ஒரே மைதானத்தில் தொடர்ந்து 4 தோல்விகள், கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் முதல்முறையாக ரி20 போட்டிகள் விளையாடப்பட்டது. முதலாவது போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்த்தாடியது. அந்தப்போட்டிக்கு டில்ஷான் முதன்முறையாக தலைவராக விளையாடினார்.
இலங்கை எதிர் இந்தியா
முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 171 ஓட்டங்களை எடுத்த இலங்கை பதான் சகோதரர்களின் ஆபார ஆட்டத்தினால் இந்தியாவிடம் 3 விக்கெட்டுகளினால் தோல்வி அடைந்தது.
இலங்கை எதிர் பாகிஸ்தான்
பின்னர் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்ற உற்சாகத்திலும், இங்கிலாந்தில் ரி20 உலகக் கிண்ணப்போட்டிகளில் கோப்பையை பாகிஸ்தானிடம் பறிகொடுத்ததை பழிவாங்கவும் இலங்கையும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன.
சங்கக்காராவின் சமயோசிதமான தலைமைப் பொறுப்பும் கவனமும் எப்படியும் இலங்கை சொந்தமண்ணில் பாகிஸ்தானை பழிவாங்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அப்ரிடியின் அபார ஆட்டத்தினால் இலங்கை 52 ஓட்டங்களால் பரிதாபமாகத் தோற்றது.
இலங்கை எதிர் நியூசிலாந்து
பின்னர் இந்தமாதம் 2ந்திகதி நியூசிலாந்திற்கெதிரான முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் வெறும் 3ஓட்டங்களால் மாத்திரம் இலங்கை தோல்வியைத் தழுவியது. இந்தப்போட்டியுடன் தொடர்ந்து ஒரே மைதானத்தில் மூன்று போட்டிளில் இலங்கை அணி தோல்விய்டைந்த சாதனையை ஏற்படுத்தியது.
ஆகவே நியூசிலாந்திற்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை கட்டாயம் வெற்றி பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேற்றுக் களம் இறங்கியது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைச் சமநிலையாக்கலாம் என்ற மனநிலையில் களம் இறங்கிய இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வாய்ப்பை வெட்டோரியிடம் பறிகொடுத்தது. ஏற்கனவே முதல் போட்டியில் முதலில் துடுப்பாடி வெற்றிக் கனியைப் பறித்த அனுபவத்தால் வெட்டோரி மீண்டும் துடுப்பாட்டத்தையே தேர்ந்தெடுத்தார்.
நியூசிலாந்து அணியில் விக்கெட் காப்பாளர் மக்கிலேசனுக்கு பதிலாக பிரண்டன் மக்கலத்தின் அண்ணன் நேதன் மக்கலம் களம் இறங்கினார். இலங்கை அணியில் கப்புஹெதரவுக்கு பதில் உடவத்த.
மக்கலமும் ஜெஸ்சி ரைடரும் எவ்வளவு அடிக்கமுடியுமோ அவ்வளவு அடி மாலிங்கா, குலசேகர பந்துவீச்சுகளில் அடித்து நொருக்கினார்கள், அவர்கள் அடித்து ஆடியதைப் பார்த்தபோது 220 ஓட்டங்கள் எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.
இவர்களைப் பிரிக்க மெண்டிசை அழைத்தார் சங்ககார ஆனால் மெண்டிசின் பந்தை தடுத்து ஆடிச் சாமாளித்துவிட்டார்கள். அரைச்சதத்திற்க்கு இரு ஓட்டம் இருக்கும்போது மக்கலம் ஜெயசூரியாவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபக்கம் ரைடர் மெதுவாகவும் நிதானமாகவும் தொடங்கிய தன் ஆட்டத்தை 37 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் உட்பட 52 ஓட்டங்களுக்கு மெண்டிசின் சுழலில் இலகுவான பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குப்டில் தன் பங்குக்கு அடித்து ஆடி அணியின் மொத்த எண்ணிக்கையை 170 ஆக மாற்றினார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெயசூரியாவையும் மெண்டிசையும் தவிர ஏனையவர்கள் சோபிக்கவில்லை. அஞ்சலோ மெத்தியூசை ஏன் பந்துவீச சங்கக்கார அழைக்கவில்லை என்பது புரியாத புதிர்.
மீண்டும் கன்டபேரி எக்ஸ்பிரஸ்
அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் போட்டியில் விளாசிய டில்சானை தனது முதலாவது ஓவர் ஐந்தாவது பந்துவீச்சில் வீழ்த்தினார் ஷேன் பொண்ட். அடுத்து வந்த உடவததையும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் மில்லில் பந்துவீச்சில் வெளியேறினார். ஜெயசூரியாவும் சில நாட்களாக ரி20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் தடுமாறுகின்றார், அந்த தடுமாற்றம் இன்றும் தெரிந்தது மில்லின் பந்துவீச்சில் தட்டுத் தடுமாறி அடித்து டையிலரிடம் பிடிகொடுத்து 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வந்தார் நேதன் மக்கலம்
பின்னர் வந்த மஹல ஜெவர்த்தனாவும் சங்ககாராவும் நன்றாக ஆடினார்கள் ஆனாலும் நேதன் மக்கலத்தின் முதலாவது ஓவரிலையே ரைடரிடம் பிடிகொடுத்து 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அஞ்சலோ மத்தியூசும் நேதன் மக்கலத்தின் பந்தில் டைலரிடம் பிடிகொடுத்து 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டமிழப்புடன் இலங்கை அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருந்தது. பின்னர் சங்ககாரா அடித்து விளையாடினாலும் ஏனையவர்கள் அவருக்கு துணை நிற்கமுடியாமல் போனதால் வெற்றிக் கனியைப் பறிக்கமுடியவில்லை.
இறுதியாக இலங்கை அணி 148 ஓட்டங்களை எடுத்து 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் தொடர்ந்து நான்கு தடவை ஒரே மைதானத்தில் தோல்வியடைந்த புதிய சாதனையை இலங்கை தன் வசப் படுத்தியது. ஆர்.பிரேமதாச மைதானம் ராசி இல்லாத படியால் இலங்கை அணி தன் அடுத்த ரி20 போட்டியை வேறு ஒரு மைதானத்தில் நாடத்தினால் நல்லது.
மீண்டும் அணிக்குத் திரும்பிய ஷேன் பொண்ட் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நேதன் மக்கலம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மில்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சமீபகாலமாக சோபிக்காத ஓரம் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். முதல் போட்டியில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணித்தலைவர் வெட்டோரிக்கு எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதும் ஜெஸ்சி ரைடருக்கு வழங்கப்பட்டது.
எதிர்வரும் 8ந்திகதி ஆரம்பமாகும் இலங்கை, இந்தியா மற்றும் நியூசிலாந்து பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் பலத்த சவால்கள் மூன்று அணிகளுக்கும் காத்திருக்கின்றது.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
3 கருத்துக் கூறியவர்கள்:
இலங்கை அணி வழமையாக மைதானம் முழுவதையும் நன்றாகத் தடுத்து களத்தடுப்பில் ஈடுபடும் அணி. (All round fielding team என்று சொல்வார்கள்).. சமீபகாலமாக இந்த விஷயத்தில் மிகவும் சறுக்குகிறார்கள் போலத் தெரிகிறது...
முத்தரப்புப் போட்டிகளில் இலங்கைக்கு பெரிய சவால் இருக்கப் போவதில்லை. இந்தியாவுக்கு ஸகீர், சேவாக் இல்லாதது பெரிய இழப்பு.. என்ன இலங்கைப் பந்து வீச்சாளர்களைக் காதலிக்கும் தோனி கார்ப்பரேட் கோப்பையில் அடித்து நொறுக்கி செம ஃபோர்மில் இருக்கிறார். சச்சினும் காம்பீரும் நல்ல தொடக்கம் கொடுப்பார்கள் என்றால் இந்தியாவைச் சமாளிக்க முடியாது. ஆனால் இந்தியப் பந்து வீச்சு வரிசை செம வீக்
கிரிக்கட் என்பது குருட்டு அதிர்ஸ்ட்ம் தேவைப்படும் விளையாட்டு.. அதை உடைத்து இருந்த ஒரே நாடு அவுஸ்திரேலியா.. மற்றும் படி ஒரு குதிரைப்பந்தயத்தை பார்ப்பதற்கும் கிரிக்கட் மட் ச்சை பார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லை என்பதால் நான் உந்த இழவு விளையாட்டை ரசிப்பதில்லை..(96ம் ஆண்டு இலங்கையின் அதிரடியை ரசித்தவன் நான்)
இப்ப எல்லாம் நம்ம ஆட்கள் டெஸ்ட் போட்டிகளில் கலக்கி மற்றைய போட்டிகளில் கோட்டை விட்டுடுறாங்க..
Post a Comment