடர்புகளை அளவாக வைத்துக்கொள்ளவும், சிலவேளை பதிவுகளின் உங்கள் காலை வாரி டவுசரையும் அவிழ்த்துவிடுவார்கள். ரொரண்டோ முருகனை வழிபடவும்.
கதியால் : நகர வாழ்க்கையில் பழைய கிடுகுவேலியத் தொலைக்கவேண்டாம், இலங்கையில் இருந்து சிங்கை வரும் சிங்கங்களின் சந்திப்பைத் தவிர்க்கவும். சிங்கை முருகனுக்கு அடுத்த தைப்பூசத்திற்க்கு பால்காவடி எடுக்கவும்.
முக்கிய குறிப்பு : நண்பர்கள் இதனை ஜாலியாக எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதிய பலன்கள் தான் இவை. அத்துடன் இந்த ராசிகள் அவர்களின் நிஜமான ராசிகள் அல்ல. ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களை அறியத்தந்த அவர்களின் நண்பர்களுக்கு நன்றிகள்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
18 கருத்துக் கூறியவர்கள்:
லோஷனுக்கு இனி தொலைக்காட்சியில் தோன்ற கூடிய வாய்பபுகள் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்தினால் இளம் பெண்களின் தொல்லைகாட்சி நாயகனாய் வரலாம்.
என்பதையும் போட்டிருக்கலாமே?
lols...
அப்படியே உங்களை பற்றி உண்மையாக (சொ.செ.சூ) சொன்னதுக்கு நன்றிகள்
//நீங்கள் உங்கள் எழுத்துகளில் இடையிடையே ஆட்சி செய்பவர்களை சீண்டுவதால் தொல்லைகள் நேரலாம். மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிய ஆராய்ச்சிகள் பிரச்சனை கொடுத்தாலும் நீங்கள் சிறுவன் என்பதால் அவ்வளவு கண்டுகொள்ளமாட்டார்கள்.//
நான் ஒரு அப்பாவி... நான் யாரையும் எதுக்கும் சீண்டுவதில்லை என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதில் இத்தால் பெருமையும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் (கொஞ்சம் ஓவரா போய்றமோ?) அடைகிறேன்.
என்னை சிறுவன் என ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.. ஹி ஹி ஹி...
அது சரி என் ராசியை எப்படி சரியாகச் சொன்னீர்கள்? சும்மா குத்து மதிப்பிலா???
கதியால் : நகர வாழ்க்கையில் பழைய கிடுகுவேலியத் தொலைக்கவேண்டாம், இலங்கையில் இருந்து சிங்கை வரும் சிங்கங்களின் சந்திப்பைத் தவிர்க்கவும்.//
இந்த நைய்யாண்டி மூலம் ஒரு இளம்,பிரபல(?) பதிவரை சீண்டியுள்ளீர்களே.. ;)
வந்தி,சந்துரு, குசும்பன் பலன்கள் அருமை..
எப்ப இருந்து சாத்திர நிலையம் தொடங்கப் போறீங்க? விளம்பரம் போடுவமா?
தங்களின் ஆருடம் மெய்யாகக் கடவது....
//சந்ரு : அனானிகளினால் பட்ட துன்பங்கள் விலகும்,//
சின்னதா ஒரு நிம்மதிப் பெருமூச்சு...
//தொலைகாட்சி நண்பர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவீர்கள்//
தொலைக்காட்சி நண்பர்களுக்கு அல்ல தொல்லைக்காட்சி நண்பர்களுகேதான்.
//புதிய முயற்சிகள் வெற்றிதரும்//
ஆரம்பிச்சிடலாம்.... உங்க சிஷ்யனாக வந்து சாஸ்த்திரம் படிக்கவோ... அல்லது லோஷன் அண்ணாவோட சேர்ந்து லோஷன் அண்ணாவை சுத்தும் இளம் பெண்களை வலை வீசிப்பிடிக்கவோ...
வந்தி உங்களுக்கு சாஸ்திர துறையில நல்ல எதிர்காலம் இருக்கு உங்க பணியத்தொடருங்க... நம்ம சதீஸ், யோகா இருவரும் எதிர்காலம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறாங்க என்று அறிந்தேன் அவர்களின் எதிர்காலம் எப்படி என்று சொல்லுங்க.... (அவங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி / காதலி கிடைப்பா என்று)
////மருதமூரான் : புதிய முயற்சிகள் சர்ச்சரவைக் கொடுத்தாலும் உங்கள் மனோபலத்தாலும் பேஸ்புக் நண்பர்களாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உங்கள் பாடசாலை மாணவர்களை அதிகம் நம்பவேண்டாம். தலைமுடியின் ஸ்டைலை மாத்தினால் காலிவீதியில் பலரைக் கவரலாம். கோட்டடிப் பிள்ளையாரை வணங்கவும்.////
சனி பெயர்ச்சி நடந்திருச்சா? அதுசரி வந்தி…….. எப்ப நீங்கள் ஜோதிடமணி ஆனீங்கோ??????? ஏன்னுடைய Hair cut குறித்து வலைத்தளங்களில் அதிகமாக அலசப்படுகின்றது. தங்களது அக்கறைக்கு நன்றி வந்தி. காலி வீதிப் பெண்களின் அன்புத்தொல்லை இப்போதே தாங்கமுடியவில்லை…இன்னுமா? வேண்டவே வேண்டாம்.
//தெகிவளை விஷ்ணுகோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் தவறாது செல்லவும்.//
என்ட இடத்தில இருந்து கொழும்புக்கு வர 5 மணித்தியாலம் எடுக்கும்
///மெய் சொல்லுகின்றேன் என பொய் சொன்ன நீங்கள் இனி மெய்யே சொல்வீர்கள்///
நல்லாத்தானே போயிட்டிருந்தது..
///அரசியலில் நுழையக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன///
அடப் பாவி சண்டாளா...உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கப் பாக்கிறியள்
///பாடசாலை சக மாணவர்களிடம் கவனமாக இருக்கவும்///
உக்காந்து யோசிப்பாங்களோ... (ஆரந்தத் துரோகிகள்..அவ்வ்வ்)
///மூத்த விநாயகரை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும்///
கனடாவில இருக்கிற Plaza கோயில்களில் மூத்த விநாயகர் Absent.. என்ன செய்யலாம்???
///கலாய்ப்பதையும் கலாய்க்கப்படுவதையும் அதிகம் விரும்பும் நீங்கள் அடிக்கடி சொந்தச் செலவில் சூனியம் வைத்து மாட்டுப்படுவீர்கள்///
விரைவில் அனுபவியுங்கள்.. ஹா ஹா
///நண்பர்களே காதல் விவகாரங்களில் எதிரியாகும் சூழ்நிலை ஏற்படும்///
எடடா மோட்டர் சைக்கிளை.. வந்தி அண்ணாவின்ர காதலுக்கு ஆப்பு வைக்கிற துரோகி ஆரடா.................................................................................போய் நன்றி சொல்லீட்டு இன்னும் ஆப்பு வைக்க ஊக்கப்படுத்தலாம்.
///வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரலாம்///
ராசா, உங்கையே ஆணி புடுங்குங்கோ.. வெளியில வந்து கஷ்டப்படாம..
இன்னும் எத்தினையோ counter குடுக்கலாம், ஆனா இப்போதைக்கு இது காணும்
:))
வந்தியரெ தங்களுக்கு தேங்காய் வியாபாரம் செய்யும் காலப்பொருத்தங்கள் தெரிவதாக யானையோசியம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.. ( கிளிஜோசியம் போல இது லேட்டஸ்ட்டு)
ஐயா சோதிடர் ஐயா
சோதிடம் தெரிந்த நீங்க ஏன் அதை உங்கள் பிழைப்புக்கு பயன்படுத்த முடியாது?
சோதிடர் ஐயா வந்தி உங்களுக்கு ஒரு பிரபல சோதிடராக வர நல்ல பலன் இருப்பதாக சொல்லப்படுகிறதே, உண்மையா?
காலிவீதியில் வந்தி நீங்க குந்தி இருந்து சோதிடம் சொல்லுங்கோ, எல்லாம் வெல்லலாம்
//எடடா மோட்டர் சைக்கிளை.. வந்தி அண்ணாவின்ர காதலுக்கு ஆப்பு வைக்கிற துரோகி ஆரடா...
புல்லு லட்டுவை தொடர்பு கொள்ளவும்...
"தம்பி... உனக்கு தெரியுமோ...? யாரோ ஒருத்தன் கம்பியூட்டரில சாத்திரம் பார்த்து சொல்லுகிறானாம். என்ர மனுசன் இந்த சனி மாற்றத்திலிருந்தும் தப்பி விடுமோ என்று பயமாக இருக்கு. அந்த சாத்திரியாரைக் கேட்டுச் சொல்லுவியோ..."
விசாப்பிள்ளையார் முன்றலில் ஒரு குடுகுடுப் பொக்கை என்னிடம் விசாரிக்கிறாள்.
ஜாலியா இருந்தது இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள்!
குசும்பனுக்கான பலன் சூப்பர் பஞ்ச்!
//கோபி சிறுவன் என்பதால்//
ஹெஹெ!
கோட்டடி எங்க இருக்கு எண்டும் அதில அம்மன் எங்க இருக்கிறா என்றும் விசாரணை கமிஷன் போட்டு விசாரிச்சுத் தான் தெரிஞ்சு கொண்டன்.. ஹ்ம்...
நான் சொல்லிட்டு/ எழுதிட்டுத் திரியுறது காணாதெண்டு நீங்கள் வேற குமுழடியெல்லாம் இழுக்கிறீங்கள். சும்மாவே "எனக்கு உங்களைத் தெரியும் ; உங்கட வீடு இதானே"என்று விலாவரியா எல்லாம் எனக்கு கடிதம் வருது. இந்த லட்சணத்தில....ம் வாழ்க ஜோதிடசிகாமணி.
அணணா...
மாணிக்கப் பிள்ளையார் பற்றித் தெரிவித்தது சும்மா கதைக்காகவா அல்லது ஏதும் உள்குத்துடனா?
பொது இடத்தில் சொல்லக் கூடிதென்றால் பதிலிடுங்கள், சொல்ல முடியாதென்றால் தயவுசெய்து மின்னஞ்சலில் சொல்லுங்கள். ;)
Post a Comment