ரசனை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவர் மாறுபடும் ஒரு விடயம். இசையைப் பொறுத்தவரை எனக்கு இளையராஜா என்றால் உயிர் அதற்காக ரகுமானையோ யுவனையோ பிடிக்காது எனச் சொல்லமாட்டேன். எனக்கு கமல் பிடிக்கும் அதற்காக ரஜனி பிடிக்காது என்பதில்லை. இதே நேரம் இன்னொருவருக்கு ரஜனி பிடிக்கும் அல்லது விஜய் பிடிக்கும். ஆகவே ரசனையானது எம் விருப்பங்களே ஒழிய மற்றவர்களுக்காக எம்மை மாத்துவதில்லை.
அண்மைக்காலமாக வலையுலகில் சிலர் கருத்துகளை எதிர்க்கருத்துகளால் வெல்லமுடியாமால் அல்லது விவாதிக்கமுடியாமல் சில எழுந்தமானமான கருத்துகளைச் சொல்கின்றார்கள். யார் மீதும் யாரும் ரசனையையோ விருப்பத்தையோ திணிக்கமுடியாது.
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் லோஷன் விஜய் நடிச்சா தாங்கமாட்டோம் என வேட்டைக்காரனின் இசையை விமர்சித்திருந்தார். ஒருவரின் படத்தையோ, புத்தகத்தையோ அல்லது இசையை விமர்சிப்பது யாரும் செய்யலாம். அவரைப் பொறுத்தவரை வேட்டைகாரன் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அது அவரின் தனிப்பட்ட விடயம். ஆனால் அதற்காக சில விஜய் ரசிகர்கள் பொங்கி எழுந்து அவரை காண்டாக்கிவிட்டார்கள்.
ஒரு ஊடகவியலாளன் (அவர் ஊடகவியலாளர் அல்ல ஒலிபரப்பாளன்) நடுநிலைமையாகத் தான் விமர்சனம் செய்யவேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை. அத்துடன் அவர் இந்த விமர்சனத்தை தான் சார்ந்த வானொலியில் செய்யவில்லையே, தன் தனிப்பட்ட வலையில் தானே செய்தார்.
வலையில் எழுதும் லோஷன் வேறை, வானொலி அறிவிப்பாளர் லோஷன் வேறை என்பதை ஏனோ சில விளங்கிக்கொள்ளவில்லை. இன்னொரு நகைச்சுவையின் உச்சமாக லோஷன் பிரபல அறிவிப்பாளராக இருப்பதால் தான் அவருக்கு அதிக ஹிட் கிடைக்கிறது என கொமெடி பண்ணியிருந்தார்.
இலங்கை நேயர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம் ஆனால் ஏனைய நாட்டு வலைவாசகர்களுக்கு அவரைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அத்துடன் அவர் வலை எழுத வந்த புதுசில் அவருடைய வலைக்கு பெரிதாக ஹிட் கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மற்றவர்கள் போல் வலையில் மெருகூட்டித் தான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றார்.
இதே லோஷன் தான் கந்தசாமியை சிறந்தபடம் என எழுதினார், அதே நேரம் கந்தசாமி பலரால் துவைத்து எடுக்கப்பட்ட படம், ஆனால் யாரும் அவரின் வலையில் போய் நீ ஹிட்டுக்காக இப்படி எழுதியிருக்கின்றாய் என பின்னூட்டம் இடவில்லை ஏனென்றால் அவரின் பார்வையில் அந்தப் படம் நல்ல படம் என் பார்வையில் அது நொந்தசாமி. இதற்கான காரணம் இருவரின் ரசனையும் மாறுபட்டதே ஒழிய வேறு காரணம் இல்லை. எனக்கும் விக்ரம் பிடிக்கும் அதற்காக அவரின் மொக்கைகளை எல்லாம் நல்லது என்பது தவறு.
ரஜனி, கமல் ரசிகர்களுக்கு இருக்கும் சகிப்புத் தன்மை ஏனோ விஜய் ரசிகர்ளுக்கு இல்லை. அவரின் அந்தப் பதிவிற்க்கு இன்னொருவர் விஜய் காங்கிரசில் சேர்வதனால் இலங்கைத் தமிழர்கள் காண்டாகிவிட்டார்கள் என கலக்கல் கொமெடி ட்விட்டரில் செய்திருந்தார். என்ன செய்வது இதெல்லாம் இவர்களின் அறியாமை. அதே நேரம் லோஷனை கிண்டல் செய்த அல்லது திட்டிய பெரும்பாலான பின்னூட்டங்களை இட்டவர்கள் சாட்சாத் இலங்கை விஜயய் ரசிகர்களே என்பது அவருக்குத் தெரியவில்லை என்ன கொடுமை சார்.
அத்துடன் ஒருவர் தன் தொழிலுக்கு சார்பாக விமர்சனம் செய்யவேண்டும் என்றால் அதைவிட கடைந்தெடுத்த முட்டாள் தனம் எதுவும் இல்லை. அப்படியென்றால் நண்பர் கேபிளார் திரைப்படங்களை கிழித்து தோரணம் கட்டுகின்ற ஒருவர் இத்தனைக்கும் அவர் இருக்கும் துறை சினிமாத் துறை ஆகவே அவர் திரைப்படங்கள அனைத்தையும் சூப்பர், கலக்கல், உலகத் தரம் எனப் புகழவேண்டும் ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை ஏனென்றால் விமர்சனம் என்பது பார்ப்பவனின் கண்ணோட்டம்.
முதலில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளப் பழகுகுங்கள் பின்னர் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாம்.
அடுத்தது நண்பர் கனககோபி மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில் என ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் அவர் அம்மா பகவான் என்பவரது படத்தை பாடசாலையில் சில ஆசிரியர்கள் திணிப்பதாக கூறியிருந்தார். அதற்க்கு நான் //இது படுமுட்டாள் தனம் அந்த ஆசிரியைக்குச் சொல்லுங்கள். அல்லது அதிபரிடம் புகார் கொடுங்கள். // எனப் பின்னூட்டம் இட்டிருந்தேன்.
இதற்க்கு ஒரு அனானி (அவர் யார் எனக் கோபிக்குத் தெரியும்) இதற்கு சம்பந்தமில்லாமல் அரசியலை இழுத்திருந்தார். நீங்கள் அவரின் பக்தராக இருந்தால் அவர் செய்வது சரி என நிரூபியுங்கள் அதனைவிட்டு விட்டு விசர்க் கதைகள் சொல்வது படு முட்டாள்தனம்.
பின்னர் இன்னொருவர் மொக்கைப் பதிவர் கோபி கவனத்திற்க்கு? என அம்மா பகவானைப் பற்றி அவர் எழுதியது தப்பு என தன் கருத்தைச் சொல்லியிருந்தார். அது அவரின் தனிப்பட்ட கருத்து ஆனால் அதற்காக ஒருவரை மொக்கைப் பதிவர் எனக் கிண்டலடிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
மொக்கைப் பதிவு எழுதக்கூட அறிவே வேண்டும். மற்றவர்களைச் சிரிக்கவைப்பது என்பது மிகவும் கஸ்டமானவேலை என்பதை ஏனோ அவருக்குப் புரியவில்லை.
இதனைவிட அவர் அந்தப் பதிவில் தேவையில்லாமல் என்னையும் வம்புக்கு இழுத்திருந்தார். நான் கோபிக்கு பாராட்டுக்கொடுத்தது தப்பாம்? அவரைக் இப்படி எழுதாதே எனச் சொல்லியிருக்கவேண்டும் என சாரப் பட அவர் எழுதியிருந்தார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனால் உந்த மனிதர்களை அதிலும் துறவறம் செய்கின்றோம் என மாதம் மாதம் தங்கள் திருமணத்தைக் கொண்டாடும் மனைவியுடன் இருக்கும் மனிதர்களை வணங்குவதில் நம்பிக்கை இல்லை.
எந்த கடவுளும் நான் தான் கடவுள் எனச் சொல்வதில்லை. அத்துடன் இவர்கள் தங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மேல் திணிப்பது கண்டிக்கத்தக்கது. அதனைத் தான் நான் கோபிக்கு பின்னூட்டி இருந்தேன்.
கோபியின் கருத்துக்கு எதிர்க்கருத்தை ஆதாரபூர்வமாகச் சொல்லியிருக்கலாம் அதனைவிட்டு விட்டு அவரின் மேல் தனிமனிதத் தாக்குதல் செய்வது எந்தவகையில் நியாயம்?
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் யார் மீதும் திணிக்காதீர்கள். இது அம்மா பகவான் என்றால் என்ன விஜய என்றால் என்ன இளைய்ராஜா என்றால் என்ன எவருக்கும் பொருந்தும்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
25 கருத்துக் கூறியவர்கள்:
இன்னும் என் பின்னூட்டத்திற்கு பதில் இடவில்லை வந்தியண்ணா...
அவரின் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்...
லோஷன் அண்ணாவை கிண்டி நொங்கெடுத்துவிட்டார்கள்...
லோஷன் அண்ணா இன்னும் பதில் போடவில்லை என? பதில் போடாமல் விட்டாலும் பரவாயில்லை. எல்லோருக்கம் விளக்கம் கொடுக்க முடியாது.
மூஞ்சிப் புத்தகத்திலும் எனக்கெதிராக ஒரு குழு கிளம்பியிருந்தது.
அங்கு போய் விளக்கம் கொடுத்து அலுத்து விட்டது.
சத்யராஜ் சொல்வது போல் 'இவங்களுக்கு விளக்கம் சொல்லியே எங்கட வாழ்நாள் வீணாப் போகுது'.
//உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் யார் மீதும் திணிக்காதீர்கள். இது அம்மா பகவான் என்றால் என்ன விஜய என்றால் என்ன இளைய்ராஜா என்றால் என்ன எவருக்கும் பொருந்தும்.//
எல்லோருக்கும் தங்களது கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள்.
தங்களுக்கு மட்டும் உண்டு என வாதிடுகிறார்கள்.
தாங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது வேறு. இதுவரை பிடிக்காத முயலுக்கல்லவா 3 கால் என்கிறார்கள்.
அண்ணா...
மொக்கைப் பதிவர் கோபிக்கு என்பதன் முகவரியைக் கொடுக்க மறந்துவிட்டீர்கள்...
http://tamilbuve.blogspot.com/2009/09/blog-post_27.html
வந்தி,
தங்கள் அறிவுக்கு எட்டியவரை தானே சிந்திக்கிறார்கள்.
குறிப்பிட்ட ஓர் எல்லையைத் தாண்டி அவர்களால் சிந்திக்கவோ ஆழமான விவாதத்திற்குட்படுத்தவோ அவர்களால் முடியாது.
அப்படியிருக்கையில் கண்ணெதிரே இருக்கும் துர்நடத்தைதாரர்களை எப்படி கண்டுகொள்வார்கள்?
பெயர்சொல்லத் தைரியமில்லாதவர்களின் கருத்துகள் தைரியமானவை என நினைக்கிறீர்களா?
நல்லா அடிச்சி துவைச்சிருக்கீங்க வந்தி. என்ன செய்ய பிரபலமாகிட்டாலே இந்த மாதிரி விமர்சனங்களை வாங்க தான் வேண்டும். இந்த மாதிரி எல்லாம் உங்களை எல்லாம் விமர்சித்து தான் அவர்கள் பெரியவர்கள் ஆக முயற்சிக்கிறார்கள்.
அந்த கோபியின் மதத்திணிப்பு பதிவில் நானும் ஒரு 4,5 பின்னூட்டம் இட்டிருப்பேன் என நினைக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் தன் பெயரை வெளியே சொல்லாத அனானி என்னை தவளை என விளித்திருந்தார்.
//உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் யார் மீதும் திணிக்காதீர்கள். இது அம்மா பகவான் என்றால் என்ன விஜய என்றால் என்ன இளைய்ராஜா என்றால் என்ன எவருக்கும் பொருந்தும்.//
என் கருத்தும் அதே.. எனக்கு ரகுமான் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் கிட்டத்தட்ட என்னை ரகுமான் வெறியன் என கூறலாம். அதே நேரம் மற்றைய இசைய மைப்பாளர்களின் பாடல்களையும் கேட்பேன். என் கருத்து எனக்கு மட்டும். உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்.
சில நாட்களாக நான் வலைப்பதிவுப் பக்கம் வரவில்லை. இவ்வளவு நடந்திருக்கின்றதா? விமர்சனம் என்பதனை தொழில் கட்டுப்படுத்த முடியாது.
நான் 100% கடவுள் நம்பிக்கை கொண்டவன். மனிதர்களை தெய்வமாக போற்றுவதை முற்றாக வேறுக்கின்றேன் . இது தொடர்பில் ஒரு பதிவிடுகின்றேன்.
மொத்தத்தில் சொல்லப்போனால் இலங்கைப் பதிவர்களை சீண்டவே சிலர் இருக்கின்றனர் என்பதே உண்மை.
முதலில் வசியும் என்ன விடயத்தை நான் எழுதி இருகிறேன் என்று.
எக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை.
அதை விட அந்த குறிப்பிட விடயம் சம்மந்தப்பட்ட அந்த பிள்ளையிடம் நான் கோபி முன்பு கெட போது அது இல்லை என அது பதில் அழித்தது. அப்பொழுது கோபி அந்த பிள்ளையை அவ்விடத்தில் இருந்து போகும்படி கூறி விரட்டினார்.
அப்பொழுது என்னுடன் பதிவர் திவாகரும் இருந்தார். அதை விட்டு விட்டு அவர் தற்பொழுது எழுதிய அடுத்த பதிவும் ஆதாரம் அற்ற தவறான பதிவு என அடையாளம் காணப்பட்டதே இவர் இவ்வளவு ஆதாரம் அற்ற பதிவுகளை தொடர்ந்து இடுவதை முதலில் தட்டி கேழும் அப்புறம் எஅது தவறு சரி என்று பேசலாம். பதுவுகள் இடவந்து எவ்வளவு காலம் என்பது முக்கியம் அல்ல நீர் அதில் பெற்ற அனுபவமே முக்கியம். பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து என்கருத்தை வாழவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. எனது தவறோ அதை சுட்டி காட்டுவேன் என்மீது பிழை என்றால் நான் அதை ஏற்பேன்
என்ன கொடுமை அண்ணா இது? அந்த வெள்ளைக் கயிறுக்கு இத்தனை மகிமையா? முடியல. பேசாம சாமியார் வேலைக்குப் போயிடலாம் போல இருக்கு.
///
பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?
பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..
///
இது என்ன பாடல் விமர்சனமோ வந்தி?????????? :))
வந்தி அண்ணா சரியான கோபத்தில் இருக்கிறிங்க போல...
லோஷன் அண்ணாவின் கருத்தை தெரிவிக்க அவருக்கு முழு அதிகாரமும் இருக்கு. வலைப்பதிவில் நடுநிலை எண்ட பேச்சுக்கே இடமில்லை. அவர்களுடைய விருப்பங்களை அவர்கள் பதிந்து வைக்கும் இடம் மட்டுமே. இங்கு அவர்கள் செய்யும் தொழிலுக்கு எந்த தொடர்புமில்லை.
இருப்பினும் விமர்சனங்கள் +ve ஆக இருந்தா எந்த எதிர்ப்பும் வராது. இது இவரின் ரசனை என்று விட்டுவிட்டு போய் விடுவார்கள். உதாரணம் கந்தசாமி விமர்சனம்.
அதே நேரம் -ve இருந்தால் அவர்களின் ரசிகர்கள் கோவப்படுவதும் வாடிக்கையே. இது அவர்களின் பக்குவத்திற்கு ஏற்றவாறு கருத்தைச் சொல்வார்கள். உதாரணம். உங்கள் பதிவு 'உன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்' இல் லோஷனின் பின்னூட்டம்
"கண்ட கழுதையெல்லாம் கமல் பற்றிக் கத்தும்.. கணக்கேடுக்காதீங்க..
விகடனில் வருவதெல்லாம் ஒரு விமர்சனம் என்று போய் கவலைப் படுறீங்களே.." இது அவரின் பக்குவப்பட்ட கருத்து.
விஜய் பற்றிய பதிவும் அப்படித்தான். லோஷன் சொன்ன மாதிரி
"கண்ட கழுதையெல்லாம் விஜய் பற்றிக் கத்தும்.. கணக்கேடுக்காதீங்க..
லோஷனின் களத்தில் வருவதெல்லாம் ஒரு விமர்சனம் என்று போய் கவலைப் படுறீங்களே.." இப்படியும் விஜய் ரசிகர் சொல்லலாம். இதுக்காக என்னை விஜய் ரசிகர் எண்டு நினைக்க வேண்டாம்.
//அத்துடன் ஒருவர் தன் தொழிலுக்கு சார்பாக விமர்சனம் செய்யவேண்டும் என்றால் அதைவிட கடைந்தெடுத்த முட்டாள் தனம் எதுவும் இல்லை.//
இதை நான் கன்னா பின்னா எண்டு வழிமொழிகின்றேன்.
வந்தி அண்ணா cool ;))))
----------------------------------------------------
கனககோபிக்கு பின்னர் பின்னூட்டம் இடுகின்றேன்.
இப்போ "மொக்கைப் பதிவர் கோபி கவனத்திற்க்கு?" பதிவை வாசித்தேன். இங்கு விஜயக்கு பதிலாக அம்மாபகவான். யாருக்கும் எதிர் கருத்தை ஏற்கும் பக்குவம் இல்லை. இதற்கு பதிலாக எதிர் கருத்தை சொன்னவரை தரம் தாழ்த்திப் பேசுவது....:(
இந்த சும்மா பகவான் சாரி அம்மா பகவான் தொல்லை தாங்க முடியல...:(
:-) :-) விஜய் சறுக்குவதற்கான காரணங்கள் எமக்கு தெரிகின்றது..ஆனால் அவருக்கு தெரியவில்லை :-((
:-) :-) விஜய் சறுக்குவதற்கான காரணங்கள் எமக்கு தெரிகின்றது..ஆனால் அவருக்கு தெரியவில்லை :-((
அண்ணா
இந்த சும்மா பகவான்.. சொறி சொறி அம்மா பகவான், பாபா போன்றவர்கள் பற்றித் தேடித்தேடிப் படித்து வருகிறேன். கனடாவில் எங்கோ அம்மா பகவான பஜனை நடக்குதாம்.. ஒருக்கா போய் என்ன நடக்குது எண்டு பாக்கோணும். ஏதாவது ஐடியா சரிவந்தா நானும் ஒரு தாடிய விட்டிட்டு ‘அம்மப்பா பகவான்' என்ற பெயரில் வருகிற பக்தைகளுக்குத் தடவிக் கொடுத்து குழந்தை பாக்கியம் அருளும் ஐடியா இருக்கிறது..........
வந்தி, உங்களுக்கு வந்த கோபம் என்பதை விட, எனக்கு வந்தது சிரிப்பே.. இவ்வளவு கோபப் படுவார்களா என்று நினைத்தேன்.. என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன்..
நீங்கள் சொல்லி இருப்பதைப் போல, என் வானொலி தர்மம் வேறு பதிவுலகில் என் கருத்துக்கள் வேறு. எனது தனிப்பட்ட கருத்துக்களே இங்கு வருகின்றன.இதில் யாருக்காகவும் நான் விட்டுக் கொடுத்துப் பேச வேண்டிய தேவையில்லை..
வேட்டைக்காரன் பாடல் விமர்சனத்தில் விஜய் பற்றி நான் சொன்னதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எனக்கு கவலையே இல்லை.
// கமல் ரசிகன் said...
///
பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?
பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..
///
இது என்ன பாடல் விமர்சனமோ வந்தி?????????? :))
4:02 PM, September 28, 2009//
அதுவும் விமர்சனம் தான்.. :)
கருத்துக்கள் மோதிக் கொள்ள களத்தை திறந்துவிட்டேன்.. சில பின்னூட்டங்கள் பார்த்து சிரிப்பு தான் வந்தது.. :)
//அதே நேரம் -ve இருந்தால் அவர்களின் ரசிகர்கள் கோவப்படுவதும் வாடிக்கையே. இது அவர்களின் பக்குவத்திற்கு ஏற்றவாறு கருத்தைச் சொல்வார்கள். உதாரணம். //
பொசிடிவ்,நெகடிவ் பார்த்து நான் கருத்துகள் சொல்வதில்லை..
மனதில் பட்டதை சொல்கிறேன்..
உந்த அம்மா பகவான் விவகாரமும் வாசித்தேன்..நானும் இது பற்றி கடுமையான எதிர்ப்பானவன்.. சும்மா பித்தலாட்டங்கள்..(என் அம்மா பக்தையாக இருந்தும்)
மீதி எனது பதிவில் பின்னூட்டங்களுக்கு பதிலாக வரும்..
வந்தி, உங்கள் ஆதங்கம் புரிகிறது.. ஆனால் நான் உங்களுக்கு அடிக்கடி சொல்வது தான்.. நாங்கள் சில பேர் பக்குவப் பட்டவர்கள்.. :)
சகோதரருக்கு சில விடயங்களை மீண்டும் விளங்கப்படுத்த விரும்புகிறேன்...
நீர் எமது வீட்டிற்கு வந்தது உண்மை என்பதும், அந்தக் குழந்தை இல்லை என்று சொன்னதாக நீர் சொன்னதும் உண்மை என ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் உமது சிறிய அறிவுக்கு சில விடயங்கள் வேறாகத் தெரிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
முதலாவது விடயம் நான் அந்தக் குழந்தையை எம் அறையை விட்டு வெளிறேச் சொன்னது உண்மை. ஆனால் அது ஆரம்பத்தில்.
20 வயது இளைஞர்கள் கதைக்கும் இடத்தில் ஓர் சிறுகுழந்தை இருப்பதை நான் விரும்பவில்லை.
அந்தக் குழந்தை பிழையான விதத்தில் வளர்வதை விரும்பாமல் தான் அப்படிச் சொன்னேன்.
அத்தோடு அந்தக் குழந்தையை வெளியேறுமாறு நான் ஒருமுறை தான் சொன்னேன்.
நீர் அந்த விடயத்தைக் கேட்கும் போது நான் குறுக்கீடு செய்யாமல் அமைதியாகத் தான் இருந்தேன்.
ஆகவே நான் அந்தக் குழந்தையை விரட்டி கதையைத் திருப்ப முயன்றேன் என்ற உமது அப்பட்டமான பொய்யை முற்றுமுழுதாக மறுக்கிறேன்.
அந்தக் கதையை வராமல் செய்ய வேண்டும் என்றால் நான் உம்மை வீட்டிற்கே அழைக்காமல் விட்டிருக்கலாம்.
இரண்டாவது விடயம், அந்தக் குழந்தை உங்கள் முன்னால் ஆசிரியை தரவில்லை என்று தான் சொன்னது. நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் உண்மையான விடயம் அதுவல்ல.
சிலர் பிஞ்சுக் குழந்தை பொய் சொல்லாத என்ற வாத்தோடு வரலாம்.
பொதுவாக் குழந்தைகள் அப்படித் தான்.
ஆனால் இந்தக் குழந்தைக்கு என்னோடு மோதிப் பார்ப்பதில் ஆர்வம்.
அதுவம் என் நண்பர்கள் வீட்டுக்கு வரும்போது இப்டியாக என்னை வெறுப்பேற்றும் விதமாக நடந்துகொள்வதுண்டு.
எனத வீட்டுக்கு வந்த நண்பர்கள் அதை அறிவார்கள்.
(நேற்றும், நான் நண்பர்களுக்கு பலகாரம் எதுவும் கொடுக்க வேண்டாம் என நான் சொன்னதாக அந்தக் குழந்தை சொன்னதை நண்பருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.)
ஆகவே ஆசிரியை படம் கொடுத்த விடயம் முற்றிலும் உண்மை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை வாசிக்கும் நண்பர்கள் சிலர் நான் சமாளிக்க முயல்வதாக எண்ணக் கூடும்.
ஆனால் அம்மா பகவானைப் பற்றி எழுதித் தான் எனக்கு hits களைத் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை.
பில்டேக்ஸ் பற்றி நான் எழுதிய ஆக்கத்திற்கு அம்மா பகவான் ஆக்கத்தோடு ஒப்பிடும் போது வாசகர் செறிவு (குறிப்பிட்ட நேரத்துள் வந்தோர்) எனக்கு மிக அதிகம்.
எனது பில்கேட்ஸ் பற்றிய ஆக்கத்தில் பிழை இருப்பதால் அம்மா பகவான் பற்றிய ஆக்கமும் பிழை என முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும் இவரைப் பார்த்து நான் சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
அந்தப்படம் எனக்கு மின்னஞ்சலில் கிடைத்தது.
நான் அதை உறுதிபப்படுத்திக் கொள்ள பலமுறை கூகிள் ஆண்டவர் உட்பட்ட தேடுபொறிகளில் தேடினேன். அந்தப் பெண்மணி தான் என விடை வந்தபின்னரே நான் பதிவிட்டேன்.
மதுவதனன் அது பொய்யான தகவல் என்றதும் நான் எனது தளத்தில் பிழையான தகவலுக்கு மன்னிப்புக் கோரி பதிவிட்டேன்.
ஆகவே எனது பிழைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது என்பதை உமக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட பதிவர்கள் (வந்தியண்ணா, நான்) சிலரை எதிர்த்து பிரபல்யம் அடையும் உம் முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உமது பதிவிற்கான எனது பின்னூட்டங்களுக்கு நீர் இன்னும் பதிலிடாதது உமது பக்கத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறது.
பதிவர்களுக்கு ஜால்ரா அடித்து முன்னேறும் பழக்கம் உமக்கு இல்லை என்று கூறியிருக்கிறீர்.
இங்கே பதிவர் யாரும், யாருக்கும் ஜால்ரா அடிப்பதில்லை என்றும் அப்படி அடித்தாலும் எதுவும் நடக்காது என்பதையும் உமக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆரோக்கியமான பதிவுகளுக்கு நிச்சயமாக வாசகர் வட்டம் கிடைக்கும் என்பது பதிவர்கள் அனைவரும் அறிந்தது.
உதாரணத்திற்கு புல்லட் அண்ணாவை பார்க்கவும்.
ஒப்பீட்டளவில் கொஞ்சப் பதிவுகள், யாரையும் ஜால்ரா அடிப்பதில்லை, ஆனால் அவருக்கென்று தனி வாசகர் வட்டடே இருக்கிறது.
அப்படியே தான் எல்லோரும்.
வந்தியண்ணா உட்பட யாருமே பகவான் பக்தர்களை பகவானைக் கும்பிட வேண்டாம் என இதுவரை சொல்லவில்லை.
உம்மைப் போன்றவர்களின் இப்படியான கருத்துக்களால் இனி அப்படிச் செயற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
(நான் வந்தியண்ணா என்று அழைப்பதைத் தான் ஜால்ரா அடிப்பது என கூறினீரோ தெரியவில்லை. அவர் என்னை விட வயதில் மூத்தவர் என்பதால் தான் அவரை அண்ணா என அழைக்கிறேனே தவிர அவரை ஜால்ரா பிடிப்பதற்கு அல்ல)
எனது கடைசி பின்னூட்டம் நண்பர் புவிராஜ் இற்கு.
அவருடைய வலைப்பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை.
பின்னூட்டங்கள் வேண்டாம் என கட்டளை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.
"உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் யார் மீதும் திணிக்காதீர்க"
this the point
//எனது பில்கேட்ஸ் பற்றிய ஆக்கத்தில் பிழை இருப்பதால் அம்மா பகவான் பற்றிய ஆக்கமும் பிழை என முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடும் இவரைப் பார்த்து நான் சிரிப்பதா அழுவதா தெரியவில்லை//
.//முதல்கோணல் முற்றும்கோணல்தானே நண்பா..
அடை நிவர்த்தி செய்துவிட்டாஜே.//
/ கமல் ரசிகன் said...
///
பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?
பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..
///
இது என்ன பாடல் விமர்சனமோ வந்தி?????????? :))
4:02 PM, September 28, 2009//
-----------------------------------
LOSHAN said...
//அதுவும் விமர்சனம் தான்.. :)//
நீங்கள் மட்டும் பாடல் விமர்சனத்தில் விஜயின் வரவிருக்கும் படம் பற்றியும், விஜயின் அரசியல் பற்றியும்(அதில் உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதே ஒருவருக்கும் புரியவில்லை) இணைத்து விமர்சனம் என்ற பெயரில் எழுதுவது சரியாயின், உங்களது பதிவுலகத்துறையையும் உங்களது ஒலிபரப்புத் துறையையும் இணைத்துக் கருத்துக் கூறுவதிலும் என்ன தவறிருக்க முடியும்.
ஏனென்றால், நீங்களும் விஜய் போல பிரபலமான ஒருவர்தான்.
வந்தியத்தேவன் கூறுவதுபோல் நீங்கள்(லோஷன்) இலங்கையில் மாத்திரம் பிரபலமான ஒருவரல்ல (நீங்கள் பதிவுலகில் களம் அமைக்க முன்னர்). உலக நாடுகளிலுள்ள (இலங்கையைச் சேர்ந்த) பதிவர்களால் அறியப்பட்டவர்.
விஜய் நடிகராக இருப்பதால் தான், அவரது சகல நடவடிக்கைகளையும் நாம் ஒன்றாக விமர்சிக்கின்றோம்(சரியோ பிழையோ).
அது போலத்தான் நீங்களும் ஒலிபரப்பாளராக இருப்பதால் உங்களது எல்லா நடவடிக்கைகளும் ஒன்றாக விமர்சிக்கப்படலாம்.
ஆகவே, ஒரு வகையில் வந்தியத்தேவன் சொல்வது சரியோ?
//வலையில் எழுதும் லோஷன் வேறை, வானொலி அறிவிப்பாளர் லோஷன் வேறை என்பதை ஏனோ சில விளங்கிக்கொள்ளவில்லை//
இதை இப்படி மாற்றலாம்.
நிஜத்தில் உள்ள விஜய் வேறு, படத்தில் உள்ள விஜய் வேறு என்பதை ஏனோ சிலர் விளங்கிக்கொள்ளவில்லை.
லோஷன், நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்தவர். அதனால் தான் விமர்சிக்கப்படுகிறீர்கள் ரஜினி, கமல், விஜய்.....போன்றவர்கள் போல்.
தொடருங்கள்.
ப்ளொக்ஸ் free எண்டதால்...
ப்லோக் எழுதுவோர் என்னவும் எழுத கூடாது..
சரியான விஷயங்களை ஆராய்ந்து எழுதனும்....
நான் வாசிக்கும் எல்லா ப்லோக் எழுதுவோரும் ஒழுங்க்காக தான் எழுதுகிறார்கள்
"நான் certificate குடுக்கிற அளவுக்கு பெரிய ஆள் இல்ல ஜஸ்ட் ஒரு சாதரண reader"
சில ப்லோக் எழுதுவோர் இதை திருத்தி கொள்ளவும் அன்பார்ந்த வேண்டுகோள்...
ஏன் நான் இதை சொல்லுகின்றேன் என்றால்...
எழுத்து பலம் வாய்ந்தது so plz ப்லோக் writers இதை கவனத்தில் வைக்கவும்...
//வந்தி அண்ண
"தன் தனிப்பட்ட வலையில் தானே செய்தார். "
எண்ட ப்லோக் நான் எண்ட கருத்தை எழுதுறன் எண்டு கூறக்கூடாது...
வாசிப்பது பல பேர்...
so உங்களுடைய கருத்து பல பெயரை சென்றடையும்...
அதுகும் லோஷன் அண்ண மாதிரி பிரபலங்கள் எழுதுகின்ற பொழுது reach கூட./
அவரும் இது வரைக்கும் தப்ப ஒண்டும் எழுத இல்லை
but உங்கள் உடைய கருத்துகள் என்னை பொறுத்த வரை இவ்vaளு நாளும் சரியாக இருகின்றன இனியும் சரியாக இருக்கும் எண்டு நம்புகிறேன்....
நான் கூற வந்த point விளங்கிச்சு தானே...(if not call me back cuz for typing this i took 2 hrs again i cant.. so plz call me)
நான் இந்த பதிவிக்கு பின்னுட்டம் இடவில்லை எல்லா பதிவுக்கும் சேர்த்து சொலி இருக்கன்...
ஏன் நீங்கள் நான் சொன்ன கருத்தை சரியான முறையில ஒரு பதிவா போடுங்களேன்..... எல்லா ப்லோக் writers ஒரு உதவிய, அறிவுறுத்தல், etc...
(நான் சொன்னது சரியாக இருந்தால்).
ஓர் தொடர் பதிவு போல
ஓர் தொடர் பின்னுட்டம்(பதிவாக வரட்டும்)
அழைக்க படுவோர்
வந்தி அண்ணன்
லோஷன் அண்ணன்
வேந்தன்
யோ வாய்ஸ் (யோகா)
SShathiesh
மருதமூரான்
மற்றும் பல பெயரை அழைக்கணும் எல்லாரையும் நானே கூப்பிட்டால்....
அன்புடன் உங்கள் ப்லோக் வசிக்கும் சாதரண வாசிப்பாலன்.
//தமிழ் சரியோ தெரிய
(COMMON Blog Reader)
சில நண்பர்களுக்கு சில விடயங்களைப் புரிய வைக்க விரும்புகிறேன்...
இங்கு பில்கேட்ஸ், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வந்து பதிவெழுதினாலும் அவர்கள் தங்கள் வியாபாரம் மற்றும் அவர்களது விஞ்ஞானம் பற்றித் தான் எழுத வேண்டும் என நினைக்கிறீர்களா?
ஒருவர் பிரபலம் என்பதால் தனது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என எண்ணுகிறீர்களா?
ஏன் அவ்வாறு?
வலைப்பதிவுகள் முதலில் தொடரறாநிலை தினப்பதிவேடுகளாகவே (Online diary) பயன்படுத்தப்பட்டமையை நினைவுகூருகிறேன்.
மற்றம் நண்பர் புவிராஜிற்கு,
நீர் எனது கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வரை இனி உமக்கு பதிலளிப்பதில்லை என முடிவுசெய்திருக்கிறேன்.
எனது மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது.
உமது பக்கம் நியாயம் இருந்தால் கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் ஏன் தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கிறீர்?
ஒருபதிவில் பிழை என்பதால் ஒருவர் எழுதிய முழுப்பதிவும் பிழை என்பது முழு முடடாள்தனம்.
நான் அந்தப் பதிவில் என் பிழையை ஏற்று மன்னிப்பும் கோரியிருக்கிறேன் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அம்மா பகவான், பாபா உட்பட எத்னையோ மனிதர்களை வழிபடும் முறைகள் காலத்திற்குக் காலம் நம் மத்தியில் fashionable ஆவதும், பின்னர் அவர்களை ஓரம் கட்டிவிட்டு வேறு ‘பகவான்கள்’ மக்களை கவர்வதும் காலம் காலமாக நடைபெறும் செயல் என்பதை மறுக்க முடியாது.
இந்த ‘பகவான்’களை பின்தொடர்ந்து பெருமைகளை பறைசாற்றிக் கொள்வதே ஒருவகையில் பெருமைக்குரிய விஷயமாக மாறி வருவது வருந்தத் தக்கது.
உதாரணமாக எனக்கு 2 room flat, பக்கத்து வீட்டுக்காரிக்கு எப்படி பெரிய flat இருக்க முடியும்!! போன்ற எண்ணங்கள் நம் மக்கள் மத்தியில் எழுவதை தவிர்க்க முடியாது!! ஆனால் இன்னும் ஒரு படி மேலே போய் ‘அவர்கள் இந்த பகவானை கும்பிட்டால் நாம் அந்த பகவானை கும்பிடுவோம்’; ‘என்ற social fashion கடுப்பில் பலர் இந்த வழிபாடுகளோடு தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்பதை இல்லை என்று கூறுங்கள் பார்ப்போம்!!
மேலும் ‘எங்கட office staff எல்லாம் குடும்பம் குடும்பமா எதோ ஒரு விஷயத்தில ஈடுபடக்குள்ள நாமளும் செய்யாட்டி social fashion ladder இல கீழ இறங்கிருவமோ?’ ரீதியில் பலர் இந்த வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது என்னைப் பொறுத்த வரையில் மறுக்க முடியாத உண்மை.
என்ன கொடுமை சார் இது. உனது பகவான் பெரியவர், எனது பகவான் சிறியவர், அவரது பகவான் மிகப் பெரியவர்’ போன்ற சண்டை சச்சரவுகளும் போட்டி பொறாமைகளும் இந்த விஷயங்களிலும் ஏர்படுகின்றன!!!!!
//சில நாட்களுக்கு முன்னர் நண்பர் லோஷன் விஜய் நடிச்சா தாங்கமாட்டோம் என வேட்டைக்காரனின் இசையை விமர்சித்திருந்தார். //
//பின்னர் இன்னொருவர் மொக்கைப் பதிவர் கோபி கவனத்திற்க்கு? என அம்மா பகவானைப் பற்றி அவர் எழுதியது தப்பு என தன் கருத்தைச் சொல்லியிருந்தார்.
:)
Post a Comment