கந்தசாமி - சூப்பர் ஷீரோ

எத்தனையோ ஆணிபிடுங்கள்களுக்கும் மத்தியிலும் கந்தசாமி படத்தைப் பார்த்துவிட்டேன்( நாங்கள் எல்லாம் பொறுமையின் சிகரங்கள்). படத்தை விமர்சனம் பண்ணி நேரத்தை வீணடிப்பதன் பார்க்க ஏன் கந்தசாமி தோல்வியடைந்தது என ஒரு சின்ன ஆராய்ச்சி.



கதை
ஒரு படத்தில் கதை எவ்வளவு முக்கியம் என்பதை ஏனோ சுசி கணேசன் மறந்துவிட்டார், இல்லையென்றால் தாணு அவரிடம் சுசி நல்ல கதை வேண்டும் எனச் சொன்னது அவருக்கு நல்ல சதை வேண்டும் எனக்கேட்டிருக்கவேண்டும் அதனால் தான் ஸ்ரேயாவின் சகல சதைகளையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

அண்மையில் வெற்றிக்கொடி கட்டிய சிவாஜி, ரமணா, ஜென்டில்மேன், அந்நியன் படங்களின் கதைகளை வைத்து உப்புபுளி போட்டு நல்ல மசாலா சூப் வைத்திருக்கிறார் சுசி.

திரைக்கதை
கதை இல்லாவிட்டாலும் சிறந்த திரைக்கதை மூலம் வெற்றியடைந்த படங்கள் சில இருக்கின்றன. உதாரணம் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி போன்ற இளைய தளபதியின் சில படங்கள். ஆனால் கந்தசாமியில் திரைக்கதைகூட நொண்டியடிக்கிறது. அதிலும் மெக்சிக்கோ காட்சிகள் ஏன் என்பதை ஒவ்வொரு ரசிகனும் கேட்கின்றான்.

கதாநாயகி
ஸ்ரேயாவை எவ்வளவு உரிக்கமுடியுமோ அவ்வளவு உரித்திருக்கிறார் சுசி கணேசன். மியாவ் மியாவ் பூனைக்குட்டியில் ஸ்ரேயா ஆடும் ஆட்டத்திற்க்கு பக்கத்து சீட்டில் இருந்தவர் வாந்தி எடுத்துவிட்டார். அத்துடன் ஸ்ரேயாவின் தலைமுடி ஸ்டைல் கண்றாவி. சினேகிதியேயில் ஜோதிகா தன் எதிரிக்கு நித்திரையில் தலைமுடியை வெட்டியிருப்பார் அந்த வெட்டுப்பட்ட பெண் கூட அந்த ஸ்டைலில் அழகாக இருந்தார் ஆனால் ஸ்ரேயா?

இசை
சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் காட்சிஆக்கும்போது கோட்டைவிட்டிருக்கிறார்கள். அதிலும் எக்ஸ்யூஸ்மீ கந்தசாமி பாடல் டோட்டல் வேஸ்ட், மானாட மயிலாட இளம் நடன இயக்குனர்கள் இதனைத் திறம்பட இயக்கியிருப்பார்கள். அந்தப்பாட்டில் எப்படியெல்லாம் எக்ஸ்பிரசன் காட்டியிருக்கலாம் ஆனால் விக்ரம் ஸ்ரேயா இருவரும் ஏனோதானோ என ஆடினார்கள், ஸ்ரேயாவின் உதட்டசைவுகள் பாடலுடன் ஒட்டவில்லை. இருவருக்கும் கெமிஸ்ரி துப்பரவாக இல்லை. மும்மைத் கானைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லை.

பின்னணி இசை விக்ரம் சேவலாக வரும் காட்சிகளில் அந்நியன் பாதிப்பு. மற்றும்படி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

வடிவேல்
ஏதோ இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் மீண்டுமதே மொக்கைகள் வடிவேல் ரூட்டை மாற்றாவிட்டால் விரைவில் காணாமல் போனோர் பட்டியலில் தேடவேண்டும். படத்தின் நீளத்தைக் கருதி வடிவேல் காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

ஒளிப்பதிவு
ஆடித்தள்ளுபடியில் வாங்கிய கமெராவினால் படம் எடுத்திருக்கிறா ஏகாம்பரம், ஒரு இடத்திலும் ஒரு பிரேமும் ஒழுங்கில்லை. காட்சிகளில் தெளிவில்லை சில இடங்களில் மொபைல் கமெராவினால் எடுக்கப்பட்ட அப்டங்கள் போல் பிக்சல் குறைவாக இருக்கிறது. ஒளிப்பதிவு ஒழுங்காக இருந்தால் குப்பைப் படங்களைக்கூட பார்க்கலாம் நாமெல்லாம் வில்லு குருவி பார்த்த வீரர்கள் ஆனால் இந்தப்படத்தில் ஒளிப்பதிவு படுமோசம். எடிட்டிங் அதைவிட மோசம்.

விக்ரம் மட்டும் தான் படத்தின் ஒரே ஒரு பிளஸ் நன்றாக நடிக்கின்றார் ஆனால் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இனிமேல் இப்படியான சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்காமல் நல்ல கதை உள்ள படங்களில் நடிப்பாராக.

படம் தோல்வி என்பதற்கான இரண்டு ஆதாரங்கள்.

1. டைட்டில் கார்ட்டில் நன்றிகள் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் எனப்போடுகின்றார்கள் அப்பவே தியேட்டரைவிட்டு எழும்பி வந்திருக்கவேண்டும். சன் பிக்சர்ஸின் எந்தப் படம் இதுவரை வெற்றியடைந்திருக்கிறது.

2. புதிய படங்கள் அதிலும் பில்டப் கொடுத்த படங்கள் வெளிவந்து ஒரு 3 கிழமைக்கும் பின்னரே சன் மியூசிக்கில் முழுமையான பாடல்களை ஒளிபரப்புவார்கள் ஆனால் அடுத்த நாளிலிருந்தே பாடல்கள் முழுமையாக ஒளிபரப்பாகின்றன.

மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்.

20 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ஐயா நீங்களுமா எல்லாரும் கந்தசாமியை நொந்து நூடுல்ஸ்சாமி ஆக்கிட்டாங்க.. பாவம் விக்ரம் (ரசிகன், நான் என்ன சொன்னேன்)

Admin சொல்வது:

உங்கள் விமர்சனம் அருமையாக இருக்கின்றது..

//மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்.//

உண்மையேதான்.

ராஜன் சொல்வது:

நன்றி.....

Sutha சொல்வது:

காரணங்கள் நன்றாக இருக்கிறது ,
அதிலும்
//ஆடித்தள்ளுபடியில் வாங்கிய கமெராவினால் படம் எடுத்திருக்கிறா ஏகாம்பரம், ஒரு இடத்திலும் ஒரு பிரேமும் ஒழுங்கில்லை//
மிகச்சரி

நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
வந்து பாருங்கள் ..
www.haran5533.blogspot.com

ARV Loshan சொல்வது:

உங்க பங்குக்கு இதுவா? நடத்துங்க..
உங்கள் குசும்புகளை நிறையவே ரசித்தேன்..
வில்லன்கள் முகேஷ்,ஆஷிஷ் வித்யார்த்தி பற்றி எதுவும் சொல்லாததனால் அது plus?

சுபானு சொல்வது:

அருமையான விளக்கம்.. ஆனால் என்னைப் பொறுத்தவரை படம் நல்லாயிருந்தது.. முழுக்க இரசித்துப் பார்த்தேன்..

ஒவ்வொருவர் இரசனையும் வேறு வேறுதான்..

என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான sentimental பேத்தல்களும் இல்லாமல் இருந்தது முதலாவது பிளஸ். பின்னர் பழிக்குப்பழி என்கின்ற பழகிப்போன சுதப்பல்கள் இல்லாமல் இருந்தது இரண்டாவது பிளஸ். அடுத்தது விஜயின் படத்தில் வருவது போல் இல்லாமல் முழுக்க ஹை(f)ஐ தரத்திலான படம். இது மூன்றாவது பிளஸ்..

மொத்தத்தில் இரசித்தேன்..

FunScribbler சொல்வது:

//மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்//

haha.. u just created a laughing riot!!

FunScribbler சொல்வது:

//மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்//

haha.. u just created a laughing riot!!

தமிழன்-கறுப்பி... சொல்வது:

கந்தசாமி படம் சொதப்பும், என்று அப்பவே சொன்னனான் ஒருத்தரும் கேக்கேல்லை..

:)

Unknown சொல்வது:

கொஞ்சம் சீரியசா பின்னூட்டம் போடட்டா பின்னூட்ட சிங்கம் வந்தி அவர்களே!!!

விக்ரம் சொல்லியிருந்தார், பாடல்காட்சிகள் எல்லாம் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை என்று. பாடல் வரிகளைக் கேட்ட போதே இதை எல்லாம் வைத்து எப்படிக் குழந்தைகளுக்குப் பாட்டெடுக்கலாம் என்று யோசித்தேன்... மியா மியா பாட்டை மட்டும் பார்த்துவிட்டு (கந்தசாமியில் நான் பாத்தது அந்தப் பாடலின் 1.29 நிமிடம் மட்டுமே).. இப்படியான பாட்டையும் நடன அசைவுகளையும் குழந்தைகள் ரசிப்பார்கள் என்று நம்பினால்... Sorry say this விக்ரம், முன்னணி நாயகனாக சினிமாவில் நீங்கள் செலவழித்த 8 வருடம் + வாய்ப்புக்குப் போராடிய 15 வருடம் எல்லாமுமாகச் சேர்த்து 23 வருடங்கள் சினிமாவில் நீங்கள் எதையுமே கற்கவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் said...
ஐயா நீங்களுமா எல்லாரும் கந்தசாமியை நொந்து நூடுல்ஸ்சாமி ஆக்கிட்டாங்க.. பாவம் விக்ரம் (ரசிகன், நான் என்ன சொன்னேன்)//

ஆமாம் யோ நாங்க எல்லாம் ரிஸ்க் எடுப்பதில் அதிகம் விருப்பம் ஆனாலும் இந்த ரிஸ்க் ஓவர் ரிஸ்க் தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

// சந்ரு said...
உங்கள் விமர்சனம் அருமையாக இருக்கின்றது..

//மொத்தத்தில் வில்லுவை வெற்றிப்படமாக்கிய பெருமை கந்தசாமியையே சாரும்.//

உண்மையேதான்//

நன்றிகள் சந்ரு, சில மொக்கைப்படங்கள் முன்னைய மொக்கைகளை மிஞ்சிவிடுவதால் அவை நல்ல பெயரை எடுக்கிறது. பெரியகோடு சிறிய கோடு எண்ணக்கருதான்

வந்தியத்தேவன் சொல்வது:

Sutha said...
//காரணங்கள் நன்றாக இருக்கிறது ,
அதிலும்
//ஆடித்தள்ளுபடியில் வாங்கிய கமெராவினால் படம் எடுத்திருக்கிறா ஏகாம்பரம், ஒரு இடத்திலும் ஒரு பிரேமும் ஒழுங்கில்லை//
மிகச்சரி //

நன்றிகள் சுதா உங்கள் சுப்புலட்சுமி பதிவிலும் என் கருத்தைச் சொல்லியிருக்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
உங்க பங்குக்கு இதுவா? நடத்துங்க..
உங்கள் குசும்புகளை நிறையவே ரசித்தேன்..
வில்லன்கள் முகேஷ்,ஆஷிஷ் வித்யார்த்தி பற்றி எதுவும் சொல்லாததனால் அது plus?//

நன்றிகள் லோஷன், வில்லங்களா? அப்படி யாராவது படத்தில் வந்தார்களா? ஆஷிஸ் வித்தியார்த்தி செல்லமே படத்தில் கிரிஷ் கார்னாட்டை அப்படியே கொப்பி அடித்தார். அடுத்த வில்லன் மீனாகுமாரிக்கு வெள்ளை உடுப்புடன் ஆடிய ஆட்டம் அன்சகிக்கவிள். அலெக்ஸ் சொல்வதற்க்கு ஒன்றுமேயில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//சுபானு said...
அருமையான விளக்கம்.. ஆனால் என்னைப் பொறுத்தவரை படம் நல்லாயிருந்தது.. முழுக்க இரசித்துப் பார்த்தேன்.. //

நன்றிகள் சுபானு

//ஒவ்வொருவர் இரசனையும் வேறு வேறுதான்..//
அது சரி ரசனை ஒவ்வொருவருக்கும் வித்தியாசபபடும்.

//என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான sentimental பேத்தல்களும் இல்லாமல் இருந்தது முதலாவது பிளஸ். பின்னர் பழிக்குப்பழி என்கின்ற பழகிப்போன சுதப்பல்கள் இல்லாமல் இருந்தது இரண்டாவது பிளஸ். அடுத்தது விஜயின் படத்தில் வருவது போல் இல்லாமல் முழுக்க ஹை(f)ஐ தரத்திலான படம். இது மூன்றாவது பிளஸ்..//

எத்தனை பிளஸ் இருந்தாலும் மைனஸ் அதிகமாக இருப்பதால் படம் மைனஸ் தான். சிம்பிள் மட்ஸ்.

வந்தியத்தேவன் சொல்வது:

// Thamizhmaangani said...

haha.. u just created a laughing riot!!//

உங்கள் விமர்சனமும் படித்தேன், நன்றிகள்

வந்தியத்தேவன் சொல்வது:

//தமிழன்-கறுப்பி... said...
கந்தசாமி படம் சொதப்பும், என்று அப்பவே சொன்னனான் ஒருத்தரும் கேக்கேல்லை..//

எப்ப அண்ணேய் சொன்னீர்கள் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி.

வந்தியத்தேவன் சொல்வது:

// Kiruthikan Kumarasamy said...
விக்ரம் சொல்லியிருந்தார், பாடல்காட்சிகள் எல்லாம் குழந்தைகளை மனதில் வைத்து எடுக்கப்பட்டவை என்று.//

கீத் நீங்கள் சொல்லியதை நான் மறந்துபோனேன், விளம்பரங்களிலும் குழந்தைகளுக்கான படம் என விளம்பரம் செய்கிறார்கள். அப்படியென்றால் தாணு, சுசி கணேசன் விக்ரம் அனைவரையும் சிறுவர் துஷ்பிரயோகத்தில் உள்ளே வைக்கவேண்டும்.

அத்திரி சொல்வது:

//சன் பிக்சர்ஸின் எந்தப் படம் இதுவரை வெற்றியடைந்திருக்கிறது. //


அண்ணே அயன் வெற்றி படம் தானே

வந்தியத்தேவன் சொல்வது:

//அத்திரி said...

அண்ணே அயன் வெற்றி படம் தானே//

அத்திரி அண்ணே இலங்கையில் அயன் ஏவிஎம்மின் தயாரிப்பு சன் பிக்சர்ஸ் பற்றி மருந்துக்கு கூட இங்கே டைட்டிலில் வரவில்லை. ஆகவே அயன் ஏவிஎம்மின் அயன் தான் சன் பிக்சர்ஸ்சின் அயன் அல்ல. என் அயன் விமர்சனத்திலும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றேன், நேரம் இருந்தால் சென்றுபார்க்கவும்.