இலங்கை வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதிய நாம் சாதித்துவிட்டோம் பதிவிற்க்கு வந்த பின்னூட்டங்களுக்கு என்னால் உடனடியாக பதில் அளிக்கமுடியவில்லை. காரணம் அன்றைய தினமே நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் விபரங்கள் தட்டச்சு செய்து வலையேற்ற வேண்டிய கடமை. அதன் பின்னர் சில ஆணி பிடுங்கள் வேலைகள் என என் நேரம் தேவைப்பட்டது. அந்தப் பதிவிற்க்கு இனித் தனித் தனியாக பின்னூட்டம் இடுவது என்பது பெரியதொரு வேலை ஆகவே பதிவில் இருக்கும் பின்னூட்ட இட்டவர்களின் பெயருடன் அவர்களுக்கான பதில்கள்.
கானாபிரபா, கனககோபி, வர்மா, தங்கமுகுந்தன், சந்ரு, தேவதாசன், சந்தனமுல்லை, கீத், துபாய் ராஜா, தமிழன் கறுப்பி, மருதமூரான், அனானி, மயூரேசன், யெஸ்.பாலபாரதி, தமிழ்ப்பிரியன், டொன்லீ, தவேஷ், வேந்தன், வசந்தன், ஈழவன், மகேஸ், சுபானு, உதயதாரகை, ஊர் சுற்றி, அத்திவெட்டி ஜோதிபாரதி,ஜாக்கி சேகர், லோஷன், கனக்ஸ், யோ வாய்ஸ், வி.ஜெ. சந்திரன்
மேலே பெயர் குறிப்பிடப்பட்ட அனைத்து நண்பர்களும் எமக்கு வாழ்த்துக்களும் சில தங்களுது கருத்துகளும் சொன்னவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். நிச்சயமாக உங்களது மனம் திறந்த பாராட்டுகளும், ஆலோசனைகளும் எம்மை அடுத்த சந்திப்புகளை மேலும் திறமையாக வழி நடத்த உதவும்.
கனககோபி, யோ வாய்ஸ் போன்றவர்கள் தங்களின் புகைப்படம் எனது பதிவில் இல்லையென்று ஆதங்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் புகைப்படம் வேறு சில பதிவுகளில் இருக்கின்றன. இன்னும் சில நாட்களில்(ஏற்கனவே புல்லட், சந்ரு தொகுத்ததுபோல்) நானும் அனைவரும் எழுதிய இடுகைகளைத் தொகுத்து தருவேன்.
தங்கமுகுந்தன், தேவதாசன் மருதமூரான் போன்றவர்கள் முழுமையாகத் தொகுத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் உரையும் விவாதங்களின் ஒலிவடிவம் மதுவின் இந்தப் பதிவில் இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
இருக்கின்றது. அதில் உங்களுக்கும் கேட்கும் வசதி இருந்தால் கேட்டுப்பாருங்கள். முழுமையான நிகழ்வையும் தொகுப்பது என்பது முதுகுவலிக்கும் வேலை. சில உரைகளின் சாராம்சத்தை முடிந்தால் தொகுத்து வழங்குகின்றேன். அதே நேரம் கலந்துகொண்ட ஒவ்வொரு பதிவரும் தங்கள் தங்கள் பாணியில் நிறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதனையும் சென்று படியுங்கள்.
அத்துடன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து சில வெளிநாட்டுப்பதிவர்கள் கூட பதிவுகள் இட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நன்றிகள்.
இதன் சில ஒளிப்படங்கள் விரைவில் வலையேற்றப்படும்.
//சஜிதரன் said...
அதுசரி, கேட்போர் மத்தியில் (படங்களில்) பெண் பங்கேற்பாளர்களைக் காண முடிகிறது.. மைக் பிடித்து பேசுபவர்களில் யாரையும் காணோமே..? எதிர்காலத்தில் பெண்களது குரலையும் ஒலிக்கச் செய்வது ஆரோக்கியமான 'சொலிடாரிட்டி'யை உறுதி செய்யும்... இது ஒரு முன்மொழிவு மாத்திரமே.. விமர்சனம் அல்ல!! :) //
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சஜி. ஒரே ஒரு பெண் மாத்திரம் தன் கருத்தைச் சொன்னார், அதேவேளை சில பெண் பதிவர்கள் வகுப்புகள், வேலைகள் காரணமாக சமூகமளிக்கவில்லை. அவர்கள் ஒருவரும் எம்முடன் முதலில் தொடர்பு வைக்காதபடியால் அவர்களை தனி உரையாற்ற அழைக்கமுடியவில்லை. அடுத்த தடவை இந்த பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்.
நீங்கள் அவர்களின் குரல் ஒலிக்கச் செய்வது ஆரோக்கியம் என்கிறீர்கள் ஆனால் கீழ் வரும் பின்னூட்டத்தில் ஒருவர் அவர்களைக் கொச்சைப் படுத்துவதுபோல் இட்டிருக்கின்றார். இதற்க்கு என்ன செய்யலாம்.
//பெண்கள் சார்பாக said...
பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா..
இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??...
80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???//
எங்களது பதிவுகளில் எத்தனை பெண்கள் வந்திருந்தார்கள் என்பதை மட்டும் தான் இட்டிருந்தோம். ஆனால் இணைய வழி ஒளிபரப்பில் அவர்களைக் கிண்டல் செய்த ஒரு கிறுக்கன் தான் இந்தப் பின்னூட்டத்தையும் இட்டவர். அவர் யார்? என்பது முதலான சகல விடயங்களும் எமக்குத் தெரியும்.
ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமாக விவாதங்களிலும் வெளியிலும் பேசும் கதைக்கும் காலத்தில் பெண்களை வரவிடாமல் செய்யும் விதமாகவே இவரின் இந்த விஷமப் பின்னூட்டம் இருக்கின்றது. அவரின் முட்டாள் தனத்திற்க்கு பதிலடியாக அடுத்த சந்திப்பில் நிச்சயம் பல பெண்கள் கலந்துகொள்வார்கள்.
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
வந்தி,
சுருக்கமா சந்திப்பு முழுதையும் நல்லாச் சொல்லியிருக்கிறீங்கள். வந்த பதிவர்கள் அனைவரும் இதைப்பற்றி பதிவிடுவார்கள் ஆதலால் முழுமையான விபரம் வாசகர்களை எப்படியும் சேர்ந்துவிடும். நானும் ஒரு பதிவிடுகிறேன்.
நன்றியுடன்
கௌபாய்மது.//
மது நன்றி என்ற வார்த்தை உங்கள் சேவைக்கு எம்மால் சொல்லமுடியாது. அதனைவிட பெரிய வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எம் ஒருங்கிணைப்பாளர் குழுவில் ஒருவராக இருந்தாலும் நிகழ்வில் பங்குபற்றி ஒவ்வொருவரும், நேரடி நிகழ்வைப் பார்த்தவர்களும் உங்களுக்கு நன்றிகள் சொல்லியவண்ணமே இருக்கின்றார்கள்.
சில தொழில்நுட்பக்கோளாறுகள் காரணமாக எம்மால் தெளிவான ஒளிபரப்பை மேற்கொள்ளமுடியாவிட்டாலும் ஒலிவடிவம் சிறப்பாகவே வந்திருக்கு.
// மாயா said...
(இந்நிகழ்வை புல்லட் தன் வீடியோகமராவினால் எடுத்துக்கொண்டிருந்ததார் அதனை நாம் எவ்வாறு பெறுவது எனக் கூறுவீர்களா ?)//
புல்லட் எடுத்த வீடியோ இன்னும் இறுவட்டாக வரவில்லை. வந்தபின்னர் உங்களுடன் தொடர்புகொண்டு எப்படி அனுப்புவது எனச் சொல்கின்றேன். எதாவ்து மெஹா அப்லோட்டிலோ அல்லது ரபிட்ஷேர் போன்றவற்றிலோ அப்லோட் செய்து லிங்க் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைக்கும் எண்ணமும் எமக்கிருக்கிறது.
// [பி]-[த்]-[த]-[ன்] said...
வந்தியத்தேவன் என்ற பெயரில். ஒரு பொடியன் எழுதுகிறான் என்று இதுநாள்வரை எண்ணினேன்.... :)//
ஐயா பித்தரே உங்களுக்குத் தனியாக பதில் போடுவதன் காரணம் ஏதோ என்னை பொடியன் இல்லை என்று என் இமேஜை கவிழ்ததற்க்கு கண்டனம் தெரிவிக்கத்தான். நான் இன்றைக்கும் யூத்தான். சந்திப்பில் ஒரு கட்டத்தில் புல்லட் வாய் தடுமாறி என்னையும் லோசனுடன் மணமுடித்தவர் என்ற கருத்தை விதைத்துவிட்டார். அதற்கான பதிலை அங்கே எனோ என்னால் சொல்லமுடியவில்லை. அதனை உங்களுக்கு அளிக்கும் பதில் மூலம் சொல்லிக்கொள்கின்றேன்.
நான் இன்றைக்கும் பொடியன் தான், என்ன கொஞ்சம் பெரிய பொடியன்.
//யுவகிருஷ்ணா said...
ஒரு நிகழ்வை ஆர்கனைஸ் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. சாதித்துக் காட்டியதற்கு வாழ்த்துகள் வந்தி //
ஆமாம் லக்கி ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வது மிகவும் கடினமான வேலை இது எனக்கு பாடசாலை காலத்திலிருந்து கிடைத்த அனுபவங்கள். அந்த அனுபவங்களின் தொடராக கிடைத்த வெற்றியாகவே இந்தச் சந்திப்பினை என்னால் சொல்லமுடியும். காரணம் பலதரப்பட்ட கருத்துக்கள் உடையவர்கள் பலரை ஒன்றுகூட்டி ஒரு நிகழ்வை நடத்துவது என்பது மிகவும் கஸ்டமான வேலை.
ஒருங்கிணைப்பாளர் குழுவில் இருந்த அனைவரது கருத்துக்களும் குணாம்சங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததும் இதற்கான ஒரு காரணமாகும்.
எங்கள் ஒன்றுகூடலுக்கு முன்னரான பதிவுகள் சில இப்போதுதான் வெளிவருகின்றது அவற்றைப் படித்துப்பாருங்கள் நாம் பட்ட அனுபவங்கள் புரியும்.
அப்பாடா ஒரு மாதிரி பல நாட்களாக தட்டச்சு செய்ததை இன்று ஒரு மாதிரி வலையேற்றிவிட்டாச்சு.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
8 கருத்துக் கூறியவர்கள்:
தடுமாறி என்னையும் லோசனுடன் மணமுடித்தவர் என்ற கருத்தை விதைத்துவிட்டார் //
இலங்கையிலும் தடை எடுத்தாயிற்றா :)..
தடுமாறி என்னையும் லோசனுடன் மணமுடித்தவர் என்ற கருத்தை விதைத்துவிட்டார் //
இலங்கையிலும் தடை எடுத்தாயிற்றா :).. //
ஹாஹாஹாஹாஹாஹாஹாாஹாஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹாஹாாஹாஹாஹாஹாஹாஹாா
ஹாஹாாஹாஹாஹாஹஹாாாஹாஹாஹாஹாாஹா
ஹாஹாஹாஹ.........
நினைத்து நினைத்து இன்று முழுக்க சிரிக்கலாம்..
:D
நான் எனது படத்தை காணவில்லை என வேடிக்கைக்காகவே கூறினேன். அத நீங்க சீரியஸா எடுத்து பதிவிலயும் போட்டுட்டீங்களா? என்னா இது சின்ன புள்ள தனமா இருக்கு?
பி.கு - என் பம்மல் படபதிவுக்கு (இலங்கை பதிவர் சந்திப்பு ஒரு பட தகவல்) வந்த வரவேற்புகளும், புதிதாக கிடைத்த சில படங்களும் அதே போல் இன்னொரு பதிவு போட்டு அதன் இரண்டாம் பாகமா தரலாமா என யோசிக்கிறேன். அப்படி போட்டால் உங்களையும் ரொம்பவே கலாய்க்க வேண்டி வரும்.
எனது தொகுப்புக்கான சுட்டி தவறாக இருக்கிறது. திருத்தி விடுங்கள்.
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_23.html
பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்கிறது என்ற பொறாமையின் காரணமே. சிலரின் தேவையற்ற பேச்சுக்குக் காரணம். இப்பொழுதும் பலரும் சந்திப்பு தொடர்பாக இடுகை இடுகின்றார்கள் என்றால் சந்திப்பின் வெற்றியை காட்டுகிறது.
தூற்றுவோர் தூற்றிவிட்டு போகட்டும் பலபேர் போற்றுகின்றார்கள் தானே. நம் பதிவர்கள் சாதித்து விட்டார்கள் சாதிப்பார்கள் என்பது சந்திப்புக்கு பின்னரான செயற்பாடுகள் சொல்கின்றன.
மன்னிக்க. பெண்கள் சார்பான பின்னூட்டம் கொச்சைப்படுத்துவதற்காக போடப்பட்டதல்ல. நீங்கள் விடும் தவறுகள் தொடராமல் இனியாகிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் போடப்பட்டது. இது விஷமப் பின்னூட்டம் என்று கூறி, உங்கள் மேல் தவறில்லை, நீஙகள் இப்படியெல்லாம் கதைக்கவில்லை என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.
இணைய வழி ஒளிபரப்பில் கிண்டல் செய்த அந்த குறிப்பிட்ட நபர் தான் நான் என்று எப்படி இப்படி உறுதியாக சொல்கிறீர்கள். என்ன கொடுமை சார்? எனக்கும் தெரியும் அவர் யார் என்று. நான் அவர் இல்லை.
என்னை வெளிப்படுத்த எனக்கு இஷ்டம் இல்லாதது அந்தக் குறிப்பிட்ட நபர் மேல் பழியை போட்டு உங்களை நல்லவராக்க உதவுகிறது. என்ன கொடுமை சார்?
சரி. விஷயத்துக்கு வருகிறேன். பதிவில் இருப்பது மட்டும் தான் உங்கள் கருத்தா? இணைய வெளியில் நீங்கள் கதைத்தவற்றை அல்லது கேட்ட கேள்விகளைத் தான் இங்கே போட்டிருக்கிறேன். இங்கே நீங்கள் என்பது வந்தியத்தேவனை மட்டும் குறிக்கவில்லை. வந்தியத்தேவன் உட்பட சி(ப)லரையும் இணையவழி பார்வையாளர்கள் சி(ப)லரையும் குறிக்கிறது.
நேரடியாக குற்றம் சாட்டப்படும் போது அதை எதிர்கொள்வது கடினம் தான்.
மன்னிக்க. எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டியிருந்தது. இருக்கிறது.
//ஆண்களும் பெண்களும் ஆரோக்கியமாக விவாதங்களிலும் வெளியிலும் பேசும் கதைக்கும் காலத்தில் பெண்களை வரவிடாமல் செய்யும் விதமாகவே இவரின் இந்த விஷமப் பின்னூட்டம் இருக்கின்றது.
ஆரோக்கியமான என்ற சொல் நீங்கள் சேர்த்திருப்பதால் இது சரியானது. மேலே நான் குறிப்பிட்ட கேள்விகள் உள்ளடங்கலாக மற்ற கேள்விகள் ஆரோக்கியமானவை இல்லை என்பது தான் நான் சொல்வது. அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெண்கள் பங்களிக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம்.
இதை ஒரு பெரிய விடயமாக எடுத்து அலசி ஆராய வேண்டியதில்லை. பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதோ அநாவசியமான பரபரப்பை அல்லது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டியதோ இல்லை.
பெண்கள் பங்களிக்க வேண்டுமென்று உண்மையாகவே விரும்பினால் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் சம்பந்தமாக "கலாய்த்தல் வகை" கதைகள் உட்பட அவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து.
விஷமப் பின்னூட்டம் என்று நீங்கள் இன்ரபிரிட் பண்ணிய விதத்திற்கு நன்றிகள்.
அடப்பாவி வந்தி.. எனக்கு எக்கச்சக்க மின்னஞ்சல்கள்.. நமீதா,நயந்தார் இப்போ வந்தியா என்று? தேவையா?
எந்த தட்ட்டச்சு முறையில் தட்டினீர்கள்? ;)
// புல்லட் எடுத்த வீடியோ இன்னும் இறுவட்டாக வரவில்லை. வந்தபின்னர் உங்களுடன் தொடர்புகொண்டு எப்படி அனுப்புவது எனச் சொல்கின்றேன். எதாவ்து மெஹா அப்லோட்டிலோ அல்லது ரபிட்ஷேர் போன்றவற்றிலோ அப்லோட் செய்து லிங்க் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைக்கும் எண்ணமும் எமக்கிருக்கிறது. //
நல்லதொரு முயற்சி.. காத்திருக்கிறேன்
நன்றிகளுடன்
மாயா
Post a Comment