முதல் போட்டியில் தரப்படத்தலில் முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவை டில்ஷானின் சதத்தாலும் சங்ககாரா, ஜெயவர்த்தனாவின் அரைச் சதத்தாலும் வெற்றிகொண்ட இலங்கை இப்போ அரையிறுதிக்கு கூடப் போகமுடியாமல் வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.
முதல் போட்டியில் பலமான தென்னாபிரிக்காவை இலகுவாக வென்ற இலங்கை அணி பின்னர் தங்கள் குழுவிலையே பலம் குறைந்தது என பலராலும் கூறப்பட்ட இங்கிலாந்து அணியிடம் முன்வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வாங்கிக் கட்டினார்.
இந்தப் போட்டியில் முதல் போட்டியில் சதமடித்த டில்ஷான் 2 ஜெயசூரியா டக் அடித்தார், சங்ககாரா 1 ஜெயவர்த்தனா 9 என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க கண்டம்பி, மத்யூஸ், சமரவீரா ஆகியோரின் ஆட்டத்தால் ஓரளவு மதிப்பான எண்ணிக்கையை எட்டினார்கள்.
பந்துவீச்சில் அமத்திப்போடுவார்கள் என எதிர்பார்த்தால் அதுவும் சரிவரவில்லை. முரளிதரன் இந்த தொடரில் எடுத்த ஒரே ஒரு விக்கெட்டுடன் 60 ஓட்டங்களையும் வாரி வ்ழங்கியிருந்தார். ஏனோ ஜெயசூரியாவை சங்ககாரா பந்துவீச அழைக்கவில்லை. அழைத்திருந்தால் சிலவேளைகளில் நியூசிலாந்திற்க்கு எதிராக நடந்தபோட்டியில் 3 விக்கெட் விழுத்தியது போல் நடந்திருக்கலாம்.
பின்னர் நியூசிலாந்துடன் கட்டாயம் வெல்லவேண்டிய போட்டியில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வள்ளலாக மாற நியூசிலாந்து 315 ஓட்டங்களை குவித்தது. மாலிங்க ஒரு விக்கெட்டுக்கு 85 ஓட்டங்களையும் துஷாரா, குலசேகரா இருவரும் 7 ஓவர்களில் முறையே 50, 52 ஓட்டங்களையும் கொடுத்தனர். ஜெயசூரியா மட்டும் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். மெண்டிசுக்குப் பதிலாக முரளியை எடுத்திருந்தால் விக்கெட் எடுக்கின்றாரோ இல்லையோ துடுப்பெடுத்து விசுக்கியிருப்பார்.
இலங்கை அணியின் தங்கள் சின்னச் சின்ன தவறுகளால் நேற்றைய நியூசிலாந்து, இங்கிலாந்து போட்டிவரை காத்திருக்கவேண்டிவந்தது. நீயூசிலாந்து இங்கிலாந்தை வென்றதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரத் தயாரிகிவிட்டார்கள்.
முதல் போட்டியில் முதலாம் இட அணியான தென்னாபிரிக்காவை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய இலங்கை இன்று வெறுங்கையுடன் இலங்கை வருகின்றனர். இவர்களின் பின்னால் பெரிய அண்ணன் இந்தியாவும் கூடவரலாம்.
இலங்கை வீரர்களின் துடுப்பாட்ட, பந்துவீச்சு பெறுபேறுகள்.
துடுப்பாட்டம்
வீரர் ஓட்டங்கள் சராசரி
ஜெயவர்த்தனா 163 54.33
டில்ஷான் 149 49.66
திலான் சமரவீர 84 28.00
குலசேகரா 75 75.00
கண்டம்பி 70 23.33
மத்யூஸ் 69 23.00
சங்ககாரா 66 22.00
ஜெயசூரியா 34 11.33
பந்துவீச்சு
வீரர் விக்கெட்டுகள் சராசரி ஓட்டங்கள்
மத்யூஸ் 4 25.50 102
மாலிங்க 4 42.75 171
ஜெயசூரியா 3 13.00 39
மெண்டிஸ் 3 38.00 114
குலசேகரா 3 46.00 138
முரளிதரன் 1 106.00 106
இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா (பெரும்பாலும் வெளியேறும்) போன்ற அணிகள் இல்லாமல் எப்படி ஐசிசி மக்களை இறுதிப்போட்டியில் கவரப்போகின்றது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
4 கருத்துக் கூறியவர்கள்:
இலங்கை அணி கட்டாயமாக வெளியேறத் தான் வேண்டும். அப்போது தான் அவர்கள் செய்த பிழைகள் அவர்களுக்கு புரியும்.
அரையிறுதி சென்றால் 'அரையிறுதி வரையாவது செய்றோமே' என்ற எண்ணம் வந்துவிடும்.
இலங்கை அணி அரையிறுதி செல்லாதது நல்லதே...
ஏனென்றால் They don't deserve it.
பார்ப்போம்...
இலங்கை அணிக்கு இனி நவம்பரில் இந்திய சுற்றுலா இருக்கிறது.
அதற்கு முன்பு சம்பியன்ஸ் லீக் இருக்கிறது சில வீரர்களுக்கு...
பார்ப்போம்..
தெளிவாக சொல்லி இருகிறீர்கள்
அது என்னா விளையாட்டு? காலால் பந்தை எத்துவாங்களே அதுவா? சங்கக்கார தான் அதுக்கு தலைவரா?
பெரியண்ணன்மாரும் வந்திட்டினம்... அய்யோ அய்யோ
Post a Comment