குற்றவாளிக் கூண்டில் காதல்!
காதல் பலருக்கு வாழ்க்கையில் வெறுப்பையும் சோகத்தையும் விரக்தியையும் மட்டும் கொடுக்கும் ஒரு நோய். குழந்தைப் பருவத்தில் எந்தவித ஆசைகள் விருப்புகள் இன்றி வாழும் மனிதன் காதல் என்ற நோய் பீடித்த பின்னர் பைத்தியக்காரனாக அலைகிறான். இந்தக் காதலினால் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பல நிகழ்வுகளையும் சந்தோஷங்களையும் இழக்கிறான். பெரும்பாலும் காதல் தோல்வி ஏற்படுவது ஆண்களுக்கே அதனால் தான் ஆண்களுக்கு தாடி வளர்கின்றதோ தெரியவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காதல் தேவையா? காதலுக்கு எதிராக இதுவரை யாரும் வழக்கு தொடரவில்லை அதனால் நான் தொடர்கிறேன். இந்த வழக்கின் முடிவில் நீதிபதி காதலுக்கு மரண தண்டனை விதித்து இன்றைய இளைஞர்களை அதிலும் ஆண் வர்க்கத்தினரை காப்பாற்றவேண்டும்.
காதல் செய்த குற்றங்கள் :
1. ஒழுங்காக படிக்கின்ற மாணவனை ஒழுங்காக படிக்கவிடாமல் தேர்வுகளில் கோட்டை விட செய்தது. மிகச் சிறந்த உதாரணம் நானே ஓ எல் பரீட்சையில் 8 பாடங்களிலும் அதிவிசேட சித்திய்டையவேண்டிய நான் 4 பாடங்களில் மட்டும் அதிவிசேட சித்தியடைந்தது. அதுமட்டுமல்ல பொறியியளாராக வேண்டிய என்னை ஏ எல் பரீட்சையில் கொடியடிக்க வைத்து என் எதிர்காலத்தை பாழக்கியது.
2. உறவினர்களிடையே பகையைத் தோற்றுவித்தது. என் நண்பன் ஒருவன் தன் மாமன் மகளைக் காதலித்த குற்றத்தினால் இருவர் வீடுகளுக்கும் இடையில் இன்றுவரை பேச்சுவார்த்தை கொடுக்கல் வாங்கல் இல்லை. ஆனால் மாமன் மகளோ வேறு ஒருவரை திருமணம் செய்து சுகபோகமாக இருக்கிறார். என் நண்பனோ இன்னமும் திருமணம் செய்யவில்லை.
3. சிறந்த கம்பனி ஒன்றில் வேலை செய்தவனை காதல் என்ற மாயமான் அவன் காதலித்த பெண் வெளிநாடு சென்ற காரணத்தால் அவள் சென்ற நாட்டுக்கே அவனும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் வேலையைத் துறந்து பின்னர் அவளையும் துறந்து வெளிநாடும் இல்லாமல் உள்நாட்டில் இருந்த வேலையும் இல்லாமல் நடுத்தெருவில் விட்டது.
4. எந்த தீயபழக்கமும் இல்லாத ஆண்களிடம் காதல் தோல்விக்கு பின்னர் அவளை மறக்க
மது சிகரெட் என கெட்ட பழக்கவழக்கங்களை விதைத்தது.
இப்படிப் பட்ட பல குற்றச்சாட்டுகள். மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு பின்னர் தரப்படும்.
இறுதியில் இன்றைய இளைஞர்கள் காதல் என்ற மாயையில் விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எந்தவொரு ஆணின் தோல்விக்கு பின்னாலே ஒரு பெண் குறிப்பாக அவனின் காதலி இருப்பாள்.
டிஸ்கி : என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் என் பதிவாக
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
6 கருத்துக் கூறியவர்கள்:
தோல்வில என்ன அதிக தோல்வி கொஞ்ச தோல்வி??? இருவரும் காதலித்து காதல் ஒரு முடிவுக்கு வராட்டால் அது இருவருக்கும் இழப்புத்தானே...ஆண்களுக்கு மட்டும் எப்பிடி அதிகமாகும்?? ஒருவர் மட்டும் காதலித்து மற்றவருக்கு காதல் எண்ணம் வரவில்லை என்றால் அதை எப்படித் தோல்வி என்று சொல்லலாம்?
வருகைக்கு நன்றிகள் சினேகிதி.
நீங்கள் சொல்வது ஒருதலைக் காதலுக்கு பொருந்தும் ஆனால் இருதலைக் காதலுக்கு பொருந்தாது.
சொல்கிறேன் என்று கோபிக்க வேண்டாம் வந்தி, குற்றவாளிக்கூட்டில் நிறுத்தப்படவேண்டியது காதலை அல்ல, அதில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த இளைஞ்சர்/இளம்பெண்களை தான். படிக்கும் காலத்தில் காதல் என்ன வேண்டி இருக்கிறது? காதலா சாப்பாடு போடப்போகிறது? படித்து முடிந்து நல்ல வேலையில் அமர்ந்த பிறகு காதலிக்கலாமே?
மேலும் இளம்பெண்கள் காதலை எப்படி இவ்வளவு சீக்கிரம் மறக்கிறார்கள்? ஏனென்றால் இந்திய சமுதாயத்தில் பெண்ணுக்கு ஆட்டோக்ராப் எழுதும் உரிமை எல்லாம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. தனக்கு வரப்போகும் மனைவி மனதால் கூட வேறு யாரையும் நினைத்திருக்கக்கூடாது என்று நிறைய ஆண்கள் நினைக்கிறார்கள், இதனால் மனதில் காதல் இருந்தால் கூட அவசர அவசரமாக மறக்க வேண்டிய நிர்பந்தம் பெண்ணுக்கு ஏற்படுகிறது.
காதலையோ அல்லது பெண்களையோ குற்றவாளிக்கூட்டில் ஏற்றுவதால் ஏதும் சாதிக்கப்போவதில்லை. நடந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று உங்களை நீங்களே அட்லீஸ்ட் ஒரு நிமிடம் குற்றவாளிக்கூட்டில் ஏற்றிக்கொள்ளுங்கள்- உங்கள் வாழ்க்கை உருப்படும்.
காதலினால் தோல்வியடைந்த ஆண் வருங்கால மனைவியிடம் தனுடைய பழைய காதல் கதைகள் எல்லாம் சொல்லிவிட்டால் என்னவோ அவன் பாவமன்னிப்பு பெற்றுவிட்டது போல நெஞ்சை உய்ர்த்திக் கொண்டு விடுகிறான். தெரியாமல் தான் கேட்கிறேன் எத்தனை கணவர்மார் தமது மனைவியின் காதல் தோல்வியை அவள் சொன்னால் அதைக் கேட்டுவிட்டு அவளை ஆறுதல் படுத்தி அவளுடன் சேர்ந்து வாழும் மனப்பக்குவம் கொண்டிருக்கிறீர்கள்? அது என்ன ஒவ்வொரு ஆணின் வாழ்கையின் தோல்விக்கும் பின்னால் அவனுடைய காதலி இருக்கின்றாள் என்ற வரி? ஏன் காதலிக்கும் அதே தோல்விதானே? அவளுடைய தோல்வியின் பின்னால் காதலன் தானே காரணமாக இருக்கின்றான்? காதல் தோற்றுப் போகிறது என்றால் அது காதலர்கள் இருவருடைய பலஹீனமும் தைரியமின்மையும் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும். சமுதாயத்தின் ஜாதி, மதம், மொழி , பதவி, உத்தியோகம் போன்றவற்றை காரணம் காட்டி காதலை தோற்கடிப்பவர்களூக்கு காதலிக்கும் முன்பே அவை பற்றிய அறிவும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்ற தீர்வும் இருந்திருக்க வேண்டும். இதில் காதலியை மட்டும் குற்றம் சொல்வது கோழத் தனம்!!
Swathi swami athaithan naanum solran...tholvi endu vantha athu 2 perukum pothuthane..ithila aankalaku madum athika tholvi athika sogam endrathellam????
correct,
I failed in my love , i dont know the reason till now 2 years passed ,
1) i am a good fellow
2) i respect all of my co workers , friends ,
3) i respect all the girls, womens, i have not even imagined teasing any body ,
4) i studied with flamboyance ,
5) now, i am earning a much
6) i loved her truly, i helped her
still , after some time with no reason she rejected me , i dont know why she did that?
i mailed her, called her for the next 1 year , no reply , i BEGGED her for the reason of rejection .
she told me not to speak with her
now also i am mailing her , but no reply,
i am genuine not only in the love also in the life ,
now i realized that
LOVE is not the thing that come as the points i enumerated above ,
LOVE does not need anything as i am good etc...
i saw so many pairs , that they now their mate is a "PORUKKI" or not a good girl,
becuse MOST of the love is the affair of flesh, my lover is a tall , handsome , well-build ,
damn sexy etc..etc..
Love is an entity that you should agape, and pair should be in the good position,
once you saw your pair , there should be something building some fragrace in the mind, that is love
Love does not need
whther you r good fellow , or not,
todays love requires muscles and flesh,
goodness and all things come after that,
what you guys think?...
Post a Comment