அண்ணா நூற்றாண்டு
சில நாட்களுக்கு முன்னர் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் கலைஞரில் நேரலை செய்தார்கள். தமிழக முதல்வர் சுற்றம் சூழ கலந்துகொண்டார். கவிதை பாடிய கவிஞர்கள் அனைவரும் கவிதைக்கு பொய் அழகு என்பதை அப்பட்டமாக நிரூபித்தார்கள். கவிதைப் பித்தன், ஆண்டாள் பிரியதர்சினி, யுகபாரதி, வைரமுத்து என அனைவரும் அண்ணாவை மறந்து தம்பி புகழ் பாடினார்கள்.
ஆண்டாள் பிரியதர்சினி நாஸ்திகரான முதல்வரை தமிழ்க் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டது அபத்தம் என்றால், கவிப்பேரரசு அண்ணாப் போற்றுகின்றேன் என மகாத்மா காந்தியை கீழிறக்கிவிட்டார். காந்தி படம் உள்ள நோட்டு கிழியும் ஆனால் அண்ணா படம் உள்ள நாணயம் கிழியாது என்றார். ஒருவரை ஏற்றுவதற்காக இன்னொருவரை கீழே இறக்ககூடாது என்பது கவிப்பேரரசுவுக்குத் தெரியவில்லை.
இவர்களின் புகழ்களை முதல்வர் ரசிக்கவில்லை என்பது அவரின் முகபாவனைகளில் தெரிந்தது. அத்துடன் சபையில் பலரும் கேட்டுத்தான் கை தட்டுவாங்கினார்கள்.
தமிழக அரசு விருதுகள்
வழக்கம் போல் தமிழக அரசு விருதுகள் பலரைத் திருப்திப் படுத்த கொடுத்திருக்கின்றார்கள். இப்போ தான் தெரிகிறது கமல் படம் வெளியாகும் ஆண்டில் ரஜனி படம் வெளியாகாது, ரஜனி படம் வெளியாகும் ஆண்டில் கமல் படம் வெளியாகாது, ஏனென்றால் அப்படி வந்தால் யாருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பது என தமிழக அரசின் விருதுக் குழு குழம்பிப்போகும்.
தசாவதாரம் , சிவாஜியைவிட மொழி, சுப்பிரமணியபுரம், பூ, காஞ்சிவரம் எல்லாம் மிகவும் சிறந்த படங்கள் ஏனோ விருது கிடைக்கவில்லை. காஞ்சிவரத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஆனால் தமிழக அரசு விருது கிடைக்கவில்லை.
இந்த விருதுகளை விட நம்ம வலையுலக விருதுகள் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது. விருதுகளும் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சிபோல் மாறிவருவது கண்டனத்துக்குரியது.
அப்பாவிக் கோவிந்தனின் கேள்வி: கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.
கிரிக்கெட்
தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான பல முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, அணிகள் அரையிறுதிக்கு செல்லமுடியவில்லை. இந்தியாவில் தலைவிதி சில மணித்தியாலங்களில் நிர்ணயிக்கப்படும்.
ஸ்மித், ஸ்ரோஸ் விவகாரமும் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்திய அணி தற்சமயம் தோற்றால் ரசிகர்கள் மீண்டும் கல்லெறிவார்களா? வீடு உடைப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தற்போதைய நிலவரத்தை நம்ம தொலைக்காட்சி நடுவர்கள் பாணியில் சொன்னால்
New Zealand Selected, South Africa Eliminated and India Waiting List.
அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
-
அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி
ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக்
ஜோகோவிச் எதிர...
15 hours ago
31 கருத்துக் கூறியவர்கள்:
//ஒருவரை ஏற்றுவதற்காக இன்னொருவரை கீழே இறக்ககூடாது என்பது கவிப்பேரரசுவுக்குத் தெரியவில்லை.//
வைரமுத்து கவிதைகளுக்கு நான் ரசிகன்தான் ஆனால் அவரது ஜால்ராவுக்கு இல்லை. நாளை காந்திஜியின் பாராட்டு விழா நடந்தால் போய் அண்ணா தமிழ்நாட்டுல மட்டும். காந்தி படம் போட்ட தாள் நாடு முழுக்க என பேசிட்டு வருவார்.
ஒரு பத்திரிகையில் ”உங்களது வாரிசாக யாரை கருதுகிறீர்கள்” என கேட்டதற்கு அந்த அளவுக்கு யாரும் இதுவரை பிறக்கவில்லை என கூறியவர்தான் இந்த வைரமுத்து. நானும் ஒரு காலத்தில் வைரமுத்து கவிதைகளை பாடமாக்கி வைத்திருந்த அவரது ரசிகன் தான் ஆனால் இப்போ இல்லை.
//கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.//
ஒரு வேளை இந்த கையில கொடுத்து அடுத்த கையில் வாங்கிக்கிருவாரோ?
மோனிகா அக்கா ஸ்டிக்கர் ஒட்டுனமாதிரி உள்ள படத்தை நான் பார்க்கவில்லை வந்தி என்னை நம்புங்கள்
நானும் வைரமுத்துவின் ரசிகன்தான். ஒருவரை உயர்த்த இன்னொருவரை தாழ்த்துவது நல்ல விடயமல்ல. அவரது கவிதைகள், படைப்புக்கள் தரமானவைதான். ஆனாலும் வைரமுத்துவுக்கு தலைக்கனம் இருப்பதாகவே சில சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.
தமிழக அரசு விருது வழங்கலை நான் ஒரு அரசியல் நாடகமாகவே பார்க்கி்றேன்.
படத்தை மட்டும் நீங்கள் இரசிப்பது போன்று நன்றாகவே ரசித்தேன் (சும்மா லொள்ளு)
//கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.
//
அதுக்குத்தானே ஒரு பொம்மையைக் கூடவே வச்சிருக்கார்.
படம் நல்லாயிருக்கு.
கவிதை பித்தன் அவள்களின் ஆசை பட்டியல் கேட்டீங்களா? நல்லா இருந்துச்சு!!
//கலைஞருக்கு உளியின் ஓசைக்காக கிடைத்த சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.//
comment superb sir...
//முதல்வரை தமிழ்க் கடவுள் முருகனுடன் ஒப்பிட்டது அபத்தம்//
முருகனை இப்ப துணை முதல்வருக்கு ஒப்பிட்டு படமும் வைச்சாசு. :)
//சிறந்த வசனகர்த்தா விருதை யார் அவருக்கு கொடுபார்கள்?.//
"வலதுகை கொடுப்பதை இடதுகை அறியது" என ஒரு பழமொழியை சொல்லிட்டு வலதுகையால் கொடுத்து இடதுகையால் வாங்குவார். :))
203 உளறல்களுக்கு "2000 " கருத்துரைகள் பாத்தீங்களா...?
//தற்போதைய நிலவரத்தை நம்ம தொலைக்காட்சி நடுவர்கள் பாணியில் சொன்னால்
New Zealand Selected, South Africa Eliminated and India Waiting List.
//
lols :-)
மோனிகா மேல அப்பிடி என்ன தீராக் காதல் உமக்கு
//யோ வாய்ஸ் (யோகா) said...
வைரமுத்து கவிதைகளுக்கு நான் ரசிகன்தான் ஆனால் அவரது ஜால்ராவுக்கு இல்லை. நாளை காந்திஜியின் பாராட்டு விழா நடந்தால் போய் அண்ணா தமிழ்நாட்டுல மட்டும். காந்தி படம் போட்ட தாள் நாடு முழுக்க என பேசிட்டு வருவார். //
யோ உங்களின் வைரமுத்து பற்றிய கருத்துகளுக்கு நன்றி. அவர் எவ்வளவுதான் நன்றாக எழுதினாலும் நான் என்ற அகங்காரம் இருக்கின்றது இல்லையென்றால் தன்னை கண்ணதாசனை விட பெரியவர் எனக் காட்டிக்கொள்வாரா? இதற்க்கு இவரின் அரசியல் சார்ந்த உறவுகள் தான் காரணம்.
//ஒரு வேளை இந்த கையில கொடுத்து அடுத்த கையில் வாங்கிக்கிருவாரோ?//
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் அப்போ பார்த்துக்கொள்ளலாம்.
// யோ வாய்ஸ் (யோகா) said...
மோனிகா அக்கா ஸ்டிக்கர் ஒட்டுனமாதிரி உள்ள படத்தை நான் பார்க்கவில்லை வந்தி என்னை நம்புங்கள்//
நம்பிட்டம் ஆமாம் மோனிகா உங்களுக்கும் அக்காவா?
//சந்ரு said...
ஆனாலும் வைரமுத்துவுக்கு தலைக்கனம் இருப்பதாகவே சில சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.//
அதே தான் யோவிற்க்கு கொடுத்த பதிலே உங்களுக்கும் அவருக்கு தலைக்கனம் அதிகம்.
//சந்ரு said...
தமிழக அரசு விருது வழங்கலை நான் ஒரு அரசியல் நாடகமாகவே பார்க்கி்றேன்.//
என்ன சந்ரு உண்மையை இப்படி வெட்டவெளிச்சமாகச் சொல்கின்றீர்கள்.
//படத்தை மட்டும் நீங்கள் இரசிப்பது போன்று நன்றாகவே ரசித்தேன் (சும்மா லொள்ளு)//
நான் இந்தப் படங்களை ரசிப்பதில்லை, கண்ணை மூடிக்கொண்டே போடுகின்றேன்.
// Subankan said...
அதுக்குத்தானே ஒரு பொம்மையைக் கூடவே வச்சிருக்கார்.//
யாரைச் சொல்கின்றீர்கள்?
//படம் நல்லாயிருக்கு.//
நன்றி நன்றி.
// Bhuvanesh said...
கவிதை பித்தன் அவள்களின் ஆசை பட்டியல் கேட்டீங்களா? நல்லா இருந்துச்சு!!//
கேட்டேன் கேட்டேன் நிறையச் சந்தங்களுடன் வசனம் இல்லாமல் கவிதை வாசித்தார்.
//மகா said...
comment superb sir... //
நன்றிகள்
//வேந்தன் said...
முருகனை இப்ப துணை முதல்வருக்கு ஒப்பிட்டு படமும் வைச்சாசு. :)//
அப்படியா? இந்த செய்தி அறிந்தனான் ஆனால் இதுவை யாரும் அதனை படம் போட்டுக் காட்டவில்லை.
//"வலதுகை கொடுப்பதை இடதுகை அறியது" என ஒரு பழமொழியை சொல்லிட்டு வலதுகையால் கொடுத்து இடதுகையால் வாங்குவார். :))//
இருக்கலாம் இருக்கலாம்.
//பிரபா said...
203 உளறல்களுக்கு "2000 " கருத்துரைகள் பாத்தீங்களா...?//
நன்றிகள் பிரபா நீங்கள் சொன்னதன் பின் தான் பார்த்தேன்.
//டொன்’ லீ said...
lols :)//
நன்றிகள் சிங்கப்பூர் மாதவன்
// Kiruthikan Kumarasamy said...
மோனிகா மேல அப்பிடி என்ன தீராக் காதல் உமக்கு//
ஒளியிலே தெரிவது தேவதையா? அந்த நாளில் இருந்து சிலந்தியில் கலக்கிய காலம் வரை மோனிகா ரசிகர் என் நண்பர் ஒருவர் அவருக்காகத் தான் இந்த மோனிகா.
உடன்பிறப்புக்களே வந்தியத்தேவனின் முகவரி வேணுமா?
//இந்த விருதுகளை விட நம்ம வலையுலக விருதுகள் எவ்வளவோ மேல் போல் தெரிகின்றது. விருதுகளும் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சிபோல் மாறிவருவது கண்டனத்துக்குரியது. //
சரியாக சொன்னீர்கள்.. அம்மையாரும் தன பங்குக்கு அறிவித்தால் நல்லா இருக்கும்..
மோனிகா நல்லாவே இருக்கிறா.. ;)
அதென்ன ஸ்டிக்கர் சிலந்தி கடிச்சதோ? இவவுக்கு தான் அணுவளவும் பயமில்லையே.. ;)
..
// தமிழக முதல்வர் சுற்றம் சூழ கலந்துகொண்டார். //
அவர் இங்க மட்டுமில்ல எங்கயும் குடும்ப சமேதரம் தான்...
அது ஆட்சி என்ன, விழா என்ன...
அவர் குடும்பத்தலைவன்...
குடும்பத்தலைவன் குடும்பத்தை நல்லாப் பாக்கோணும் தானே...
விருதுகள்... ஹா ஹா...
அது விருது இல்ல... உத வாங்கி கமல்ஹாசன் வீட்டுக்குள்ள வைக்கிறத விட குப்பையில போடலாம்.
எத்தனை விருது பெற்ற மனுசன், பிழையான ஆக்கள் குடுக்கிறதால மதிப்பில்லாத ஒரு விருத வாங்கிப் போட்டுது...
என்னைப் பொறுத்தவரை, வைரமுத்து என்பவர் அற்புதமான கவிஞர்.
ஆனால் சமூகப் பொறுப்புள்ள கவிஞரா என்றால் விடை 'இல்லை' என்பது தான்...
'''அறிஞர் அண்ணா சகிப்புத்தன்மை அதிகம்கொண்டவர்!' என்று கலைஞர் புகழ்மாலை சூட்டியிருக்கிறாரே...''
''இல்லையா பின்னே... தனது நூற்றாண்டு விழாவில் கலைஞர் புகழ் பாடி கருத்தரங்கம் நடத்தினாலும், பொறுத்துக்கொள்ளும் அளவுக்குச் சகிப்புத்தன்மைமிக்கவர் அண்ணா
//LOSHAN said...
உடன்பிறப்புக்களே வந்தியத்தேவனின் முகவரி வேணுமா?//
அண்ணே போகும்போது உங்கள் வீட்டுக்கும் வந்துதான் போவேன்.
//சரியாக சொன்னீர்கள்.. அம்மையாரும் தன பங்குக்கு அறிவித்தால் நல்லா இருக்கும்..//
விரைவில் அறிவிப்பார் விருதுகளை அல்ல ஓய்வை.
//மோனிகா நல்லாவே இருக்கிறா.. ;)//
சும்மாவா தங்கர்பச்சானின் அழகியல்லவா!!!
//அதென்ன ஸ்டிக்கர் சிலந்தி கடிச்சதோ? இவவுக்கு தான் அணுவளவும் பயமில்லையே.. ;)//
சிலந்தி கடிக்கவில்லையாம் ஸ்டைலாம், ஆமாம் அவருக்கு அணுவளவும் பயமில்லை ஆனால் தாரிகாவின் துணிவிற்க்கு முன்னால் நிற்கமுடியவில்லை.
//கனககோபி said...
அவர் இங்க மட்டுமில்ல எங்கயும் குடும்ப சமேதரம் தான்...
அது ஆட்சி என்ன, விழா என்ன...//
தம்பி வீட்டுக்கு ஓட்டோ வரப்போவுது.
//அவர் குடும்பத்தலைவன்...
குடும்பத்தலைவன் குடும்பத்தை நல்லாப் பாக்கோணும் தானே...//
மிகவும் சரி.
//விருதுகள்... ஹா ஹா...
அது விருது இல்ல... உத வாங்கி கமல்ஹாசன் வீட்டுக்குள்ள வைக்கிறத விட குப்பையில போடலாம்.
எத்தனை விருது பெற்ற மனுசன், பிழையான ஆக்கள் குடுக்கிறதால மதிப்பில்லாத ஒரு விருத வாங்கிப் போட்டுது...//
என்ன செய்வது அவருக்கு சில விருதுகள் கடமைக்காக வாங்குகின்றா.
//கனககோபி said...
என்னைப் பொறுத்தவரை, வைரமுத்து என்பவர் அற்புதமான கவிஞர்.
ஆனால் சமூகப் பொறுப்புள்ள கவிஞரா என்றால் விடை 'இல்லை' என்பது தான்...//
அதே அதே ஏனோ கவிஞர்கள் அந்த நாளில் இருந்து இந்தநாள் வரை மன்னர்களை புகழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். பாலபத்திர ஓணான்டி தவிர ஏனைய கவிஞர்கள் அரசவைக் கவிஞர்கள் தான்.
//விகடன் said...
'''அறிஞர் அண்ணா சகிப்புத்தன்மை அதிகம்கொண்டவர்!' என்று கலைஞர் புகழ்மாலை சூட்டியிருக்கிறாரே...''
''இல்லையா பின்னே... தனது நூற்றாண்டு விழாவில் கலைஞர் புகழ் பாடி கருத்தரங்கம் நடத்தினாலும், பொறுத்துக்கொள்ளும் அளவுக்குச் சகிப்புத்தன்மைமிக்கவர் அண்ணா//
சரியாகச் சொன்னீர்கள், உங்கள் பத்திரிகையை திட்டப்போகின்றாரே கடிதர்.
Post a Comment