அச்சு வலைச் சந்திப்பு வரைபடம் - நேரடி ஒளிபரப்பு

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.



முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங்களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.


இலங்கையில் (02-11-2009) திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடக்கவிருக்கும் அச்சுவலைச் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.






சந்திப்புக்கு வரவியலாதுள்ள அச்சு ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,


www.livestream.com/srilankatamilbloggers

நேரடி ஒளிபரப்பின் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.

நன்றி : கெளபாய்மது

திருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌

இன்றைய காலத்து இளைஞர்களுக்கு உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய விடயங்களுடன் வாழ்க்கையில் இன்னொன்றாக மாறிவிட்டது மூஞ்சிப்புத்தகம் என தமிழில் செல்லமாக அழைக்ப்படும் Facebook.

Facebook ஆரம்பித்தகாலத்தில் Orkutன் ஆதிக்கத்தினால் அவ்வளவாக பலரைக் கவரவில்லை ஆனால் காலப்போக்கில் Quiz, Games, Date of the day, எனப் பல விடயங்களைப் புகுத்தி Orkutடை ஓரம் கட்டி முன்னணியில் வந்துவிட்டது Facebook.



நானும் ஆரம்பத்தில் Facebook பக்கம் தலைவைத்துப் படுக்காவிட்டாலும் சும்மா இருக்கட்டுமே என ஒரு கணக்கை ஆரம்பித்து வைத்தேன். 2008ன் ஆரம்பத்தில் நண்பி ஒருவரின் திருமணம் கனடாவில் நடந்தது, அவரது திருமணப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்ய அவரிடம் கேட்டபோது தன்னுடைய Facebook ல் இருக்கிறது பாருங்கள் என்றார். அன்று தொடங்கிய அடிமைத் தனம் இன்றைக்கு சிறந்த விவசாயி ஆகும் வரை வந்துவிட்டது.

பின்னர் என்னுடைய பாடசாலை காலத்து நண்பர்கள் பலர் தங்களையும் இணைத்துக் கொண்டபின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாடசாலையின் இறுதிநாள் பரீட்சையில் பார்த்த நண்பனிடம் கூட அளவளாவ முடிந்தது. அத்துடன் எங்கள் பாடசாலைக் குழுமம், எங்கள் வகுப்புக் குழுமம் எனப் பல குழுமங்களில் இணைந்து அன்றைய பசுமையான நினைவுகளை இரைமீட்க முடிந்தது.



"1வது காதலில் தோல்வியுற்றவர்கள் சங்கம்","குப்புற படுத்துக்கிட்டு "யோசிப்போர்" சங்கம்"(அண்ணன் உண்மைத் தமிழன் ஒரு உறுப்பினர்) "வில்லுப் பார்த்து நொந்துபோனோர் சங்கம்", "ஏகனை எதிர்ப்போர் சங்கம்", "அனுஷ்கா", "நயந்தாரா", கூழ் குடிப்போர் சங்கம் (கானா பிரபா ஒரு உறுப்பினர்) எனச் குழுக்கள் பல இருக்கின்றன. இதனை விட பல தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பல குழுக்களும் திறம்பட இயம்பி மொழி பற்றிய பலவிதமான விவாதங்களைச் செய்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்கள் Facebook ல் நாங்கள் விவசாயம்(Farmville) செய்கின்றோம் நீயும் இணைந்துகொள் என எனக்கு கோரிக்கை விடுத்தும் வழக்கம் போல் ஒரு நிலத்தை வாங்கிப்போட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டேன் ஆனால் என் பங்கு தூயா எழுதிய சில 'பிரபல' பதிவர்களும், விவசாயமும் (அதிரடி பதிவு) பதிவினால் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி கிளர்ந்து எழுந்து இன்றைக்கு லெவல் 11 வரை சிறப்பாக விவசாயம் பண்ணுகின்றார்.



இன்றைக்கு எனப் பல பதிவர்கள் என்னுடைய பக்கத்து தோட்டக்காரர்கள், அன்புத் தம்பி டொன்லீ தன் பதுங்கு குழிக்குள் இருந்து அன்பளிப்புச் செய்த குட்டி யானையும் ஏனைய நண்பர்கள் அன்பளிப்புச் செய்த முயல்கள், செம்மறி ஆடுகள், மற்றும் பசுக்கள் என பல என் தோட்டத்திம் மேய்கின்றன.

நேற்று டிவிட்டரில் நம்ம டொன்லீயும் கீத்தும் என்னுடைய பால்ப் பண்ணையில் எப்படி 20 பசுக்களை அடைத்து வைத்திருப்பது எப்படி என ஆராய்ந்தார்கள், டொன்லீ சொன்னார் ஒரு அன்பளிப்பாக கிடைக்கின்ற ஒரு பசுவை நேரடியாக பால்ப் பண்ணையில் அடைத்தால் அது 20 பசுக்களாகும் என்றார். இதனை நம்பி நானும் கீத்தை கெஞ்சிக் கூத்தாடி ஒரு பசுவை அன்பளிப்பாக பெற்று பண்ணையில் அடைத்தால் ஒரு மாற்றமும் நடக்கவில்லை. பின்னர் கீத் இதனை ஒரு பதிவாக எழுதி நாமக்கலாரை நக்கலடித்திருந்தார். கீத்தின் பதிவு பசுக் கொட்டாய்



இந்த விளையாட்டுகளை விட்டுவிட்டு முக்கியமான விடயத்திற்க்கு இனி வருவோம். வருகின்ற மாதம் என் நண்பர் ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடக்கவிருக்கின்றது. அவர் இன்னொரு நாட்டில் இருந்து வருகின்றார். பெண்ணைப் பார்த்தது Facebook ல் தான். திருமணம் பேசும்போது மணமகளின் படத்தை Facebook ல் இருக்கின்றது பாருங்கள் என்றார்களாம் பின்னர் நண்பர் அவரை தன்னுடைய நண்பராக அழைப்பு (Friend Request) அனுப்பி இருவரும் தங்கள் படங்களைப் பார்த்தார்களாம், இதனை விட இருவரினதும் விருப்பு வெறுப்புகளும் அதில் இருந்தபடியால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இலகுவாக இருந்ததாகவும் கூறினார்.


இதே போல் இன்னொரு தெரிந்தவர் தன்னுடைய நண்பி ஒருத்தரின் நண்பியை Facebookல் கண்டு பிடித்து காதலித்துக் கொண்டிருக்கின்றார். நண்பியின் நண்பர்கள் பட்டியலைப் பார்க்கும் போது ஒரு பெண்ணின் படம் அவரைக் கவர்ந்திருக்கின்றது உடனே அவரின் Profile ஐ பார்த்தபோது இவரின் குணாதிசயங்களோடு பொருந்தியதால் உடனடியா தன்னுடய நண்பியாக்கி பின்னர் அரட்டைகள் அடித்து சில நாட்களின் பின்னர் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

இத்தனைக்கும் ஒருவர் இலங்கையில் இருக்கின்றார் இன்னொருவர் இன்னொரு ஆசிய நாட்டில் இருக்கின்றார். இதுவரை நேரில் சந்தித்ததில்லை. இன்னொரு காதல் கோட்டை கட்டுகின்றார்கள், நான் அவருக்கு சொன்ன அறிவுரை கவனம் காதல் கோட்டை கனவுக் கோட்டையாகி விடப்போகின்றது என்பதாகும்.

Facebook, Orkut போன்ற இணையங்களில் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவை நேரத்தைப் போக்கவே பயன்படுகின்றதாக சிலர் கூறுகின்றார்கள்.

இலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை


தலைவரின் வாகனம் மட்டும் நிறுத்தலாம்


இரண்டு வாகனத்தின் இலக்கங்களும் ஒன்று


இருபக்கமும் வாகனம் நிறுத்துவது தடை


தேனிலவிற்க்கு உதிரியாக இன்னொருவரா


அம்மா தங்கம் என்றால் அப்பா பித்தளையா?


மிகவும் தேவையான வாசகம்


புல்லட்டும் இப்படித்தான்


தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி


இன்னொரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி


விளக்கம் தேவையா

பின்குறிப்பு : இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09

தேர்தல் திருவிழா

இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இதே நேரம் நேற்று மக்கள் விடுதலை முன்னணி() நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய நீக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நீக்கப்படவேண்டும் என இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து பொதுத் தேர்தலையும் சந்தித்து வெற்றியும் பெற்றன.

இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்த்து ஜக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அல்லது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இதுவரை வாயே திறக்கவில்லை.

நவம்பர் 15ந்திகதி உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் தொடக்கம் திருவிழா ஆரம்பமாகப்போகின்றது. பேரம் பேசுதல்களும் கட்சி மாறுதல்களும் நிகழப்போகின்றன. அதே நேரம் இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் தேர்தல் திணைக்களம் செலவீனத்தைக் குறைத்துள்ளமை பாராட்டத்தக்கது.

இருக்கிறம் ஒன்று கூடல்

இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்ச‌ரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

இருக்கிறம் அலுவலகத்தை வந்தடையும் பாதைகள்.

தெகிவளை,வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் 154 ஆம் இலக்க பஸ்சில் ரூபவாஹினி அல்லது டொரிங்டன் என ரிக்கெட் எடுத்து ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி பக்கம் இருந்து வருபவர்கள் கொட்டாஞ்சேனையில் 176 ஆம் இலக்க பஸ்சில் ஏறி பொரளையில் இறங்கவும் அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறி ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். மோதரை மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் 173 ஆம் பஸ்சில் நேரடியாக வரலாம் ஆனால் விடுமுறை தினம் என்பதால் பஸ் குறைவாக இருக்கும்.

பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கோட்டையில் இறங்கி 103 ஆம் இலக்க பஸ்சில் பொரளைக்கு வரவும், அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறிவரலாம்.

வத்தளையில் இருந்து வருபவர்கள் பொறுமை இருந்தால் 104ஆம் இலக்க பஸ்சில் நேரடியாக டொரிங்டனை வந்தடையலாம்.

மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.

திருமண‌ வாழ்த்துக்கள்

சக பதிவரும் நண்பருமான ஜீவநதி வலையின் சொந்தக்காரர் டொக்டர் த,ஜீவராஜின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(01.11.2009) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது. அவருக்கும் சகோதரி அருணாவிற்க்கும் பதிவர்களின் சார்பிலும் என் சார்பிலும் திருமண வாழ்த்துக்கள்.

பதிவுத் திருட்டுகள்

நேற்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு வலையில் ஒரு கட்டுரையைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. காரணம் நான் எழுதிய ஒரு பதிவை எந்த மாற்றமும் இன்றி ஒருவர் தன்னுடைய வலையில் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பதிவை எங்கிருந்தது எடுத்தது என்ற தகவல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஏற்கனவே பதிவுலகத்தில் இப்படியான சில திருட்டுகள் நடப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். என் நண்பர்கள் சிலருடைய சில படைப்புகள் வேறு நபர்களால் சுடப்பட்டு மூஞ்சிப்புத்தகத்திலும் வேறு வலைகளில் அப்படியே இணைக்கப்படுகின்றன.

பதிவுகளை ஏனைய இடங்களில் இணைப்பவர்கள் தயவு செய்து எங்கிருந்து எடுத்தீர்கள் எனச் சொன்னால் எந்தப் பிழையும் இல்லை. பதிவுகளை எப்படி இவர்களிடம் இருந்து காப்பது என்பதையும் தொழில்நுட்பப் புலிகள் சொல்லுங்கள்.

அண்ணன் உண்மைத்தமிழனின் அபிமான நடிகை அனுஷ்கா என்பதை அவரின் மூஞ்சிப்புத்தகத்தில் தெரிந்துகொண்டேன் அவருக்காக வேட்டைக்காரி அனுஷ்காவின் அழகிய தோற்றம்

பூரணை விருந்து

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் வலைப் பதிவர்களுக்கும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர் வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மீண்டும் சந்திக்கவிரும்பும் உறவுகள் இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திரு. சஞ்சீத் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இந்தச் சந்திப்பானது திங்கள் மாலையில் நடைபெறவுள்ளதால் சிற்றுண்டிகளுடன் மாலை நேர பானங்களும் வழங்கப்படும் என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவுத்துள்ளார்கள்.

இலங்கை வலைப்பதிவர் கூகுள் குழுமத்தில் தங்களைப் பதிவு செய்தவர்கள் மின்னஞ்சலூடாக தங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்படும். எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.



சந்திப்பு நிகழும் இடம் இருக்கிறம் அலுவலகம், இல 3, டொரிங்டன் அவெனியூ , கொழும்பு 7. (ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் உள்ள வீதி).

மேலதிக விபரங்களுக்கு :

திரு.சஞ்சீத்

தொலைபேசி : 0113150836
மின்னஞ்சல் : irukiram@gmail.com


உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் இருக்கிறம் நிர்வாகத்தினர்.

மீண்டும் இருக்கிறம் அலுவலகத்தின் புல்வெளியில் சந்திப்போம்.

அடுத்த முதல்வன் யார்?

அண்மைக்கால இலத்திரனியல் ஊடகங்களின் அசுர வளர்ச்சியும் இணையத்தின் மூலமான ஒலி/ஒளி பரப்புகளும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றன என்பது அப்பட்டமான உண்மை.

ஒருகாலத்தில் வானொலி கேட்க வானொலிதான் தேவைப்பட்டது ஆனால் இன்றோ இணையம் செல்லிடப்பேசிகள், MP3/MP4 Players என இலத்திரனியல் சாதனங்களின் உதவியால் எங்கிருந்தும் வானொலிகளைக் கேட்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. தொலைக்காட்சிகளுக்கு இணையமூலமான இணைப்புகள் குறைவு என்றாலும் பல நிகழ்ச்சிகள் இணையத்தில் பின்னர் தரவிறக்கிக் கொள்ளமுடியும்.

இதே நேரம் கேபிள் தொலைக்காட்சிகள் Satellite தொலைக்காட்சிகளின் அதீத வளர்ச்சியினால் உலகின் பெரும்பாலான தொலைக்காட்சிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதனால் உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களுக்கு பேரிடி.



இலங்கையைப் பொறுத்தவரை பல வருடங்களாக அரசாங்கத்தின் ரூபவாஹினியே கோலோச்சிக் கொண்டிருந்தது. தமிழில் செய்திகளும் ஏதோ ஒரு நாளில் கலையரங்கம் என்ற நிகழ்ச்சியும் பொங்கல், தீபாவளிகளில் மட்டும் தமிழ்த் திரைப்படங்களும் ஒளிபரப்பினார்கள்.

தொண்ணூறுகளின் கடைசிக் காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளும் வான்னொலிகளும் அனுமதி கிடைத்தபடியினால் பல்கிப் பெருகின. சிங்கள மொழிமூல தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பெருகினாலும் தமிழ்மொழி மூலம் சக்தி தொலைக்காட்சி மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏகபோக உரிமையாக(Monopoly) இருந்தார்கள். கீரைக் கடைக்கு போட்டியாக எதிர்க் கடையாக ரூபவாஹினியின் "ஐ" தொலைக்காட்சி இருக்கும் என எதிர்பார்த்தால் அவர்களோ கிரிக்கெட் அல்லது ஏனைய அரச நிகழ்வுகள் நடக்கும் போது தமிழ் நிகழ்ச்சிகளை நிறுத்துவதால் சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியே இருந்தது.

இதனால் தானோ என்னவோ சக்தி தொலைக்காட்சியினர் தாங்கள் செய்வதுதான் சரி என்ற சர்வாதிகாரப் போக்கில் பல தரமற்ற நிகழ்ச்சிகளையும் சன்னிடம் இருந்து வாங்கிய மெஹா சீரியல்களையும் ஒளிபரப்புகின்றார்கள்.

ஆரம்பத்தில் நன்றாக தமிழ் மொழியின் சக்தியாக விளங்கிய இவர்கள் தற்போது ஆங்கில மொழியின் அல்லது இந்தியத் தமிழின் சக்தியாக விளங்குகின்றார்களோ என்ற எண்ணம் பலரிடம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தியாவில் ஒதுக்கப்பட்ட அறிவிப்பாளர்களை வைத்து நிகழ்ச்சி படைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களேயாகும்.

இவர்களுக்கு போட்டியாக விளங்கிய "ஐ" தொலைக்காட்சி "நேத்ரா" எனப் பெயர் மாற்றினாலும் கிரிக்கெட் நடந்தால் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு தடைதான். ஆனால் "ஐ"யாக இருந்தால் என்ன நேத்ராவாக இருந்தால் என்ன நம்மவர்கள் தான் அங்கே நிகழ்ச்சி செய்கின்றார்கள். அத்துடன் இவர்களின் தமிழ் உச்சரிப்பும் மொழி ஆளுமையும் பாராட்டத்தக்கது. சக்தி அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்புகள் இவர்கள் எந்த வட்டாரத் தமிழ் பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்படுத்தும். இந்திய அறிவிப்பாளினிகளை கொப்பியடிக்கப் போய் வான்கோழிகளாக பல பெண் அறிவிப்பாளினிகள் மாறிவிட்டார்கள்.



அண்மைக்காலமாக சக்தியில் புதிய பல அறிவிப்பாளர்கள் இருப்பது பாராட்டத்தக்கது, பல காலமாக சகல நிகழ்ச்சிகளிலும் ப்ரியமான அறிவிப்பாளினிதான் தமிழைக் கொலை செய்வார். இப்போ புதிய மொழிக் கொலைகாரர்கள், அதிலும் இவர்கள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் முற்றுப்புள்ளிகள் இல்லாமல் தொடர்ந்து ஏதோ கதைப்பார்கள்.

சக்தியின் காலை நிகழ்ச்சிக்குப் பெயர் "குட்மோர்னிங் ஸ்ரீ லங்கா" இதில் பலதரப்பட்ட விடயங்கள் பேசுவார்கள். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் விசேட நிகழ்வுகள் சொல்லும் போது சமஸ்கிருத உச்சரிப்புகளான அஸ்டோத்ர , சகஸ்ரநாம போன்றவைகளிலும் ஏனைய உற்சவங்களின் பெயர்களிலும் தடுமாறுவார்கள்.

தமிழ்ப் பெண்கள் என்றால் கணவன் இறந்தபின்னர் அவரின் உடலுக்கு முன்னால் தான் தலைவிரி கோலமாக இருக்கவேண்டும், ஆனால் நம்ம அறிவிப்பாளினிகள் காலை வேளையில் தலைவிரிகோலமாகவே இருப்பார்கள் (இது பற்றி பலர் பத்திரிகைகளில் எழுதினாலும் நம்ம குத்துவிளக்குகள் கணக்கில் எடுப்பதில்லை).

பெரும்பாலும் இவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் தம்மை தயார்ப்படுத்தி செய்துவருவதில்லைப் போல் எண்ணத் தோன்றும். ஏனென்றால் யாரையாவது பேட்டி எடுத்தால் அவரைப் பற்றியோ அவர் சம்பந்தப்பட்ட துறை பற்றியோ அறிந்திருக்காமல் அந்த நேரத்தில் தோன்றும் கேள்விகளையே கேட்பார்கள்.



ஒருமுறை உறவினர் ஒருவர் வீட்டில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டிருந்தது ஒரு நேயர் தொலைபேசியில் அறிவிப்பாளினியின் சுக நலன்களை விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போ என் உறவினர் ஒரு குறீப்பிட்ட நேயரின் பெயரைக் குறிப்பிட்டு என்ன அவரை இன்னும் காணவில்லை. இவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட நேயர்கள் மட்டும் தினம் தினம் தொலைபேசி எடுப்பார்கள் என்றார்.

அண்மைக்காலமாக இவர்களின் சேவை பல இடங்களில் தெளிவில்லாமலும் தெரியாமலும் இருக்கின்றது, இதனையும் அவர்களுக்குச் சொன்னால் செவிசாய்ப்பதில்லை.

அத்துடன் கேபிள் தொலைக்காட்சிகளின் அண்மைக்கால வரவால் இவர்களின் சொந்த தயாரிப்புகளை தவிர்த்து ஏனையவற்றை சன்னிலையே பார்த்துவிடுகின்றார்கள்.

இவர்களின் வானொலியில் இன்னொரு நிகழ்ச்சிக்கு பெயர் சூப்பர் வொய்சர்ஸ். சில அறிவிப்பாளினிகள் இதனை அவசரமாக உச்சரிக்கும் போது சூப்பவாய்சர்ஸ் என கேட்கும். இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒருவரின் தமிழ் மொழி ஆற்றலைத் தெரிந்துகொள்வது. விஜய் தொலைகாட்சியின் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியைப் பார்த்து தொடங்கிய நிகழ்ச்சி இதுவாகும் ஆனால் நிகழ்ச்சியின் பெயரோ ஆங்கிலத்தில்.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கரை பார்த்து சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி சீசன் 3 நடக்கின்றது. நம்ம நாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல நிகழ்ச்சி. இவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தாலும். தோற்றவர்கள் அழுவதையும் சண்டைபோடுவதையும் காட்டி வெறுப்பேத்துகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் ஆங்கிலேய வம்சாவளியோ தெரியாது காரணம் அவரின் வாயில் தமிழ் வராது வந்தாலும் நொண்டியடிக்கும். தமிழில் அழகாகப் பேசும் இன்னொரு அறிவிப்பாளரையே முழு நிகழ்ச்சிக்கும் தொகுத்தளிக்க விட்டிருக்கலாம்.

நடுவர்களோ அடிக்கடி ஸ்ருதியைத் தேடுவார்கள். ஏற்கனவே இந்த ஸ்ருதியை வைத்து இவர்களின் போட்டி வானொலி நக்கலடித்தது இன்னும் நினைவில் நிற்கின்றது.

இவர்களின் குறைகள் சொல்லிக்கொண்டிருந்தால் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கலாம். இவர்களுக்கான எதிர்க்கடை கொஞ்சம் வீரியமாக இருந்தால் இவர்கள் தங்களை மறுபரிசோதனை செய்யவேண்டியிருக்கும். பிரமாண்டமாக புதிய அனுபவத்திற்க்கு தயாராகுங்கள் என இன்னொரு தொலைக்காட்சி வரவிருக்கின்றது, அவர்கள் இவர்களுக்கு போட்டிகொடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

வானொலிகளைப் பொறுத்தவரை பல வானொலிகள் இருப்பதால் ஆரோக்கியமான போட்டி நிகழ்வதாலும் பல தரமான நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு கிடைக்கின்றன. ஏற்கனவே வானொலிகள் பற்றி ( தமிழ்மொழிக் கொலைகாரர்கள்
) எழுதியிருப்பதால் அதில் தவறவிடப்பட்ட சில விடயங்கள் மட்டும் இந்தப் பதிவில்.

சில வானொலிகள் யார் தங்களுக்குள் முதல்வன் எனப் போட்டி போடுகின்றார்கள். இது நேயர்களைக் குழப்புகின்றது. சூரியன் சொல்கின்றது நான் தான் முதல்வன் என ஆனால் சக்தியோ தங்களை முதல்தர வானொலி வல்லவன் எனச் சொல்லிக்கொள்கின்றார்கள். தனியார் வானொலிகளில் முதலில் ஆரம்பித்தது சூரியன் என்ற வகையில் அவர்களின் முதல்வன் என்ற பதம் அவர்களுக்குப் பொருந்தினாலும் வானொலி நிகழ்ச்சிகளின் அவர்கள் முதல்வனா என்பது நேயர்க்ள் தான் சொல்லவேண்டும்.




அதே நேரம் சில பெண் வானொலி அறிவிப்பாளினிகள் தங்களை மிர்ச்சி சுசித்திரா போல் காட்டிக்கொள்ள மிகவேகமாக பேசுகின்றார்கள். இதனால் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என விளங்குவதேயில்லை. எலிசபத் மகாராணியின் மருமக்கள் போல் இவர்கள் பேசும் ஆங்கிலம் அதிலும் இவ்வளவு காலமும் வானொலிகள் யாருக்கு இந்தப் பாடலை யார் யாருக்காக கேட்கின்றீர்கள் எனக் கேட்பார்கள் ஆனால் இவர்களோ யாருக்கு டெடிக்கேட் பண்ணுகின்றீர்கள் என சன் மியூசிக் அறிவிப்பாளினிகளைப் பின்பற்றுகிறார்கள். அத்துடன் அவர்கள் பேசும் பாணியும் இந்திய அறிவிப்பாளினிகளின் பாணி. உங்கள் வானொலிகளைப் கேட்பவர்கள் பெரும்பாலும் இலங்கையர் தான் அவர்களிடம் So, But, Suppose, எல்லாம் தேவையா? நல்ல காலம் ஆண் அறிவிப்பாளர்கள் இந்த மாயையில் விழவில்லை.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இலங்கை வானொலியில் எண்ணற்ற நல்ல குரல், மொழி ஆளுமை உள்ள அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். ஆண்கள் வரிசையில் பி,எச். அப்துல் ஹமீட், கே.எஸ்.ராஜா. எஸ். எழில்வேந்தன், இளையதம்பி தயானந்தா, மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம் எனப் பட்டியல் நீளும் தற்போதைய இளம் ஆண் அறிவிப்பாளர்களில் ஒரு சிலர் இவர்களின் இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள், பிடிப்பார்கள், ஆனால் ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, கமலினி செல்வராஜன், ரேலங்கி செல்வராஜா இடத்திற்க்கு போட்டியாக எந்த இளம் பெண் அறிவிப்பாளினிகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எது எவ்வாறாயினும் தமிழ் மொழியை வளர்க்கும் பொறுப்பு இந்த இலத்திரனியல் ஊடகங்களின் கைகளிலும் இருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து மொழிப் பற்றுடன் இவர்களே தங்கள் தவறை உணர்ந்து செயல்படுவார்களாயின் தென்றலாக சூரிய சக்தி மாறி வெற்றி கிடைக்கும்.

ஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09

பாராளுமன்றமா விளையாட்டு மைதானமா?

நேற்று சில நாட்களின் பின்னர் இலங்கைப் பாராளமன்றம் கூடியது. வழக்கம்போல் பாராளமன்றத்தில் சில அமைச்சர்கள் தங்கள் வாய்வார்த்தையை விட அதிரடி நடவடிக்கைகளால் மன்றத்தைக் கலகலப்பாக்கினார்கள். கோட்டு சூட்டுப்போட்ட ஒரு அமைச்சர் பத்தாம் வகுப்பு பாஸாகவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனவும் கேலி செய்தார்கள். கோட்டு சூட்டுப் போட்டால் கட்டாயம் ஆங்கிலம் தெரிய‌வேண்டுமா? தமிழ்சினிமாவில் வில்லனின் அடியாட்கள் பலரும் கோட்சூட்டுடன் தான் சண்டைபோடுகின்றார்கள். ஆங்கிலம் தெரியாது என எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் முன்னர் அவர்களின் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்களின் சச்சரவினால் முக்கியமான பிரச்சனையான‌ ருபெல்லா தடுப்புமருந்து விவகாரம் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பெரும்பாலான மருந்துகள் காலாவதியானவை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்மொழியின் சக்தி

நேற்று இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தங்கள் பிறந்ததினத்தை கொண்டாடியது. இவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 75% வீதமான நிகழ்ச்சிகள் சன்னின் இழுவைத் தொடர்களேயாகும். ஏனைய 25%வீதமான தங்கள் சுயதயாரிப்புகள் கூட தனித்துவமானவை அல்ல. நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் "பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார். தொலைக்காட்சியைப் பார்த்தால் ஒரு அழகான பெண்ணை ஒப்பனை என்ற பெயரில் அசிங்கமாக்கியிருந்தார்கள். அவர்களின் தொலைக்காட்சி நிலையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ தெரியவில்லை. எத்தனையோ பத்திரிகைகளில் இவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் தங்கள் சர்வாதிகார போக்கினால் அவற்றைக் கவனத்தில் எடுப்பதேயில்லை. தங்கள் தான் தமிழ் மொழியை வளர்க்கின்றோம் எனச் சொல்லிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் இவர்களின் போக்கை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.

தீபாவளியும் தொலைக்காட்சிகளும்

தீபாவளியும் ஒருமாதிரி வந்து போய்விட்டது. இலங்கையில் தீபாவளி பெரிதாக கொண்டாடப்படுவதில்லை என்பதால் இது ஒரு சாதாரண நாள் போல் தான் பலருக்கு இருந்தது. என்ன சிலர் கோவிலுக்குப் போய் வருவார்கள். கோவில்களில் கூட இம்முறை மக்கள் குறைவாகவே இருந்தார்கள்.

கலைஞர் தொலைக்காட்சி உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என தசாவதாரம் படம் மாலையில் ஒளிபரப்பினார்கள், ஆனால் இவர்களுக்கு முன்னால் இலங்கையின் வசந்தம் தொலைக்காட்சி 12.30 மணிக்கு தசாவதாரம் படத்தை ஒளிபரப்பினார்கள். கலைஞரின் உலகத் தொலைக்காட்சியில் வசந்தம் தொலைக்காட்சி இல்லையா? இல்லை உலகம் என்பது தமிழ்நாடு மட்டும்தானா?

சகல தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் பேட்டிகளை ஒளிபரப்பி பொறுமையைச் சோதித்தார்கள். விஜய் தொலைக்காட்சி மட்டும் வழக்கம் போல் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஆனால் தங்களின் அதே ஆட்களை வைத்து நடத்தியது. தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சியாக இவர்களின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற சிறுவர்களின் குடும்பத்தினரும் தங்கள் திறமைகளைக் காட்டியது சிறப்பாக இருந்தது. பலரின் தாய், தந்தையர் அழகாக்வும் திறமையாகவும் பாடுகின்றனர்.

கமல் 50 சிறப்பு மலர் வெளியீடு



திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசனைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்று எதிர்வரும் அக்டோபர் 25ந்திகதி மாலை 6 மணிக்கு சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

சின்ன சந்தேகம்

சினிமா, விளையாட்டுகள் எல்லாம் காத்திரமான விடயங்கள் இல்லையா? அண்மையில் நண்பர் ஒருவர் என்னுடன் அதிகமாக சினிமா, கிரிக்கெட் பற்றி எழுதுகின்றேன் என கோபித்தார். வலையில் எழுதுகின்ற பெரும்பாலானவர்கள் சாதாரண விடயங்களை அலசி ஆராயும் மனிதர்களே ஒழிய காத்திரமான விடயங்களை எழுதும் எழுத்தாளர்கள் அல்ல. அதே நேரம் சமூக, சிந்தனை வெளிப்பாடுடைய பதிவுகள் எழுதினால் பெரிதாக எவரும் படிப்பதில்லை என்பது என் சொந்த அனுபவம். அத்துடன் அப்படியான பதிவுகளை எழுதும்போது நிறையத் தேடல்கள் தேவை. சாதாரணமாக வலையில் எழுதுபவர்களுக்கும் இப்படியான தேடல்கள் செய்ய நேரம் போதாது. சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா? என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்.

பேராண்மை - திரை விமர்சனம்

நீண்ட நாட்களின் பின்னர் தமிழில் வெளிவந்த சாகசப்(Adventure) படம். இயற்கையில் அழகான கடற்கரையில் தன் ராட்சியத்தை அமைத்த இயக்குனர் ஜனநாதன் இம்முறை காட்டுக்குள் ராட்சியம் நடத்தியிருக்கின்றார்.

கதை :

ஜெயம் ரவி ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த காட்டு இலகா அதிகாரி, அவரின் கீழ் பயிற்சி பெறும் ஐந்து அழகிய பெண்கள், ரவியின் மேலதிகாரி பொன்வண்ணன். ரவியும் அந்த 5 பெண்களும் காட்டினுள் பயிற்சிக்காகச் சென்றபோது 16 வெள்ளைக்காரத் தீவிரவாதிகளைக் காண்கின்றார்கள், அவர்கள் இந்தியா ஏவும் ராக்கெட்டை அழிக்க வருகின்றார்கள், அந்த தீவிரவாதிகள் ராக்கெட்டை அழித்தார்களா? ரவிக்கு என்ன நடந்தது? 5 பெண்களும் என்ன ஆனார்கள் என்பதை முற்பாதியில் நொண்டியடித்து பிற்பாதியில் ராக்கெட் வேகத்தில் சொல்லும் கதை.

திரைக்கதை :

முதல்பாதியில் அடங்காப்பிடாரிகளான 5 பெண்களும் ரவியைப் படுத்துப் பாடுகளையும் பொன்வண்ணன் அவரை சாதீய ரீதியில் திட்டும் காட்சிகளிலும் திரைக்கதை கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் காட்டில் நடக்கும் காட்சிகளில் கைதட்டுவைக்கின்றது. குறிப்பாக முதல் 2 தீவிரவாதிகளையும் கொல்வதற்க்கு ரவி செய்யும் உத்திகளும் அவருக்கு உறுதுணையான பெண்களின் உதவிகளும் கலக்கல். அதே நேரம் கிளைமாக்ஸ் காட்சியில் இராட்சத உருவம் கொண்ட வில்லனுடன் ரவி மோதும் காட்சிகளும் பெண்களை துர்க்கை, காளி, பராசக்தி என விழித்து இடம் பெறும் பாடலும் சாமானிய சினிமாத்தனமாக இருந்தது.



வசனம் :

ஜனநாதன் தன்னுடைய வசனங்களினால் பல இடங்களில் பொதுவுடமைக் கருத்துகளைத் தூவுகின்றார். இரட்டை அர்த்த வசனங்களை விட்டுவைத்த தணிக்கை குழு சாதீய ரீதியிலான வசனங்களை ஏன் வெட்டினார்களோ தெரியாது? இப்படியான காட்சிகள் வசனங்கள் மூலம் சாதீக் கொடுமைகளை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என உயர்சாதித் தணிக்கைக் குழுவினர் எண்ணியிருந்தனரோ தெரியவில்லை ( தணிக்கைக் குழுவில் இருப்பவர்கள் உயர்சாதியினர் என நண்பர் ஒருவர் தெரிவித்தார்).

இயக்கம் :

இயற்கையில் காலடி எடுத்து வைத்த ஜனநாதன் முதல்படத்தில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தவர், பின்னர் ஈயில் மருத்துவ சீர்கேடுகளை ஒரு கைபார்த்தவர் இம்முறை தீவிரவாதத்தைக் கையிலெடுத்திருக்கின்றார். ஆனால் முதல் இரண்டு படங்களிலும் முகம் சுழிக்காமல் பார்க்கச் செய்தவர் இந்தப் படத்தில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்களும் பெண்னொருவரின் ஜட்டியை அவரின் நண்பர்கள் கழட்டுவது, அரைகுறை ஆடைகளுடன் பெரும்பாலும் இரவு உடைகளுடன் மாணவிகளை உலாவவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஜெயம் ரவி :

பெரும்பாலும் ரீமேக் படங்களில் கஸ்டப்படாமல் நடித்துவந்த ஜெயம் ரவிக்கு இந்தப் படம் நல்ல பெயரை நிச்சயம் கொடுக்கும். தன்னை கேவலப்படுத்தும் மாணவிகளிடமும் சரி, மேலதிகாரியிடமும் சரி தன் கோபத்தைக் காட்டாமல் மிகவும் சாந்தமாக இருந்தவர், காட்டில் மரங்களில் ஏறுவதிலும் மலைகளில் ஏறுவதிலும் காடுகளுடன் தனக்கு அதிகம் பரிச்சயம் இருப்பதுபோல் செய்துகாட்டியுள்ளார். அத்துடன் கதாநாயகி இல்லாமல் வளர்ந்துவரும் நடிகர் ஒருவர் நடிக்க ஒப்புக்கொண்டமையே பெரிய விடயம்.



கதாநாயகிகள் :

யாரென்றே அறிமுகம் இல்லாத‌ 5 பெண்கள் தான் படத்தின் கதாநாயகிகள். அஜிதா என்ற பாத்திரத்தில் வரும் பெண் தன்னுடைய பங்கை நன்றாகச் செய்திருக்கின்றார். ஏனையவர்கள் முதல் பாதியில் ரவியை சீண்டுவதும் இரவு ஆடைகளுடன் நடமாடுவதும் என்றிருந்தாலும் இறுதிச் சண்டைக் காட்சியில் விஜயசாந்திபோல் செய்ய முயற்சி செய்திருக்கின்றார்கள். கொஞ்சம் தெரிந்த பழகிய முகங்களைப் போட்டிருக்கலாம்.

வெள்ளைக்கார வில்லன் :

ஜிம் பாடியை விட இரண்டு மடங்கு பெரிதான உடலுடன் தோன்றும் வெள்ளைக்கார வில்லன் பெரும்பாலும் சண்டைதான் போடுகின்றாரே ஒழிய அவருக்கு நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் மனிசன் அநாயாசமாக சண்டைபோடுகின்றார், சுடுகின்றார், குத்துகின்றார்.

பொன்வண்ணன் :

ரவியின் மேலதிகாரியாக அடிக்கடி ரவியை சாதீய ரீதியில் தாக்கிக்கொண்டு பின்னர் ரவி செய்த செயலைத் தான் தான் செய்தது எனச் சொல்லும் நியமான மேலதிகாரி வேடம். ஏற்கனவே அஞ்சாதேயில் பார்த்த வேடம் போல் இருந்தாலும் சிறப்பாகவே செய்திருக்கின்றார்.

ஒளிப்பதிவு :

படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் சதீஸ்குமார்.அடர்ந்த காடுகள், மலைகள், அருவிகள், ஆறு, பள்ளத்தாக்கு என சகல இயற்கைகளையும் நேரில் பார்ப்பதுபோன்ற தெளிவான ஒளிப்பதிவு.

இசை :

வித்தியாசகரின் இசையில் ஒரு பாடல் கேட்கும் தரமாக இருக்கின்றது. ஏனைய பாடல்கள் இடைச் செருகல்கள் தான். பின்னணி இசை சுமார்தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

படத்தொகுப்பு :

V.T.விஜயன் ஆரம்பக் காட்சிகள் சிலவற்றிலும் சில சண்டைக்காட்சிகளிலும் கத்திரி வைத்திருந்தால் படத்தின் வேகம் அதிகரித்திருக்கும்.

நிறைவுகள்

1. நீண்ட நாளின் பின்னர் நல்லதொரு படம்
2. ஜெயம் ரவியின் நடிப்பு
3. இயக்கம், சில இடங்களில் வசனங்கள்
4. ஒளிப்பதிவு

குறைகள்

1. ஜெயம் ரவியே அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என சொல்வது.
2. பல இடங்களில் லொஜிக் மீறல் அதிலும் ஜெயம் ரவி வெள்ளைக்காரர்கள் ராக்கட்டைத் தாக்கத்தான் வருகின்றார்கள் என எப்படிக் கண்டுபிடித்தார்?
3. இரட்டை அர்த்த வசனங்களும் மாணவிகள் விடுதி லூட்டிகள்
4. 5 பெண்களின் பாத்திரத்தையும் ஒரே மாதிரிக் காட்டியது.
5. பாடல்கள், இசை.

சில பல குறைகள் இருந்தாலும் பார்க்ககூடிய நல்லதொருபடம.

பேராண்மை - பெருமை

பின்குறிப்பு : நான் ஒரு பாடாவதித் தியேட்டரில் தான் படம் பார்த்தேன். (அங்கேதான் வெளியிட்டிருக்கின்றார்க்ள்), சீட் எல்லாம் கிழிந்த நிலையில் தியேட்டர் நிர்வாகம் சீட்டுகளை மாற்றாவிட்டால் நட்டத்தில் தான் ஓடவேண்டும்

மெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செந்தூரனிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது மாலை 5.30 மணிக்கு இந்துக் கல்லூரி மாண்வர்கள் ஒழுங்கு செய்த ஆதவன் விசேட காட்சிக்கு ரிக்கெட் இருக்கின்றது, கரனையும் பாலாவையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் நான் ஏனைய நண்பர்களுடன் வருகின்றேன்.

நான் உடனடியாக பாலாவையும் கரனையும் தொடர்புகொள்ள இருவரும் வாறன் என்றார்கள். சில நிமிடத்தில் பாலாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "மச்சான் நான் இன்னொரு செட்டுடன் நைட் லிபேர்ட்டியில் நடக்கும் காட்சிப்போகப்போகின்றேன் உங்களுடன் போகப்போகின்றேன் எனச் சொல்ல என் நண்பர்கள் போனில் திட்டயதில் என் காதினூடாக இரத்தம் வடிகின்றது" என அழுதபடி சொல்ல நாங்களும் எல்லாம் நன்மைக்கே என அவரை அவர்களுடன் போகவிட்டுவிட்டோம். அவர் வந்திருந்தால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்பது பின்னர் தெரிந்தது.

ஏற்கனவே எங்கள் குழாம் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை காலி வீதியை அளக்கமுடிவு செய்திருந்தோம் நீண்ட நாள் அந்தப் பக்கம் போகவில்லை என்பதாலும் அத்துடன் தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் காலி வீதியை ரணகளப் படுத்துவது என தீர்மானித்தோம். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு ஆதவனுக்கு செல்வது முடிவாகிவிட்டது.



சுமார் 4.30 மணியளவில் வெள்ளவத்தைச் சந்தியில் எனக்காக காத்துக்கொண்டிருந்த கரனைச் சந்தித்தேன். இருவரும் செநதூரனின் வரவிற்காக காத்திருக்க சரியாக 5 மணியளவில் செந்தூரனின் வாகனம் இன்னும் 3 நண்பர்களுடன் வந்து சேர்ந்தது. உள்ளே நிமல், ராஜ், ஹரி என ஏனைய நண்பர்கள் மொத்தமாக 6 பேரும் கொன்கோர்ட்டை நோக்கிப் படை எடுத்தோம்.

வாசலில் ஒழுங்கு செய்த இந்துக் கல்லூரி மாணவர்கள் எம்மை அடையாளம் கண்டு உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டார்கள். ஒரு மாதிரி வாகனத்தை தகுந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போதுதான் செந்தூரன் தன்னிடம் இருப்பது பொக்ஸ் ஆசனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு என்று, அடப்பாவி ஏன் இந்தக் கொலை வெறி எனக்கேட்டால். தானும் மனைவியும் ஏனைய இரு நண்பர்கள் ஜோடிகளாக வரத் தானாம் திட்டம் போட்டார்கள் ஆனால் செந்தூரனின் மனைவியில் புத்திசாலித் தனத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏனென்றால் அவருக்குத் தெரியும் முதல் நாள் முதல் காட்சியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்யும் அட்டகாசங்கள். இதனால் பெரும்பாலான பெண்கள் முதல் நாள் காட்சிகளைத் தவிர்ப்பார்கள். இதனால் இதுவரை ஜோடிகளின் அரவணைப்பில் இருந்த பொக்ஸ்கள் ஆண்களை மட்டும் அனுமதித்தது.

உள்ளே சென்றால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. இளம் மாணவர்களை விட பச்சிளம் பாலக மாணவர்கள் அதிகமாக காண்ப்பட்டார்கள். அதில் சிலர் மட்டும் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். சரி இருவர் இருவராக 3 பொக்ஸ்குள் அமருவம் என நினைக்க அங்கே ரசிகர்களை ஒழுங்குபடுத்திக்கொண்ட மாணவர் ஒருவர் " அண்ணே குறை நினைக்கவேண்டாம் கூட்டம் அதிகம் என்பதால் ஒரு பொக்ஸ்க்குள் 3 பேர் அமருங்கள்" என்றான். அடப்பாவியளா? 2 பேர் இருக்கும் இடத்தில் 3 பேரா என மனதில் அவர்களைத் திட்டிக்கொண்டு நான், செந்தூரான், கரன் மூவர் ஒரு பொக்ஸினுள்ளும், நிமல், ஹரி, ராஜ் மூவரும் அடுத்த பொக்ஸினுள்ளும் அமர்ந்துவிட்டோம். .

அந்த சீட் சீரிபி பஸ் சீட்டை விட வசதி குறைவாகவே இருந்தது. எனக்கும் கரனுக்கும் பொக்ஸ் இதுதான் முதன் முறை( நம்புங்கள்) செந்தூரான் ஏற்கனவே வந்திருந்தபடியால் அந்த சீட்டின் அருமை பெருமைகளை எமக்குச் சொன்னார். என்ன செய்வது எங்கள் விதி இப்படி என நினைத்துக் கொண்டு மூன்று ஆண்களும் ஒரு மாதிரி அஜெஸ்ட் செய்தபடி இருந்து படம் பார்க்கத் தொடங்கினோம்.

ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது.

இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியில் படம் ஆரம்பமாகியது. சூர்யாவின் சிறுவயதுப் படம் காட்டியதில் இருந்து அவரின் பெயர்வரும் வரைக்கும் விசிலில் மழை பொழிந்தார்கள். சூரியாவிற்க்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அப்போதுதான் புரிந்தது.

பின்னர் நயனின் பெயர் வரவும் விசில் மழை. சூரியாவின் முதல் காட்சிக்கும் விசிலடித்த ரசிகர்கள் அதன் பின்னர் ஒரு மாதிரி படத்துன் ஐக்கியமாகியபடியால் இடையில் விசில் அடிக்கவில்லை. பின்னர் நயனின் முதல் காட்சிக்கு சூரியாவின் வருகையை விட விசில் அதிகம். எனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நயன் ரசிகர்கள் இருவரும் அவரின் காலில் இருந்து முகம் வரை கமெரா செல்லும் வரை விசில் அடித்தபடியே இருந்தார்கள். ஆனால் நயனின் முகத்தைப் பார்த்தவுடன் இருவரும் என்ன கொடுமை இது எப்படி எண்ணெயாக முகம் இருக்கின்றதே என நயனுக்காக கவலைப்பட்டார்கள்.

இப்படியே விசில் கைத‌ட்டுகள், சிரிப்புகள் எனப் படம் போய்க்கொண்டிருந்தது. இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார். இடைவேளையும் வந்தது.

இடைவேளையின் போது நானும் கரனும் போய் 6 பேருக்கும் குளிர்பானங்கள் வேண்டிவந்தால் எமக்கு அடுத்த பொக்ஸில் இருந்த நண்பர்கள் நாம் குளிர்பானம் குடிப்பதில்லை சூடான பானம் தான் அருந்துவோம் என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். திரும்ப உடைத்த குளிர்பானத்தைக் கொடுக்கமுடியாது என்பதாலும் எங்கள் எஞ்சின்கள் எத்தனை லீற்றரையும் தாங்கும் என்பதாலும் நாம் இரண்டு இரண்டு குடிப்பது என முடிவு செய்தாயிற்று, பின்னர் செந்தூரன் மிக்சரும் வாங்கிவந்தார். இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியபின்னர் இடையில் என் நண்பி ஒருவர் போன் பண்ணினார், அவர் என்னை எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க நான் படம் பார்க்கின்றேன் எனச் சொன்னேன். அதற்க்கு அவர் பக்கத்தில் இருக்கும் நிமலுக்கு ஒரு ஹாய் சொல்லிவிடுங்கள் என்றார். நான் அவரை நிமல் என்னுடன் இருப்பது எப்படித் தெரியும் எனக் கேட்க நிமல் பேஸ்புக்கில் ஆதவன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என ஸ்டேடஸ் மெசேஜ் அடித்திருக்கின்றார் என்ற உண்மையைச் சொன்னார். எப்படியெல்லாம் பேஸ்புக்கை உபயோகிக்கின்றார்கள்.

கடைசியில் கே,எஸ்,ஆர் கிளைமாக்ஸில் சொதப்பியதால் நாம் மனம் நொந்து தியேட்டரை விட்டு வெளியே சென்றால். அடுத்த காட்சிக்கு மக்கள் கூட்டம் வழிந்தது, நாம் சென்ற வாகனத்தின் முன்னால் இன்னொரு வாகனம் நின்றது. அந்த வாகனம் எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதால் அந்த கூட்டத்தில் தெரிந்த முகம் யாராவது நிற்கின்றார்களா? எனப் பார்த்தால் வலைப் பதிவர் ஒருவர் நின்றார். அவருக்கு யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற எங்கள் கொள்கைக்காக படம் சூப்பர் கலக்கல் என நல்ல கருத்துகளைத் தெரிவித்தோம்.

இது நேரம் லிபேர்ட்டியில் இருந்து பாலா தொலைபேசியில் படம் எப்படி எனக் கேட்டான் அவனுக்கும் எங்கள் கொள்கைப் படி நல்ல கருத்துக்களைச் சொன்னோம். படம் முடிந்தபின்னர் சாமத்தில் அவன் எங்களை தொலைபேசியில் திட்டியது இன்னும் காதினுள் நிற்கின்றது.

இதே நேரம் என் நண்பன் சஞ்சீவ் இருவராக வந்துகொண்டிருந்தான், அவனும் அவன் நண்பர்களும் பக்கத்தில் இருந்த தாகசாந்தி நிலையத்தில் தாகம் தீர்த்துவிட்டு வந்திருக்கின்றார்கள் எனபது தெரிந்தது. அவனுக்கும் படம் நல்லது எனச் சொல்லிவிட்டோம்.

ஒருமாதிரி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரவர் வீடுகளிற்க்குத் திரும்பிவிட்டோம். வீட்டிற்க்கு வந்து கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஆதவன் விமர்சனம் எழுதிக்கொண்டிருக்க, நண்பன் சஞ்சீவ் தொலைபேசியில் பிரபல பெண்பதிவர்கள் இருவர்கள் தியேட்டரில் இருக்கின்றார்கள். அத்துடன் இன்னும் இரண்டு ஆண் பதிவர்களும்(தனித் தனியாக) இருக்கின்றார்கள் என்ற தகவலைத் தந்தான்.

11.15 அளவில் என்னுடய விமர்சனத்தை வலையேற்றிவிட்டு மூஞ்சிப்புத்தகத்தில் தோட்டம் செய்துகொண்டிருக்க நண்பன் லோஷன் தானும் படம் பார்த்து விமர்சனம் எழுதியிருப்பதாகவும் அதனைப் பார்க்கவும் என தகவல் அனுப்பினார். அவரது விமர்சனத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடுத்த காட்சி முடிந்து சஞ்சீவ் எனக்கு தொலைபேசியில் ஒரே கிழியல் அவன் சொன்னதில் ஹைலைட்டான விடயம் " 500 ரூபா ரிக்கெட் வாங்கியதற்க்குப் பதில் இன்னும் 3 போத்தல் வாங்கியிருக்கலாம்" என்றான்.

அதே நேரத்தில் இன்னொரு பதிவரான புருஷ் "இரண்டு பிரபல பெண் பதிவர்கள் படம் பார்த்துவிட்டு பேயறைந்தமாதிரி இருக்கின்றார்கள். ஆதவன் படம் பெரிதாக நல்லாயில்லை ரிஸ்க் எடுக்கவேண்டாம்" என எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்கு நான் முதல் காட்சியில் ரிஸ்க் எடுத்த கதையைச் சொல்ல மனிதன் சிரித்த சிரிப்பு கொழும்பு முழுக்க கேட்டிருக்கும்.

எது எப்படியோ ஆதவன் படம் பார்த்த அனுபவம் என்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது. ஏற்கனவே படையப்பா, குஷி இரண்டு படங்களும் இதைப்போல தான் ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கொடுத்த படங்கள்.

டிஸ்கி : மெஹா ஹிட் ஆதவன் எனத் தலைப்பிட்டிருக்க காரணம் என் ஆதவன் பதிவிற்க்கு இதுவரை 3000 மேற்பட்ட ஹிட்ஸ் வந்திருக்கிறது. அத்துடன் கடந்த சனிக்கிழமை மட்டும் 2500 ஹிட்ஸ். என் பதிவுகளில் ஆதவன் மெஹா ஹிட் தான்.

ஆதவன் - திரை விமர்சனம்

சூர்யா

ஆரம்பம் முதல் முடிவு வரை சூர்யாவின் ராட்சியம் தான். முதல்பாதியில் வடிவேலுடன் சேர்ந்து கலகலக்க வைக்கின்றார். பல இடங்களில் மெய் மறந்து சிரிக்கச் செய்கின்றார்கள். சண்டைக்காட்சிகளில் அயன் பாதிப்பில் இருந்து சூர்யா மாறவில்லைபோல் தெரிகின்றது.

நயனுடன் பாடல் காட்சிகளில் நல்ல கெமிஸ்ரி இருக்கிறது. ஆனாலும் படத்தில் சூர்யாவிற்க்கும் நயனுக்குமிடையில் சொல்லிக்கொள்ளும்படி காதல் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் முரட்டுத் தனமான சூர்யாவைக் காணக்கூடியதாக இருக்கிறது. வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லென்று ஒரு காதல் போன்ற படங்களில் காட்டிய நடிப்பை விட குறைச்சலாக சூர்யா நடிச்சாலும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு என்ற படியால் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக விருது கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம்.



படம் தொடங்கும் போது சூரியாவின் சிறுவயதுப்படங்கள் தொடங்கி ஜோதிகா மற்றும் அவரின் குழந்தையுடன் நிற்க்கும் குடும்பப் படம் வரை காட்டிவிட்டு டைட்டிலில் சூர்யா எனக் காட்டுகின்றார்கள். சூர்யாவும் மாயவலைக்குள் விழுகின்றாரோ போன்ற எண்ணம் ஏற்படுகின்றது.

சூர்யாவைப் படத்தில் 10 வயதுத் தோற்றத்தில் காட்டுவது எரிச்சலைத் தான் தெருகின்றது. அவருக்குப் பொருந்தவேயில்லை.

நயன்தாரா

முதல் காட்சியிலையே ஜிம் உடையுடன் தோன்றினாலும் எண்ணை அப்பிய முகமாக அந்தக் காட்சியிலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பாடலிலும் முகத்தை ஒப்பனை செய்து முகம் சுழிக்கவைக்கின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த நயன் ரசிகர்கள் இருவரும் நயனின் அழகு குறைந்துகொண்டே வருகின்றது எனக் கவலைப்பட்டார்கள்.

வில்லுப் படத்தைப்போல் பாடல்களில் வந்துபோனாலும் ஏனோ அவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை. மற்றும்படி வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகிதான். தியேட்டரில் இருந்த பச்சிளம் பாலகர்கள் கூட நயன் வர விசில் அடிக்கின்றார்கள்.

வடிவேல்

படத்தின் அச்சாணியே இவர்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வின்னர் கைப்புள்ள போல் நினைவில் நிற்க்கும் பனர்ஜி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுடன் செய்யும் அலும்புகள் அதிலும் அவ்ரா பாலத்தில் இவர் செய்யும் கூத்துகள் சிரிப்பொலியிலும் ஆதியாவிலும் இனி அடிக்கடி ஒளிபரப்பாகும். துணைக்கு வேறு ஒருவரையும் வைத்திருக்காமல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதையுடனும் கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கி எடுத்திருக்கிறார்.

கதை

நொய்டாவில் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க வருகின்ற நீதிபதியைக் கொல்லும் கும்பலின் கதை. நீதிபதியைக் கொல்ல்வேண்டியதற்கான‌ காரணத்தை இன்னும் கொஞ்சம் காத்திரமாகச் சொல்லியிருக்கலாம். நடிகர் ரமேஸ்கண்ணாவின் கதை.

திரைக்கதை, வசனம்

கேஎஸ்.ரவிகுமார் திரைக்கதையுடன் வசனத்தையும் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே பார்த்த சில படங்களின் திரைக்கதை போல் இருந்ததாலும் அதிலும் சில காட்சிகள் வாரணம் ஆயிரம், அயன் போன்ற படங்களில் சூர்யாவே செய்தவை. அடுத்து வரும் வசனத்தையும் காட்சியையும் முன் சீட் சின்னப் பொடியனே சொல்லுகின்ற அளவுக்கு காத்திரமில்லை. அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என இலகுவாக ஊகிக்கூடிய காட்சிகள். போரடிக்காமல் திரைக்கதையை ரவிகுமார் அமைத்திருந்தாலும் இறுதிக் காட்சியில் தடுமாறி சொதப்போ சொதப்பு எனச் சொதப்பிவிட்டார். தசாவதாரம் இறுதிக்காட்சி அமைத்தவரா? (ஓஓ தசாவதாரம் திரைக்கதை வசனம் கமல்)எனக்கேட்க வைக்கின்றார். சிலவேளைகளில் தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்ற அவசரத்தில் தடுமாறிவிட்டாரோ தெரியவில்லை.



இயக்கம்

தசவாதாரத்தில் சதமடித்த கே.எஸ்.ரவிகுமார் இதில் ரன் அவுட்டாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதேயளவு பிரமாண்டம் படத்தில் இல்லாவிட்டாலும் பல இடங்களில் லொஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லொஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.

ஒளிப்பதிவு

கணேசின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. கொல்கத்தாவை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார். அவ்ரா பாலமும் அதனைச் சூழந்த நீர்நிலைக் காட்சிகளும் குளிர்மை.

இசை

ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே பாடல்களை ஹிட்டாகியதை எவ் எம் வானொலிகள் மூலம் கேட்டாலும் பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை. முதல் சண்டையில் தகரக் கடைக்குள் யானைகள் புகுந்தது போல் அவ்வளவு சத்தம். நல்ல இனிமையான பின்னணி கொடுக்க காதல் காட்சிகள் இல்லையென்பதும் இன்னொரு குறை.

சண்டைப் பயிற்சி

கனல் கண்ணன், தென்னாபிரிக்காவின் பிரான்ஸ் ஸ்பில்ஹாஸ் இருவரும் சண்டைக் காட்சிகள் இயக்கியிருக்கின்றார்கள். முதலாவது சண்டை அச்சு அசல் அயன் கொங்கோ சண்டைபோல் இருக்கின்றது.

படத் தொகுப்பு

டான் மேக்ஸின் படத் தொகுப்பு படத்தின் பலம். சில பார்த்த காட்சிகள் தான் என்றாலும் போராடிக்காமல் தொகுத்திருக்கின்றார். படத் தொகுப்பின் வேகம் படத்தின் இன்னொரு பலம்.

தயாரிப்பு

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றார். இன்னும் அவர் குருவியில் இருந்து மீளவில்லை என்பது சில காட்சிகளில் தெரிகின்றது.

சரோஜாதேவி, மறைந்த நடிகர் முரளி, ஷயாயி ஷிண்டே, அனுஹாசன், ரமேஸ்கண்ணா, பெப்சி விஜயன், ரியாஸ்கான் உட்பட பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றது.

அபிநய சரஸ்வதி சரோஜாதேவியை அதீத ஒப்பனையுடன் வழக்கமான அவரின் எம்ஜிஆர் புராணங்களுடன் உலாவவிட்டிருக்கின்றார்கள்.

முஸ்லீம்களை கூலிக்கு கொலைசெய்பவர்களாகவும் கொல்கத்தா பிராமணர்கள் மீன் சாப்பிடுவதையும் காட்டியிருக்கின்றார்கள். ( படத்தில் பிரச்சனைகள் கிழப்பவேண்டும் என்றால் இவைதான் பிரச்சனையானவை).

மொத்தத்தில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் அற்ற குடும்பத்துடன் நகைச்சுவைக்காக ஒரு தடவை பார்க்ககூடிய சிறந்த பொழுதுபோக்குப் படம்.

ஆதவன் - அதீத‌ எதிர்பார்ப்பு குறைந்த பலன்

டிஸ்கி : வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் தவிர்த்த ஏனைய பண்டிகைகள் கொண்டாடுவதில் விருப்பமில்லாவிட்டாலும் உலகமே கொண்டாடுகின்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன்.

நரகாசுரனை அழித்ததற்காக தீபாவளியைக் கொண்டாடுவதாக வரலாறு கூறினாலும் உலகில் இன்றைக்கும் பல நரகாசுரன்கள் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எங்களிடம் இருக்கும் நரகாசுரன்களான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்றவை அழிகின்றன நாளும் தீபாவளியே.

என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி.

கிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜனி

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. "

என்பது வள்ளுவரின் திருவாக்கு. நட்பு என்பது விலைமதிக்க முடியாதது. புராண காலங்களில் கிருஷ்ணன் குசேலன் நட்பையும் கர்ணன் துரியோதனன் நட்பையும் நட்புக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள். இவர்கள் நட்பை விட சிறந்த நட்பாக இந்தக் காலத்தில் சொல்லகூடிய நட்பு கமல் ரஜனி நட்பாகும்.

கமல் 50 விழாவில் தான் இவர்களின் நட்பின் உச்சக் கட்டத்தைப் பலர் பார்த்திருப்பார்கள். ரஜனி சினிமாவில் காலெடி எடுத்து வைத்த காலம் முதல் கமலுடனான நட்பை எந்தக் கட்டத்திலும் கைவிடவில்லை.




தமிழ்த் திரையில் போட்டியாளர்களான இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நட்புப் பாராட்டினார்களே ஒழிய என்றைக்கும் பொறாமைப் பட்டதில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருந்தாலும் கமலின் படங்கள் ஒரு திசையிலும் ரஜனி படங்கள் இன்னொரு திசையிலும் இருந்தன.

எத்தனையோ பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் ரஜனியும் சரி கமலும் சரி தங்கள் நட்பை என்றைக்கும் உயர்த்தியே கூறிவந்தார்கள். அபூர்வராகங்கள் படத்தில் இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பின்னர் பல படங்கள் இணைந்து நடித்தாலும் இந்த இரண்டு போட்டிக் குதிரைகளையும் வைத்து பலர் பணம் பண்ண இருக்கும்போது தனித் தனியாக நடித்தால் இருவருக்கும் பெயரும் பணமும் கிடைக்கும் என்ற கமலின் கருத்துப் படி இருவரும் பிரிந்து தனித் தனியே அவர்கள் பாணியில் நடித்தார்கள்.

கமல் 50 பிரமாண்ட விழாவில் ரஜனி கமலைப் பற்றிக் தன் பாணியில் கூறியவை :
" அபூர்வ ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப் போட வேணாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனால், கமல் அப்படிச் சொல்லலை. " அத்துடன் கமல் தான் என்னுடைய கலையுலக அண்ணா என கமலைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.

வேறு எந்த நடிகர்களும் இப்படிச் சொல்வார்களா? ரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவர் ரசிகர்களிடம் காணக்கிடைப்பதில்லை.



நிகழ்ச்சி தொடங்கமுன்னர் திவ்யதர்சினி ரஜனி கமல் இருவரிடமும் பேசும் போது கமலிடம் கேட்டார் " சிவாஜி படத்தில் ரஜனி சிவப்பாக மாற முல்தானி மெட்டி பூசிய பின்னர் தான் கமலஹாசன் கலரில் வருவேன்" என கமலின் கலரைப் போற்றுவார், இதனைப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள் என திவ்யதர்சினி கமலிடம் கேட்டபோது "அவர் இதனை விட இன்னும் சொல்லுவார், அவரின் மனதின் கலர் அது" என்பார் அந்த நேரம் ரஜனியின் முகத்தில் ஏற்படும் மாற்றம் உண்மையான நட்பு அதுதான் எனக் காட்டும்.

பின்னர் விழாவின் இறுதியில் கமல் பேசும்போது "சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்? அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில் யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். எங்கள் முதல் ஜெனரேசனில் இப்படியான நட்பு எவரிடமும் இல்லை," என்ற கமல் அடுத்த ஜெனரேசனிடம் நான் சவால் விடமாட்டேன் எங்கள் நட்பை விட உங்கள் நட்பு உயர்ந்ததாக இருக்கவேண்டும் என வேண்டுகோளூம் விடுத்தார்.

ரஜனிக்கும் கமலுக்கும் இருக்கும் நட்புபோல் ஏனோ இருவர் ரசிகர்களிடம் இருப்பதில்லை. அதிலும் ரஜனி ரசிகர்கள் கமல் ரசிகர்களை எதிரிகளாகத் தான் பார்ப்பார்கள். பெரும்பாலான கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்துப் பார்த்தாலும் கிண்டல் செய்யமாட்டார்கள் ஆனால் ரஜனி ரசிகர்களோ கமல் படங்களில் சின்ன தவறையும் பெரிதாக எடுத்து கிண்டலடிப்பார்கள்.

சில காலங்களுக்கு முன்னர் வார்த்தைகளால் சண்டைபோட்ட ரசிகர்கள் இப்போ தம் வலைகளினூடு சண்டைபோடுகின்றார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சிலர் கமலைத் திட்டுவதற்க்கே தனிவழியாக வலை வைத்திருக்கிறார்கள்.

எந்த மனிதரிடமும் பலமும் பல்வீனமும் இருக்கும். கமல் மேல் கல் எறிபவர்களில் ஒரு கேள்வி முதலில் உங்களைச் சுத்தம் செய்துகொண்டு கமல் மேல் கல்லெறியுங்கள்.

என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பன் ஒருத்தன் ரஜனி பைத்தியம் ( பைத்தியம் என்பது சிறந்த சாதாரண ரசிகனை விட சிறந்த ரசிகன்) நான் கமல் ரசிகன்( பைத்தியம் அல்ல)ஆனால் இருவருக்கும் என்றைக்கும் எந்த சண்டையும் சச்சரவும் வருவதில்லை காரணம் எமக்குள் இருக்கும் புரிந்துணர்வு ஆனால் இந்தப் புரிந்துணர்வு பலரிடம் இல்லாமல் இருக்கின்றது.

பெரும்பாலன கமல் ரசிகர்கள் அன்பே சிவம் நல்லசிவம் போலவே இருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் "பிழைத்துப் போகட்டும்" என பெரும்தன்மையாக விட்டுவிடுவார்கள். இதுவே இவர்களின் பலமும் பலவீனமும்.

ரசிகர்கள் எப்படித் தங்களுக்குள் அடிபட்டாலும் இந்த நூற்றாண்டின் சிறந்த நண்பர்கள் உலகநாயகன் கமலும் சூப்பர் ஸ்டார் ரஜனியும் தான் என்பது நட்பை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

ஹாட் அண்ட் சவர் சூப் 14-10-09

கமல் பொன்விழா

ஒருபடியாக விளம்பரங்களுக்கு மத்தியில் கமல் 50 பிரமாண்ட இறுதி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிமுடித்துவிட்டது. விஜய் என்றாலே வித்தியாசம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியையும் வித்தியாசமாகவும் ஒழுங்காவும் நன்கு திட்டமிடலுடனுன் நடத்தி முடித்துள்ளார்கள். நிகழ்ச்சி பற்றி எழுத எத்தனையோ விடயங்கள் இருந்தாலும் ரஜனி கமல் நட்புத்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்தாலும் ஏனோ ரஜனி ரசிகர்கள் கமலை விமர்சிப்பதுபோல் விமர்சிப்பதில்லை. ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? . நிகழ்ச்சி பற்றியும் இவர்கள் நட்பு பற்றியும் தனிப்பதிவுகள் விரைவில். (கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க).

சூரியாவும் மன்னிப்பும்

புவனேஸ்வரியின் விவகாரத்தால் கொதித்துப்போன நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை தினமலருக்கு தெரிவித்த கூட்டத்தில் சகல பத்திரிகையாளரையும் ஒரு பிடிபிடித்த நடிகர் சூரியா தான் அப்படிச் சொல்லவில்லை என பல்டி அடித்ததுடன் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். உடனே இவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் என சின்னக் குழந்தைக்கும் தெரியும் காரணம் தீபாவளிக்கு இவரின் படம் வெளியாகப்போகின்றது. பத்திரிகைகளைப் பகைத்தால் படத்திற்க்கான சரியான விமர்சனம் (?) கிடைக்காது என்ற சுயநலமே ஒழிய வேறு இல்லை. சூரியா உங்களின் நடவடிக்கைகளும் உங்கள் தந்தையின் நல்ல குணங்களும் உங்களிடமும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணத்தில் உங்களைப் பற்றிய கறுப்புப் புள்ளி படிய வைத்துவிட்டீர்கள். ஒன்று மட்டும் நிச்சயமாக கூறமுடியும் உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

யாழ்தேவியும் தினக்குரலும்

சில நாட்களுக்கு முன்னர் யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்க்கும் தினக்குரல் பத்திரிகைக்கும் நடைபெற்ற கலந்துரையாடலில் தினக்குரல் பத்திரிகை ஞாயிறு தினக்குரலில் யாழ்தேவி திரட்டியில் இணைக்கப்பட்ட வலைகளில் வெளியாகும் காத்திரமான கட்டுரைகளை தினக்குரலில் வெளியிட சம்மதம் கொடுத்திருக்கின்றது. ஏற்கனவே இருக்கிறம் சஞ்சிகையில் வலைப்பதிவர்களின் ஆக்கங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தவேளையில் இந்தச் செய்தியும் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இதன் மூலம் இலைமறை காயாக இருக்கின்ற வலைப்பதிவர்கள் வெளியே தெரியவரும் வாய்ப்பு வரும். திரட்டிகளில் இணைப்பதன் மூலம் பல வாசகர்களை உங்கள் கருத்துகள் சென்றடைவதுபோல் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் இணைய வசதி இல்லாதவர்களும் உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்ளமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு: யாழ்தேவி

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 12 அணிகள் கலந்துகொண்டுள்ளன. ஐபில் அணிகளாக பெங்களூர், டெல்லி மற்றும் தற்போதைய சம்பியனான டெக்கான் விளையாடுகின்றன. சில போட்டிகள் விறுவிறுப்பு குறைந்தனவாக இருந்தாலும் நேற்று ஈகில்ஸுக்கும் சசெக்ஸ்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி சமநிலையில் முடிந்ததனால் ரி20 போட்டி நிபந்தனைகளின் படி சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சூப்பரில் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈகில்ஸ் 10 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. 11 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய சசெக்ஸ் சிஜேடி வில்லியர்ஸின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை எடுக்காமல் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் டெக்கானின் தலையெழுத்து தெரிந்துவிடும். அடுத்த சுற்றுப் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்

புவனேஸ்வரி அண்மைக் காலமாக தமிழக ஊடகங்களில் பிரபலமான பெயர். சின்னத்திரையில் பெரிய வேடங்களிலும், பெரிய திரையில் சிறிய வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகை. சில நாட்களுக்கு முன்னர் விபச்சார வழக்கில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். விசாரணைகளில் சில பிரபல நடிகைகளின் பெயர்களை விபச்சாரம் செய்கின்ற ஏனையவர்கள் என இவர் காவல் துறையிடம் கூறியதாக நடிகைகளின் பெயர்களுடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.

புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை வெளியிட்ட தினமலரைக் கண்டித்து நடிக, நடிகைகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில் பெரும்பாலன நடிகர்கள் ஆற்றிய உரைகள் ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டதுடன் மிகவும் கீழ்த்தரனமானவையாகவும் இருந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் தமிழக காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் லெனின் கைதுக்கு பத்திரிகையாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடித்தினார்கள்.



புவனேஸ்வரி விடயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் நடுநிலமையைத் தவறவிட்டுவிட்டார்கள். தினமலரில் புவனேஸ்வரி கொடுத்த விபரங்கள் சரியோ பிழையோ. ஆனால், அதன் பின்னர் நடிக, நடிகைகள் பேசிய தரங்குறைந்த உரைகளைக் கூட இவர்கள் வெளியிடவில்லை.

சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிச் செய்திகளின் நம்பகத் தன்மை என்பது செத்து பல காலமாகிவிட்டது. உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இடம் பெற்றபோது சன்னின் தலைப்புச் செய்தி "காதலில் விழுந்தேன் வெற்றி" என்பதே. வழக்கமாக விபச்சார குற்றச்சாட்டில் சாமானியர்களை காவல்த்துறை கைது செய்தால் அதனை செய்தியாக்கி அந்தப் பெண்களை தொலைக்காட்சியில் காட்டும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் புவனேஸ்வரி விவகாரத்தில் ஏனோ அடக்கிவாசித்தது, தங்களது சகபாடியான இன்னொரு ஊடகமான தினமலரையும் ஊடகவியளாளர்கள் அனைவரையும் நடிகர்கள் திட்டியபோதும் இவர்கள் சார்ந்த எந்த ஊடகமும் கண்டுகொள்ளவேயில்லை.

நடிகர்களைப் பகைத்தால் இவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வது? இதனால் வழக்கம்போல் ‘நினைத்தாலே இனிக்கும்’ வெற்றியும், மைனாரிட்டி தி.மு.கவைத் திட்டுவதும், தமக்குத் தாமே பாராட்டுத் தெரிவிப்பதும் மட்டும் தமிழக தொலைக்காட்சிகளில் அதிகம் செய்திகளாகின.

பல வருட பாரம்பரியம் மிக்க விகடனோ சில காலத்திற்கு முன்னர் ஜூனியர் விகடனில் “இவர் தான் உங்க ஹீரோ” என ராமராஜன் முதல் பரத் வரை அனைத்து நடிகர்களினதும் உல்லாசக் கதைகளை எழுதி வியாபாரம் செய்தவர்கள் தினமலருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த செய்திகளை அப்படியே இருட்டடிப்புச் செய்தார்கள். இவர்களின் விபச்சாரத்திற்கு மன்னிக்கவும், வியாபாரத்திற்கு இலங்கைச் செய்திகள் இருக்கவே இருக்கின்றது. பத்திக்கிச்சு என்ற பெயரில் நடிக நடிகைகளின் கிசுகிசுக்களையும் “ஒரு நடிகையின் கதை” என ஒரு நடிகையின் உண்மைக் கதையை எழுதிய குமுதமும் தன் பங்கிற்க்கு அடக்கியே வாசித்தது.

பல விடயங்களில் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் கைவிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த விடயத்திலும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன.

படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும், சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். சில காலங்களுக்கு முன்னர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கன்னடப் பிரசாத் பல நடிகைகள், நடிகர்கள் (ஆண் விபச்சாரர்கள்) பற்றிய விபரங்களை வெளியிட்டபோது ஆத்திரம் கொள்ளாத சூப்பர் ஸ்டார்களும், சுப்ரீம் ஸ்டார்களும், புரட்சித் தமிழர்களும் புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தால் கோபப்பட்டது புதுமைதான்.

சில காலங்களுக்கு முன்னர் திரையுலகம் சம்பந்தப்பட்ட சிலரை தமிழக அரசு கைது செய்தபோதும், அவர்களின் சொத்துக்களை குண்டர்கள் நாசமாக்கிய போதும் இவர்களின் ஒற்றுமை எங்கே போனது? பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக்கின் கண்ணியமற்ற பேச்சு அவருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு அவமானமே. பத்மசிறியை திரும்ப பெறலாம் என்றால் மத்திய அரசு அவரிடம் இருந்து அந்த விருதைத் திரும்ப பெறவேண்டும்.

இத்தனைக்கும், தன்னைப் பத்திரிகையாளர் எனவும் திரைப்படத்துறை சேர்ந்தவர் எனவும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்படத்துறையினருக்கே தன்னுடைய ஆதரவை அதிகம் கொடுக்கின்றார். நடிகர்களை சந்திக்க எடுக்கும் சிரத்தையை இவர் ஏனையவர்களைச் சந்திக்க எடுப்பதில்லை. இவரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இவர் தமிழக மக்களின் முதல்வரா? இல்லை தமிழக நடிகர்களின் முதல்வரா? என்ற சந்தேகம் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களுக்கு வருகின்றது.

அதே நேரம் ஊடகங்களும் எத்தனையோ விவாதிக்க வேண்டிய சமூக கலாச்சார விடயங்கள் இருக்க அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்காமல் திரைப்பட நடிகர்களை வைத்து விற்பனையைப் பெருக்குவதற்காக அவர்களின் பேட்டிகள், செய்திகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றது. சிலவேளைகளில் அத்துமீறி அவர்களின் அந்தரங்கங்களிலும் தன் கைவரிசையைக் காட்டிவிடுகின்றது. திரைப்பட நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் தனி நபர்கள் என்ற விடயத்தை ஏனோ இவர்கள் மறந்துபோகின்றார்கள்.

எது எப்படியோ புவனேஸ்வரி கிளப்பிய புயல் முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களின் இருட்டடிப்பினாலும் அடங்கிப்போயுள்ளது. இதே நேரம் சில அரசியல் ஆதாயங்களுக்காக புவனேஸ்வரி கைதும் அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகளும் ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவரினால் கதை, வசனம் எழுதப்பட்டு இயக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். எதிர்காலத்திலும் புவனேஸ்வரிகள் கைதுசெய்யப்படுவார்கள், விடுதலையுமாவார்கள். ஆனால், ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்வையும், தொழில் தர்மத்தையும் விட்டுக்கொடுக்கலாமா.


டிஸ்கி: பிரபலமான செய்திகளை பதிவுகளாக்காமல் விட்டால் பதிவுலகச் சட்டத்தின் 525ஆம் பிரிவின் படி குற்றம் என்பதால் ஏதோ என்னால் முடிந்தளவு சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.

பெண்கள் பெண்கள் தான் - 18+

இந்த காணொளியைப் பாருங்கள். மேலதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன். ஆண்களே கவனமாக இருக்கவும்.

ஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2

முதல் பகுதியில் என்னுடைய சிறு பராயத்தில் நடித்த நடிகைகளில் நான் ரசித்தவர்களில் ஐந்து பேரைப் பற்றி எழுதியதில் கிடைத்த வரவேற்புக்கு நன்றிகள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தாலும் 5 பேரை மட்டுமே குறிப்பிட்டேன். நண்பர் டொன்லீ ஒரு படி மேலே போய் ஹோலிவூட், பாலிவூட் நடிகைகள் பற்றியும் ஜொள்ளச் சொன்னார். அடுத்த அடுத்த பதிவுகளில் ஹிந்தி ஆங்கில ஜொள்ளுகள் வரலாம்.

இந்தப் பதிவில் நான் கட்டுக்கடங்காத காளையாக இருக்கின்ற இக்காலத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நடிகைகள் பற்றிய ஜொள்ளு மழை தூறப்போகின்றேன். தயவு செய்து மழை சூறாவளியாகாமல் பார்ப்பது உங்கள் கடமை.

முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம் - ஸ்ரீதேவி முதல் அசின் வரை

சிம்ரன்

97களில் பார்க்கின்ற பெண்கள் எல்லாம் அழகாத் தெரிந்த காலம். தமிழ்சினிமாவைப் புரட்டிப்போட மும்பையிலிருந்து ரிஷிபாலா என்ற இயற்பெயருடைய‌ சூறாவளி "ஓன்ஸ்மோர் " என்ற படம் மூலம் சிம்ரனாக வீசியது. ஓன்ஸ்மோர், விஜபி என ஆரம்பத்தில் நடித்த இரண்டுபடங்களிலும் ஏனோ சிம்ரன் கவரவில்லை.

"மனம் விரும்புதே உன்னை" என நேருக்கு நேரில் பாடி சூரியாவை மட்டுமல்ல என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனதை அவள் வருவாளா என கொள்ளை கொண்டவர். அந்தப் பாடலின் அவரின் இடுப்பசவைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உலகே ஒரு கணம் அதிர்ந்தது. சட்டென்று சலனம் வரும் என சிம்ரனின் இந்தப் பாடலைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.



குஷ்புகள் ரம்பாக்கள் எல்லாம் Floppy disk போல் தூக்கி எறியப்பட்டு சிம்ரன் file எங்கள் ஹார்ட்(Heart) டிஸ்க்களில் சேமிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கும் Format செய்து அழிக்கமுடியாத ஒரே ஒரு System file சிம்ரன்.

அதன் பின்னர் சிம்ரனுக்காக சில மொக்கைப் படங்களைக்கூடப் பார்க்கவேண்டியிருந்தது. பின்னர் கண்ணெதிரே தோன்றினால் ப்ரியாவும் வாலி ப்ரியாவும் மனதில் ஒட்டிக்கொண்டார்கள். இரண்டு படங்களில் தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்த சிம்ரனை துள்ளாத மனமும் துள்ளும் படம் உச்சத்திற்க்கு இட்டுச் சென்றது எனலாம்.

பின்னர் சில காலம் மொக்கைப் படங்களில் வந்து போனார். 2000ல் பார்த்தேன் ரசித்தேனில் வில்லியாக தன் நடிப்பின் இன்னொரு கோணத்தைக் காட்டினார். இந்தப் படம் பார்க்கும் போது என் நண்பன் ஒருவன் என்ன சிம்ரனுக்கு ஒரு பாடலையும் காணவில்லை என்ற போது "தின்னாதே" பாடலில் ஆடிய ஆட்டம் முழுப் படத்தையும் தின்றுவிட்டது என என் நண்பன் சொன்னான்.

பிறகு ப்ரியமானவளே, பார்த்தாலே பரவசம், 12பி என சில படங்களில் தன் நடிப்பைக் காட்டியவர். மீண்டும் இடையில் சில மொக்கைப் படங்கள்.

இந்த நேரத்தில் அவருக்கு கை கொடுத்தவர் எங்கள் உலகநாயகன் பம்மல்.கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் என அடுத்த இரண்டு படங்களிலும் ஜானகி, மைதிலியாக கமலுக்கு இணையாக நடித்திருந்தார். கமலுடன் நடித்த ராசியோ என்னவோ அடுத்து மணிரத்னம் படமான கன்னத்தில் முத்தமிட்டாலில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது, ப்லிம்பேர் அவார்ட் என நான்கு விருதுகள் கிடைத்தன.

இதன் பின்னர் தமிழ்சினிமாவைக் கலக்கிய சில நடிகைகளின் வரவால் சிம்ரன் பின்னடைந்தாலும் சென்ற வருடம் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மாலினியாக சிம்ரன் தன் முத்திரையைப் பதித்திருப்பார்.

ஜோதிகா

சிம்ரன் என்ற சூறாவளி வீசிக்கொண்டிருந்த ஆண்டில் அந்த சூறாவளியுடன் சேர்ந்து நடிக்க வாலி படத்தில் சோனாவாக அறிமுகமானவர் ஜோதிகா. முதல்ப் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது விழிகளும் தமிழர்களுக்குப் பிடித்தமான கொஞ்சம் குண்டான உடலும் தமிழ்நாட்டின் சொத்தாக அவரை மாற்றிவிட்டது.

இவர் நடித்து வெளிவந்த முதல் படம் வாலியாக இருந்தாலும் அறிமுகமான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். அதில் சுடிதார் அணிந்த சொர்க்கமாக மாறி சூரியாவின் தூக்கத்தை மட்டுமல்ல பலர் இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுத்தவர்.



அஜித், விஜய், சூரியா, பிரசாந்த், மாதவன் என இளம் நடிகர்களுடன் அதிகமாக நடித்தவர். சூரியாவுடன் தான் அதிகமான படங்கள் நடித்தவர். தெனாலியில் ஜானகியாக கமலுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் வேட்டையாடு விளையாடுவில் ஆராதனா என்ற இன்னொரு வித்தியாசமான பாத்திரம் என பல்வேறு வகையான நடிப்புகளைக் காட்டினவர்.

கவர்ச்சி சுனாமிகளுக்கு மத்தியில் தமிழ்சினிமாவில் தென்றலாக வீசியவர் ஜோதிகா தான். எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகியாக ரஜனியுடன் தன் சிறப்பான நடிப்பில் பலருக்கு பயம் காட்டியவர்.

ஜோதிகா சிறந்த நடிகையாக இருந்தாலும் பலருக்கு கனவுக் கன்னியாக ஏற்கமுடியவில்லை இதற்கான காரணமாக அவரின் சூரியாவுடனான காதலைக் கூறலாம். திருமணத்தின் நடிக்க வராதது தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த துரதிஷ்டம்.

சினேகா

அழகான அடக்கமான தமிழ்பெண் எப்படி இருப்பாரோ அப்படியான Girls next door தோற்றம். இவரின் புன்னகையாலே பல இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். நதியா போல் உடைகளைத் துறந்து கவர்ச்சி காட்டாமல் தன் சிரிப்பினாலேயும் நடிப்பினாலேயும் பலரைக் கவர்ந்த புன்னகை இளவரசி.

என்னவளேயில் அறிமுகமானாலும் விரும்புகின்றேன் தான் இவரின் முதல்படம். 2001களில் அறிமுகமானபோதே ஆனந்தம், பார்த்தாலே பரவசம், என்ற படங்களிலும் 2002ல் விரும்புகின்றேன், நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய், உன்னை நினைத்து, பம்மல் கே.சம்பந்தம் எனப் பல படங்களில் தொடந்து நடித்தவர்.



வசீகரா, பார்த்தீபன் கனவு இன்றைக்கும் சினேகாவின் நடிப்பில் சிறந்த படங்களில் ஒன்றாக இருந்தாலும் வசூல்ராஜா ஜானகியும் "ப‌த்துக்குள்ளே நம்பர்" பாடலும் சினேகாவின் பைத்தியமாக பலரை மாற்றியது.

புதுப்பேட்டையில் யாரும் செய்யத் துணியாத பாத்திரமாக நடித்தவர்( இன்றை சூழலில் இதனை விபரித்தால் பிழை). பின்னர் பிரிவோம் சந்திப்போமில் நிஜமான குடும்பப் பெண் அல்லது மனைவி எப்படி இருப்பாரோ அப்படியே வாழ்ந்து காட்டினார்.

கவர்ச்சி காட்டாவிட்டாலும் அதிகம் கிசுகிசுக்களில் அடிபட்டவர் மட்டுமல்ல, இன்றைய கவர்ச்சி சுனாமிகள் நயந்தாரா, திரிஷா,ஸ்ரேயாக்கள் மத்தியில் நின்று நிலைப்பது அவரது நடிப்பை நம்பியே என்பது பலருக்கும் தெரியும்.

அசின்

2004ல் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு கேரளத்து பெண். எம்.குமரன் சன் ஆவ் மஹாலட்சுமியில் மலபாராக வந்து "சென்னைச் செந்தமிழை" மறக்கச் செய்தவர். அனைத்து இளைஞர்கள் மனசிலும் பிசினாக ஒட்டியவர் அசின்.

கஜனியில் மொட்டைமாடி கல்பனாக வந்து அனைவரின் அனுதாபத்தையும் பெற்றவர். சிரித்த முகம், மெல்லிய உடல் என இன்றைய இளைஞர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தவர். குண்டுப் பெண்களை விரும்பிய தமிழ் இளைஞர்கள் சிம்ரனுக்குப் பின்னர் விரும்பியது அசினைத் தான்.



விஜய், அஜித் சூரியா என இளம் கதாநாயகர்களுடன் அதிகமாக நடித்தவர். கமலின் தசாவதாரத்தின் இன்னொரு தூண் என்றால் மிகையாகாது. ஐயங்கர் ஆத்து ஆண்டாளாகவே பெருமாளே பெருமாளே என புலம்பித்திரிந்தவர்.

ஸ்ரீதேவி போல ஹிந்தி சினிமாவிற்க்கு கஜனிக்காக சென்றவர் அங்கேயும் வெற்றிக் கொடி நாட்டி தமிழ்நாட்டையும் தமிழ் இளைஞர்களையும் மறந்துபோனது அகில உலக அசின் ரசிகர்கள் சார்பாக கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கும் அசினைப் பார்த்தால் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ எனப் பாடுபவர்கள் பலர்.

ஐஸ்வர்யா ராய்

1994ல் உலக அழகியானதில் இருந்து நான் ஐஸ் ரசிகனாகிவிட்டேன். எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்க்கு நிகர் அவரே தான். உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யாவை நடிகையாக்கிய பெருமை இயக்குனர் மணிரத்தினத்திற்கே சேரும்.

1997 ல் இருவரில் "ஜெ"யாக மன்னிக்கவும் கல்பனாவாக நடிக்கவைத்தார். ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி என அவர் ஆடிய ஆட்டம் உலக அழகி பட்டம் கொடுத்ததில் எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது.



மணிரத்தனம் ஹீரோக்களை தன் ஹீரோவாக மாற்றும் ஷங்கர் தன்னுடய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாவை மதுமிதாவாக்கி " நீ எனக்கே எனக்கா" என பிரசாந்துடன் சேர்ந்து பலரையும் பாட வைத்தார். பின்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் " கண்ணாமூச்சி ஏனடா" எனக் கேட்டுவிட்டு ஹிந்திக்கு பறந்துவிட்டார். மீண்டும் ஷங்கரின் முயற்சியால் எந்திரனில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

ஐஸுக்காக தால், தேவதாஸ், டூம்2 , ஜோதா அக்பர், புரவோக்ட் போன்ற தரமான ஹிந்திப்படங்களும் சில மொக்கைப் படங்களும் பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

கோடி யுகம் போனாலும் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் வயசாகாது அதனால் தான் அவர் இன்றைக்கு ஐஸ்வர்யா பச்சானாக மாறினாலும் இளைஞர்களின் கனவுக் கன்னி.


பின்குறிப்பு : நண்பர்கள் மருதமூரான், சுரேஷ் (பழனியிலிருந்து) போன்றவர்கள் விருப்புக்கமைய ஒவ்வொரு நடிகையின் நடிப்பைப் பற்றிய சின்ன ஆராய்ச்சிப் பதிவு விரைவில்.

மல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.

இலங்கையின் பழம்பெரும் சஞ்சிகையான மல்லிகையில் கவிஞரும் வலைப்பதிவருமான திரு.மேமன்கவி அவர்கள் அண்மையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதிய கட்டுரை அவரின் அனுமதியுடன் படப் பிரதிகளாக பிரசுரித்துள்ளேன். அவருக்கும் மல்லிகைக்கும் நன்றிகள்.












படங்களில் கிளிக் பண்ணி பெரிதாக்கி வாசிக்கமுடியும்.