பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் உன்னைப்போல் ஒருவன் பாடல்களை இணையம் மூலம் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. ஸ்ருதிஹாசனின் கன்னிப் படைப்பு, கமல், மனுஷ்யபுத்திரன், கமலின் வரிகள் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாடல்கள், நிச்சயமாக ரசிகர்களை ஏமாற்றவில்லை.
இசையை விமர்சனம் செய்ய இசையைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை, சாதாரண இசை ரசிகனாக இருந்தாலே போதுமானது. ஆகவே அந்த தைரியத்தில் இந்த விமர்சனம்.
1. அல்லா ஜானே
இந்தபாடலை கமலே பாடுகின்றார். ஒரு வித்தியாசமான இசை முன்னைய காலங்களில் ஊரில் பார்க்கின்ற அரிச்சந்திரா மயான காண்டம் நாடகத்தில் சோகத்தில் அரிச்சந்திரன் பாடும் பாடலை ஒத்திருக்கின்றது.( எனக்கு ராகம் தெரியாது) கமலின் குரலில் சோகம் பாடலில் இழையோடுகின்றது. வரிகள் எமக்கும் பொருத்தமாக இருக்கின்றது. "வீடுகள் எங்கும் வேதனை நிழல்கள், வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள், வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?" இந்த வரிகள் கண்ணில் கண்ணீர் வரவைக்கும். பாடல் வரிகள் மனுஷ்யபுத்திரன். தத்துவமாக மனுஷ்யபுத்திரன் உருகியிருக்கிறார். ஸ்ருதி பெரிதாக வாத்தியங்கள் பயன்படுத்தவில்லை.
புள்ளிகள் : 10/10.
2. நிலை வருமா...
கமலும் பம்பாய் ஜெயஸ்ரீயும் பாடியிருக்கின்றார்கள். முதலில் பம்பாய் ஜெயஸ்ரீ பாடும் தொகையறா கொஞ்சம் வரிகள் தெளிவில்லாமல் இருக்கின்றது. அந்த தொகையறாவின் இசை ஏனோ ஹேராமின் நீ பார்த்த பார்வையை நினைப்பூட்டுகின்றது. இந்தப்பாடலும் கமலின் வரிகளில் மிளிர்கின்றது. அத்துடன் முதல் முறையாக கமல் ஸ்வரம் பாடியிருக்கின்றார். கொஞ்சம் வாத்தியங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம்.
புள்ளிகள் : 8.5/10.
3. உன்னைப்போல் ஒருவன்
"பரித்ராணாய சாதுநாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்
தர்மசந்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே!!" என்ற வரிகள் ஸ்ருதியின் குரலுடன் பாடல் தொடர்கிறது. ஸ்ருதிஹாசன், அக்க்ஷரா ஹாசன், உட்பட பலர் பாடியிருக்கின்றார்கள். படத்தின் டைட்டில் பாடல் போல் தெரிகின்றது. பாடல் இசை சுமாராக இருந்தாலும் இடையில் ஸ்ருதியின் குரலில் " நான் ஒரு புதுமுகம் " என்ற வசனமும் பின்னர் ஏனையவர்களின் குரலில் "i am the new face oஃப் டெர்ர்ரொர்" என்ற வசனமும் வருகின்றது. வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம். பாடல் வரிகள் கமல்.
புள்ளிகள் : 7.5/10.
4. வானம் எல்லை
பிளேசின் குரலில் முதலில் ஒரு ராப் அழகாக வந்திருக்கின்றது. ஆங்கிலப் பாடல்களின் சாயல் அடித்தாலும் ஸ்ருதியின் குரலில் வானம் எல்லை " என ஆரம்பித்தபோது நல்ல மெலொடி கிடைக்கும் என எதிர்பார்த்தால் இடையில் மீண்டும் பிளாசின் குரல் வந்து மேற்கத்திய இசைக்கு தாவிவிட்டது. பாடல்களில் ஆங்கிலம் தமிழ் என வரிகள் கலந்துகட்டுகின்றன. ஆங்கில வரிகள் பிளேசுக்கு சொந்தம். தமிழ் வரிகள் கமல்.
புள்ளிகள் : 6/10.
5. அல்லா ஜானே.. (ரீமிக்ஸ்)
அல்லா ஜானேயை ரீமிக்ஸ் செய்து ஸ்ருதி பாடுகின்றார். ஒரியினலைக் கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்திருக்கின்றார். ஆனால் முதல் அல்லா ஜானேயில் இருந்த சோகம் இதில் இல்லை. இடையில் ஸ்ருதி பேசும் வசனங்கள் கலக்கல்.
புள்ளிகள் : 5/10.
ஸ்ருதிஹாசனின் முதல் திரைப்படம், ஆனால் தேர்ந்த இசையமைபாளர் போல் அழகாக இசையமைத்திருக்கிறார். முதல் போட்டியில் சதமடிக்காவிட்டாலும் தொண்ணுறுகள் அடித்திருக்கின்றார். நல்ல எதிர்காலம் இசையில் உண்டு.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
17 கருத்துக் கூறியவர்கள்:
நல்லா தான் இருக்கு பாடல்கள்...
அப்படியா...
தரவிறக்கீற்றா போச்சு...
அது சரி படம் எப்ப வருமாம்???
எல்லாம் நல்லாவே இருக்கு.. ஆனால் commercial hit ஆகுமா தெரியவில்லை.. கமலின் படங்களில் படத்துக்குப் பொருத்தமாகப் பாடல்கள் இருப்பதால் படம் வந்த பின்னரே பாடல்கள் பிக் அப் ஆகும்.
எனக்கு அல்லா, உன்னைப் போல் ஒருவன், வானம் எல்லை ஆகியன பிடித்திருக்கின்றன..
ஸ்ருதி தேறி விடுவார்.
good post...
இன்னும் ஒரு பாடலும் கேட்க வில்லை. கேட்ட பின் சொல்லுகிறேன்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். போகப் போகத்தான் ஸ்ருதியின் consistency குறி்த்து அவதானிக்க இயலும்.
' அல்லா ஜானே' பாடலைக் கேட்கும்போது, (ரிதம் வேறாக இருந்தாலும்,) எனக்கு ஏனோ 'வேப்பமரக்காற்றே நில்லு' என்ற ஈழத்து பாடலின் ஞாபகம் வருகிறது.
http://www.youtube.com/watch?v=cz3NDrllI7k . உங்களுக்கு?
லோஷன் அண்ணா சொன்ன மாதிரி வர்த்தக ரீதியான வெற்றி சந்தேகமே.. வழமையான கமல் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்தப் படத்தைப் பார்ப்பதில் எனக்கு இல்லை... இந்தி ஒரிஜினலைப் பார்த்த காரணத்தால் இருக்கலாம்... தமிழ்நாட்டுக்கு எப்படி பாகிஸ்தானிய தீவிரவாதிகளைக் கொண்டுவரப் போகிறார்? அவர்கள் தமிழ் பேசப் போகிறார்களா? அப்படிப் பேசினால் விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் போல் ஆகிவிடாதா? போன்ற கேள்விகள் பயமுறுத்துகிறன. கமல் வெல்லவேண்டும் என்பது ஆசை.. நடக்குமா இந்தப் படத்தில்???
// நிமல்-NiMaL said...
நல்லா தான் இருக்கு பாடல்கள்...//
ஓம் நிமல் முதல் கேட்டலிலையே பாடல்கள் பிடித்திவிட்டன.
//கனககோபி said...
அது சரி படம் எப்ப வருமாம்???//
செப்டம்பர் கடைசிவாரம் என்கிறார்கள். எதற்க்கும் முதல் காட்சியில் கொன்கோர்ட்டில் சந்திப்போம்
//LOSHAN said...
எல்லாம் நல்லாவே இருக்கு.. ஆனால் commercial hit ஆகுமா தெரியவில்லை.. கமலின் படங்களில் படத்துக்குப் பொருத்தமாகப் பாடல்கள் இருப்பதால் படம் வந்த பின்னரே பாடல்கள் பிக் அப் ஆகும்.///
ஆமாம் லோஷன் பாடல்களும் வரிகளும் நன்றாகத் தான் இருக்கின்றன. பாடல்கள் படத்துடன் ஒன்றுவதால் படம் வந்தபின்னர் தான் நல்ல ஹிட்டாகும்.
//எனக்கு அல்லா, உன்னைப் போல் ஒருவன், வானம் எல்லை ஆகியன பிடித்திருக்கின்றன..//
எனக்கும் தான் நிலைவருமாவில் கமலின் குரல் பிடித்திருக்கின்றது ஆனால் பாம்பாய் ஜெயஸ்ரீ சொதப்பிவிட்டார்.
//ஸ்ருதி தேறி விடுவார்.//
அடுத்து கமல் படம் இல்லாமல் இன்னொருவருக்கு இசையமைத்தால் தான் அவரின் திறமை மேலும் தெரியும்.
//வழிப்போக்கன் said...
good posட்...//
நன்றிகள் வழிப்போக்கரே.
//யோ வாய்ஸ் (யோகா) said...
இன்னும் ஒரு பாடலும் கேட்க வில்லை. கேட்ட பின் சொல்லுகிறேன்.//
கேட்டபின்னர் சொல்லுங்கள் எங்கடை ரேடியோக்களில் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டார்கள்.
//சுரேஷ் கண்ணன் said...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். போகப் போகத்தான் ஸ்ருதியின் consistency குறி்த்து அவதானிக்க இயலும்.//
நன்றிகள் சுரேஷ். உங்கள் பதிவையும் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல் முதல் படத்தில் ஸ்ருதியை மதிப்பிட முடியாது ஆனால் இதில் ஓரளவு நன்றாக இசையமைத்திருக்கின்றார். பிளேசியின் ராப்பை நிறுத்தியிருந்தால் அச்சு அசல் தமிழ் பாடல்களாக அனைத்துப் பாடல்களும் இருந்திருக்கும். வரிகளை இசையால் மூழ்கடிக்கவில்லை
// M.S.E.R.K. said...
' அல்லா ஜானே' பாடலைக் கேட்கும்போது, (ரிதம் வேறாக இருந்தாலும்,) எனக்கு ஏனோ 'வேப்பமரக்காற்றே நில்லு' என்ற ஈழத்து பாடலின் ஞாபகம் வருகிறது.//
ஆமாம் அதே பாடலின் சாயல் காரணம் இரண்டு பாடல்களும் ராகம் சுபபந்துவராளி. பாடலின் சோகம் இராகத்தை இலகுவாக கண்டுபிடிக்க உதவுகின்றது என இசை அறிந்த நண்பர்கள் சொன்னார்கள்.
//Kiruthikan Kumarasamy said...
இந்தி ஒரிஜினலைப் பார்த்த காரணத்தால் இருக்கலாம்... //
இதனால் தான் நான் இன்னும் ஹிந்தி பார்க்கவில்லை.
//தமிழ்நாட்டுக்கு எப்படி பாகிஸ்தானிய தீவிரவாதிகளைக் கொண்டுவரப் போகிறார்? அவர்கள் தமிழ் பேசப் போகிறார்களா? அப்படிப் பேசினால் விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் போல் ஆகிவிடாதா? போன்ற கேள்விகள் பயமுறுத்துகிறன. //
இல்லை நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹிந்திப் படத்தில் இருந்து இந்தப் படம் பல காட்சிகள் வேறுபடும் என்றார். பல காட்சிகளை தமிழ்நாடு சார்ந்து எடுத்திருப்பார்கள்.
//கமல் வெல்லவேண்டும் என்பது ஆசை.. நடக்குமா இந்தப் படத்தில்???//
நிச்சயம் வெல்லுவார் புலம் பெயர் நாடுகளில், ஆனால் இந்தியாவில் சொல்லமுடியாது. அன்பே சிவத்தையே தோல்விப் படமாக்கியவர்கள் அவர்கள்.
இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
sutha vethu
Post a Comment