காங்கிரசில் விஜய்
அண்மைய நாட்களாக மிகவும் பரபரப்பான செய்தி விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்ததும் ,இதனால் விஜய் காங்கிரஸில் இணைவார் என்ற ஊகங்களும், கடந்த ஜூன் மாதத்தில் தன் பிறந்த நாளின் போது விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்ற ஹாஸ்யங்கள் பலரால் கூறப்பட்டலாம் இறுதியில் விஜய் தன் ரசிகர் சங்கத்துக்கு என கொடி ஒன்றை மாத்திரம் தொடங்கினார்.
ஒருவர் கட்சி ஆரம்பிப்பதோ, இல்லை ஒரு கட்சியில் சேர்வதோ அவரது தனிமனித சுதந்திரம், விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் என்ன? பிஜேபியில் சேர்ந்தால் என்ன இல்லை சுப்பிரமணிய சுவாமியின் கட்சியில் மூன்றாவது உறுப்பினராக இணைந்தால் என்ன அது அவரின் சொந்தமுடிவு.
விஜய் தன் படங்களில் மட்டுமல்ல பொது வாழ்க்கையிலும் நடிகர் ரஜனிகாந்தைப் பின்பற்றுகிறார் அவர் தான் இன்றைக்கு வருவேன் நாளைக்கு வருவேன், எப்பவருவனோ அப்போ வருவேன் என மக்களைக் குழப்புகிறவர். அதே போல் விஜயும் இன்றைக்கு வருவேன் காலம் பதில் சொல்லும் ஆனால் கட்சி தொடங்குவார்(தந்தை சந்திரசேகரன் அண்மையில் கூறிய கருத்து)என அறிக்கை மட்டும் விடுகிறார். எப்படி ஜனங்கள் இன்றும் ரஜனியை அரசியலுக்கு வருவார் என நம்புகின்றார்களோ அந்த நம்பிக்கைபோல் விஜயும் வருவார் என நம்புவார்கள்.
தொடர் தோல்வியால் துவண்டிருக்கும் விஜய்க்கு வேட்டைக்காரனை நிச்சயம் வெற்றிபெறச் செய்யவேண்டும் அதற்காக தான் யாரைப் பின்பற்றுகிறாரோ அவர் எப்படி ஒவ்வொரு படம் வெளியாகும் முன்னர் அடுத்து அரசியல் பிரவேசம் தான் என அறிக்கை விடுகிறாரோ அதே பாணியை வேட்டைக்காரனுக்கும் விஜய் பயன்படுத்துகின்றார் போல் தெரிகின்றது.
விஜயின் முதலமைச்சர் கனவு காங்கிரசில் சேர்ந்தால் சாத்தியப்பட வாய்ப்பேயில்லை. தற்போது துணை முதல்வராக இருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் தந்தைபோல் வயதாகும் வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பார் என்ற எண்ணமே பலருக்கும் இருக்கின்றது. அதிமுகவிற்க்கு புத்துயிர் கொடுக்க இன்னொரு எம்ஜீஆர் பிறக்கவேண்டும். ஆகவே விஜய் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் தமிழக முதல்வர் கனவு, கனவுதான்.
விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி போல் விஜய் கோஷ்டி என்ற புதிய கோஷ்டி மட்டும் உருவாகும்.
போனஸ் செய்தி : வேட்டைக்காரனை வெற்றிப்படமாக்க காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இடிவிழுந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் வேட்டைக்காரனை வாங்கிவிட்டார்கள். (இதற்க்கு மேலதிக விளக்கம் தேவையில்லை).
கமலும் திருமணமும்
உலகநாயகன் கமலின் பொன்விழாக் கொண்டாட்டங்களை உலகமே கொண்டாடும்போது அவர் NDTV யில் கொடுத்த பேட்டியில் சொன்ன ஒரு விடயத்தை மட்டும் சில தனிவ்ழியில் செல்லும் இணையத்தளங்கள் பெரிதாகத் தூக்கிப்பிடித்துள்ளார்கள்.
திருமணத்தை விட குடும்பமே கட்டுக்கோப்பானது என்றுதான் உலகநாயகன் அந்தப்பேட்டியில் சொன்னார். அதைமட்டுமல்ல தன்னுடைய அரசியல் பற்றிய கருத்துக்களையும் ரஜனியுடன் உடனான நட்பையும் சொன்னார். ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு முட்டையில் மயிர் பிடுங்கும் கூட்டம் கமலைத் தூற்றிக்கொண்டு திரிகிறது. இது பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.
சேர்ந்துவாழ்தல் என்ற லிவிங் டுகெதர் பற்றிக் கமல் சொல்லியிருந்தாலும் ஓரினசேர்க்கையையே சட்டமாக்கிய இந்தியாவில் விரைவில் இந்தச் சட்டமும் வரக்கூடும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஏன் இன்றுகூட சில பிரபலங்கள் லிவிங் டுகெதராகத் தான் இருக்கின்றார்கள்.
இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் லிவிங் டுகெதர் சாத்தியமாகும் போது இந்தக்கூட்டங்கள் எங்கே சென்று தங்கள் முகத்தை வைப்பார்கள். ரஜனிக்கு இருக்கும் பெரும்தன்மையை ரஜனி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது அடிமுட்டாள்தனம்.
மெஹா சீரியல் கொடுமை
நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல் 50 நிகழ்ச்சி பார்ப்பதற்காக 7.30 மணி தொடக்கம் தவமிருந்தபோது சன்னில் இதயம் என்ற மெஹா சீரியல் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது (அம்மா இடைக்கிடை பார்ப்பவர் அதனால் அவரிடம் இருந்து ரிமோட்டைப் பறிக்காமல் நானும் கடனே எனப் பார்த்தேன்).
திருமதி.சீதா பார்த்தீபன் ஒரு டொக்டராக வருகின்றார், அவரது மகனுக்கு சில நாட்கள் முன்னர் தான் திருமணம் நடந்தது. அவரது இரண்டாவது மருமகளை பழிவாங்க மூத்த மருமகள் ஒரு குழந்தையை செட்டப் பண்ணி அவர்களது வீட்டில் விட்டுவிடுகிறார். புதிதாக அழவந்திருக்கும் ஒரு நடிகைதான் இரண்டாவது மருமகள் அவரும் சீதாவும் பதறுகிறார்கள், அந்த மருமகள் சொல்கின்றார் அது தன் குழந்தை இல்லை என்று. பின்னர் சீதாவுக்கு ஒரு அனானி கோல் பண்ணுகிறார் அந்தகுழந்தை அவரின் இரண்டாவது மருமகளின் குழந்தைதான் என.
என்னுடைய கேள்வி இதுதான். மருத்துவ வசதிகள் நிறைவாக உள்ள இந்தக்காலத்தில் அந்தக் குழந்தையையும் இரண்டாவது மருமகளையும் டிஎன்ஏ சோதனை செய்தால் குழந்தை பற்றிய உண்மை தெரியவரும் இது மருத்துவராக நடிக்கும் சீதாவிற்க்குத் தெரியாதா? இல்லை இயக்குனருக்கு தெரியாதா? மக்களை நன்கு ஏமாற்றுகின்றார்கள்.
கந்தல்சாமி கூத்துகள்
கந்தசாமி என்ற படம் வந்தாலும் வந்தது வருகின்ற பக்கசார்பான விமர்சனங்களும், நடுநிலையான விமர்சனங்களும் ஸ்ரேயாவுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் அதிகரித்துவிட்டது.
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைப்பதுபோல் ஒரு இணையத் தளம் வலைப்பதிவர்களின் விமர்சனங்களால் படங்கள் பாதிக்கப்படுகின்றன என வலைப்பதிவர்களைக் குற்றம் சாட்டியது. தாணு ஒரு பத்திரிகைக்கு சாபம் இடுகின்றார்.
சாதாரண ரசிகனுக்கு தான் பார்த்த படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? எனக்கூறும் சுதந்திரம் இல்லையா? இணையத்தளங்களும் பத்திரிகை சஞ்சிகைகளும் கவர் வாங்கியபின்னர் தாணுவிற்க்குச் சார்பாகத் தான் எழுதவேண்டும். பாய்ஸ்சைக் குப்பை என விமர்சனம் எழுதாத விகடன் ஸ்ரேயாவின் கவர்ச்சியைக் கண்டுகொள்ளவேயில்லை காரணம் சன் பிக்சர்ஸ்க்கும் கந்தசாமிக்கும் தொடர்பிருப்பதால். இப்படி ஒருதலைப் பட்ச விமர்சனங்களை வாசித்து ஏமாறும் ரசிகர்கள் இன்று வலையுலக விமர்சனங்கள் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இருப்பதைப் பார்த்து படம் பார்க்கச் செல்வதா? இல்லையா என முடிவெடுக்கின்றார்கள்.
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பத்திரிகைகள் சஞ்சிகைகள் பக்கம் சார் இணையங்களில் வெளியான விமர்சனங்களுக்கும் வலையுலக ஜாம்பவான்களின் விமர்சனங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
லோஷன், மருதமூரான், ஷகீலாவின் ரசிகரான சதீஸ் போன்றவர்கள் தங்கள் கந்தசாமி விமர்சனத்தில் ஸ்ரேயாவின் மக்கள் தொடர்பாளர்கள்(PRO) போல் விமர்சனம் எழுதினார்கள் என்ற விடயம் என் சிற்றறிவுக்கு இன்னும் புலப்படவில்லை. அதிலும் மருதமூரான் ஸ்ரேயாவை ஷகீராவுடன் ஒப்பிடுகின்றார். லோஷன் ஆங்கிலப்பட நாயகிகளுடன் ஒப்பிடுகின்றார். மூவரும் நல்ல கண் மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்பதை ஒரு நண்பன் என்ற முறையில் அவர்களுக்கு சொல்லவிரும்புகின்றேன். இதில் மருதமூரானுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
//என்னுடைய கேள்வி இதுதான். மருத்துவ வசதிகள் நிறைவாக உள்ள இந்தக்காலத்தில் அந்தக் குழந்தையையும் இரண்டாவது மருமகளையும் டிஎன்ஏ சோதனை செய்தால் குழந்தை பற்றிய உண்மை தெரியவரும் //
வந்தி திருமணத்துக்கு தயாராகிறார்.. ;)
//சாதாரண ரசிகனுக்கு தான் பார்த்த படம் பிடித்திருக்கிறதா? இல்லையா? எனக்கூறும் சுதந்திரம் இல்லையா? இணையத்தளங்களும் பத்திரிகை சஞ்சிகைகளும் கவர் வாங்கியபின்னர் தாணுவிற்க்குச் சார்பாகத் தான் எழுதவேண்டும். பாய்ஸ்சைக் குப்பை என விமர்சனம் எழுதாத விகடன் ஸ்ரேயாவின் கவர்ச்சியைக் கண்டுகொள்ளவேயில்லை காரணம் சன் பிக்சர்ஸ்க்கும் கந்தசாமிக்கும் தொடர்பிருப்பதால். இப்படி ஒருதலைப் பட்ச விமர்சனங்களை வாசித்து ஏமாறும் ரசிகர்கள் இன்று வலையுலக விமர்சனங்கள் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இருப்பதைப் பார்த்து படம் பார்க்கச் செல்வதா? இல்லையா என முடிவெடுக்கின்றார்கள்.
//
அதெல்லாம் சரி தான்.. எந்த அளவுகோல் கொண்டு பதிவர்களின் விமர்சனங்கள் எல்லாம் நடுநிலையானவை அல்லது சரியானவை என்று முடிவு செய்வீர்கள்??
Boys குப்பை தானே? எத்தனை காட்சிகளைப் பின்னர் ஷங்கர் வெட்டி எறிந்தார்?அப்படி ஏதாவது காட்சி கந்தசாமியிலே இருக்கிறதா?
ஸ்ரேயாவை அழகு என்று நானோ மருதமூரானோ சொல்லவில்லையே.. அந்தப் பாத்திரப் படைப்புக்குப் பொருத்தமாக modern heroine ஆக இருக்கிறார் என்பதைத் தான் குறிப்பிட்டோம்..(fashion,style,trendஎதுவும் தெரியாத, வயசு போனதுகளுக்கு வியாக்கியானம் சொல்வதில் வெறுத்துவிடுகிறது.. ;))
சதீஸ்- ஷகீலா? ஆகா.. சொல்லவே இல்லை.. ;)
வாந்தி... oh sorry.. வந்தி அண்ணாவின் தலைமுறை ஆன்டி ஒருவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் அளவுக்கு என் விமர்சனப்பதிவு அமைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியே.. (அதுசரி எங்கே இருந்து இப்படி செம ஆண்டிகளைப் பிடிக்கிறீர்கள்??? இது தான் கந்தசாமி ஸ்ரேயா பிடிக்கலையோ??)
இளைய தலைவலி பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை.. வேட்டைக்கரனுக்கு இன்னுமொரு இடி.. பரிஸ்தமிழ் நேற்று வாசித்தீர்களா?
தலைவலிக்கு தலைவலி ஆரம்பம்..
கமல் சொன்னதெல்லாம் சரி.. திருமணம் செய்வதற்கு மும்முரமாகத் தயாராகிவரும் மூத்த இலங்கைப் பிரபல பதிவரும் இப்போது living togetherக்கு தயாராவதாக இனி ஒரு அறிவிப்பு வருமோ?
வந்தி, அடுத்த சூப்பில் சொல்வீர்களா? ;)
வந்தி...........
நான் ‘ஸ்ரேயாவை’, ஷகிராவுடன் ஒப்பிடவில்லை. கந்தசாமியில் ஷகீரா நடித்திருந்தால் ஸ்ரேயா தேவைப்பட்டிருக்கமாட்டார். என்று தானே சொன்னேன்... அதாவது ஷகீரா செய்கின்ற இடுப்பாட்டுப் வேலையையே ஸ்ரேயா அதிகமாக கந்தசாமியில் செய்துள்ளார். அதைத்தான் நான் கூற முனைந்தேன்.. மற்றப்படி அவர்களை ஒப்பிடவில்லை.
லோஷன் நம்மட மூத்த பதிவர் ‘வ......’ திருமணத்துக்கு தயாரென்று அறிவித்திருந்தார். ஆனால், அவர் எதிர்காலத்தில் ‘லிவிங் டுகெதாரகவே’ வாழப்போவதாக கொட்டாஞ்சேனை பட்சிகள் தகவல் சொல்கின்றன.
அது சரி வந்தி.... எங்கயிருந்து நல்ல நல்ல படங்களா போடுறீங்க. அதிலயும் லோஷனை அண்ணனாக்குவதில் தங்களுக்கு எவ்வளவு சந்தோஷம். நான் லோஷனை மச்சான் என்றே எதிர்காலத்தில் அழைக்கலாம்.
அடப்பாவிகளா. எப்படியெல்லாம் ஆசைப் படுகிறார்கள்.. எத்தனை மச்சான்கள்.. நல்ல காலம் தங்கையோ அக்காவோ இல்லை.. ;)
அடுத்த வந்தியின் பதிவு... சொந்த செலவில் சூப் வைத்த சூனியம்.. ;)
லிவிங் டுகெதர் பற்றிய சந்தேகங்களை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமா?
எனக்கு கந்தசாமியை ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. வில்லு, ஏகன், வேல் படங்களையே இந்த பதிவுலகத்தில் நல்ல பார்க்க கூடிய படமாக விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால் கந்தசாமியை ஏன் இந்த தாக்கு தாக்குறீங்களோ தெரிய வில்லை.
லோஷன் பாய்ஸ் படத்தை குப்பை என கூறுவதில் எனக்கு உடன் பாடில்லை. என்னை பொருத்த வரையில் பாய்ஸ் பார்க்க கூடிய படம் தான், சில விடயங்கள் நடப்பது தான், ஆனால் அதை வெளியே கூற பலர் தயங்குவார்கள். அதை வெளி கொணர்ந்த படம் பாய்ஸ். என்ன அது சங்கர் படம் ஆகவே கொஞ்சம் ரிச்சா காட்டிட்டார்.
சீதா பார்த்தீபன் என கூற கூடாது. அவர்கள் விவாகரத்து வாங்கியவர்கள். ஆகவே அவங்க வெறும் சீதா மட்டும் தான்.
வேட்டைகாரன் சன் டீவி வாங்கிடுச்சா. அப்பா ஒரு நிம்மதி...
இனியாவது மாசிலாமணி முதலாமிடத்திலிருந்து கீழே இறங்கும்.
பி.கு- படம் சூப்பர்ணா.
இதை வன்மையாக கண்டிக்கின்றேன். உங்க வயது ஆண்டி ஷகிலாவிற்கு நான் எப்படி ரசிகராகமுடியும். ஒரு ஸ்ரேயாவையோ தமன்னாவையோ சொன்னால் நியாயம். நீங்கள் ஷகிலாவின் ரசிகர் என்பதை சொல்லாமல் சொன்னதுக்கு நன்றி. லோஷன் அண்ணாவிற்கு இட்ட படம் சூப்பர். தங்கள் ஷகிலாப்பணி மன்னிக்கவும் கலைப்பணி வாழ்க. எப்போ லிவ்விங் டுகேதருக்கு தயாராகப்போறிங்க.
//மருத்துவ வசதிகள் நிறைவாக உள்ள இந்தக்காலத்தில் அந்தக் குழந்தையையும் இரண்டாவது மருமகளையும் டிஎன்ஏ சோதனை செய்தால் குழந்தை பற்றிய உண்மை தெரியவரும் இது மருத்துவராக நடிக்கும் சீதாவிற்க்குத் தெரியாதா? இல்லை இயக்குனருக்கு தெரியாதா? மக்களை நன்கு ஏமாற்றுகின்றார்கள்.//
அப்படிச் செய்தால் அடுத்த வாரம் இந்த சீரியல் முடிந்துவிடும்.
பாவம் நீங்க முதன் முறையா நேற்று தான் சீரியல் பாத்திருக்கிறீங்க போல...
//எனக்கு கந்தசாமியை ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. வில்லு, ஏகன், வேல் படங்களையே இந்த பதிவுலகத்தில் நல்ல பார்க்க கூடிய படமாக விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால் கந்தசாமியை ஏன் இந்த தாக்கு தாக்குறீங்களோ தெரிய வில்லை //
எனக்குத் தெரிந்தவரை விஜய், அஜித் போன்றவர்களை விட விக்ரமிடமிருந்து மக்கள் புதிய விடயங்களை டிதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான். யாருமே வில்லையும் கந்தசாமியையும் ஒப்பிட்டு கதைக்கவில்லை என நினைக்கிறேன்.
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com
அஹா விஜய்ட அடுத்த படத்துக்கு இப்பவே ஆப்பு வைக்க தொடங்கீடீங்க அண்ணா பவம் அந்த மனுஷன் இப்படி ஏன்....
(நானும் தமிழ் இல டைப் பண்ணுவன் எல்லா....) சில பேட்ட ப்லோக் இல அலொவ் பண்ண மாட்டாங்க இங்கிலீஷ் இல கமெண்ட் பண்ணின
always root
:)இது சினிமா ஸ்பெஷல் சூப் போல இருக்கு
உங்களுக்கு ஒரு ஜோக் தெரியுமா? உன்னைப் போல ஒருவன் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியில் வந்தேன் ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபர் அது வயதையொத்த இன்னொருவருடன் படம் பார்க்க வந்திருந்தார்... இருவரும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது... என்ன சொன்னார்கள் தெரியுமா?
“உது கந்தசாமி அளவுக்கு நல்லா இல்ல என்ன?... ஹீரோயின் இல்லாமல் படம் எடுத்திருக்காங்கள்.. விசரங்கள்”
என்னவென்று சொல்வதம்மா இதை??!
Post a Comment