உலகநாயகன் கமலஹாசன் சிறந்த டான்ஸ்சர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் எனக்குப் பிடித்த சில கமல் ஆடிய பாடல்கள்.
ஊர்போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலாவல்லவன்
சகலகலாவல்லவன் கமலின் சூப்பர் டூப்பர் ஹிட் டான்ஸ் ஹிட்டுகளில் என்றைக்கும் முதலிடம் இந்தப் பாடல் தான். இந்தப்பாடல் வெற்றிக்கு காரணம் கமலா? இசைஞானியா? இல்லை பாடலைப்பாடிய எஸ்.பி.பியா என பட்டிமன்றமே நடத்தலாம். கடந்த 25 ஆண்டுகளாக புதுவருடம் என்றால் சகல தொலைக்காட்சிகள், வானொலிகள் அனைவற்றிலும் முதலில் குறிப்பாக ஒளி/ஒலிபரப்பாகும் பாடல்.
இந்தப்பாடலில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் காட்சியில் கமலுக்கு காயம் கூட ஏற்பட்டது.
பரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்
கமல் இளையராஜா கூட்டணியில் அடுத்த மெஹா ஹிட் பாடல், பாடலின் தொடக்கத்தில் வரும் கிற்றாரும் ரிதமும் ராஜா இசைராஜாதான் என நிரூபிக்கும் இடம். வெற்றிவிழா பின்னணி இசையில் கூட ராஜா கலக்கியிருப்பார். எஸ்.பி.பி, எஸ்.ஜானகி கூட்டணியில் மேற்கத்திய வகைப்பாடல் கூடவே கமலின் நடனமும் ஸ்டைலும் கமலுக்கு நிகர் கமலே என எண்ணவைக்கும். இந்தப்பாடல் யூடுயூப்பில் தனித்தே பாடலாக இல்லாமல் அடுத்து வரும் ஆக்சன் காட்சிகள் ஒரு போனஸ்.
நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்
எழுத்தாளர் சுஜாதாவின் விக்ரம், இன்றைக்கு ரீமேக் செய்தால் கலக்கல் படமாக வரக்கூடியபடம், அன்றையகாலத்தில் மக்களின் தொழில்நுட்ப அறிவு குறைந்திருந்ததாலோ என்னவோ அதிகம் பேசப்படவில்லை, ஆனாலும் பாடல்களிலும் பின்னணியில் ராஜா பின்னியிருப்பார். கமலே இந்தப் பாடலைப் பாடுவது சிறப்பு. இரண்டாவது சரணம் முடியும் போது தகிடதகதிமி தத்திந்த என்ற சொற்கட்டுக்கு கமல் பரதநாட்டிய ஸ்டைலில் ஆடுவார். இந்தப்பாடலின் வரிகள் முன்னைய நாட்களில் மிகவும் பிரபலம்.
ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்
ராஜாவின் இன்னொரு மேற்கத்திய பாணியிலான சூப்பர் ஹிட் பாடல். எஸ்.பி.பியின் கணீர் குரலும் எஸ்.ஜானகியின் ஐஸ்கிறீம் குரலும் பாடலுக்குப் பலம். நடனப்போட்டி ஒன்றில் கமல் ராதாவுடன் ஆடி அசத்தியிருப்பார்கள். ராஜாவின் ட்ரம்சின் ரிதம் இந்தப்பாடலில் தனித்துத் தெரியும். புல் சவுண்டில் நல்ல ஸ்பீக்கரில் கேட்டால் முதலாவது சரணத்தில் வரும் பெரியவன், வலியவன், எளியவன், இளையவன்,அறிந்தவன் ,புரிந்தவன், தெரிந்தவனும் இரண்டாவது சரணத்தில் பழகலாம், தளுவலாம், பருகலாம் உருகலாம், அணியலாம் , இணையலாம் போன்ற லாம்களும் எக்கோ பண்ணும் பாருங்கள் ராஜாவின் இசையின் பலம் தெரியவரும்.
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
இதுவரை மேற்கத்திய பாணியில் ஆடிய கமல், இந்தப்பாடலில் அசல் நாட்டுப்புற நடனத்தை ஆடியிருப்பார். இந்தப் பாடல் கேட்டால் மனவுறுதியும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமும் வரும். இசைராஜாவின் இசையில் எஸ்.பி.பி கலைகட்டிய பாடல். இந்தபடத்தின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. பாடலின் கடைசியில் எஸ்.பி.பியின் சுரவரிசைக்கு கமல் பரதநாட்டிய ஸ்டைலில் ஆடுவார் அதைப்பார்க்கும் அந்தச் சிறுவர்களின் கண்களைப் பாருங்கள், அவர்களின் கண்ணிலையே ஒரு திகைப்புத் தெரியும்.
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
கமலின் சாஸ்திரிய நடனத் திறமையை எடுத்துக்காட்டியபடம் சலங்கை ஒலி. இதுபோல் ஆட இன்னும் ஒரு கமலால் தான் முடியும். கமலின் நடன வேகமும் நளினமும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நடனத்தைப் பார்த்தால் மேலே உள்ள நடனங்கள் எல்லாம் வெறும் தூசு. இளையராஜாவின் இசையும் எஸ்.பி.பியும் அவரது சகோதரி சைலஜாவின் குரலும் பாடலை மேலும் மெருகேற்றுகின்றன.
போனஸ் பாடல் :
சத்யம் சிவம் சுந்தரம்
எக் துஜே கெ லியே (ஹிந்தி) படத்தில் இருந்து மேரே ஜீவன் சாத்தி பாடல். ஒரு லிப்டிற்குள் கமலும் ரதி அக்னிகோத்ரியும் அந்த இடத்தில் எப்படி ஆடமுடியுமோ அப்படி ஆடுவார்கள். எஸ்.பி.பியின் குரலும் பாரத ரத்னா லதா மங்கேஸ்கரின் குரலும் லஸ்மிகாந்த் பியர்லாலின் இசையும் என்றைக்கும் இளமை.
கமல் மீண்டும் மீண்டும் வேறுவடிவங்களில் அவதாரமெடுப்பார்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
20 கருத்துக் கூறியவர்கள்:
ராதா அழகாக இருக்கிறார்.. ஜெ யப்பிரதா அழகாக இருக்கிறார்.. ஆனால் இப்போது எப்படியிருக்கிறார்கள் ?
மற்றும்படி கமல் ஒரு தமிழனாக இவ்வளவை சாதித்ததில் எனககு மகிழ்ச்சியே!
உங்கள் கமல் தொண்டுப் பணி வாழட்டும் வளரட்டும்!:)
எனக்கு முதலிடத்தில் உன்னால் முடியும் தம்பி பாடல் தான்...
எனர் வலைத்தளத்தில் அந்தப் பாடலின் வரிகளை மேலே இட்டிருக்கிறேன்.
அற்புதமான இசை, அற்புதமான குரல், அற்புதமான நடிப்பு...
KAMAL KAMAL MATTUME VERA YARUM CHANCEY ILLA
வணக்கம்
கமல் நடனத்தில் ஒரு superstar,
தேவைக்கு அதிகமாக நடனம் கூட விரும்ப மாட்டார்
//புல்லட் said...
ராதா அழகாக இருக்கிறார்.. ஜெ யப்பிரதா அழகாக இருக்கிறார்.. ஆனால் இப்போது எப்படியிருக்கிறார்கள் ?//
ஜெயப்பிரதா இப்பவும் அழகாக இருக்கின்றார். ராதா கொஞ்சம் குண்டாக மாறிவிட்டார்.
//மற்றும்படி கமல் ஒரு தமிழனாக இவ்வளவை சாதித்ததில் எனககு மகிழ்ச்சியே!//
நன்றிகள் புல்லட் கமல் என்றைக்கும் தன்னைப் பச்சைத் தமிழனாக காட்டிக்கொள்வதில் பின்னிப்பதில்லை.
//யாழினி said...
உங்கள் கமல் தொண்டுப் பணி வாழட்டும் வளரட்டும்!:)//
நன்றிகள் யாழினி, கவிதையாகவே சொல்லிவிட்டீர்கள்
//கனககோபி said...
எனக்கு முதலிடத்தில் உன்னால் முடியும் தம்பி பாடல் தான்...
எனர் வலைத்தளத்தில் அந்தப் பாடலின் வரிகளை மேலே இட்டிருக்கிறேன்.
அற்புதமான இசை, அற்புதமான குரல், அற்புதமான நடிப்பு...//
நிச்சயமாக வரிகள், இசைகள், கருத்து எனப் பார்த்தால் அது உன்னால் முடியும் தம்பிதான். அத்துடன் நான் இங்கே எந்தவிதமான தரப்படுத்தலும் செய்யவில்லை. எனக்கு கமலின் சகல பாடல்களும் பிடிக்கும், ஏனென்றால் எனக்கு கமலை ரொம்பப் பிடிக்கும்.
// UNGALODU NAAN said...
KAMAL KAMAL MATTUME VERA YARUM CHANCEY ILLA
நன்றிகள் உங்களோடு நான், நிச்சயமாக அவரைத் தவிர வேறு எந்த நடிகரும் இதேபோல் ஆடமுடியாது.
//Mr.vettiபைய்யன் said...
வணக்கம்
கமல் நடனத்தில் ஒரு superstar,
தேவைக்கு அதிகமாக நடனம் கூட விரும்ப மாட்டார் //
நன்றிகள் .வெட்டிப்பையன் கமல் நடனத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் சூப்பர் ஸ்டார் தான். ஆமாம் அவரது நடனங்கள் தேவைக்கதிகமாக இருக்காது.
அருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)
சைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்..
எல்லாவற்றிலும் கிங்.. ;)
அருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)
அசைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்..
எல்லாவற்றிலும் கிங்.. ;)
//எனக்கு கமலின் சகல பாடல்களும் பிடிக்கும், ஏனென்றால் எனக்கு கமலை ரொம்பப் பிடிக்கும்.//
நாங்க மட்டும் என்னவாம்???
சினிமாவை வெறுத்து கமலை மட்டும் இரசிப்போர் கூட்டத்தில் நானும் ஒருவன்...
தொடரட்டும் கமல் செவை.. வாழ்த்துக்கள். கமல் ஆரம்பத்தில் ஒரு உதவி நடன மாஸ்டர் என கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கு இதெல்லாம் கஷ்டமில்லை
புன்னகை மன்னன் படத்தில் அந்த ரேவதியோட ராஜாவின் அற்புத இசையில் வர்ற் இரண்டரை நிமிட நடனத்தை மறந்திட்டியள் வந்தி அண்ணா... அதே போல் அபூ. சகோ.. வில் வரும் அண்ணாத்த ஆடுறாரும் நல்லா இருக்கும்
//LOSHAN said...
அருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)//
இவை மட்டுமல்ல லோஷன் இன்னும் நிறையப்பாடல்கள் இருக்கு, இந்த தொடர் இன்னும் முடியவில்லை இடைக்கிடை பாடல்கள் போடுவேன், அதில் இவையும் வரும். ராஜா கைய வைச்சாவும் ஒரு சூப்பர் டூப்பர் குத்து.
//அசைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்.. //
சரியான சொற்றொடர்.
//எல்லாவற்றிலும் கிங்.. ;)//
நிறைய அர்த்தங்கள் வருகின்றது.
//கனககோபி said...
நாங்க மட்டும் என்னவாம்???
சினிமாவை வெறுத்து கமலை மட்டும் இரசிப்போர் கூட்டத்தில் நானும் ஒருவன்...//
சரி சரி கோபிக்க வேண்டாம், நீங்களும் கமலுக்குள் ஒருவன் தான்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
தொடரட்டும் கமல் செவை.. வாழ்த்துக்கள். கமல் ஆரம்பத்தில் ஒரு உதவி நடன மாஸ்டர் என கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கு இதெல்லாம் கஷ்டமில்லை//
நன்றிகள் யோகா. கமல் ஆரம்பத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தார் இவருடன் பிரபல நடன இயக்குனர் ரகுராம் (காயத்திரி ரகுராமின் தந்தை)மாஸ்டரும் சேர்ந்து பணிபுரிந்தார். ஆகவே கமலுக்கு நடனம் இலகுவானது, அத்துடன் கமல் முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர் அரங்கேற்றம் செய்தவர்
//Kiruthikan Kumarasamy said...
புன்னகை மன்னன் படத்தில் அந்த ரேவதியோட ராஜாவின் அற்புத இசையில் வர்ற் இரண்டரை நிமிட நடனத்தை மறந்திட்டியள் வந்தி அண்ணா... அதே போல் அபூ. சகோ.. வில் வரும் அண்ணாத்த ஆடுறாரும் நல்லா இருக்கும்//
மறக்கவில்லை அடுத்த பதிவில் அவை. அத்துடன் சலங்கை ஒலி படத்தில் எஸ்.பி.சைலஜாவுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் ஒரு 2 நிமிட காட்சிகள் எனப் பல மனதை மறக்காதவை உண்டு.
நாத வினோதங்கள் சாங் எனது பேவரிட்
Post a Comment