என் உளறல்களுக்கு வயது நான்கு

ஆச்சரியமாக இருக்கின்றது நான் வலையுலகிற்க்கு காலடி எடுத்து வைத்து கடந்த ஜூலை 8 ந்திகதியுடன் மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுவிட்டன. அத்துடன் இதுவரை 150 பதிவுகள். பலரும் இந்த மைல்கற்களை இலகுவாக கடந்தாலும் நான் கடந்துவந்தது ஆச்சரியம் தான்.

ஆரம்பத்தில் என் எழுத்துக்கள் எனக்கே அவ்வளவு சுவாரசியம் கொடுக்கவில்லை, காரணம் பெரும்பாலும் சீரியசான விடயங்களை அந்தக் காலத்தில் எழுதியதாலோ தெரியாது. அதனால் அவ்வளவு பதிவுகள் போடவில்லை. பின்னர் நண்பர்கள் கொடுத்த ஊக்குவிப்பும், தினக்குரல், மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளில் என் வலையைப் பற்றி வந்த கட்டுரைகளும் என்னை இன்னும் எழுதத் தூண்டியவை.

அதன்பின்னர் கடந்தவருடம் செப்டம்பரில் தமிழ்மண நட்சத்திரமாகிய பின்னர் கிடைத்த அங்கீகாரம் என்னை இப்போது ஆகக்குறைந்தது கிழமைக்கு ஒரு பதிவாதல் எழுதத்தூண்டுகிறது.

இந்த நேரத்தில் என்னை வலையுலகிற்க்கு இழுத்துவந்த யுவகிருஷ்ணா(லக்கி லுக்), தமிழ்மணத்தில் இணைக்க உதவிகள் செய்த கானாபிரபா, என்னுடைய வலையினை அழகாக வடிவமைத்துத் தந்த நண்பன் லெனின் ஆகியோருக்கு என்றென்றும் நன்றிகள்.

அத்துடன் என்னுடைய பம்பல் பதிவாக இருந்தால் என்ன காத்திரமான பதிவாக இருந்தால் என்ன அனைத்திலும் தங்கள் கருத்துகளை இட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்திய அனைத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்னர் மூன்றாவது ஆண்டு பற்றிய பதிவுக்கு காரணம் இவ்வளவு நாளும் நான் அந்த நாளை நான் மறந்துபோனேன் எனக்கு நினைவூட்டிய நண்பர் வர்மாவுக்கு நன்றிகள்.

இந்தப் பதிவை இன்று மாலை இட்டவுடன் உடனடியாக என்னுடன் தொடர்புகொண்டு, நீங்கள் இதுவரை எழுதியதில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைப் பற்றி சில குறிப்புகளுடன் அவற்றிற்க்கு இணைப்புக் கொடுக்கவும் என வேண்டுகோள் விடுத்த இனிய நண்பர் கானாபிரபாவிற்கு நன்றிகள்.



அதனால் பதிவில் சில மாற்றங்கள் செய்து புதிதாக எழுதியுள்ளேன். எனக்குப் பிடித்த சில பொக்கிச உளறல்கள்.

2006

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் இந்த காதலைக் கடந்துவந்திருப்பீர்கள். சிலருக்கு வெற்றியளித்திருக்கலாம் சிலருக்கு வெறுப்பளித்திருக்கலாம். தோல்வியளித்திருக்கலாம் என நான் கூறவில்லை. ஏனெனில் காதல் ஒருபோதும் தோற்றதில்லை. காதலர்கள் தான் தோற்றுள்ளனர். லைலா மஜ்னுவிலிருந்து தோற்ற காதலர்கள்தான் பெரிதாக பேசப்படுகிறார்களே ஒழிய வெற்றியடைந்த காதலர்கள் பற்றி ஒருவரும் கதைப்பதில்லை.

அறிமுகத்துக்கு அடுத்த முதல் உளறலே காதல் பற்றியதுதான். முதலில் எழுதிய பதிவுமட்டுமல்ல இதில் கிஞ்சித்தும் நகைச்சுவையோ எள்ளலோ இருக்காது.

தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

நான் பிறந்ததிலிருந்து தமிழ்நாட்டு புத்தகங்கள் திரைப்படங்கள் எனப் பல வாசித்தும் பார்த்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக தமிழ் சீரியல்கள் எம் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் அல்லது கொச்சைப் படுத்துவதுபோல் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எமது கலாச்சாரத்தை இவ்வளவு கேவலப்படுத்தவில்லை.

மெஹா சீரியல் கொடுமைகள் பற்றிய பதிவு. சிலவேளை சீரியசாக சீரியலைப் பற்றி எழுதியதாலோ என்னவோ ஒரு பின்னூட்டம் கூட கிடைக்கவில்லை.

மனித நேயம் வளர்ப்போம்

உலகத்துக்கு திருகுறள் என்ற பொதுமறை தந்தவர்கள் நாம். வீரத்தையும் காதலையும் மிக அழகாக புறநானூறு அகநானூறு என்று தந்தவர்கள் நாம், தொல்காப்பியம் என்னும் அழியாப்புகழ் பெற்ற வாழ்க்கைநெறிகளைக் கூறும் நூலையும் தந்தவர்கள் நாம் , இப்படி பல விழுமியங்களை உடைய நாங்கள் இன்றும் ஜாதி என்னும் நச்சு செடியை வளர்ப்பது முறையா?

என்னை மீண்டும் ஒரு சீரியஸ் பதிவராக காட்டிய பதிவு. சமூக நலனை கருதி எழுதிய பதிவு.

மழைக்கால நினைவுகள்

எப்படியும் எங்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெறும்போதே மழையும் ஆரம்பித்துவிடும் அதிலும் எமது பாடசாலை அலைவந்து தாலாட்டும் கடலுக்கு அருகில் இருப்பதால் மழை நாட்களில் கடல் ஒரு பெண்னைப்போல் தோற்றமளிக்கு அதுதான் அழகான ஆபத்து. நீலக்கடல் கருமையாக இருப்பதுடன் வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் இணையும் கடல் எமது கடல் ஆகையாலும் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த நாட்களில் தான் நீந்தப்போவது.

என் பாடசாலை மழைக்கால அனுபவங்கள். கானாபிரபாவும் சந்திரவதனா அக்காவும் மட்டும் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

2007

சங்கரின் சிவாஜி

எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார்

முதல் முதலாக எழுதிய திரைப்பட விமர்சனம். ஏனோ அந்த நாட்களில் பெரிதாக பலரைக் கவரவில்லை. இதன் பின்னர் முட்டை அவிப்பது எப்படியென்ற நண்பர் ஒருவரின் ஆக்கத்தினை அவரின் அனுமதியோடு என் பதிவில் இட்டு கும்மிக்கு த்யாரான காலம் இது.

குற்றவாளிக் கூண்டில் காதல்!

இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காதல் தேவையா? காதலுக்கு எதிராக இதுவரை யாரும் வழக்கு தொடரவில்லை அதனால் நான் தொடர்கிறேன். இந்த வழக்கின் முடிவில் நீதிபதி காதலுக்கு மரண தண்டனை விதித்து இன்றைய இளைஞர்களை அதிலும் ஆண் வர்க்கத்தினரை காப்பாற்றவேண்டும்.

மீண்டும் காதல் பற்றிய சர்ச்சையான பதிவு. சினேகிதி, சுவாதி சுவாமி மற்றும் இனிய தோழி ரம்யா ஆகியோரின் பின்னூட்டங்கள் பல கருத்துகளை எடுத்துரைத்தன.

நெஞ்சு பொறுக்குதில்லை

நாளை இந்தியாவின் 60வதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு ஜோராக களை கட்ட இருக்கிறது. சகல டீவிகளிலும் அரை மணித்தியாலம் சுதந்திரத தினம் பற்றி யாரோ பாடுகிறார்கள் அல்லது கதைக்கிறார்கள். பின்னர் சகல நிகழ்ச்சிகளும் சினிமா சினிமா. ட்ரையிலர்களைப் பார்த்தாலே புரியும்.

இந்திய சுதந்திர தினக்கொண்டாட்டங்களின் போது தொலைக்காட்சிகள் நடத்தும் கேலிக்கூத்துகளை விமர்சித்த பதிவு. இதனைப்போன்ற பல பதிவுகளை எனக்கும் முன்னரும் பின்னரும் பலர் எழுதினாலும் இதுவரை அந்தக்கேலிக் கூத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

விநாயகருக்கு நேர்ந்த கதி.

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது.
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.

முதன்முறையாக படம் போட்டு படம் காட்டிய பதிவு. எதிர்வரும் திங்கட்கிழமை கூட இதனை மறுபதிப்பாக இடலாம் காரணம் விநாயக சதுர்த்தி பற்றிய பதிவு.

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்

இன்னொரு மொழி சமூக கோபங்களை அடிப்படையாக கொண்டபதிவு.

ஓய்வெடுங்கள் சச்சின்

சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் மூத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ற்றி திலிப் வெங்சகார் கூறிய‌ க‌ருத்து உண்மையாகும் போல் தெரிகின்ற‌து. மூத்த‌ வீர‌ர்க‌ள் இள‌ம் த‌லைமுறைக்கு இட‌ம் விட்டு விட்டு ம‌ரியாதையாக‌ ஒதுங்குவ‌து ந‌ல்ல‌து.

வாழ்க்கையில் மறக்கமுடியாத பதிவு, சச்சின் ரசிகர்களைச் சீண்டியதுடன் டொக்டர் புருனோ பல தகவல்களை ஆதாரத்துடன் பின்னூட்டங்களாக‌ தந்த பதிவு. இதற்க்குத் தான் முதல் முறை அதிக ஹிட் கிடைத்தது என நினைக்கின்றேன்.


ஓம் சாந்தி ஓம்

இடைவேளைக்கு பின்னர் ஷாருக் கண்ட கனவுபோல் காட்சிகள் வருகின்றது, இவரின் தந்தை முன்னாள் பிரபல நடிகர் ராஜேஸ் கபூர் , ஷாருக்கின் பெயர் ஓம் கபூர். இந்த ஷாருக் முற்றிலும் மார்டேன் ஆன புதியவராக இருக்கிறார். இவருக்கு மூன்று அழகிகள் உதவியாளர்கள்.

சிவாஜிக்குப் பின்னர் ஒரு படத்தை ப்ரிவியூ ஷோ பார்த்துவிட்டு படம் வெளிவரமுன்னர் எழுதிய பதிவு. சில பின்னூட்டங்களில் நிறையத் தகவல்கள் கிடைத்தன.

நாயாட நரியாட

கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும்.
நடனமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம் அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஆர்கானிக் போன்றவை மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்தபின்னர் தான் நடனம் ஆடவும் கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை சீரியஸ் பதிவர் விம்பத்தில் இருந்து பம்பல்ப் பதிவர் அல்லது மொக்கைப் பதிவர் விம்பத்துக்கு மாற்றிய பதிவு. மானாட மயிலாடவை கிண்டல் செய்து எழுதியது.

ஆண்க‌ள் ஆண்க‌ள் தான்

சிறுவ‌னோ குழ‌ந்தையோ இளைஞ‌னோ யாராக‌ இருந்தாலும் ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் என்ற‌ சார‌ப்ப‌ட‌ என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் உங்க‌ள் பார்வைக்காக‌. மின்ன‌ஞ்ச‌லை என‌க்கு அனுப்பிய‌வ‌ர் ஒரு பெண். ஆக‌வே இது ஆண்க‌ளை அவ‌தூறாக‌ அவ‌மதிக்கும் ஒரு பெண்ணாதிக்க‌வாதியின் செய‌லாக‌வே என‌க்குப் ப‌டுகின்ற‌து.

நாயாட நரியாடவின் பின்னர் கொஞ்சம் லொள்ளுப் பண்ண வைத்த பதிவு இன்றைக்கு இதேபோல் பல பதிவுகள் வந்துவிட்டன.

2008ல் எழுதியவற்றில் பிடித்தவை நீளம் கருதி அடுத்த பதிவில் தருகின்றேன். மீண்டும் அனைத்து பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கும் அனானிகளுக்கும் என் இனிய நன்றிகள்.

டிஸ்கி : நீலக்கலரின் இருப்பவை என்னுடைய பதிவுகள் பற்றிய சிறிய குறிப்புகள், இந்தக் குறிப்புகள் மூலம் என்னுடைய வலைப்பதிவு அனுபவங்களின் முன்னேற்றம் புரியும்.

23 கருத்துக் கூறியவர்கள்:

வேந்தன் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியத்தேவன் அண்ணா. நல்ல பொக்கிச உளறல்கள் (பதிவுகள்). நேரம் கிடைக்கும்போது அவற்றை முழுமையாக வாசிக்கின்றேன். நானும் அண்மையிலில்(16/08/09) எனது வலைப்பூவின் ஒரு வருடத்தை கடந்தேன்.

Unknown சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி அண்ணா... இன்னும் எழுதுங்கள்..விரைவில் கேர்ள் ஃபிரெண்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.. அதன் பிறகு வலைப்பூவின் பெயர் என் புலம்பல்கள் என்று மாறி இன்னும் நிறையப் பதிவுகள் வரும்...

கானா பிரபா சொல்வது:

வலையுலகம் உங்களைப் போன்ற நண்பர்களை அளித்ததையிட்டு இன்றும் மன மகிழ்ச்சி கொள்கிறேன். 3 வருஷத்துக்கு முன் பதிவு எழுத முன்னரேயே கறுத்தக் கொழும்பான் மாம்பழப் படத்தை என் பதிவுக்காக தாயகத்தில் இருந்து தந்ததை இன்னும் மறவேன். வாழ்த்துக்கள் நண்பா. தொகுப்பு கலக்கல். தவற விட்டதைப் படிக்கலாம்.

தமிழ் சொல்வது:

வாழ்த்துகள் நண்பரே

Unknown சொல்வது:

கறுத்தக் கொழும்பானை ஞாபகப் படுத்தி என் கணனி விசைப் பலகையை (அந்தாள் பண்ணின கூத்தில தமிழ் எழுதேக்க நான் படுகிற பாடு) நனைய வைத்ததுக்கு கானா பிரபா அண்ணாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்

மாயா சொல்வது:

வாழ்த்துக்கள் அண்ணா!

உண்மைத்தமிழன் சொல்வது:

வாழ்த்துக்கள் தேவன்..

இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் வலையுலகில் சேவையைத் தொடர்வீர்கள்..

maruthamooran சொல்வது:

வந்தி வாழ்த்துக்கள்.

தங்களிடமும், தங்களின் பதிவுகளிலும் எனக்கு பிடித்த ஒருவிடயம் மாறுபட்ட கருத்தாளர்களை ஏற்றுக்கொள்கின்றமை.


நீங்கள் சிரேஷ்ட பதிவர்தான் (எனக்கு 5 மாதங்களுக்கு முன்தியே நீங்கள் பதிவுலகத்துக்குள் வந்துவிட்டீர்கள்). நீங்க 150 பதிவு போட்டதில் என்ன ஆச்சரியமிருக்கிறது. பதிவுலகில் நீங்கள் ஒரு சிங்கம். (இது நயன்தாராவின் சிங்கமல்ல).

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ட்ரபர் சென்சரி அடித்ததுக்கு வாழ்துக்கள் வந்தி, தொடர்ந்து அடித்து ஆடுங்க..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

Tripple சென்சரி அடித்ததுக்கு வாழ்துக்கள் வந்தி, தொடர்ந்து அடித்து ஆடுங்க..

உங்க ஜட்ஜுமண்டு தப்புல்லங்க, நீங்க ஓவர் நைட்ல ஒபாமாவுக்கே சவால் விடுங்க (இன்னும் கந்தசாமி பார்த்த எபெக்ட் போகல)

வந்தியத்தேவன் சொல்வது:

//வேந்தன் said...
வாழ்த்துக்கள் வந்தியத்தேவன் அண்ணா. நல்ல பொக்கிச உளறல்கள் (பதிவுகள்). நேரம் கிடைக்கும்போது அவற்றை முழுமையாக வாசிக்கின்றேன். நானும் அண்மையிலில்(16/08/09) எனது வலைப்பூவின் ஒரு வருடத்தை கடந்தேன்.//

நன்றிகள் வேந்தன். உங்களைப்போன்ற புதியவர்களும் படிக்கத்தான் அந்தப் பொக்கிச உளறல்களை ஒரே பதிவில் இட்டேன். இன்றைக்கு கூட ஒருவர் கொஞ்சம் பழைய பதிவு ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
வாழ்த்துக்கள் வந்தி அண்ணா... இன்னும் எழுதுங்கள்..விரைவில் கேர்ள் ஃபிரெண்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.. அதன் பிறகு வலைப்பூவின் பெயர் என் புலம்பல்கள் என்று மாறி இன்னும் நிறையப் பதிவுகள் வரும்...//

நன்றிகள் கீத். இன்னொரு நன்றிகளும் ஹிஹிஹி. ஏற்கனவே நண்பர் ஒருத்தர் ரொம்பப் புலம்புகிறார். அவருக்குப்போட்டியாக நானும் புலம்பவோ. எதற்க்கும் சில இடுகைகளை கெதியாக இட்டுவைப்போம் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ யார் கண்டது.

வந்தியத்தேவன் சொல்வது:

//கானா பிரபா said...
வலையுலகம் உங்களைப் போன்ற நண்பர்களை அளித்ததையிட்டு இன்றும் மன மகிழ்ச்சி கொள்கிறேன். //

நீங்கள் கூறிய அதே வார்த்தைகளை நானும் திரும்பச் சொல்லவேண்டும், நிச்சயமாக வலைப்பதிவுகளில் பல விடயங்களை எனக்குச் சொல்லித் தந்த துரோணர் நீங்கள் தான். நன்றிகள் பிரபா.

// 3 வருஷத்துக்கு முன் பதிவு எழுத முன்னரேயே கறுத்தக் கொழும்பான் மாம்பழப் படத்தை என் பதிவுக்காக தாயகத்தில் இருந்து தந்ததை இன்னும் மறவேன். //

ம்ம்ம் ஞாபகம் இருக்கு. அந்தக் கறுத்தகொழும்பான் மாம்பழங்களை. ஆமாம் பதிவு எழுதத்தொடங்க முன்னரே உங்களை வலையை வாசித்திருக்கிறேன், அதனால் தான் உடனடியாக கறுத்தக்கொழும்பான் மாம்பழங்கள் உங்களுக்கு அனுப்பகூடியதாக இருந்தது. வலையுலக நட்புகள் பற்றி ஒரு பதிவு நேரம் கிடைத்தால் இடவேண்டும்.

//வாழ்த்துக்கள் நண்பா. தொகுப்பு கலக்கல். தவற விட்டதைப் படிக்கலாம்.//

மீண்டும் நன்றிகள் பிரபா,உங்கள் ஆலோசனையின் படிதான் தொகுப்பாகவே வந்தது அதற்க்காக இன்னொரு நன்றிகள். தவறவிட்டதை படிக்கமட்டுமல்ல பார்க்கவும் செய்யலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

///திகழ்மிளிர் said...
வாழ்த்துகள் நண்பரே//

நன்றிகள் நண்பரே.

வந்தியத்தேவன் சொல்வது:

// Kiruthikan Kumarasamy said...
கறுத்தக் கொழும்பானை ஞாபகப் படுத்தி என் கணனி விசைப் பலகையை (அந்தாள் பண்ணின கூத்தில தமிழ் எழுதேக்க நான் படுகிற பாடு) நனைய வைத்ததுக்கு கானா பிரபா அண்ணாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்//

ஒண்டுமே புரியவில்லை ஆனால் கானாஸ் பதிவால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் விளங்குகிறது. இதனை ஒரு பதிவாக இடுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//மாயா said...
வாழ்த்துக்கள் அண்ணா!//

உங்களின் சில உதவிகளுக்கு இந்த இடத்தில் நன்றிகள் மாயா.

வந்தியத்தேவன் சொல்வது:

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாழ்த்துக்கள் தேவன்..

இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் வலையுலகில் சேவையைத் தொடர்வீர்கள்..//

நன்றிகள் உண்மைத் தமிழரே உங்கள் வலையை அடிக்கடி படிப்பதனாலோ என்னவோ சிலவேளைகளில் என்பதிவும் உங்கள் பதிவைப்போல் நீண்டு விடுகிறது. நீங்களும் என்னுடன் உங்கள் சேவையைத் தொடர்வீர்கள் என வேண்டுகின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...
வந்தி வாழ்த்துக்கள்.//

நன்றிகள் மருதமூரான்.

//தங்களிடமும், தங்களின் பதிவுகளிலும் எனக்கு பிடித்த ஒருவிடயம் மாறுபட்ட கருத்தாளர்களை ஏற்றுக்கொள்கின்றமை.//

ஆஹா இதனைக் கடக்க எத்தனை பிரச்சனைகள், ஒரு சில‌ அனானிகளின் அட்டகாச தாக்குதல்கள் என பல காட்டாறுகளைத் தாண்டித்தான் நானும் வந்தேன்.

//நீங்கள் சிரேஷ்ட பதிவர்தான் (எனக்கு 5 மாதங்களுக்கு முன்தியே நீங்கள் பதிவுலகத்துக்குள் வந்துவிட்டீர்கள்). நீங்க 150 பதிவு போட்டதில் என்ன ஆச்சரியமிருக்கிறது. பதிவுலகில் நீங்கள் ஒரு சிங்கம். (இது நயன்தாராவின் சிங்கமல்ல).//

இதைத்தான் சொல்வது சைக்கிள் கேப்பில் ஓட்டோ ஒட்டுவது என்று. போறபோக்கிலை என்னை மூத்த பதிவர் ஆக்கிவிட்டீர்கள். நான் பயந்துவிட்டேன் நயனின் சிங்கத்தை சொல்றியளோ என நல்ல காலம் அடைப்புக் குறிக்குள் விளக்கம் தந்துவிட்டீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் said...
ட்ரபர் சென்சரி அடித்ததுக்கு வாழ்துக்கள் வந்தி, தொடர்ந்து அடித்து ஆடுங்க..//

நன்றிகள் யோ, நிச்சயம் தொடர்ந்து ஆடுவோம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் said...
Tripple சென்சரி அடித்ததுக்கு வாழ்துக்கள் வந்தி, தொடர்ந்து அடித்து ஆடுங்க..

உங்க ஜட்ஜுமண்டு தப்புல்லங்க, நீங்க ஓவர் நைட்ல ஒபாமாவுக்கே சவால் விடுங்க (இன்னும் கந்தசாமி பார்த்த எபெக்ட் போகல)//

Tripple சென்சரியா நான் 150 பதிவுகள் தான் போட்டிருக்கின்றேன். கந்தசாமி எபெக்ட் இன்னும் போகலை என்பது தெளிவாகத் தெரிகிறது. எதுங்க என் ஜட்ஜுமண்டு ? ஓவர் நைட்ல பக்கத்துவீட்டு பாமாவுக்கே சவால் விடுகிறது கஸ்டம் இதிலை ஒபாமா வேறையா?

புல்லட் சொல்வது:

அடடே.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்ள் ஆனாலும் பம்பல் வாழ்க்கைக்கு உதவாது.. ஆகவே என்னைப்போல சீரியசாக எழுதுங்கள் இனி.. நான் நினைக்கிறேன் இலங்கையில் தற்பொதுள்ள மூத்த பதிவர் என்ற பெருமை உங்களையே சாருமென்று .. மறுபடியும் மென்மேலும் பல்லாண்டு இடுகையிட வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி அண்ணன்...

:)

தமிழன்-கறுப்பி... சொல்வது:

இலங்கையின் மூத்த பதிவர் வந்தி அண்ணன் என்பது உண்மைதான் லக்கி,ஆனாலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்.