அழகு
பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கின்ற ஒரு விடயம். எனக்கு ஐஸ்வர்யா ராய் அழகாகத் தெரிவார் ஆனால் அவருடன் போட்டியிட்டு இரண்டாவதாக வந்தவருக்கு ஐஸ்வர்யா அழகில்லாமல் தெரிவார். சின்ன குழந்தையிலில் ஒருவித அழகு, பின்னர் சிறுவர்களாக இன்னொரு வித அழகு, இளைஞன், இளைஞிகளாக கண்ணை வைத்தால் எடுக்கமுடியாத அழகு, திருமணத்தில் வாழ்க்கையின் அடுத்த படி என நினைக்கும் ஓர் அழகு, தாய்மை ஒருவித அழகு, முதுமை இன்னொருவித அழகு, சிலர் மரணத்தில் கூட அழகு.
காதல்
அட்டு பிகரைக் கூட தேவதைகளாகவும் இளவரசிகளாகவும் ஆண்களுக்கு காட்டும் பூதக் கண்ணாடி. உள்ளே இழுத்தவர்களை வெளியேறவிடாத மாயக் குகை. உள்ளே சென்றவன் வெளியே வரக் கஸ்டப்படுகின்றான். வெளியே இருப்பவன் உள்ளே செல்லக் ஆவலாக இருக்கின்றான். வரும்போது வரவேண்டிய விடயம். மாணவர் பருவத்தில் வந்தால் கல்வி நாசம். இளமைப் பருவத்தில் வந்தால் எதிர்காலம் நாசம். நண்பர்களின் நல்ல காதல்களையும் பார்த்திருக்கின்றேன் நாசமாகப் போன காதல்களையும் பார்த்திருக்கின்றேன், அதனால் நான் காதல் செய்யவில்லை ( தயவு செய்து நம்புங்கள்).
கவிதை உபயம் : தபூசங்கர்
கடவுள்
பார்க்கமுடியாத ஒரு விடயம். சர்ச்சைகளுக்கான ஒரு விடயம். எத்தனையோ போர்களுக்கு காரணமான விடயம். என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு சக்தி மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றது அந்த சக்திக்கு நாம் இட்ட பெயர் கடவுள். கடவுளைக் கண்டால் கேட்க நிறையக் கேள்விகள் இருக்கின்றன. மனிதரையும் இயற்கையையும் படைத்த கடவுள் ஏன் ஜாதி, மத, பேத, நிற, மொழி வேறுபாடுகளையும் படைத்தார். என் கடவுள் "அன்பே சிவம்".
பணம்
"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீ தான் அதற்க்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்ற கருத்தே என் கருத்தும். பணம் என்பது மனிதர்களிடையே பரிமாற்றங்களை செயற்படுத்த கண்டுபிடிப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இன்றைக்கும் எத்தனையோ நாடுகளில் மக்கள் பணம் என்பதையே அறியாமல் காட்டுவாசிகளாக வாழ்க்கை நடத்துகின்றார்கள். வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க பணத்தின் தேவையும் அதிகரிக்கின்றது. எத்தனையோ பணக்கார நாடுகள் ஆயுதப் பரிவர்த்தனைக்கு செலவிடும் பணத்தை ஏழைநாடுகளூக்கோ இல்லை தங்கள் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கோ ஏனோ செலவிடுவதில்லை. என்றைக்கு எல்லோரும் இன் நாட்டு மன்னர் ஆகின்றார்களோ அன்றைக்குப் பணம் என்கின்ற விடயம் அழிந்துவிடும்.
அழகு, காதல், கடவுள், பணம் என்ற இந்த தொடருக்கு என்னை அழைத்த நண்பர் யோகாவிற்க்கு நன்றிகள். யாரை அழைப்பது என்பது கடினமான விடயம். ஆனாலும் வலையுலக சட்டப்படி 5 பேரை அழைக்கவேண்டும் என்பது விதி.
1. சிகே.மயூரன்: கிரிக்கெட் பற்றியே அடிக்கடி எழுதுபவர். நல்ல ரசனை உடையவர் என்பதால் நிச்சயம் தன்னுடைய கருத்துகளை வித்தியாசமாக சொல்வார்.
2. யாழினி : கவிதை விரும்பியான இவருக்கும் இந்த ஆப்பு.
3. சுபானு : ஊஞ்சலாடியபடி காதல் கவிதைகள் எழுதும் சுபானு.
4. டயானா : அறிந்ததும் அனுபவமும் என பல அனுபவங்களை எழுதுபவர்.
5. மயூரேசன் : அண்மையில் ஒரு காதல் கவிதை எழுதி காதலானனவர்.
நண்பர்களே என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
16 hours ago
16 கருத்துக் கூறியவர்கள்:
நண்பர்களின் நல்ல காதல்களையும் பார்த்திருக்கின்றேன் நாசமாகப் போன காதல்களையும் பார்த்திருக்கின்றேன், அதனால் நான் காதல் செய்யவில்லை( தயவு செய்து நம்புங்கள்)
-வந்தியத்தேவன் செப் 16, 2009
காதல் செய்த குற்றங்கள்:
1. ஒழுங்காக படிக்கின்ற மாணவனை ஒழுங்காக படிக்கவிடாமல் தேர்வுகளில் கோட்டை விட செய்தது. மிகச் சிறந்த உதாரணம் நானே ஓ எல் பரீட்சையில் 8 பாடங்களிலும் அதிவிசேட சித்திய்டையவேண்டிய நான் 4 பாடங்களில் மட்டும் அதிவிசேட சித்தியடைந்தது. அதுமட்டுமல்ல பொறியியளாராக வேண்டிய என்னை ஏ எல் பரீட்சையில் கொடியடிக்க வைத்து என் எதிர்காலத்தை பாழக்கியது.
- வந்தியத்தேவன் ஜூலை 13, 2007
http://enularalkal.blogspot.com/2007/07/blog-post_12.html
அடுத்தடுத்த தொடர்பதிவா... நன்றி நன்றி.. நன்றி..
என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு கோடானு கோடி நன்றிகள்.
நீங்கள் காதலிக்கவில்லை என கூறுவதை நம்பிட்டேன் (ஆனாலும் ஆதிரை ஆதாரத்தோட விளக்குராறே?)
தலைப்பு சான்சே இல்ல வந்தி..
ஆதிரை பின்னூட்டத்திற்கு, வந்தி அண்ணாவின் பதிலை எதிர் பார்க்கின்றேன் :)
நல்ல விளக்கங்கள்.
இதோ பதிவு தயார்
காதல், அழகு, கடவுள், பணம்
// ஆதிரை said...
நண்பர்களின் நல்ல காதல்களையும் பார்த்திருக்கின்றேன் நாசமாகப் போன காதல்களையும் பார்த்திருக்கின்றேன், அதனால் நான் காதல் செய்யவில்லை( தயவு செய்து நம்புங்கள்)
-வந்தியத்தேவன் செப் 16, 2009
காதல் செய்த குற்றங்கள்:
1. ஒழுங்காக படிக்கின்ற மாணவனை ஒழுங்காக படிக்கவிடாமல் தேர்வுகளில் கோட்டை விட செய்தது. மிகச் சிறந்த உதாரணம் நானே ஓ எல் பரீட்சையில் 8 பாடங்களிலும் அதிவிசேட சித்திய்டையவேண்டிய நான் 4 பாடங்களில் மட்டும் அதிவிசேட சித்தியடைந்தது. அதுமட்டுமல்ல பொறியியளாராக வேண்டிய என்னை ஏ எல் பரீட்சையில் கொடியடிக்க வைத்து என் எதிர்காலத்தை பாழக்கியது.
- வந்தியத்தேவன் ஜூலை 13, 2007
http://enularalkal.blogspot.com/2007/07/blog-post_12.html //
வந்தியண்ணா அரசியல்வாதியாகிவிட்டார்...
அல்லது திருமணப் பேச்சு அடிபடுவதால் காதலை மறைக்க விரும்புகிறாரோ... ;)
@ஆதிரை said...
//அதனால் நான் காதல் செய்யவில்லை//
இது இப்போ
//மிகச் சிறந்த உதாரணம் நானே //
அது அப்போ
ஆதிரை தயவு செய்து சிஐடி பிராஞ்சில் சேரவும். என்னா வில்லத்தனம்.
//சுபானு said...
அடுத்தடுத்த தொடர்பதிவா... நன்றி நன்றி.. நன்றி..//
ரோசாப்பூவை வைத்து விளையாட்டுக்காட்ட வேண்டாம்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு கோடானு கோடி நன்றிகள்.//
என்னை அழைத்ததுக்கு உங்களுக்கு நன்றிகள்.
//நீங்கள் காதலிக்கவில்லை என கூறுவதை நம்பிட்டேன் (ஆனாலும் ஆதிரை ஆதாரத்தோட விளக்குராறே?)//
வேணாம் வலிக்குது
//தலைப்பு சான்சே இல்ல வந்தி../
அது. நன்றி
//வேந்தன் said...
ஆதிரை பின்னூட்டத்திற்கு, வந்தி அண்ணாவின் பதிலை எதிர் பார்க்கின்றேன் :)//
எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க.
//சந்ரு said...
நல்ல விளக்கங்கள்.//
நன்றிகள் சந்ரு. நீங்கள் ரொம்ப நல்லவர்.
//Mayooresan said...
இதோ பதிவு தயார்
காதல், அழகு, கடவுள், பணம்//
நன்றிகள் மயூரேசன். இந்த அப்ரோச் எனக்குப் பிடித்திருக்கிறது.
//கனககோபி said...
வந்தியண்ணா அரசியல்வாதியாகிவிட்டார்...//
அரசியல்லை இதெல்லாம் சகஜமப்பா.
//அல்லது திருமணப் பேச்சு அடிபடுவதால் காதலை மறைக்க விரும்புகிறாரோ... ;)//
நோ கொமெண்ட்ஸ்.
அண்ணா
அழைப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு... முடியுமானவரை..நம்மால் முடிந்ததை முயற்சிக்கிறேன்... குறுகிய கால எல்லையில்...
இந்த ஊருக்காகவும் உனக்காகவும்..... உன் நம்பிக்கையை காப்பாற்ற... எழுதுகிறேன்...
வரலாற்று நாயகனே வந்தியத்தேவா ...... ஹி ஹி,,,(கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ)
நன்றி நன்றி நன்றி
First article is Ready...
http://wisdomblabla.blogspot.com/2009/09/coundown.html
Post a Comment