நீண்ட நாட்களாக நடத்தவேண்டும் என நினைத்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு புல்லட்டின் கற்பனையில் நடந்துமுடிந்தாலும் அது கற்பனை என்பதால் நியமான பதிவர் சந்திப்பை நடத்துவதற்க்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்கம் அல்லது இராமகிருஷ்ண மிசன் புல்த் தரை, வெள்ளவத்தை பீச்சும் ஓக்கேதான் ஆனால் சில சங்கடங்கள் ஏற்படும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
காலம் : இந்த மாத இறுதியில் அல்லது இடையில் வரும் ஒரு சனி ஞாயிறுகளில்.
கலந்துகொள்ளவிருப்பம் உள்ளவர்கள் எனக்கு தங்கள் ஈமெயிலை பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும் அல்லது புல்லட்டினைத் தொடர்புகொள்ளவும்.
2007ல் மாயா, இறக்குவானை நிர்ஷன்,ஊரோடி பகீ,மு.மயூரன், நான், போன்றவர்கள் ஒழுங்குபடுத்தி சில காரணங்களால் பிற்போடப்பட்டது. ஆகவே இந்த முறை எப்படியும் சந்திப்பை நடத்திவிடவேண்டும். அத்துடன் இம்முறை நிறைய புதிய பதிவர்களும் பிரபல மூத்த பதிவர்களும் இருக்கின்றார்கள். இல்லையென்றால் புல்லட் போல் கற்பனையில் தான் சந்திப்புகள் நடக்கும்.
உங்கள் கருத்துக்களையும் காலம் இடம் நேரம் பற்றிய தகவல்களையும் கூறவும்.
பின்னாலிருந்து உதவி செய்வதாக சில பெரிய தலைகள் உறுதியளித்துள்ளனர்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
16 கருத்துக் கூறியவர்கள்:
கொழும்புத் தமிழச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் அல்லது வினோதன் மண்டபத்தில் நடத்தலாமே... சனிக்கிழமை அல்லது ஞாயிறு மிக உகந்த நாளாக இருக்கும்
என்ன பாஸ் கடைய இங்கயும் போட்டிருக்கீங்களா? கவலைப்படாதீங்க நடத்திடுவோம்... நம்ம பசங்க ஒரு பத்து பேர் இருக்காங்க.. அத்தோட கொஞ்ச பெர் கொன்டாக்ட் பண்ணியிருக்காங்க... இந்த மீடியா பதிவர்கள்ள ஒண்ணு ரெண்ணு பேர புடிச்சா ஒரு பெரிய திறப்பு விழாவா பண்ணிரலாம்...
எனக்கும் வர ஆசை :(
பதிவர் சந்திப்பு ஒரு வேலையற்றவர்களின் விடையமாகும்.. எதைப்பற்றி பேச.. பேசி ஆகப்போவது என்ன.. சில கருத்துக்களை எழுதியவர்கள் யார் என்றும் அவர் பின்னணி பற்றியும் ஆராயவும் தான் இது உதவும்.. கருத்துச்சுதந்திரத்தின் மீதான பாரிய அடியாக இது அமையும்.. அதை இலங்கை பதிவர் சந்திப்பு என்று அழைப்பதும் தவறு. வேண்டுமானால் கொழும்பு என்று அழைக்கலாம். எதுக்கு வெற்று வேலை? ஒழுங்கா எழுதினா போதும்..
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
கொழும்புத் தமிழச்சங்கம் வினோதன் மண்டபம் சிறிய கூட்டங்களுக்கு பொருத்தமாக இருக்கும். அல்லது ராமகிருஸ்ண சிறிய மண்டபத்தையும் யோசிக்கலாம்.
ரசிகன் சொல்வதிலும் சில உண்மைகள் உள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். புனைபெயரில் எழுதுபவர்களின் சிக்கல் புரிகிறது. ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள முடியுமா என்பதையும் ஆராயுங்கள்.
அடுத்து வரும் இரு ஞாயிறுகளும் எனக்கு முடியாதிருக்கும். ஆயினும் மற்றவர்கள் வசதிக்கு ஏற்ப ஒழுங்கு செய்யுங்கள். கலந்து கொள்வதில் நிறைய ஆவல் உள்ளது.
// என்.கே.அஷோக்பரன் said...
கொழும்புத் தமிழச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் அல்லது வினோதன் மண்டபத்தில் நடத்தலாமே... சனிக்கிழமை அல்லது ஞாயிறு மிக உகந்த நாளாக இருக்கும்//
நன்றிகள் அசோக்பரன் வினோதன் மண்டபம் தான் பொருத்தம் ஏனென்றால் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடத்துமளவுக்கு நம்மவர்கள் வருவார்களா? என்பது சந்தேகம்.
//புல்லட் said...
என்ன பாஸ் கடைய இங்கயும் போட்டிருக்கீங்களா? கவலைப்படாதீங்க நடத்திடுவோம்... நம்ம பசங்க ஒரு பத்து பேர் இருக்காங்க.. அத்தோட கொஞ்ச பெர் கொன்டாக்ட் பண்ணியிருக்காங்க... இந்த மீடியா பதிவர்கள்ள ஒண்ணு ரெண்ணு பேர புடிச்சா ஒரு பெரிய திறப்பு விழாவா பண்ணிரலாம்...//
புல்லட் இப்படிக் கடைபோட்டாதால் ஒரு பத்துபேராவது சந்திப்புக்கு வருவார்கள். அப்படி ஆட்கள் குறைந்தால் ரொலக்சிலையோ அல்லது இராமகிருஷ்ண பவனிலையோ நடத்தவேண்டியதுதான்.
//கானா பிரபா said...
எனக்கும் வர ஆசை :( //
டிக்கெட் அனுப்புகின்றேன் வரவும்.
//ரசிகன் said...
பதிவர் சந்திப்பு ஒரு வேலையற்றவர்களின் விடையமாகும்.. எதைப்பற்றி பேச.. பேசி ஆகப்போவது என்ன.. சில கருத்துக்களை எழுதியவர்கள் யார் என்றும் அவர் பின்னணி பற்றியும் ஆராயவும் தான் இது உதவும்.. கருத்துச்சுதந்திரத்தின் மீதான பாரிய அடியாக இது அமையும்.. அதை இலங்கை பதிவர் சந்திப்பு என்று அழைப்பதும் தவறு. வேண்டுமானால் கொழும்பு என்று அழைக்கலாம். எதுக்கு வெற்று வேலை? ஒழுங்கா எழுதினா போதும்..//
ரசிகன் உங்கள் சில கருத்துகளுடன் ஒத்துப்போகின்றேன். அதேவேளை இந்தச் சந்திப்பினால் பதிவர்களிடம் இருக்கும் அன்னியோன்யம் அதிகரிக்கலாம். அத்துடன் சில தொழில்நுட்ப ஆலோசகனையும் அவர்களிடம் பரிமாறலாம். கருத்துச் சுதந்திரத்திற்க்கு எப்படி பாதிப்பு ஏற்படும். ஏனெனில் ஏனைய இடங்களில் நடந்த பதிவர் சந்திப்புகளின் பின்னர் பதிவர்களின் எழுதும் ஊக்கம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
கொழும்புத் தமிழச்சங்கம் வினோதன் மண்டபம் சிறிய கூட்டங்களுக்கு பொருத்தமாக இருக்கும். அல்லது ராமகிருஸ்ண சிறிய மண்டபத்தையும் யோசிக்கலாம்.//
நன்றிகள் டொக்டர். மண்டபம் பற்றி எத்தனைபேர் கலந்துகொள்கின்றார்கள் என்பதன் பின்னரே யோசிக்கவேண்டும். வினோதன் மண்டபம் தான் சரியாக இருக்கும். மிசன் சிறிய மண்டபம் கூட கொஞ்சம் பெரிசுதான்.
//ரசிகன் சொல்வதிலும் சில உண்மைகள் உள்ளதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். புனைபெயரில் எழுதுபவர்களின் சிக்கல் புரிகிறது. ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள முடியுமா என்பதையும் ஆராயுங்கள்.//
சிலர் புனை பெயரில் எழுதினாலும் தங்கள் சுயத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆகவே புனைபெயரில் எழுதும் சிலருக்கு மட்டும் சிக்கல் வரலாம்.
//அடுத்து வரும் இரு ஞாயிறுகளும் எனக்கு முடியாதிருக்கும். ஆயினும் மற்றவர்கள் வசதிக்கு ஏற்ப ஒழுங்கு செய்யுங்கள். கலந்து கொள்வதில் நிறைய ஆவல் உள்ளது.//
நிச்சயம் உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றேன். அடுத்துவரும் ஞாயிறுகளில் கூடுவது கஷ்டம் இன்னும் பெரிதாக எந்த பதிலையும் பதிவர்களிடமிருந்து காணவில்லை.
வந்தி, தனி மடல் அனுப்பியுள்ளேன்.. நான் எழுத ஆரம்பித்த புதிதிலேயே யோசித்தேன்.. ஆனால் அப்போதைய சூழல் பல முகங்களை வெளியே காட்டப் பலர் பயந்திருப்பார்கள் என்பதானால் நான் மனதிலேயே இருத்திக் கொண்டேன்.
ரசிகன் சொல்வதில் சில விஷயம் சரி தான்..
எனினும் எங்களுக்குள் இது ஒரு சந்திப்பு,கலந்துரையாடலாக இருக்கட்டும்.
முக்கியமான விஷயம் எந்தவொரு பதிவரையும் தவற விடக்கூடாது.
நாம் கொஞ்சப்பேர் முதலில் எங்காவது சந்தித்து இடம், இதர விஷயங்கள் பற்றித் தீர்மானித்தால் நல்லது என நினைக்கிறேன்.
ஒழுங்குபடுத்தும் செலவும் கொஞ்சம் இருக்குமே...
இதுபற்றி ஆரம்பக் கட்டம் தீர்மானித்த பிறகு பொதுப்பதிவு ஒன்றை எல்லோரும் சேர்ந்து இடுவோம். அது அழைப்பாகவும் இருக்கட்டும்.
ஒன்பதாம் திகதிக்குப் பிறகு எந்தவொரு சனி, ஞாயிறும் எனக்கு சம்மதமே.. சனி மாலை தவிர்த்து..
பூரண ஒத்துழைப்பு லோஷன் தருவான்,
பதிவாளர்களைத்தேடித்திரியுது ஒரு கூட்டம். முகம் காட்டமறுப்பவர்கள்வரவேண்டாம் .முயற்சித்தால் சாதிக்கலாம்
அன்புடன்
வர்மா
நல்லதொரு முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கடந்த முறை(2007) போலல்லாது அனைவருக்கும் அழைப்பினை அனுப்பி வருவார்களா என உறுதிப்படுத்தவும். அல்லாவிடின் கடந்த முறை நாம் பட்ட நிலை தான் . . .
கடந்த முறை
நான்,
ஊரோடி பகீ,
சஞ்சாரம் என்ற வலைப்பதிவை எழுதி வந்த சஞ்யே,
தொடுவானம் வலைப்பதிவை எழுத்தொடங்கியிருந்த வேந்தன்,
காண்டீபன்,
SKETCH என்ற வலைப்பதிவை எழுதி வந்த பாவை என்ற சாயினி,
நிஷாந்தன் (நிலாத்தூறலோ நிலாச்சாரலே பெயர் தெரியவில்லை என்ற வலைப்பதிவில் எழுதி வந்தவர்)
மற்றும் வலைப்பதிவுகளை வாசிக்கும் இருவர்....
ஆகியோர் வெள்ளவத்தையிலுள்ள ஒரு ஊரோடி பகியின் ஏற்பாட்டின் படி Hotel ஒன்றில் சந்தித்ததாக நினைவு.
நாம் அன்று 20 பேர் வருவார்களென எதிர்பார்த்திருந்தோம் வந்தது 10 பேர் தான். எனினும் சிறு சந்தோஷம் தான்
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த நேரம் பதிவர்களின் எண்ணிக்கை 25 பேர் மட்டுமே !
இப்போ 60க்கும் மேல் ....
நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றிபெறும்
நல்வாழ்த்துக்களுடன்
மாயா
இயன்ற வரை நான் தொகுத்த இலங்கை வலைப்பதிவர்களின்
தொகுப்பு இங்கே =>
மாயா உங்கள் பதிவில் மின்னஞ்சல் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம் இம்முறை என்ன நடக்கிறது என்று. சிலரின் வலைத்தளங்கள் வேலை செய்யவில்லை.
நல்ல முயற்சி வந்தியத்தேவன்
கலந்து கொள்வதில் நிறைய ஆவல் உள்ளது.திகதி முடிவானதும் அறியத்தரவும் . இயலுமானவரை கலந்துகொள்ள முயற்சிப்பேன்.
Post a Comment