இணைய அடிமைகள்

"தம்பி இந்தா டீ", அம்மா

"இஞ்சை கொண்டுவந்து தாங்கோ" என்றான் ஜீடோக்கில் நண்பனுடன் நமீதா பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கும் மகன்.

"பிள்ளை ஆரோ பெல் அடிக்கினும் ஒருக்கால் ஆரெண்டு பார்" அம்மா

"சும்மா போணை இப்பதான் பேஸ்புக்கிலை அஜிதா வந்திருக்கிறாள்" என்றாள் பேஸ்புக்கில் தொடர்ந்து 3 மணிநேரம் அரட்டை அடிக்கும் மகள்.

இவைகள் அன்றாடம் நம் வீடுகளில் நடக்கும் காட்சிகள். பெற்றோர்கள் ஒருபுறம் மெஹா சீரியல்கள், கிரிக்கெட் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள் என தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க பிள்ளைகளோ பேஸ் புக், மெசேஞ்சர்கள், கேம்ஸ், ஸ்கைப், புளொக் என இணையத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள்



90களின் இறுதிகளில் சட் எனப்படும் அரட்டைக் கச்சேரி இணையங்களின் வரவுகள் அந்தக் கால இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் ஆக்கிரமித்திருந்தது. ஒரு அரட்டை இணையத்தில் நண்பர்களுடனோ, இல்லை உறவினர்களுடனோ தகவல்களைப் பரிமாறிக் கொள்ளகூடியதாக இருந்தது.

பின்னர் யாஹூ, ஹாட்மெயில், ஜீமெயில் என அனைத்து மின்னஞ்சல் சேவைகளின் மெசேஞ்சர்கள் வருகையால் சாட்டில் தனிமை பேணப்பட்டது. மற்றும் வெப் காம் போன்றவற்றின் அசுர வளர்ச்சி, நண்பர்கள், உறவினர்களிடம் இருந்த நெருக்கத்தை இன்னும் கூட்டியது. நேரம் காலம் தெரியாமல் அனைவரும் இணையத்தில் குடும்ப விபரங்கள் தொடக்கம் ப்ரியாமணி ப்ரிதிவிராஜ் காதல் வரை அலசி ஆராய்ந்தார்கள்.

மெசேஞ்சர்களினால் நன்மைகள் பல இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு என்பது போல் நண்பர்களுடன் தொடர் அரட்டைகள் கூட்டு அரட்டைகள் எந்த நேரமும் இணையத்துடனான தொடர்பை நீட்டித்தது.

மெசேஞ்சர்களில் ஒருபுறம் அரட்டைக் கச்சேரி நடத்தினால் இன்னொரு புறம் பேஸ்புக், ஆர்குட், Hi5 என பொழுதுபோக்கு இணையத்தளங்கள் மக்களின் நேரத்தை விழுங்குகின்றது. இவைகளினால் காணாமல் இன்னொரு நாட்டில் இருக்கும் நண்பர்களின் உறவினர்களின் தொடர்புகள் கிடைத்த்தாலும், இவற்றில் உள்ள அரட்டை குழுமங்கள் ஊடான சில விடயங்கள் போதை தரும் விடயமாக மாறிவிட்டது. சிலருக்கு பேஸ்புக்கில் தோட்டம்(Farm ville) செய்வது ஒரு கலை, இன்னொரு சாராருக்கு மாஃபியா வோர்ஸ்(Mafia Wars) போன்ற விளையாட்டுகளில் நேரம் கழித்தல் என பலரும் கணிணித் திரையின் முன்னர் தங்கள் நேரத்தைப் போக்குகின்றார்கள்.



இந்தப் பொழுது போக்கு இணையங்கள் இணையத்தில் மட்டுமல்லாமல் அலைபேசிகளிலும் புகுந்து பலரின் அலைபேசி பில்லை ஏத்துகிறது. என் நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியினூடு ஸ்டேடஸ் மெசேஜ் மாத்துவான். பின்னர் அதற்க்கு யாராவது கொமெண்ட் அடித்திருக்கின்றார்களா எனப் பார்க்க மீண்டும் இணைப்பு கொடுப்பான்.

அடுத்ததாக நம்ம பதிவர்கள் ப‌ற்றி சில நாட்களுக்கு முன்னர் யாழினி போட்டிருந்த ஒரு பதிவு. ஒரு பதிவரிடம் (Blogger) காணப்படும் 12 விசேட / பிரத்தியேக‌ அம்சங்கள்.

அந்த பதிவில் சில விடயங்கள் கொஞ்சம் மிகைப் படுத்தல் என்றாலும் சில அப்பட்டமான உண்மைகள்.

பதிவர்கள் கூட அதிகமாக இணையத்தில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றார்கள். பதிவு எழுதுவதுடன் இவர்களது இணைய பாவனை நின்றுவிடுவதில்லை. பின்னர் வந்த பின்னூட்டங்களை வெளியிடுதல். அதற்குப் பதில் போடுதல், மீண்டும் அடுத்த பதிவு என ஒரு சங்கிலித் தொடராக இவர்களது வாழ்க்கை கழிகின்றது.

பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் இடுதல் என்பது மிகவும் கடினமான வேலை. சிலவேளை ஒரு பின்னூட்டமே ஒரு பதிவின் அளவிற்க்கு பெருத்துவிடும்.

அண்மையில் இது பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியபோது நேரடி உரையாடல்களை விட இப்போ பலர் இணையத்தின் மூலமான உரையாடல்களையே விரும்புகின்றார்கள் என்றார். அதற்க்கு அவர் கூறிய காரணம் இணையத்தில் இருந்தபடி ஒரே நேரத்தில் பலருடன் உரையாடலாம், அத்துடன் இன்னொரு வேலைபார்க்கலாம், பாடல் கேட்கலாம் என பல விடயங்களை ஒரே நேரத்தில் செய்யலாம் என்றார்.

இவற்றை விட Forum என அழைக்கப்படும் களங்கள். இதில் பலதும் பத்தும் விவாதித்தாலும் ஒரு கட்டத்தின் மேல் பெரும்பாலும் கும்மிகளாகவே முடியும். பல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட களங்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றார்கள்.

அத்துடன் கணிணியுடன் வேலை செய்பவர்கள் எப்படியும் தங்கள் வேலை நேரத்தை கணிணித் திரையுடன் தான் செலவளிக்கவேண்டியிருக்கிறது. சில நேரத்தில் இது ஒருவித‌ வெறுப்பைக் கொடுக்கும். இதற்கான வேறுபல தீர்வுகள் இருக்கின்றன.

இணையத்தின் பாவனையில் தீமையான பக்கங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய அடிமைகளே.

28 கருத்துக் கூறியவர்கள்:

தினேஷ் சொல்வது:

/என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய அடிமைகளே//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

பனையூரான் சொல்வது:

16 மணித்தியாலமா ????

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:

எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய அடிமைகளே
/////

நானும் உங்கள மாதிரிதான்

(ஒரு அடிமை சிக்கிடான்........ )

நல்ல பதிவ வாழ்த்துக்கள்

ஆயில்யன் சொல்வது:

//இணையத்தின் பாவனையில் தீமையான பக்கங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய//

எனக்கும் இது போன்ற இன்னொரு களத்தில் நின்னு சிந்திக்கிறதும் சிந்தனைகளும் அவ்வப்போது வந்துட்டு வந்துட்டு போவுது !! :(

சி தயாளன் சொல்வது:

தினமும் 16 மணிநேரம் இணையத்திலா..? ஆவ்...

வந்தியத்தேவன் சொல்வது:

//சூரியன் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

நன்றிகள் சூரியன்.

கவிக்கிழவன் சொல்வது:

/கவிக்கிழவன் said...
வர வர உங்களது படைப்புகளில் ஒரு அர்த்தம் விளங்குகின்றது. உங்களுடைய சொந்த அனுபவத்தை சொனாலும் வாசிபவர்களும் தங்களுடைய அனுபவங்களை
ஜோசிச்சு பாக்க முடிகிறது //

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் ஐயா. பல அனுபவங்கள் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் அவற்றில் சில ஒரே மாதிரி அனுபவங்களாக இருக்ககூடியவை.

//தனித்துவமான எழுத்தாளன் துணைக்கு வேறு ஒருவரை சுட்டுவது இல்லை//

//என்ன சொல்கின்றீர்கள் எனப் புரியவில்லை. இது ஒரு தொடர் விளையாட்டு என்பதால் ஏனைய நால்வரை அழைத்தேனே ஒழிய என் துணைக்கு நான் யாரையும் வைத்திருப்பதில்லை.//

நான் மற்றவர்களை அழைத்ததை சொலவிலை. எழுத்தை விட உறவுகளே முக்கியம் . இபோதைக்கு நன் சொலவந்தது விளங்காமல் இருபதே நலம்

நன்றாக போகிறது உங்கள் எழுத்து

வந்தியத்தேவன் சொல்வது:

// பனையூரான் said...
16 மணித்தியாலமா ????//

பனையூராரே 16 மணித்தியாலம் என்பது வேலைத்தளத்தில் இருக்கும் நேரம் பெரும்பாலும் இணையத்துடனே வேலை, சாப்பாட்டு நேரம், இன்ன பிற அனைத்தையும் சேர்த்துதான். நித்திரை எப்படியும் 6 மணித்தியாலம் தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

// உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

நானும் உங்கள மாதிரிதான்

(ஒரு அடிமை சிக்கிடான்........ )

நல்ல பதிவ வாழ்த்துக்கள்//

வாங்கோ உலவு நாங்கள் 16 ஆனால் சிலர் 20 மணித்தியாலம் இணையம் பாவித்தவர்களையும் கண்டிருக்கின்றேன். எங்களை விட நிறைய அடிமைகள் இருக்கின்றார்கள். தேடிப்பிடிப்போம். உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...

எனக்கும் இது போன்ற இன்னொரு களத்தில் நின்னு சிந்திக்கிறதும் சிந்தனைகளும் அவ்வப்போது வந்துட்டு வந்துட்டு போவுது !! :(//

அவற்றை வரவிடாதீர்கள் வந்தால் என்னைப்போல் இப்படிப் புலம்பவேண்டும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//’டொன்’ லீ said...
தினமும் 16 மணிநேரம் இணையத்திலா..? ஆவ்...//

பனையூரான் பதில் உங்களுக்கும் சேர்த்துதான். ட்விட்டரில் சில மணித்தியாலம் காணவில்லையென்றால் என்னைத் தேடும் உங்களைப் போன்ற உறவுகள் இருக்கும் வரை 16 மணித்தியாலம் எல்லாம் சும்மா.

வந்தியத்தேவன் சொல்வது:

// கவிக்கிழவன் said...
நான் மற்றவர்களை அழைத்ததை சொலவிலை. எழுத்தை விட உறவுகளே முக்கியம் . இபோதைக்கு நன் சொலவந்தது விளங்காமல் இருபதே நலம்

நன்றாக போகிறது உங்கள் எழுத்து//

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ஐயா. ஏதோ சொல்லுகின்றீர்கள் என விளங்குகின்றது.

நையாண்டி நைனா சொல்வது:

One more is here.

Cable சங்கர் சொல்வது:

நல்ல பதிவு வந்தியத்தேவன்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

இணையத்தின் பாவனையில் தீமையான பக்கங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய அடிமைகளே//

இத்தால் நான் அறிவிப்பது என்ன வென்றால் இந்த பதிவை பார்த்து திருந்தி விட்ட நான் இனி பதிவுலப்பக்கம் வர மாட்டேன்

என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் முடியவில்லை. நானும் இணைய அடிமை தான்..

Admin சொல்வது:

நானும் உங்களைப்போல் இணைய அடிமைதான்.( நல்ல விடயங்களைத் தேடுவது. )ஆனால் அரட்டைகளில் நேரத்தை செலவிடுவது குறைவு face book .... போன்ற தளங்களில் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றேன்.

நல்ல இடுகை.

கிரி சொல்வது:

இது இன்னும் போக போக அதிகம் தான் ஆகும்..குறைய வாய்ப்பில்லை

புல்லட் சொல்வது:

நல்ல பதிவு.. இணையத்திலேயே இளமையை செலவிடாதீங்க.. பி்ன்னாடி இம்சைய குடுக்கும்..

கால்கட்டு போட்டால் கம்புயுட்டர் தன்னால கசக்கும் கண்ணா !

Jay சொல்வது:

தலை! அதே பிளட்டு... ஒரு நாளைக்கு நித்திரை கொள்ளும் நேரத்தை விட இணையத்தில் கழிக்கும் நேரமே அதிகம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//நையாண்டி நைனா சொல்வது:
One more is here.//

வாங்க நைனா உங்கள் பின்னூட்டங்கள் சாமத்தில் வரும்போதே தெரிகின்றது இன்னொரு அடிமையென, சங்கத்துக்கு நிறைய ஆட்கள் இருக்கின்றார்கள் போலிருக்கிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

// Cable Sankar said...
நல்ல பதிவு வந்தியத்தேவன்//

நன்றிகள் கேபிள் அண்ணாச்சி.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

இத்தால் நான் அறிவிப்பது என்ன வென்றால் இந்த பதிவை பார்த்து திருந்தி விட்ட நான் இனி பதிவுலப்பக்கம் வர மாட்டேன் //

இப்படி அடிக்கடி அறிக்கை விட்டவர்கள் தான் மீண்டும் மீண்டும் வருவது. இணையத்தில் சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்ற பழமொழி பொய்த்துவிடும்.

//என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் முடியவில்லை. நானும் இணைய அடிமை தான்..//

யாரங்கே சங்கத்துக்கு இன்னொரு அடிமை கிடைத்துவிட்டான்,

வந்தியத்தேவன் சொல்வது:

// சந்ரு said...
நானும் உங்களைப்போல் இணைய அடிமைதான்.( நல்ல விடயங்களைத் தேடுவது. )ஆனால் அரட்டைகளில் நேரத்தை செலவிடுவது குறைவு face book .... போன்ற தளங்களில் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றேன். //

நல்ல விடயமோ கூடாத விடயமோ அடிமை அடிமைதான். சரி சரி பேஸ்புக் தொடங்கினால் அடிமை கொத்தடிமையாகிவிடுவான்.சங்கத்துக்கு அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் மகிழ்ச்சி.

வந்தியத்தேவன் சொல்வது:

//கிரி said...
இது இன்னும் போக போக அதிகம் தான் ஆகும்..குறைய வாய்ப்பில்லை//

உண்மைதான் கிரி, இதுவும் ஒரு விதமான போதைதான். இன்றுமுதம் வாரத்திற்க்கு ஒரு பதிவு என மவுஸில் காலையில் சத்தியம் பண்ணிவிட்டு மத்தியானம் தமிழ்மணம் டாஸ்மார்க்கில் பதிவைப் பார்த்து ஆசைப்பட்டு மாலையில் பதிவு எழுதி இரவில் பின்னூட்டம் இட்டு மட்டைதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

// புல்லட் said...
நல்ல பதிவு.. இணையத்திலேயே இளமையை செலவிடாதீங்க.. பி்ன்னாடி இம்சைய குடுக்கும்.. //

அதே தான் இதைத்தான் நானும் சொல்கின்றேன். என்ன இங்கே இளமையைத் தொலைத்தால் சித்த மருத்துவத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என ஒரு சித்தர் சொன்னார்.

//கால்கட்டு போட்டால் கம்புயுட்டர் தன்னால கசக்கும் கண்ணா !//

நான் வரவில்லை இந்த விளையாட்டிற்க்கு. ஹிஹிஹி

வந்தியத்தேவன் சொல்வது:

//Mayooresan said...
தலை! அதே பிளட்டு... ஒரு நாளைக்கு நித்திரை கொள்ளும் நேரத்தை விட இணையத்தில் கழிக்கும் நேரமே அதிகம்.//

அதே அதே இன்னொரு அடிமை சங்கத்துக்கு அடுத்த முறை எங்களுக்கு என தனித் தொகுதி கேட்கவேண்டும்.

Unknown சொல்வது:

சங்கம் எப்ப தொடங்குது? ;)

முதலாவது படம் அருமை...

நல்ல பதிவு. ஆனால் இவையெல்லாம் எம் நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டனவே?
யோசித்துப் பாருங்கள் இரண்டு நாட்கள் கொழும்பு முழுவதும் மின்சாரமோ அல்லது இணைய இணைப்போ இல்லாவிட்டால் நிலைமையை?

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
சங்கம் எப்ப தொடங்குது? ;)//

விரைவில் ஆரம்பிப்போம் முந்திவருகின்றவர்களுக்கு முன்னுரிமை.

//முதலாவது படம் அருமை...//

நன்றிகள்

//நல்ல பதிவு. ஆனால் இவையெல்லாம் எம் நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டனவே?//

அதே தான் நாளாந்த நிகழ்வுகளில் இணையத்தில் சுத்துவதும் ஒன்றாகிவிட்டது.

//யோசித்துப் பாருங்கள் இரண்டு நாட்கள் கொழும்பு முழுவதும் மின்சாரமோ அல்லது இணைய இணைப்போ இல்லாவிட்டால் நிலைமையை?//

ஏன் இந்தக் கொலைவெறி.