நேற்று செஞ்சூரியனில் நடந்த ஆஸியின் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா சாவா? போட்டியில் ஆஸி இறுதிப் பந்தில் 2 விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டி அரையிறுதிக்கு தெரிவானது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான இறுதி நிமிடங்கள் நீண்ட நாளைக்குப் பின்னர் பார்க்ககூடியதாக இருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா பாகிஸ்தானைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. நீண்ட நாட்களின் பின்னர் அவ்ரிடி கம்ரன் அக்மலுடன் ஆரம்பவீரராக களமிறங்கினார், ஆனால் 15 ஓட்டங்களுடன் தன் அதிரடியைக் காட்டமுடியாமல் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் மிகமிக மந்தமாகவே ஆடியது.
முகமட் யூசுப்பும் மிஷ்பா உல் ஹக்கும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதனால் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களைப் பெற்றது.
206 என்ற இலக்கை இலகுவாக பெற்றிடும் என எதிர்பார்த்த ஆஸி ஓரளவு வேகத்துடனே ஆடியது முதல் விக்கெட்டுக்காக வட்சனும் பெயினும் 44 ஓட்டங்களை எடுத்தார்கள். ஆரம்ப வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர் பொண்டிங்கும் மைக் ஹசியும் 3ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
பொண்டிங் 32 ஆட்டமிழக்கும் போது ஆஸியின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் வெற்றிக்கு இன்னும் 66 ஓட்டங்களே தேவைப்பட்டன போதுமான ஓவர்கள் இருந்தபடியால் ஆஸி பெற்றி பெற்றுவிடும் எனவே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் மைக் ஹசி ஆட்டமிழந்தபின்னர் ஹோப்ஸ், வைட் என வீரர்கள் வேகமாக வந்த வழியே திரும்பிப் போக ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.
42 ஆவது ஓவரில் பிரட் லீயும் மிச்சல் ஜோன்சனும் களத்தில் நின்றார்கள். அந்த நேரம் 48 பந்துகளில் ஆஸி 28 ஓட்டங்களை எடுக்கவேண்டும். ராணா நவீட் பந்து வீச வந்தார் ஒரு ஓட்டம் மட்டும் அந்த ஓவரைப் பரபரப்பாக்கினார்.
அடுத்த ஓவர் முகமட் ஆஸிப் பந்து வீச வந்து 4 ஓட்டங்களைக் கொடுத்தார். அந்த ஓவர் முடிவில் 36 பந்துகளில் 23 ஓட்டங்கள் பெற வேண்டும். மீண்டும் ராணா வந்தார் 2 ஜோக்கர் பந்துகள் உட்பட 6 பந்துகளினாலும் துடுப்பாடிய லீயை மிரட்டினார். அந்த ஓவர் ஓட்டம் எதுவும் இல்லாத மேடின் ஓவராக மாறியது.
30 பந்துகளில் 23 ஓட்டங்கள் முகமட் ஆசிப்புக்கு பதில் சஜிட் அஜ்மல் பந்துவீச வந்தார். ஆஸி பவர்பிளேயை பயன்படுத்தியது. இதனால் அஜ்மலின் 4ஆவது பந்தில் ஜோன்சன் நான்கு ஓட்டங்களை அடித்து ஆஸியின் டென்சனைக் குறைத்தார். ஆனால் பரிதாபமாக அடுத்த பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 19 ஓட்டங்கள் வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நேதன் ஹாரிட்ஸ் லீயுடன் இணைந்தார். தன் சந்தித்த அஜ்மலின் முதல் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார் ஹாரிட்ஸ் அத்துடன் அஜ்மலில் அந்த ஓவர் முடிவடைந்தது.
24 பந்துகளில் 18 ஓட்டங்கள் மீண்டும் ராணா வந்தார். மறுமுனையில் ஆடுவது ஹாரிட்ஸ் ராணாவின் பந்துகளில் திணறியபடியால் ராணாவின் அந்த ஓவரும் மேடின் ஓவராக மாறியது. இந்த நேரத்தில் பவிலியனில் அணித் தலைவர் பொண்டிங் தன் நகத்தை மிகவும் டென்சனாக கடித்துக் கொண்டிருந்தார்.
18 பந்துகளில் 18 ஓட்டங்கள் போட்டி மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியது. சஜிட் அஜ்மல் தன் இறுதி ஓவரை வீச வந்திருந்தார். அவரின் முதல் பந்தையே எல்லைக்கோட்டுக்கு அனுப்பி லீ நான்கு ஓட்டங்களை எடுத்தார். ஆஸியின் பக்கம் வெற்றி எட்டிப் பார்க்க தொடங்கியது. அந்த ஓவரில் ஒரு பந்தைத் தவிர ஏனைய பந்துகளை அடித்து ஒவ்வொரு ஓட்டமாக லீயும் ஹாரிட்ஸும் பெற்றனர். அந்த ஓவரில் மொத்தமாக 8 ஓட்டங்களை எடுத்து டென்சனைக் குறைத்தார்கள்.
மீண்டும் ராணா 12 பந்துகளில் 10 ஓட்டங்கள் முதல் 2 பந்துகளிலும் ஹாரிட்ஸ் ஓட்டம் எடுக்கவில்லை. 10 பந்துகள் 10 ஓட்டங்கள். மூன்றாவது பந்தை நான்கு ஓட்டமாக மாற்றினார் ஹாரிட்ஸ். 9 பந்துகளில் 6 ஓட்டங்கள் வெற்றி ஆஸியை நோக்கி. ராணாவின் கடைசி 2 பந்துகளிலும் ஒவ்வொரு ஓட்டம் பெற்றார்கள்.
இறுதி ஓவர் 6 பந்துகள் 4 ஓட்டங்கள், ஒரு நாலு ஓட்டம் வெற்றியைத் தேடித்தரும் பந்து வீச வருகின்றார் உமர் குல் மறுமுனையில் அடிக்கத் தயாராக லீ. இந்த ஓவர் வீச முன்னர் குல், அணித்தலைவர் யூனிஸ் கான் இருவரும் கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேல் வியூகம் அமைக்க எடுத்துக்கொண்டார்கள், இது கிளைமாக்ஸ் காட்சியில் குத்துப் பாட்டு வைத்து ரசிகர்களை நோகடிக்கும் இயக்குனர்களின் செயல் போல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் கொடுத்தது. ஏனென்றால் போட்டி அவ்வளவு டென்சன்.
முதல் பந்து ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. 5 பந்தில் 4 ஓட்டங்கள்.
அடுத்த பந்து யோர்க்கர் ஆனால் அதனை அடித்து லீ ஒரு ஓட்டம் எடுக்கின்றார். 4 பந்தில் 3 ஓட்டங்கள்.
அடுத்த பந்து ஹாரிட்சை நோக்கி குல் ஓட்டமில்லை. 3 பந்துகள் 3 ஓட்டங்கள். போட்டியில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை
நான்காவது பந்து மிட்விக்கெட் திசையில் ஹாரிட்ஸ் அடித்தார் மிஸ்பா அதனைத் தடுத்துவிட்டார் ஆனால் அவரால் சரியான நேரத்திற்க்கு விக்கெட்டை நோக்கி வீச முடியாமல் போனதால் ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது ஆஸிக்கு ஒரு ரன். 2 பந்துகள் 2 ஓட்டங்கள்.
ஐந்தாவது பந்து எதிர்முனையில் லீ மிட் ஓன் திசையில் அடித்து ஒரு ஓட்டத்தை எடுத்துவிடுகிறார். போட்டி சமநிலை ஆகவே இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது.
கடைசிப் பந்து குல் ஹாரிட்சை நோக்கி பந்து நேராக விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலின் கைகளிற்க்கு போகின்றது ஆனால் ஹாரிட்சும் லீயும் உதிரியாக ஒரு ஓட்டத்தை ஓடிவிட்டார்கள். இன்னொரு ரன் அவுட் வாய்ப்பு பறிபோகின்றது.ஆஸி போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் தெரிவானது.
ஆஸியின் வெற்றியால் இந்தியா அரையிறுதியில் இருந்து இலங்கை தென்னாபிரிக்கா போன்ற முன்னணி நாடுகளுடன் வெறும் கையுடன் வெளியேறியது. பாகிஸ்தானின் வெற்றிக்காக பிரார்த்தித்த இந்திய அணி ரசிகர்களின் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை.
அரையிறுதியில் பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்தும் ஆஸி எதிர் இங்கிலாந்தும் மோதவுள்ளன. இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தை சுருட்டிய ஆஸியை தென்னாபிரிக்காவில் இங்கிலாந்து பழிவாங்குமா? பாகிஸ்தான் நியூசிலாந்தைச் சுருட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த சென்சூரியன் பரபரப்பில் இருந்த எம்மை(இலங்கை மக்களை) ஒரு செய்தி பரபரப்பாக்கியது லோஷனின் வலையில் அதுபற்றி எழுதியிருக்கின்றார்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
28 கருத்துக் கூறியவர்கள்:
மீ த ஃபர்ஸ்ட்டேய்!
அழகான வர்ணனை, இலங்கை தொலைக்காட்சியில் இந்த போட்டியை காட்டாமல் இந்திய மேற்கிந்திய அணியினரின் உப்பு சப்பில்லாத போட்டியை காட்டி வெறுப்பேற்றினர்.
எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...
(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா)
not seen.
but ur post makes me to visualize
:)
மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...
I am fourth
அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)
கலக்கல்..
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...
எனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது....
ஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...
அவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...
(நான் அவுஸ்ரேலிய இரசிகன்...)
Cricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன்?
தமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...
வந்தி வந்தி வந்தி..
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.
//...Kiruthikan Kumarasamy சொல்வது:
வந்தி வந்தி வந்தி..
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்...//
என்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை.
சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்...
நல்ல வர்ணனை...
கதியால்
வாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)
// நாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்ட்டேய்!//
வாருங்கள் மாநக்கலாரே
//யோ வாய்ஸ் (யோகா) said...
அழகான வர்ணனை, இலங்கை தொலைக்காட்சியில் இந்த போட்டியை காட்டாமல் இந்திய மேற்கிந்திய அணியினரின் உப்பு சப்பில்லாத போட்டியை காட்டி வெறுப்பேற்றினர்.//
நன்றிகள் யோ, கேபிள் இருந்தபடியால் தப்பிவிட்டேன் இவர்கள் எப்பவும் இப்படித்தான் எதனை ஒளிபரப்புவது எனத் தெரியாமல் சொதப்புவார்கள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...//
பார்ப்போம் இன்னும் ஓரிரு நாட்கள் தானே.
//(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா)//
அவர் காப்பாத்தவில்லை என்றாலும் நீங்கள் அவரை வாருகிறது நிச்சயம்.
// யாசவி said...
not seen.
but ur post makes me to visualize //
Thank you very much.
//Subankan said...
மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...//
நன்றி சுபாங்கன் நானும் தான் பாகிஸ்தான் வென்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்த்தேன்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am fourth//
No You are 6th
// LOSHAN said...
அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)
கலக்கல்..//
நன்றிகள் லோஷன் எல்லாம் பாடசாலை தந்த அனுபவம் தான்.
//கனககோபி said...
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...
எனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது..../
தப்பிவிட்டேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
//ஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...//
இதெல்லாம் அலுவலகத்தில் இருக்கும் போது வாசித்து மகிழ்ந்தவை சிலவேளைகளில் ரிவியில் பார்ப்பதை விட Cricinfo ல் வாசிப்பது சுவாரசியாமனது.
//அவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...//
இதே இடத்தில் இந்திய இலங்கை வீரர்கள் இருந்தால் எப்படியும் நடையைக் கட்டியிருப்பினம்.
//Cricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன்? தமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...//
சில வருடங்களுக்கு முன்னர் வெப்துனியாவில் தமிழில் வர்ணனை செய்தார்கள். ஏனோ இப்ப அவர்கள் செய்வதில்லை. Cricinfo தயார் என்றால் தமிழில் வர்ணனை செய்ய நான் தயார்.
// Kiruthikan Kumarasamy said...
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.//
ஆஹா நீங்கள் மட்டுமல்ல பலர் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக சத்தம் போட்டார்கள் ஆனால் பாகிஸ்தான் வென்றிருந்தாலும் இந்தியா மேற்கிந்தியாவை இலகுவாக தோற்கடித்திருக்கமுடியாது. தினேஷ் கார்த்திக் டெஸ்ட் விளையாடிய அழகு பார்த்தீர்கள் தானே.
//கதியால் said...
என்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை. //
நீங்கள் நம்மாள் ஹிஹி
//புல்லட் said...
சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்... //
நன்றி புல்லட். இதுவரை நடந்த மச்சிலையே நல்ல மச்.
நாங்கள் சிங்கம்ல எத்தனை அபிகள் ஆதிகள் தொல்காப்பியன்கள் வந்தாலும் நாம் மானாட மயிலாடவும், அணுவளவும் பயமில்லையும் தான் பார்ப்போம்.
// சந்ரு said...
நல்ல வர்ணனை...//
நன்றிகள் சந்ரு
// Kiruthikan Kumarasamy said...
கதியால்
வாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)//
தம்பியவை உங்கள் குடும்பக் கதைகளை வெளியிலை வைத்துக்கொள்ளுங்கோ.
//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...
(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா) //
யோ வொய்ஸ்...
முதல் தோல்வி...
பார்ப்போம் யார் வெல்வது என்று...
நான் ஒருத்தன் அவுஸ்ரேலியாக்கு ஆதரவு தரேக்க அது எப்பிடித் தோக்கும்?
யோ வாய்ஸை பாகிஸ்தான்காரன் ஏமாத்திப்போட்டான். கிராதகர்கள் நியூசியை ஆஸி இலகுவாக வெல்லும் போல் தெரிகின்றது.
Post a Comment