ஒரு ஞாயிற்றுக்கிழமையின் அழகிய மாலை நேரம் விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.
"டேய் நம்ம குமாரின் போக்கு சரியில்லை" சிவா.
"ஏன்டா அவன் இந்த முறையும் கம்பசிலை அவன் கிளாஸ் அடித்தானே" நான்.
"இல்லையடா அவன் நல்லாப் படித்தாலும் நெட்டில் அடிக்கடி chat பண்ணுகின்றான். எனக்கென்னவோ அவன் அதிலை அடிக்ட் ஆகிவிடுவான் போல கிடக்கு" என சோகத்துடன் சொன்ன சிவா
"கூட நேரம் பெட்டையளோடுதான் Chat பண்ணுகின்றான்" என்ற பிரத்தியேக தகவலையும் சொன்னான்.
" சரி சரி கவலையை விடு அவனை சரிப்பண்ணலாம்" நான்.
******************************************************
வார நாட்களில் ஒருநாள் பேரராதனைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஏதோ ஒரு பீடத்தின் கணிணி ஆய்வுகூடத்தில் கணிணித் திரைக்கு முன்னால் ஏதோ ஒரு அரட்டை இணையத்தில் பிரத்தியேக அரட்டையில் குமார்.
குமார் : "ஹாய் அஞ்சலி எப்படி சுகம்"
அஞ்சலி : "ஹாய் குமார் நான் நலம் நீங்கள்?"
குமார் : "நானும் ஓகே அப்புறம் நேற்று எங்கை ஆளைக் காணவில்லை? நான் தவித்துப்போனேன், ஐ மிஸ் யூ லொட்"
அஞ்சலி : "இதுதானப்பா இந்தப் பெடியன்களின் குணம் ஒருநாள் காணவில்லையென்றாலும் ஐ மிஸ் யூ என படம் காட்டுகிறது"
குமார் : "சரி வெள்ளவத்தையில் நீங்கள் எந்த ரோட்"
2 மணித்தியாலமாக தொடர்ந்தது இவர்களின் உரையாடல்.
******************************************************
சில நாட்கள் கழித்து அக்பர் விடுதியில் ஓரிரவு சிவாவும் குமாரும்
"மச்சான் நான் உனக்கு ஒரு விடயம் சொல்லவா?", குமார்
"சொல்லடா? என்ன ஏதாவது பிரச்சனையா? புரொப் ஏதும் கரைச்சலா?", சிவா
"சீ அப்படியொண்டும் இல்லை நெட்டிலை அஞ்சலி என்ற ஒருவர் எனக்கு பிரண்டாகியிருக்கிறா, அவ என்னை லவ் பண்ணுகின்றார் போலை இருக்கு, எனக்கும் அவவிலை நல்ல விருப்பம்", குமார்.
"அடப்பாவி நீயும் விழுந்திட்டியா?, இந்தா நீ இங்கே வந்தது படிக்கத்தான் லவ் பண்ண இல்லை, சும்மா லவ் கிவ் என்டு அலையாதே" கோபத்துடன் சொன்னா சிவா.
"இல்லையடா மச்சான் அவள் நல்ல பெட்டையாகத் தான் தெரிகிறது, மற்றது அவள் எங்கடை வந்தியின்ரை சொந்தக்காரியாம், மெதடிஸ்டிலைதானாம் படித்தது, 97 ஏஎல் பயோ செய்தவராம்"
"மவனே உன்னைத் திருத்தமுடியாது நான் வந்தியுடன் கதைச்சிட்டு சொல்லுறன், முதல்லை நாளைக்கு செய்யவேண்டிய அசைன்ட்மெண்டை முடி".
******************************************************
அடுத்த நாள் காலை என் செல்பேசி அலறியது யாரென்று பார்த்தால் சிவா.
"மச்சான் ஒரு விசயம்" சிவா
"சொல்லு என்னவும் பிரச்சனையோ" நான்
"பிரச்சனை இல்லை, நம்ம குமார் தான் இலவிலை விழுந்துவிட்டான், பெட்டை யாரோ உன்ரை சொந்தக்காரி அஞ்சலியாம்" சிவா.
நான் சிரிசிரி என சிரித்துவிட்டு சொன்ன விடயம் மற்றப் பக்கத்தில் சிவாவை அதிர்ச்சியடைய வைத்தது.
"சரியடா மச்சான் உவனை நான் இனிப் பார்த்துக்கொள்கின்றேன்" என்ற படி சிவா செல்பேசியை அணைத்துவிட்டான்.
******************************************************
சில நாட்கள் கழித்து லேக் புரொண்ட் ரெஸ்டோரண்டில் நான், சிவா, குமார் மூவரும் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிந்தோம்.
"டேய் வந்தி உனக்கு அஞ்சலி மேட்டர் தெரியும் தானே " குமார்.
"ஓம் தெரியும், அவள் உன்னை லவ் பண்ணுகிறாள் எனச் சொன்னவளோ" நான்.
"இல்லையடா அவள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை, ஏன் உனக்கு என்னைப் பற்றிச் சொன்னவளோ?" என எதிர்க் கேள்வி கேட்டான் குமார்.
"இல்லை இல்லை அவள் அப்படியொண்டும் சொல்லவில்லை, ஆனால் அவளுக்கு கலியாணம் பேசுகின்றார்கள், மாப்பிள்ளை கனடா" என அதிர்ச்சிச் செய்தியை நான் சொல்லிமுடிக்க முன்னர்
"நான் இதை நம்பமாட்டேன், நாளைக்கே அவளை என்னவென்று கேட்கின்றேன்" என உணர்ச்சிவசப்பட்டு குமார் பதிலளித்தான்.
"டேய் அமைதியாக இருடா, நான் சொன்னனான் தானே இந்தப் பெட்டையளே இப்படித்தான் " என பெண்கள் சமூதாயத்தையே சீண்டினான் சிவா,
பின்னர் அவனை ஒருமாதிரி சாந்தப்படுத்தி விடுதிக்கு மூவருமாகச் சென்றோம்.
******************************************************
அடுத்த நாள் குமார் அஞ்சலிக்கு அவளின் திருமணம் பற்றி மின்னஞ்சலில் வினவியிருக்க ஓரிரு நாட்களில் அவனுக்கு அஞ்சலியிடமிருந்து பதில் வந்தது.
அன்பின் குமார்
முதலில் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னைக் காதலிப்பது வந்தி சொல்லித்தான் தெரியும். முதலில் தெரிந்திருந்தால் என் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வது அம்மா அப்பாவின் கட்டளைப் படி நடக்கவேண்டியிருக்கிறது.
ஆகவே அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால் அதில் மீண்டும் ஒன்றுசேர்வோம்.
என்றும் உங்கள் மங்காத நினைவுகளுடன்
அஞ்சலி.
மடலைப் படித்த குமார் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்தான். பின்னர் சிவாவின் ஆலோசனைகளாலும் வழிகாட்டல்களாலும் அரட்டை அறைகள் பக்கம் போவதில்லை.
இறுதி ஆண்டுப் பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலமைப் பரிசில் கிடைத்துச் சென்றுவிட்டான்.
******************************************************
அவன் அஞ்சலியை மறந்துவிட்டான் Chat மறந்துவிட்டான் என்பதை அறிந்து சில நாட்களில் அதே வெள்ளவத்தை விவேகானந்தா வீதி கடற்கரையில் இன்னொரு கல்லில் நானும் சிவாவும்
"நீ கெட்டிகாரன் தான்டா. ஒருமாதிரி குமாரை சட் போதையில் இருந்து காப்பாத்தியாச்சு, கையைக் கொடடா" என என்னை கை கொடுத்து பாராட்டினான்.
"மச்சான் அவனுக்கு கடைசிவரை உண்மை தெரியக்கூடாது, தெரிந்தால் எங்களைக் கொன்றே போட்டுவிடுவான்" நான்.
"அந்த உண்மை எங்களுடன் மட்டுமே இருக்கட்டும்" சிவா.
அன்றைய ஞாயிறு ஏனோ எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.
******************************************************
சில நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடன் குமார் பேசினான்.
"மச்சான் எப்படியடா இருக்கிறாய்? " குமார்
"நான் ஓகே சிட்னி எல்லாம் எப்படி?, எப்ப ஊருக்கு வாறாய்?"
என எங்கள் கதை தொடர்ந்தது. கடைசியாக குமார் ஒரு கேள்வி கேட்டான்.
"மச்சான் அஞ்சலி எப்படி இருக்கிறாள்?"
"அவள் கனடாவிலை நல்லா இருக்கிறாள் 2 பிள்ளைகள்" என்றேன் அஞ்சலியாக அவனுடன் Chat பண்ணிய நான்.
பின்குறிப்பு: என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு. இந்தக் கதை யாவும் கற்பனையல்ல.
22 கருத்துக் கூறியவர்கள்:
//என்னுடைய பதிவுத் தலைப்புகள் கவர்ச்சியாக இல்லையென அடிக்கடி குறைபடும் நண்பர்களுக்காகவே இந்தத் தலைப்பு///
டைட்டில்ல நல்லாவே டெரரர் காமிக்கிறீங்கோ!
டைட்டில மட்டும்தானா? அப்படின்னு டென்சனாகி நண்பர்கள் வந்தியை போட்டு கும்ம ஆண்டவனை வேண்டுகிறேன்!
அட... பாழாய்ப் போனவளே...
அவளும் நேற்றுச் சொன்னாள்... "நான் வந்தியின் ஒன்று விட்ட மூன்று விட்ட சகோதரத்தின்ர சொந்தம்" என... அவ்வ்வ்வ்வ்......
அதானே அதென்ன கண்டில கள்ளக்காதல்? கண்டியில எல்லாம் நல்ல காதல்தான்.
பெண் பேரில கதைச்சு நண்பர்களைக் கலாய்க்கவேண்டியது பிறகு பெட்டையள் சரியில்ல என்டு புலம்ப வேண்டியது இதெல்லாம் தேவையா வந்தியண்ணா?
so disappointed !
"சிட்னி குமார்" said..
டேய்.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன்...
கண்டியில கள்ளக்காதல் என்றவுடன் பயந்தே போய்விட்டேன்.
ஆகா... வந்தியண்ணா...
இந்த வேலையும் தொடங்கீற்றீங்களா...???
என்னுடைய இணையப்பிரவேசத்தின் ஆரம்பத்தில் அரட்டை அடிப்பதுண்டு. பல மறக்க முடியாத அனுபவங்களோடு அரட்டைப்பக்கத்தை விட்டு ஓடிவந்துவிட்டேன்.
நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், நண்பர்களாய் நடிப்பவர்கள் கிடைத்தார்கள், என்னைக் காதலிப்பதட்கே பலர் இருப்பதை உணர்ந்தேன்.
என் மின்னஞ்சல் என் அரட்டை நண்பன் ஒருவனால் களவாடப்பட்டு தேவையற்ற விடயங்களுக்காக அவனால் பயன்படுத்தப்பட்டபோது. அரட்டைப்பக்கத்தை மறந்தேன்.
மீண்டும் ஒருசில அரட்டைப்பக்கங்களில் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு.
ஆனாலும் ஒரு பெண் பெயரிலே சில நண்பர்களை கலைத்துக்கொண்டு இருக்கின்றேன்.
வந்தி நீங்க மாட்டாமலாவிடப்போரிங்க..
//யோ வாய்ஸ் (யோகா) said...
கண்டியில கள்ளக்காதல் என்றவுடன் பயந்தே போய்விட்டேன்.//
என்ன உங்கள் கள்ளக்காதல் அரங்கேறி விட்டதோ என்ற பயம்தானே.
பயப்படாதிங்க சில நாட்களில் உங்கள் கள்ளக்காதலை நான் அரங்கேற்றுகின்றேன்.
நானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..
//விவேகானந்த வீதி கடற்கரை கல்லிருக்கையில் நானு என் நண்பன் சிவாவும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.//
//நானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..//
சுபானுவின்ட அனுபவங்களில இன்னும் பலதும் இருக்கும்... :)
//ஆயில்யன் சொல்வது:
டைட்டில மட்டும்தானா? அப்படின்னு டென்சனாகி நண்பர்கள் வந்தியை போட்டு கும்ம ஆண்டவனை வேண்டுகிறேன் //
உங்கள் வாய்முகூர்த்தம் பின்னூட்டத்தில் பின்னாட்டிலும் சிலர் நேரிலையும் தொலைபேசியிலையும் கும்மிட்டார்கள், எல்லோரும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்ககூடும்.
//ஆதிரை said...
அட... பாழாய்ப் போனவளே...
அவளும் நேற்றுச் சொன்னாள்... "நான் வந்தியின் ஒன்று விட்ட மூன்று விட்ட சகோதரத்தின்ர சொந்தம்" என... அவ்வ்வ்வ்வ்....//
இல்லை அவள் உண்மையில் என் உறவினர்ப் பெண்தான். பிரச்சனையில்லை நானே அவள் வீட்டில் பேசுகின்றேன், ஆதிரை வல்லவர், நல்லவர் நாலும் தெரிந்தவர் என்ன எலி என்றால் மட்டும் பயந்துபோய் புல்லட் ரூமில் தங்கிவிடுவார்.
//சினேகிதி said...
அதானே அதென்ன கண்டில கள்ளக்காதல்? கண்டியில எல்லாம் நல்ல காதல்தான்.//
ஒரு எதுகை மோனைக்காக இட்டது இது.
//பெண் பேரில கதைச்சு நண்பர்களைக் கலாய்க்கவேண்டியது பிறகு பெட்டையள் சரியில்ல என்டு புலம்ப வேண்டியது இதெல்லாம் தேவையா வந்தியண்ணா?//
வாம்மா பெண்ணிணத்தின் பிரதிநிதியே. என் நண்பனைக் காப்பாற்ற நாம் போட்ட நாடகம் தான் இது. ஏன் எத்தனை பெண்கள் நிஜத்தில் ஏமாற்றுகின்றார்கள், கலாய்க்கின்றார்கள். வாழ்க்கை என்றால் எல்லாம் இருக்கும், இதற்காக கவலைப்படவேண்டாம்.
//so disappointed !//
Me too :-)
// ஷா \ Shah said...
"சிட்னி குமார்" said..
டேய்.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன்...//
பயப்படவேண்டாம் இப்போ சிட்னிகுமார் தனக்குத் தேவையான விடயங்கள் தவிர வேறு எதற்க்கும் செல்வதில்லை. பேஸ்புக் போன்றவை கூட அவனுக்கு அலர்ஜி.
//யோ வாய்ஸ் (யோகா) said...
கண்டியில கள்ளக்காதல் என்றவுடன் பயந்தே போய்விட்டேன் //
ஏனோ இந்தப் பழமொழி ஞாபகம் வருகின்றது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
//கனககோபி said...
ஆகா... வந்தியண்ணா...
இந்த வேலையும் தொடங்கீற்றீங்களா...?? //
என்ன செய்வது நண்பனைக் காக்க என்றால் இதையும் செய்யத்தான் வேண்டும். ஆமாம் நீங்கள் கூட அஞ்சலியோ, கவிதாஞ்சலியோ என யாரோ ஒரு பெண்ணுடன் அரட்டை அடிப்பதாக அறிந்தேன். கவனம் அவர் உங்கள் ஆண் நண்பராக இருக்ககூடும்.
// சந்ரு said...
என்னுடைய இணையப்பிரவேசத்தின் ஆரம்பத்தில் அரட்டை அடிப்பதுண்டு. பல மறக்க முடியாத அனுபவங்களோடு அரட்டைப்பக்கத்தை விட்டு ஓடிவந்துவிட்டேன். //
வாழ்த்துக்கள் நல்ல விடயம்.
//நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், நண்பர்களாய் நடிப்பவர்கள் கிடைத்தார்கள், என்னைக் காதலிப்பதட்கே பலர் இருப்பதை உணர்ந்தேன். //
அண்ணே அந்த காதலிப்பதாக உணர்ந்தவர்களின் மெயில் ஐடிகளை ஒருக்கால் எனக்கு போர்வேர்ட் பண்ணிவிடுஙகோ, சில நண்பர்கள் கேட்கின்றார்கள் அவர்களுக்கு குடுக்கத்தான்.
//என் மின்னஞ்சல் என் அரட்டை நண்பன் ஒருவனால் களவாடப்பட்டு தேவையற்ற விடயங்களுக்காக அவனால் பயன்படுத்தப்பட்டபோது. அரட்டைப்பக்கத்தை மறந்தேன். //
உங்கடை வலையையும் திருடி மின்னஞ்சலையும் திருடி இருக்கின்றார்கள். இனி பாஸ்வேர்ட் கொடுக்கும் போது "ராஜாதிராஜ வர்ணகுல சூரிய நாலாம் பாரக்கிரமபாகு" எனக் கொடுக்கவும் ஒருதனாலும் கண்டுபிடிக்கமுடியாது.
//மீண்டும் ஒருசில அரட்டைப்பக்கங்களில் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. //
மீண்டும், சொந்தச் செலவில் சூனீயம்.
//ஆனாலும் ஒரு பெண் பெயரிலே சில நண்பர்களை கலைத்துக்கொண்டு இருக்கின்றேன். //
நீங்களுமா? ரொம்ப நல்லவன் என நினைத்தேன்.
//வந்தி நீங்க மாட்டாமலாவிடப்போரிங்க..//
இதே கேள்வியை உங்களைப் பார்த்தும் கேளுங்கள்.
//சந்ரு said...
பயப்படாதிங்க சில நாட்களில் உங்கள் கள்ளக்காதலை நான் அரங்கேற்றுகின்றேன்//
இதை இதைத்தான் எதிர்பார்க்கின்றோம்.
//சுபானு said...
நானும் ஒருத்தியோட சட்டிங் செய்யெக்க அவளும் வந்தியொட ஒன்றுவிட்ட என இழுத்தாள்.. வந்தியா.. என ஓடிட்டன்.. இப்பத்தான் விளங்குது.. அது வந்தியேதான் என்று.. அடப்பாவமே..//
அடப்பாவி உண்மையான சட்டிங் பண்ணியவரை நான் என நினைத்து மிஸ் பண்ணிட்டியே. உங்கள் வீட்டில் பூத்த ரோஸ் கொடுக்க யாராவது ஒருதர் வேண்டும் அல்லவா.
//நிமல்-NiMaL said...
சுபானுவின்ட அனுபவங்களில இன்னும் பலதும் இருக்கும்... :)//
ஓம் அது தெரியும். ஏற்கனவே சுபானு பற்றி நண்பர் ஒருவர் நிறையச் சொன்னார்.
நிமல் இயற்கை என்பது கடல், அலை, சூரியன் மறைவது, மரைன் ட்ரைவ் இதுகள் தான் நீங்கள் நினைப்பது போன்ற இயற்கை அல்ல,
//வந்தியத்தேவன் சொல்வது:
//கனககோபி said...
ஆகா... வந்தியண்ணா...
இந்த வேலையும் தொடங்கீற்றீங்களா...?? //
என்ன செய்வது நண்பனைக் காக்க என்றால் இதையும் செய்யத்தான் வேண்டும். ஆமாம் நீங்கள் கூட அஞ்சலியோ, கவிதாஞ்சலியோ என யாரோ ஒரு பெண்ணுடன் அரட்டை அடிப்பதாக அறிந்தேன். கவனம் அவர் உங்கள் ஆண் நண்பராக இருக்ககூடும். //
குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் வந்தியண்ணாவை கண்டிக்கிறேன்...
ஒரு சின்ன விடயம்...
நான் பெண்கள் யாருடனும் Chat செய்வதில்லை. (ஒரு அக்காவைத் தவிர)
அடப் பாவங்களா???
நண்பன் காதலுக்கு இப்படி ஒரு ஆப்பா?? பாவம் அவன்
Post a Comment