கான்களைப் பின்தள்ளிய செல்லம்
கடந்த திங்கட்கிழமை 2007ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான காஞ்சிவரம் படம் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச்சென்ற அதே வேளை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செல்லம் தேசியவிருது பெறுவது இது மூன்றாவது முறை இருவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், தயா படத்தில் சிறந்த ஜூரி விருதும் பெற்றார். இவருடன் போட்டியாக "சக் தே இந்தியா" ஷாருக் கானும், "ரே ஜமீன் பர்" படத்துக்காக அமீர் கானும் போட்டியிட்டார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால் காஞ்சிவரம் வர்த்தகரீதியிலான வெற்றியைப் பெறவில்லை. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். இதனை தமிழ்த் தொலைக்காட்சிகளின் தாதாக்கள் கூட வாங்கவில்லை என்பது வேதனை.
சிறந்த மாநில மொழி படங்கள் பிரிவில், தமிழ்ப் பிரிவில் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனிமே நாங்க தான் என்ற அனிமேசன் படம் சிறந்த அனிமேசன் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிவாஜி படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எஃபெக்டுக்கான விருதுக்கு தெரிவானது.
செல்லம் இனிமேல் வில்லு போன்ற மசாலாக்களில் கதாநாயகனிடம் அடிவாங்காமல் உங்கள் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் படங்களில் நடியுங்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பொன்விழா நாயகன் கமல்.
தற்போது பொன்விழா ஆண்டைக்கொண்டாடும் பத்மஸ்ரீ கமலின் மேல் சிலர் ஒரு குற்றச் சாட்டைத் தெரிவிக்கின்றார்கள். அதவாது அவர் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி இன்று உன்னைப்போல் ஒருவன் வரை நடித்திருந்தாலும், இடையில் ஒரு சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார் என.
உண்மைதான் கமல் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஆனால் சினிமாத் துறையை விட்டு விலகவில்லை. அந்தக் காலத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராகவும், சில படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும், பின்னர் தங்கப்பன் மாஸ்டர் இயக்கிய படம் ஒன்றில் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்திருந்தார்.
ஆகவே கமல் சினிமாவிற்க்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டதை அவரின் ரசிகர்கள் தான் கொண்டாடுகின்றார்களே ஒழியே அவருக்கும் இந்தக் கொண்டாட்டத்திற்க்கும், எந்தத் தொடர்புமும் இல்லை. கமலின் ஆர்குட் குழுமத்தில் அங்கத்தவனாக இருப்பதால் இந்த தகவல்கள் கமலின் உயிரான ரசிகர்கள் சிலரின் மூலம் எனக்கும் தெரியவந்தது.
ஒரு தமிழனாக நல்ல நடிகனாக மனித நேயமிக்கவராக கமல் பொன்விழா கொண்டாடுவது சிலருக்கு காண்டாக்கிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.
கலக்கிய சமரவீரவும் சொதப்பிய ஜெயசூரியாவும்
இலங்கை அணியில் பலகாலமாக தேர்வாளர்களால் டெஸ்டில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்ட திலான் சமரவீர நேற்றைய முதல் முக்கோண ஒருநாள் போட்டியில் நியூசிலாந்திற்க்கு எதிராக இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கி தன் கன்னி அரைச் சதத்தைக் கடந்து பின்னர் அதனை தன் கன்னிச் சதமாக்கி தேர்வாளர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளார்.
அதே நேரம் இலங்கை அணியின் நட்சத்திர அதிரடித் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியாவின் அண்மைக்கால துடுப்பாட்டம் ரசிகர்களிடம் வெறுப்பைக் கொடுக்கிறது. 40 வயதைக் கடந்தும் இன்னும் புத்துணர்ச்சியுடன் காணப்படும் சனத் சில நாட்களாக ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையிலே காணப்படுகின்றார். இவரின் இந்த வருட ஒருநாள் போட்டிகளின் சராசரி 28.26 ஆகும். இந்த வருடம் 15 போட்டிகளில் விளையாடி 424 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். ஓட்டவிகிதம் 90.59 மட்டுமே இதில் ஒரு சதம் ஒரு அரைச் சதம் அடங்கும் அதே நேரம் இரண்டு தடவை ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை.
சனத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதா?
ஊக்கப்படுத்தல் விருதுகள்
சில நாட்களுக்கு முன்னர் ஊக்கப்படுத்தல் விருதை எனக்கு என் சக பள்ளி மாணவன் கீத் எனப்படும் கிருத்திகன், வழங்கியிருந்தார், அடுத்த நாள் அதே விருதை இனிய நண்பர் யோகா(யோ வாய்ஸ் வழங்கியிருந்தார்), நேற்று நண்பர் சந்ரு வழங்கியிருந்தார். மூவருக்கும் என் நன்றிகள்.
அதே நேரம் இந்த விருதை நான் புதியவர்கள் மூவரை ஊக்கப்படுத்த வழங்குகின்றேன். அண்மைக்காலமாக பலரின் எழுத்துக்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தவகையில் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பலர் இருந்தாலும் ஏனையவர்கள் ஏற்கனவே பலரிடம் இருந்து விருது பெற்றபடியால் இந்த மூவர்களுக்கும் ஊக்கப்படுத்தல் விருது கொடுப்பதில் மகிழ்ச்சி.
கனககோபி :
மிகவும் நகைச்சுவையாக எழுதுகின்றார். அண்மையில் டைட்டானிக் பற்றிய இவர் எழுதிய பதிவு பலரால் பாராட்டப்பட்டது. அடிக்கடி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றார். சீரியசான விடயங்களைக்கூட எழுதும் ஆற்றல் உள்ளவர் என அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்தார். விரைவில் சீரியஸ் பதிவுடன் வருவார் என்ற நம்பிக்கையுடன் கோபிக்கு இந்த விருது.
தர்ஷாயணி
உறுபசி என்ற பெயரில் வலை வைத்திருக்கும் இளைஞி. காத்திரமான கவிதைகள் எழுதுகின்றார். பின்நவீனத்துவக் கதைகள் கூட எழுதியிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் தான் எழுத ஆரம்பித்துள்ளார். இவரின் ஆக்கங்களில் தெரியும் சமூக கோபத்திற்காக இந்த விருது த்ர்ஷாயணிக்கு.
சம்யுக்தா கீர்த்தி
சிந்தனைச் சிறகினிலே என்னும் வலையில் கவிதைகள் எழுதும் தன்னைத் தமிழச்சி எனக் கூறிக்கொள்ளும் சம்யுக்தா கீர்த்தி. அண்மையில் தான் எழுதினாலும் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். கீர்த்தியின் கவிதைகளுக்கு இந்த விருது.
இன்றைய நாள்
இன்றைக்கு 09.09.09 என்ற சிறப்பான நாள். மீண்டும் இதேபோன்ற ஒரு நாள் 100 வருடங்களுக்குப் பின்னர் தான் வரும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
13 கருத்துக் கூறியவர்கள்:
//இதனை தமிழ்த் தொலைக்காட்சிகளின் தாதாக்கள் கூட வாங்கவில்லை என்பது வேதனை. //
என்னை பொருத்த வரையில் அந்த தாதாக்களை விட விஜய் டீவி ரொம்பவே பிடிக்கும். அடுத்தது இந்த படம் வணிக ரீதியில் வெற்றி பெறாததற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். இதையே சன் டீவி எடுத்திருந்தால் அடிக்கடி போட்டு படத்தை வெற்றியாக்கியிருப்பார்கள். ஆனானப்பட்ட அன்பே சிவமே தமிழ்நாட்டில் தோல்விப்படம் தானே?
ஒரு தமிழனாக நல்ல நடிகனாக மனித நேயமிக்கவராக கமல் பொன்விழா கொண்டாடுவது சிலருக்கு காண்டாக்கிவிட்டது
ஒரு நடிகனை நடிகனாக பார்க்காமல் அவனது வாழ்க்கையை பார்க்கும் மக்கள்தான் இங்கு அதிகம். நடிகை திருமணமாகிவிட்டால் இனி அவளை கதாநாயகியாக ஏற்று கொள்ளாதவர்கள்தான் நம்மவர்க்.
சனத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதா?
அப்படி முடியக்கூடாது. அவர் சிறப்பாக விளையாடி அவராக ஓய்வு எடுக்க வேண்டும். அதுதான் ஆண்டான்டு காலமாக அவர் செய்த சேவைக்கு தகுந்த வெகுமதி
அதே விருதை இனிய நண்பர் யோகா(யோ வாய்ஸ் வழங்கியிருந்தார்),
நான் முதலும் கடைசியாக வழங்கிய விருதுகள்.
நீங்கள் விருது வழங்கியவர்களில் கனககோபி எபபோதும் நான் வாசிக்கும் பதிவுக்கு சொந்தக்காரர். அருமையான நகைச்சுசை எழுத்தாளர்.
சம்யுக்தா கீர்த்தி அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரர். நான் அடிக்கடி இவர் தளத்துக்கும் போய் வந்திருக்கிறேன்.
தர்ஷாயணீயின் தளத்துக்கு இதுவரை போனதில்லை இனி போய் பார்க்கிறேன்.
விருது பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.
ரொம்ப பெரிய பின்னூட்டமோ?
சொல்ல வேண்டிய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்..
பி.ராஜுக்கு வாழ்த்துக்கள்.:)
தமிழுக்குக் கிடைத்த இன்னொரு திரை வரம் அவர்.
கமல் பற்றி கண்ட கழுதையும் கத்தும்.. கணக்கேடுக்காதீர் வந்தி..
சனத் எப்பவும் இப்படித் தானே.. தொடர்ந்து பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் எடுப்பதில்லையே.. எனக்கு இது ஆச்சரியமில்லை. இந்தியாவோடு சனத் பட்டையைக் கிளப்புவார் பாருங்கள்.. (யோவ் சனத் ஏமாத்திடேதைய்யா..)
விருதா???
புதியவர்களுக்குக் கொடுப்பது நல்ல விஷயமே..
மூவரையும் வாசித்துள்ளேன்.. நல்ல விஷயம்
எல்லாம் சரி.. யாரிந்த 6 pack.. sorry 9 pack அம்மணி? தெரிஞ்சவங்களா? ;)
ஊக்கப்படுத்தல் விருதுக்கு நன்றி.
உங்களைப் போன்றவர்கள் எனது வலைப்பதிவை பார்ப்பதே எனக்கு ஊக்கப்படுத்தல் தானே...
//எல்லாம் சரி.. யாரிந்த 6 pack.. sorry 9 pack அம்மணி? தெரிஞ்சவங்களா? ;) //
லோஷன் அண்ணா கணக்குல வீக்.
எனக்கெண்டா ஒரு 20, 30 தேறும் போல இருக்கு??? ;)
///யாரிந்த 6 pack.. sorry 9 pack அம்மணி? தெரிஞ்சவங்களா? ;)///
யாராவது அண்ணீட்ட போட்டுக் குடுத்து இந்தாள் செய்யிற அட்டகாசங்களை நிறுத்தக்கூடாதா... நயன்தாரா சிங்கம், சிங்கப்பூர் சிங்கம், 9 Pack எண்டு ஆள் தன்னை யூத் எண்டு சொல்லி ஒரே குழப்படி...lol
சூப் நல்லா இருக்கு வந்தி அண்ணா
nammudaya kalaingargalukkum angeegaaram kedaika aarambithu ullathu.. :) magizhchi aaga ullathu..
kalaingnani kalaignani than... veru ondrum solvadharkku illai.. :))
Jayasuriya thodarndhu form out-il irukkirar,,,, aanal adutha aatam nammudan than.... kushi aagi adithaalum adithu viduvaar :))
virudhu perramaikku vaazhthukkal :)) viruthu vaangiyavargalukkum vazthukkal :)
"ஊக்குவிப்பு விருது," -
மிகுந்த மகிழ்ச்சியையும், பொறுப்பினையும் ஒருங்கே தருகின்றது. உங்களுடைய ஊக்குவிப்பும், வாழ்த்துக்களும் தான் என் போன்றவர்களுக்கு இன்னமும் வலிமை சேர்க்கிறது.
நன்றிகள் வந்தி அண்ணா!
//யோ வாய்ஸ் (யோகா) said...
என்னை பொருத்த வரையில் அந்த தாதாக்களை விட விஜய் டீவி ரொம்பவே பிடிக்கும். //
எனக்கும் விஜய் தான் சன்னில் சிலவேளைகளில் நல்ல படம் போட்டாள் பார்ப்பது மற்றும் படி தலை வைப்பதில்லை, கலைஞரில் மானாட மயிலாட நேரம் கிடைத்தால் பார்ப்பது.
//அடுத்தது இந்த படம் வணிக ரீதியில் வெற்றி பெறாததற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். இதையே சன் டீவி எடுத்திருந்தால் அடிக்கடி போட்டு படத்தை வெற்றியாக்கியிருப்பார்கள். ///
நிச்சயமாக மொக்கை மாசிலாமணியையே வெற்றிப்படம் ஆக்கியவர்கள் இவர்கள்.
//ஆனானப்பட்ட அன்பே சிவமே தமிழ்நாட்டில் தோல்விப்படம் தானே?//
தமிழ்நாட்டு ரசிகர்களை எந்த நடிகராலும் கணிக்கமுடியாது.
//ஒரு நடிகனை நடிகனாக பார்க்காமல் அவனது வாழ்க்கையை பார்க்கும் மக்கள்தான் இங்கு அதிகம். நடிகை திருமணமாகிவிட்டால் இனி அவளை கதாநாயகியாக ஏற்று கொள்ளாதவர்கள்தான் நம்மவர்க்.//
அதே தான், ஆங்கிலப் படங்களில் 50 வயதுப் பெண் நாயகியாக நடிக்கின்றார். ஆனால் இங்கே அது சாத்தியமில்லை.
//அப்படி முடியக்கூடாது. அவர் சிறப்பாக விளையாடி அவராக ஓய்வு எடுக்க வேண்டும். அதுதான் ஆண்டான்டு காலமாக அவர் செய்த சேவைக்கு தகுந்த வெகுமதி//
ஆனால் அப்படி நடக்காது போல சில காட்சிகள் அரங்கேறுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
//நான் முதலும் கடைசியாக வழங்கிய விருதுகள்.//
ஹிஹிஹி
//ரொம்ப பெரிய பின்னூட்டமோ?//
ஓம் கொஞ்சம் பெரிதுதான் பரவாயில்லை, ஆனால் நீங்கள் அந்த நடிகையைப் பற்றிக் கேட்காதது சந்தோசம்.
//LOSHAN said...
தமிழுக்குக் கிடைத்த இன்னொரு திரை வரம் அவர்.//
உண்மைதான் செல்லம் நல்ல நடிகர்.
//கமல் பற்றி கண்ட கழுதையும் கத்தும்.. கணக்கேடுக்காதீர் வந்தி..//
வரிகள் அருமை இனி கணக்கில் எந்தக் கழுதையையும் கணக்கெடுப்பதில்லை
//சனத் எப்பவும் இப்படித் தானே.. தொடர்ந்து பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் எடுப்பதில்லையே.. எனக்கு இது ஆச்சரியமில்லை. இந்தியாவோடு சனத் பட்டையைக் கிளப்புவார் பாருங்கள்.. (யோவ் சனத் ஏமாத்திடேதைய்யா..)//
சரி சரி பொறுத்திருந்துபார்ப்போம்.
//எல்லாம் சரி.. யாரிந்த 6 pack.. sorry 9 pack அம்மணி? தெரிஞ்சவங்களா? ;)//
தாஷூ கெளசிக் என்ற நடிகை எந்தப் படம் என்றெல்லாம் கேட்காதீர்கள். அழகாக இருந்தார் உங்களுக்காகவே பிரத்தியேகமாக போட்ட படம் இது. உங்கள் 9 pack உடலும் ஒப்பிடும் போது இது 6 packதான்
//கனககோபி said...
உங்களைப் போன்றவர்கள் எனது வலைப்பதிவை பார்ப்பதே எனக்கு ஊக்கப்படுத்தல் தானே...//
ஆஹா இதெல்லாம் ரொம்ப ஓவர், யார் நல்ல எழுதினாலும் ஒரு வாசகன் என்ற முறையில் ஊக்கப்படுத்தியிருக்கின்றேன்.
//லோஷன் அண்ணா கணக்குல வீக்.//
அவர் கணக்கிலை மட்டுமல்ல கெமிஸ்ரியிலும் வீக்.
//எனக்கெண்டா ஒரு 20, 30 தேறும் போல இருக்கு??? ;)//
என்ன வயதைத் தானே சொல்கின்றீர்கள்.
//Kiruthikan Kumarasamy said...
யாராவது அண்ணீட்ட போட்டுக் குடுத்து இந்தாள் செய்யிற அட்டகாசங்களை நிறுத்தக்கூடாதா... நயன்தாரா சிங்கம், சிங்கப்பூர் சிங்கம், 9 Pack எண்டு ஆள் தன்னை யூத் எண்டு சொல்லி ஒரே குழப்படி...லொல்//
கீத் பூனைக்கு மணிகட்ட இன்னும் தகுந்த ஆள் வரவில்லை. அண்ணியை கணினிப் பக்கம் விடுவதில்லையாம் அவர் ஏன் எனக்கேட்டால் அவருக்கு வைரஸ் தொற்றிவிடும் என்கிறராம்.
//சூப் நல்லா இருக்கு வந்தி அண்ணா//
நன்றிகள் தம்பி.
// kanagu said...
nammudaya kalaingargalukkum angeegaaram kedaika aarambithu ullathu.. :) magizhchi aaga ullathu..///
உண்மைதான் சில காலமாக தெற்குத் தேய்ந்து வடக்கு வாழ்ந்தது இப்போ தெற்கேயும் கொஞ்சம் காற்று வீசுகின்றது.
//kalaingnani kalaignani than... veru ondrum solvadharkku illai.. :))//
நன்றிகள் அவர் கலைஞானிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
//Jayasuriya thodarndhu form out-il irukkirar,,,, aanal adutha aatam nammudan than.... kushi aagi adithaalum adithu viduvaar :))//
நீங்கள் சொல்வது சரி இந்தியாவுடன் ஆடுவது என்றால் ஜெயசூரியாவிற்க்கு ஏக குஷி.
//tharshayene said...
மிகுந்த மகிழ்ச்சியையும், பொறுப்பினையும் ஒருங்கே தருகின்றது. உங்களுடைய ஊக்குவிப்பும், வாழ்த்துக்களும் தான் என் போன்றவர்களுக்கு இன்னமும் வலிமை சேர்க்கிறது.//
நான் ஒரு சிறந்த வாசகனாக இருப்பதால்தான் உங்களைப் போன்றவர்களின் கவிதைகளை ரசிக்கமுடிகிறது. சோர்ந்துவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். வலையுடன் நின்றுவிடாமல் பத்திரிகைகளுக்கும் அனுப்புங்கள்.
கமல் தகவலுக்கு நன்றி.
சூப்பு சூப்பர்!
Post a Comment