"கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான் " எனப் பாடுவதும், " உன் பெயரை உச்சரித்தேன் இனித்தது" எனக் கவிதை எழுதுவதும் எல்லாம் இந்தக் காதல் செய்யும் லீலைகள்.
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா? இல்லை விஞ்ஞானரீதியாக உடல் சம்பந்தப்பட்டதா?
விஞ்ஞானிகள் காதல் என்பது உடலில் சுரக்கும் சுரப்பிகள் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். ஆண்ட்ரோஜன்ஸ், ஈஸ்ட்ரோஜன்ஸ், டெஸ்டோஸ்டரான் போன்ற சுரப்பிகள் தான் காதலுக்கு காரணம் என்கின்றார்கள்.
நியூயோர்க் ஸ்டேட் சைக்கியாட்ரிக் இன்ஸ்ரியூட் இது பற்றி ஆராய்ச்சி செய்தது. இவர்கள் காதல் வயப்பட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்களை இந்த ஆராய்ச்சியில் பரிசோதித்து காதல் என்கின்றது எங்கள் உடலில் ஏற்படும் ஒருவிதமான இரசாயண(கெமிஸ்ரி) மாற்றமே ஒழிய வேறு ஒன்றுமில்லை எனக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். காதலர்களுடைய சிறுநீர் மாதிரியை பரிசோதித்தபோது அனைவருக்கும் ஃபினைல் எதில் அமின் (Phenyl ethan Amin) அதிகமாக இருப்பதை அறிந்தார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் ஒரு உணவைப் பார்த்ததும் எப்படி நாக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளால் ஊறுகின்றதோ, அதேபோல் ஒரு பெண்ணைப் பார்த்து ஆணுக்கும், ஆணைப் பார்த்துப் பெண்ணுக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆன்ட்ரோஜனும் ஊறுகின்றது. ஆனால் சிலருக்குள் ஏன் காதல் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் இந்த சுரப்பிகளின் அளவு குறைவாக இருப்பதனாலா? அப்படியென்றால் அவற்றை மருந்தாக உடலில் ஏற்றி சுரப்பை அதிகரித்து ஒருவரை ஒருவர் காதலிக்க முடியாதா? மருத்துவர்கள், மற்றும் இது தொடர்பான அறிவுடையவர்கள் விளக்கம் தாருங்கள்.
இந்த விடயத்தில் சுரப்பிகளை விட அவர்களது மனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என எனக்குப் படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
எங்கள் இரசாயனவியல் ஆசிரியர் காதலர்கள் நீர் போல இருக்கவேண்டும் என்பார். அதாவது ஐதரசன் மற்றும் ஒட்சிசன் இரண்டு மூலக்கூறுகளும் நீரில் இருப்பது போல் காதலர்களும் இணை பிரியாமல் இருக்கவேண்டுமாம். இதைச் சொன்னவர் இன்னொரு கருத்தும் சொன்னார், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் இதனை அழகாக விளக்கியிருக்கின்றாராம்.
"பைங்குவளைக் கார்மலரால்" என்ற திருவெம்பாவைப் பாடலில் "எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில்" என சிவனையும் சக்தியையும் போன்ற நீரிணை என்கிறார். ஆகவே அவரும் ஐதரசன், ஒட்சிசன் கோட்பாட்டை அறிந்திருக்கின்றார் என விளக்கவும் கொடுத்தார். இது அவர் காதலர்கள் பற்றிக் கொடுத்த விளக்கம், ஆனால் காதல் பற்றி அவரிடம் கேட்க அவரும் ஹோர்மோன்கள் சம்பந்தப்பட்ட விடயம் என பதிலளித்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா? என எழுதியிருந்தேன். அதில் சில பந்திகளை உங்களுக்காக மீள் பதிவு செய்கின்றேன். என்னுடைய சந்தேகங்களுக்கு தகுந்த பதில் கிடைத்தால் போதும்.
ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை.
கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போன் வரும் என அன்றே கம்பன் அறிந்துவிட்டான் போலும் (பல கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்).
காதலுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல். வேறு சிலர் ஒரேமாதிரியான அலைவரிசை உடைய இருவரிடம் ஏற்படும் மாற்றம் காதல் என்கின்றனர். விஞ்ஞான ரீதியாக எடுத்துகொண்டால் காதல் உணர்வுபூர்வமானது அதாவது உணர்ச்சிவசப்படுவது அல்லது வசப்படுத்துவது.
அடுத்து இன்றைய நாளில் பல காதல்கள் வெறும் இனக்கவர்ச்சி என பலராலும் சிலாகிக்கப் படுகிறது. அதிலும் உண்மையில்லாமல் இல்லை வெறும் கவர்ச்சிக்காக அல்லது காதலிக்காமல் விட்டால் தமது ஸ்டேஸ்டட் ஏதோ குறைந்துவிடும் என எண்ணி தீர யோசிக்காமல் காதல் வலையில் ஆண்களும் பெண்களும் பலர் உள்ளனர். இத்தகைய சமயங்களில் காதல் அறிவுபூர்வமானது என்ற கருத்து அடிபட்டுப்போகிறது.
அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.
பின் குறிப்பு : இந்தப் பதிவு என் 200ஆவது பதிவாக வரவேண்டியது. தமிழக அரசின் தீடிர் விருதுகளால் 201 ஆவது பதிவாக வருகின்றது. என் முதல் பதிவு தொடக்கம் இன்றைக்கு வரை என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
-
அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி
ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக்
ஜோகோவிச் எதிர...
15 hours ago
13 கருத்துக் கூறியவர்கள்:
டபுள் சென்சரிக்கு வாழ்த்துக்கள் வந்தி..
காதல் என்பதில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதை பற்றி தனி பதிவே போடலாம்.
அதில் சில
1. காதல் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. யாரையாவது பார்த்து இம்ப்ரஸ் ஆகிறது காதல் என்றால், முதலில் பார்த்து காதலிப்பவரை காட்டிலும் அதன் பிறகு பார்க்கும் ஒருத்தர் அவரை விட சிறந்த தெரிவாக இருக்கும் பட்சத்தில் அவரையும் காதலிக்கலாமா? அவரை மட்டும் தான் காதலிக்கலாமா? (உதாரணமாக ராமன் சீதையை பார்த்தபின் சீதையைவிட சிறந்த ஒருத்தி அவனுக்கு கிடைத்திருந்தால் போயிருக்கலாமா? சீதைக்கும் ராமனை விட வேறுயாராவது செட் ஆகியிருந்தால் என்னாகியிருக்கும்.?
02. காதல் வாழ்க்கையில் ஒரு தடவை மட்டும்தான் வரும் என எங்கள் இலக்கியங்கள் கூறுகின்றன. அது என்ன சட்டமா வாழ்க்கையில் ஒரு முறை மட்டும்தான் வர வேண்டுமா?
இப்போதைக்கு இது போதும், இந்த பதிவில் இன்னும் பின்னூட்டங்களை இடவுள்ளேன்.
200 பதிவுகளை தாண்டிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
//ஒரு பெண்ணைப் பார்த்து ஆணுக்கும், ஆணைப் பார்த்துப் பெண்ணுக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆன்ட்ரோஜனும் ஊறுகின்றது//
//இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல்//
பார்க்கும் ஒவ்வொருத்தர் மேலும் ஈர்ப்பு வரும் பட்சத்தில் ஒரு சக மனிதன் எத்தனை பேரை காதலிப்பதாம்? எத்தனையோ பேர் இருந்த போதும் குறித்த இருவருக்குள் காதல் பற்றிக் கொள்வதன் மாயம் என்ன? அவனுக்கு அவளையும் அவளுக்கு அவனையும் மட்டும் பிடித்துப்போவதேன்? வேற்று பாலினரில் ஏற்படும் கவர்ச்சி என்றால்? ஒரு பெண்ணை எடுத்துக் கொண்டால் அவள் ”அப்பா” ”அண்ணன்” ”தம்பி” அனைவரையும் காதலுக்கலாமா?
எனக்குள்ளும் பல கேள்விகள் தொகுப்புக்களாக அனைத்துக்கும் விடை தேடிக் கொண்டிருக்கின்றேன்.
என் கேள்விகளுக்கு தகுந்த பதிலையும் எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி
அப்படியென்றால் அவற்றை மருந்தாக உடலில் ஏற்றி சுரப்பை அதிகரித்து ஒருவரை ஒருவர் காதலிக்க முடியாதா?//
தேவைப்படுகிறதா :)
மனம் என்பது மூளையில் உதிக்கும் எண்ணங்கள்தானே.. இந்த எண்ணங்களை உருவாக்கவும் அதிகரிக்கவும் குறைக்கவும் இல்லாமல் செய்யவும் ஏதாவது காரணமாயிருக்கலாம்.
இதெல்லாம் எதுக்கு.. காதல் காமத்தின் புள்ளியில்தான் தொடங்குகிறது.. மற்றப் புனிதமெல்லாம் சும்மா... காமத்தின் புள்ளியில் ஆரம்பித்தி பிறகு அந்தஅந்த கலாசார சூழல்களுக்கு ஏற்ப அங்கீகாரம் வேண்டி திருமணம்.. திருணமற்று இணைந்திருத்தல் என முடிகிறது.
நமது சூழலில் திருமணம் காமத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைமை.. ஆக காதலை அதை நோக்கி நகர்த்துகிறோம்.
thatsall
//காதலர்கள் நீர் போல இருக்கவேண்டும் என்பார். அதாவது ஐதரசன் மற்றும் ஒட்சிசன் இரண்டு மூலக்கூறுகளும் நீரில் இருப்பது போல் காதலர்களும் இணை பிரியாமல் இருக்கவேண்டுமாம். //
இப்ப அப்படித்தானே நடக்குது ஒரு பெண் இரண்டு ஆண்கள் அல்லது ஒரு ஆண் இரண்டு பெண்கள்(H2O) அதுவும் ரொம்பவும் உறுதியான பிணைப்பு. என்ன ஒரு Hக்கு மற்ற H இருக்கிறது தெரியாது.
------
உங்களின் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
இது பற்றி எனக்குத்தெரியாது... ஆனாலும் இன்று பல காதல் காமத்தின் வெளிப்பாடுதான். காமப்பசி தீர்ந்தால் காதல் தூக்கி வீசப்படுகின்றது...
//எனக்கு ஒரு சந்தேகம் ஒரு உணவைப் பார்த்ததும் எப்படி நாக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளால் ஊறுகின்றதோ, அதேபோல் ஒரு பெண்ணைப் பார்த்து ஆணுக்கும், ஆணைப் பார்த்துப் பெண்ணுக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆன்ட்ரோஜனும் ஊறுகின்றது. ஆனால் சிலருக்குள் ஏன் காதல் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் இந்த சுரப்பிகளின் அளவு குறைவாக இருப்பதனாலா? //
மனதைக் கட்டுப்படுத்தல் ஒரு காரணமாக இருக்கலாம்.
//இந்த விடயத்தில் சுரப்பிகளை விட அவர்களது மனம் ஆதிக்கம் செலுத்துகின்றது என எனக்குப் படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?//
இந்தக் கருத்தோடு நான் உடன் படுகிறேன். சராசரி மனிதனுக்கு ஆசைகள் உணர்வுகள் இருக்கின்றன அவற்றை மனிதன் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றான்.
//நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.//
இதெல்லாம் இருக்கிறதா? அவசரக் காதலுக்கு இதெல்லாம் எதற்கு...
நீங்கள் எல்லாம் என்னத்தைப் பற்றிக் கதைக்கிறியள் அண்ணையவை???
முதலில் இரு நூறு என்னும் பெரிய இலக்கை அடைந்த வந்திக்கு வாழ்த்துக்கள்,
இந்த பதிவைப் பார்த்தது கல்யாண மேடைக்கு செல்லப்போகும் உள்ளங்களே பாருங்கள் என்று தான் சொல்வேன்,எத்தனையோ எதிர்பார்ப்புகள் அந்த காதலைப்பற்றி இருக்கிறதே,அது அந்த உள்ளத்திடம் தான் இருக்கும்,
///அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா?
விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.//
இப்படியான சிந்தனைகள் அவர்களுக்கு வரவேண்டும்,வரும்
காதலைப்பற்றி எல்லோரும் போலல்லாமல் சற்று வித்தியாசமான சிந்தனை,பதிவு
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்தே. ஈஸ்ட்ரோஜனும் ஆன்ட்ரோஜனும் அதிகமாகச் சுரப்பது காதல் வயப்பட்டே பின்னரேயாகும்.
மறுபுறத்தில் பார்த்தால் மனநிலை மாற்றங்களுக்கும் வேறு சுரப்பிகள் தேவைப்படுகின்றன.
Post a Comment