இலங்கைப் பதிவர் ஒன்றுகூடல்
சந்திப்பு ஒருமாதிரி வெற்றிகரமாக முடிந்தது. நிறையப் புதியவர்கள், சில பழையவர்கள், பதிவில் வியக்கவைத்து தோற்றத்தில் அட இந்தச் சின்னப்பொடியனா இவ்வளவும் எழுதுகிறான் என அதிர்ச்சி தந்தவர்கள் எனப் பலரையும் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
இன்னும் பதிவுகள் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு சில விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டது. மொத்தத்தில் பலராலும் பாராட்டப்பட்ட எமக்கு திருப்திகரமான சந்திப்பாக முடிந்தது. சந்திப்பு ஏற்பாடுகளில் முன்னைய நாட்களைச் செலவிட்டதால் இப்போது சில நாட்களாக நிறைய வேலைகள் அதனால் தான் என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கு பதில் போடவில்லை, நிச்சயம் விரைவில் பதில் அளிக்கின்றேன்.
கிரிக்கெட்
பொண்டிங்கின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். சந்திப்பு களேபரங்களில் அடிபட்டுப்போன விடயத்தில் இதுவும் ஒன்று. ஆஸி வீரர்களின் தலைக்கனத்திற்க்கு இது வேண்டும் என்றுதான் பலரும் சொல்கிறார்கள், அத்துடன் ஆஸி இப்போது தரப்படுத்தலின் 4வது இடம். பார்ப்போம் ஆஸீ மீண்டும் ஆக்ரோசத்துடன் எழுகிறார்களா? இல்லை இப்படியே இருந்துவிடுகிறார்களா என.
விவாகரத்து
அண்மையில் செல்வராகவன் சோனியா அகர்வால் விவாகரத்து பரபரப்பான செய்தியானது. அவர்கள் இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் வெளியே வருகிறது ஆனால் இப்படிப் பிரபலம் இல்லாதவர்கள் பலரின் விவாகரத்துகள் முடங்கியே போகின்றன.
அண்மையில் மூஞ்சிபுத்தகத்தில் என் நண்பர் ஒருவருடன் அரட்டை அடிக்கும்போது எம்முடன் படித்த பெண் ஒருவர் திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து கோரிய அதிர்ச்சியான விடயத்தைச் சொன்னார். காரணம் இருவருக்குமிடையில் புரிந்துணர்வு இல்லாமை என அந்த நண்பி சொன்னாராம். இருவரும் இணையத்தில் காதல் செய்து திருமணம் செய்தவர்கள் என்பது முக்கிய குறிப்பு. தற்போது இணையத்தில் காதல் செய்ய விரும்பும் நண்பன் புல்லட் போன்றவர்களுக்கு முன் எச்சரிக்கை இது.
இலங்கையிலும் விவாகரத்து தமிழர்களிடம் அதிகரிக்கின்றது என்பது இன்னொரு சூடான தகவல்.
ஆரம்பத்தின் முடிவு
சில நாட்களாக நண்பர்களின் தொல்லை தாங்கமுடியாமல் உள்ளது, என்னைத் திருமணம் செய் திருமணம் செய் என நச்சரிக்கிறார்கள். குறிப்பாக லோஷன், புல்லட் மற்றும் மருதமூரான். லோஷன் தான் பெற்ற துன்பத்தை என்னையும் அனுபவிக்கச் சொல்கிறார் என நினைக்கின்றேன். மற்ற இருவரும் என்னைப்போல் சிறுவர்கள் ஆதலால் என்னை "லைக்கா" போல் ஆக்கி சோதனை செய்ய முயற்சிக்கிறார்கள்.
திருமணம் செய்துள்ள வலையுலகத் தோழர்களான லக்கிலுக், ஜாக்கி அண்ணாசி, கேபிள் சங்கர் அண்ணாச்சி போன்றவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
என் மைத்துனர் சொன்னதுபோல திருமணம் என்பது " The beginning of an End :-)".
சினிமா
கந்தசாமி பார்த்து சேதுவாகினதால் இந்த வாரம் சினிமா சம்பந்தமான எந்த தகவல்களோ விமர்சனங்களோ இல்லை. ஆனால் வழக்கம்போல் படம் மட்டும் உண்டு. சூப்பில் தகவல்களை விட படம் பார்ப்பவர்கள் மட்டும் அதிகம் சில ரசிகர்களின் பெயரை அவர்கள் மானப்பிரச்சனையாக கருதுவதால் குறிப்பிட விரும்பவில்லை.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
காதல் செய்து திருமணம் செய்தவர்கள் என்பது முக்கிய குறிப்பு. //
அப்ப நம்ம கதை அவ்வளவு தானா? ஏன்யா எங்க வயித்தில பீதிய கௌப்புறீங்க..
சூப்பில் கொஞ்சம் காரம் குறைவு. டயர்ட் தான் காரணம் என நினைக்கிறேன்.
//யோ வாய்ஸ் said...
சூப்பில் கொஞ்சம் காரம் குறைவு. டயர்ட் தான் காரணம் என நினைக்கிறேன்.//
அதே தான் ஆதலால் இன்றைய சூடு ஆறிப்போன சூப்பை கண்ணை மூடிக்கொண்டு குடிக்கவும்.
இணையததில் காதல் செய்வதன் இலாபம் என்ன?
வெப்கம் மூலம் பெண்ணின் வீட்டையும் வசதியையும் அறிந்து கொள்ளமுடியும்..
அதன் மூலம் மாப்பிளையின் விற்பனை விலையை ஏற்றி இறக்க முடியும்..
ஏதாவது நாய் பூனை வளர்க்கிறார்களா என அறிந்து கொள்ளமுடியும்..
அதனால் பயமில்லாமல் வீட்டில் அவளைத்தவிர யாருமில்லாத போது ஒரு விசிட்டை போட முடியும்..(சும்மா நேரில பாத்து கதைக்கதான் ;) )
மாமனார் பின்னால் நடந்து போகும்போது பிக்சரை கப்சர் பண்ணி கொரில்லா போல எடிற் பண்ணி மகிழ முடியும்..
டெலிபோன் பில் மிச்சம்.. கடை பார்க்குக்கு போய் சந்தித்து காசைக்கரியாக்காமல் வெப்காமில் வழிந்து விட்டு மிச்சப்படுத்தின காசில நளபாகத்தில பால்அப்பம் வாங்கி சாப்பிட முடியும்..
இப்பிடிப்பலப்பல...
வாத்சாயனரின் வழிவந்த நீங்கள் இப்படி கலியாணத்தை எண்ணி தொடை நடுங்கலாமா?
எம் நண்பர் குழாமுக்கே அவமானம்.. கெதியென பாவாடை தோய்க்கப்பழகி விட்டு மாலைக்கு ஓர்டர் பண்ணுங்கள்.. வந்து கலக்கி விடுகிறோம்..
எதுக்கும் அந்த டைவோரஸ் கேசை விசாரித்து பாருங்கள்.. உங்களை மனதில் இருத்திதான் கணவனை கட் செய்ததோ தெரியவில்லை.. உங்கள் பச்சின் மன்மதக்குஞ்சல்லவா நீங்கள்..
//தற்போது இணையத்தில் காதல் செய்ய விரும்பும் நண்பன் புல்லட் போன்றவர்களுக்கு முன் எச்சரிக்கை இது.
வாழ்த்துக்கள் புல்லட்...
//மற்ற இருவரும் என்னைப்போல் சிறுவர்கள் ஆதலால் என்னை "லைக்கா" போல் ஆக்கி சோதனை செய்ய முயற்சிக்கிறார்கள்.
சைக்கிள் கப்பில சின்னபையனாகி விட்டீங்களே வந்தியண்ணா.. உங்கட லொல்லுத்தாங்கல....
விவாகரத்து தொடர்பான செய்திகள் உங்களை பயம் கொள்ள செய்கிறது. ,
கவர்ச்சியாக இருக்கும் ஸ்ரேயாவ ரசிக்க முடியவில்ல/பிடிக்கவில்லை (எனக்கு பின்னுட்டம் இட்டுருந்தீங்க )
இது போன்ற அறிகுறிகளை பார்க்கும் போது "லோஷன், புல்லட் மற்றும் மருதமூரான்" சொல்வதும் சரி என்றே படுகிறது. ...
உங்கட உளறல்கள விட்டுட்டு சட்டு புட்டுன்னு பொண்ண தேடுங்க பாஸ் ....
அதுசரி புல்லெட் , நளபாகத்தில பால்அப்பம் என்ன விலை ?
இப்ப சாய் கணேஷாவ(ராஜ் பவான் ) மூடிட்டதால வெள்ளவத்தைல பால் அப்பத்துக்கு தட்டுப்பாடு.
சரக்கு அடிக்க ஆசையிருந்தா ஒயின்ஷாப்பையே விலைக்கு வாங்குவீயளா? :-)
யோவ் யாரய்யா அது நளபாக அப்பத்த சாயிகணேசா நாறல் அப்பத்தோட ஒப்பிட்டது.. நளபாகம் பெஸ்ட்.. அடுத்தது அதுக்கு முன்னால இருக்கிற கடை ஹம்சாவோ என்னவோ! நளபாகம் புட்டு முட்டை கொத்தும் புட்டு நெத்தலிக் கொத்தும் சாப்பிட்டதில்லயோ? என்ன ஆளய்யா நீர்? வெள்ளவத்தையிலருந்து என்ன செய்யுறீர்?
மற்றது 33வது லேனில் நல்லா உள்ளுக்க இருக்கும் புட்டுக்டையில புட்டும் வெங்காயப்பொரியலும் போடுறான் எக்ஸ்ராவா ஒரு கத்தரிக்காய் வதக்கல் கறியும் எடுத்து கலந்து அடிச்சுப்பாரும்.. சும்மா நாக்கு சுழரும்..
அப்பிடியே ஹம்டன் லேனில டபிள்யு.ஏ.சில்வா மாவத்தைக்கு கிட்ட ஒரு சைவக்கடை இருக்கு.. வலு சின்னன்.. ஆனா புட்டு, இடியப்பம் , இட்டலி, வடை, றோல்ஸ், வாய்ப்பன், பரோட்டா எல்லாம் சுப்பர்
றொலக்சில பொரிச்ச கோழி பிரியாணி சாப்பிட்டு முடிய ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் குடிக்கிறதுல ஒரு சுகம்..
ஸ்டேசன் றோட்டில யாழ் கடையில குத்தரிசி சோறும் மரக்கறி எல்லாம் போட்டு மீன் சாப்பாடு எடுக்கிறதில ஒரு சுகம்..
அபிராமியில சூடா போளி, றோயலில சொக்லட் கேக் , மயூரியில மட்டன் , சென்னை ரெஸ்டூரண்டில பானிபூரி பேல்பூரி , செட்டிநாட்டில ஸவீட்கோன் சூப் இப்பிடி சொல்லிட்டே பேகலாம்.. சாப்பாடு சம்பந்தமா ஏதெனுமெண்டா என்னட்ட கேளுங்க
மசாலா மிக்ஸ் கொடுத்த பேரரசு மன்னிக்கவும் வந்தி அண்ணருக்கு வாழ்த்துக்கள்.
கல்யாணத்தை பற்றி மற்றவர்கள் சொன்னார்களா என தெரியவில்லை ஆனால் அவரே இப்போ சொல்லிவிட்டார். அட பாருங்கப்பா ஒரு பொண்ணை.
புல்லெட் , ஒழுங்கைகளுக்கு உள்ள அந்த கடை பக்கம் எல்லாம் நான் வந்ததில்லை. நீங்க சொன்ன பிறகு தான் நிறைய இஸ்பெசல் இருக்குது எண்டு தெரியுது.
இந்த பின்னூட்டத்த கொஞ்சம் விரிவாக்கி ஒரு பதிவாக்கினா , நிறைய பொடியளுக்கு பிரஜோசனமாய் இருக்கும். நான் பேஸ் புக்குல எல்லாம் போஸ்ட் பண்ணுறன்.
எல்லா கடயளையும் BRAND AMBASSODER இருந்து ப்ரொமோட் பண்ணினான் எண்டு சொல்லி ஒரு கோழி கால் ப்ரீயா வாங்கி நீங்க சாப்பிடலாம்
வந்தி,
பச்சிலர் பாட்டியை மேலேயுள்ள கடைகளில் எல்லாம் ஒவ்வொருக்காப்போய்க்கொண்டாடுவம்.
Post a Comment