விஜய் தொலைக்காட்சி வழக்கம் போல் தங்கள் தனித்தன்மையுடன் புதிய நிகழ்ச்சிகள் இரண்டை இரு வாரங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. ஒரு நிகழ்ச்சி பாட்டுப் பாட வா இன்னொரு நிகழ்ச்சி அணுவளவும் பயமில்லை
பாட்டுப் பாட வா
பாட்டுப் பாட வா என்பது கோடிஸ்வரன்(குரோர்பதி) நிகழ்ச்சியின் இன்னொரு வடிவமாகும். கோடிஸ்வரனில் கேள்வி கேட்க சரியான பதில் சொல்லவேண்டும் இங்கே ஒரு பாடலைப் பாடும் போது அந்தப் பாடலில் இடையில் விடுபட்ட வரிகளைச் சரியாகப் பாடவேண்டும்.
இந்த நிகழ்ச்சியை பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் அழகாகத் தன்னுடைய ஆட்டம் பாட்டம் பாணியில் தொகுத்து வழங்குகின்றார். பெரும்பாலும் இவர் தமிழிழையே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது சிறப்பு.
முதல் வாரத்தில் முதல் நாள் பாடகர் யுகேந்திரனும் பாடகி கல்பனாவும் கலந்துகொண்டு மூன்று சுற்றுகளுடன் வெளியேறினார்கள். அடுத்த நாள் பாடகர் சத்யா மிகவும் திறமையாகப் பாடி ஆறு சுற்றுவரை வெற்றிகரமாக முன்னேறி ஏழாவது சுற்றில் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பரிசுடன் வெளியேறினார்.
கடந்த வாரம் பாடகர் பிரசன்னா வந்தார். அன்றைக்குத் தான் நிகழ்ச்சிக்கு சனியன் பிடித்தது. நல்ல பாடகர் வளர்ந்துவரும் பாடகர் பிரசன்னா ஆனால் தேவையில்லாமல் அனுராதாவுடன் வழிந்ததும் சில கருத்துக்களைச் சொல்கின்றேன் என பாடல் ஆசிரியர்களை இகழ்ந்ததும் இந்த நிகழ்ச்சிக்கு கறுப்பு புள்ளியாகிவிட்டது. வந்தோமோ பாடினோமா வென்றோமா என இருக்காமல அதிகமாக அலட்டியது கண்டிக்கத் தக்கது.
அவரது வெளியேற்றத்தின் பின்னர் நடிகை அபிராமி(தமிழ் நன்றாகத் தெரிந்த நடிகை) வந்தார். நன்றாக வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கின்றார். ஓரளவு ஸ்ருதி சுத்ததுடன் (இலங்கையில் மீண்டும் ஸ்ருதியைத் தேடித் திரிகிறார்கள்) பாடினார். மூன்று சுற்றுகளை வென்று அடுத்த சுற்றுக்கு அடுத்த வாரம் வரை காத்திருக்கின்றார்.
மேலதிக தகவல் : இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட அரங்கம் எரிந்து பக்கத்தில் இளையதளபதி விஜயின் வேட்டைக்காரன் அரங்கத்தையும் எரித்துவிட்டதாம். அரங்கம் எரிந்ததானல் படம் ஓடாதோ என விஜய் செண்டிமெண்டாக கவலைப்பட்டாராம். (இல்லாவிட்டால் மட்டும் ஓடுமோ என யாரோ கேட்பது புரிகிறது).
அணுவளவும் பயமில்லை
காபி வித் அனுவை நிறுத்திவிட்டு(சகலரையும் பேட்டி எடுத்துவிட்டார்கள் என நினைக்கின்றேன்) அனுஹாசன் தலைமையில் ஏழு பெண்கள் செய்யும் சாகசங்கள் தான் இந்த நிகழ்ச்சி.
தாரிகா( நாட்டுச் சரக்கு புகழ்), குட்டிப் பூஜா(ஏன் இவர் இப்போ சீரியல்களில் அழுவதில்லை), சந்தோஷி( சினிமாவில் கதாநாயகிகலாம்), குண்டு ஆர்த்தி (இவர் சாகசம் செய்தாலும் சிரிப்புத் தான் வருகிறது), உஜ்ஜைனி(பாடகி), பூஜா(எஸ் எஸ் மியூசிக் தொகுப்பாளினி), சான்ட்ரா( சன் மியூசிக் புகழ் பிரஜினின் மனைவி)ஆகிய ஏழுபேரும் செய்யும் சாகசங்கள் தான் இந்த நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியிலும் வெளியேற்றம்(எலிமினேசன்)இருக்காம்.
முதல் வாரத்தில் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு போலீஸ் அக்கடமியில் பயிற்சி செய்தார்கள். அதில் பூஜாவும் உஜ்ஜைனியும் கயிற்றில் இருந்து பாய்ந்ததில் காயமடைந்தார்கள், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் மருத்துவர் அவர்களின் எக்ஸ் ரே ரிப்போர்ட் பற்றிச் சொல்வதைக்கூட காட்டினார்கள். ஆனால் அடுத்த நாள் அவர்கள் இருவரும் எந்தவித காயமும் இன்றி மீண்டும்வந்தார்கள்.
சென்ற வாரம் பாம்புகளுக்கு மத்தியில் படுத்து பார்ப்பவர்களைக் கிலி கொல்லச் செய்தார்கள்.
முதலில் அனைவரும் பயந்தார்கள், தாரிகாதான் துணிவுடன் சென்று அந்தக் கணாடிப்பெட்டிக்குள் படுத்திருந்தார். அவரின் முகத்தை இன்னொரு கண்ணாடித் துண்டால் பிரித்துவிட்டு அவரின் உடல் மேல் கிட்டத்தட்ட 30 பாம்புகளுக்கு மேல் விட்டு கண்ணாடியால் மூடினார்கள்.
போட்டிக்காக இவர்களுக்கு கொடுத்த நேரம் ஒரு நிமிடம் தான் ஆனால் அவர்கள் விரும்பிய வரைக்கும் பாம்புகளுடன் இருக்கலாம். யாரோ ஒருவர் கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் இருந்ததாக காட்டினார்கள்.
பெண்களுக்கு துணிவு தேவைதான் அதற்காக இந்த உயிர் போகும் விடயங்களில் ரிஸ்க் எடுக்கலாமா? சிலவேளைகளில் இவர்கள் வடிவேலுவைப் போல் ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவதுபோல் நினைக்கின்றார்களோ.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
15 கருத்துக் கூறியவர்கள்:
//மேலதிக தகவல் : இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட அரங்கம் எரிந்து பக்கத்தில் இளையதளபதி விஜயின் வேட்டைக்காரன் அரங்கத்தையும் எரித்துவிட்டதாம். அரங்கம் எரிந்ததானல் படம் ஓடாதோ என விஜய் செண்டிமெண்டாக கவலைப்பட்டாராம். (இல்லாவிட்டால் மட்டும் ஓடுமோ என யாரோ கேட்பது புரிகிறது).
//
மற்ற அனைத்தையும் விட இதை.. அதிலும் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்
//குண்டு ஆர்த்தி (இவர் சாகசம் செய்தாலும் சிரிப்புத் தான் வருகிறது), //
நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. ஆனால் ஆர்த்திக்குத்தான் எவ்வளவு மன உறுதி. எல்லாரும் அவர் உடலைப்பார்த்து கேலி செய்தாலும் அதை தூக்கியெறிந்து விடுகிறார்.:)
இன்னமும் சிங்கையில் அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படவில்லை. பார்க்கிறோம். உண்மைதான் பிரசன்னா மீது எனக்கு நல்ல மரியாதை இருந்தது அந்த "தவமாய் தவமிருந்து" பாடலிற்கு பின்னர். ஆனால் அவரின் அண்மைக்கால அலட்டல் தாங்கமுடியல. அவரின் வதைப்பது சகிக்கல.
//nila said...
மற்ற அனைத்தையும் விட இதை.. அதிலும் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்//
நன்றிகள் நிலா, இன்னொருவர் பின்னூட்டத்தில் அந்த வரியை எழுதமுன்னர் நானே எழுதிவிட்டேன்.
//சின்ன அம்மிணி said...
நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. ஆனால் ஆர்த்திக்குத்தான் எவ்வளவு மன உறுதி. எல்லாரும் அவர் உடலைப்பார்த்து கேலி செய்தாலும் அதை தூக்கியெறிந்து விடுகிறார்.:)//
சின்ன அம்மிணி ஆர்த்தி மட்டுமல்ல இதில் பங்குபற்றும் அனைத்துப் பெண்களுக்கும் மன உறுதி அதிகம். ஆர்த்தியின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு மானாட மயிலாடவில் இறுதிப்போட்டி வரை வந்திருக்கமுடியாது.
//கதியால் said...
இன்னமும் சிங்கையில் அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படவில்லை. பார்க்கிறோம். உண்மைதான் பிரசன்னா மீது எனக்கு நல்ல மரியாதை இருந்தது அந்த "தவமாய் தவமிருந்து" பாடலிற்கு பின்னர். ஆனால் அவரின் அண்மைக்கால அலட்டல் தாங்கமுடியல. அவரின் வதைப்பது சகிக்கல.//
விரைவில் ஒளிபரப்புவார்கள் பாருங்கள் பிரசன்னாவின் அலட்டலை.
தேவையானதை எழுதி இருக்கிறீர்கள்..
இந்த பிரசன்னா என்பவரின் அறுவை பற்றி யாராவது எழுதியே ஆகவேண்டும் என்று யோசித்தேன்..
தாங்க முடியல சாமி.. ஒரே தொண தொண..
பாடகர் என்ற மரியாதை எல்லாம் அவரது வழிதல்/அலட்டலில் இல்லாமல் போய் விட்டது..
நானும் பார்த்தேன், உண்மையில் தாரிகா தைரியசாலி தான் நான் போட்டியில் சொன்னேன், ஆனால் இப்படி ஒரு ரிஸ்க்கான நிகழ்ச்சி தேவையா? எல்லாம் அழகான பொண்ணுங்க பாம்பு ஏதும் கொத்திட்டா என்னா செய்ய? வேண்டுமென்றால் நம்ம ரஜனி மாதிரி பாம்பு புடிக்கும் நடிகர்களை கொண்டு வந்து முயற்சி பண்ணலாமே. மேலும் அபிராமியின் குரலில் தமிழ் பாட்டு அழகாக இருக்கிறது. (சில ஹிந்தி பாடகர்கள் தமிழ் பாடல் பாடுவதை காட்டிலும்)
ஒருக்கா கலாமாஸ்டர் உணர்ச்சி வசப்பட்டு ஆடியபோது என் பூஸ்டர் எரிந்து போய் விட்டது.உவங்கள் உப்பிடி ஸ்டார் வேல்ட் ஐயும் AXN ஐயும் கொப்பி பண்ணி தமிழ்ப்டுததினால் காமெடியாகத்தான் முடியுமு்...
உதுக்குமுந்தினபோட்டியிலையும் பாம்புக்கை படுத்தபிள்ளை பாம்முக்கு தண்ணிகாட்டினது.உப்பிடி ஒருபோட்டி நடத்தவேணுமெண்டு நானும் நினைச்சனாந்தான். நான் ரெடி பதிவுபோடுற பொடியள் நீங்கள் ரெடியே?
அன்புடன்
வர்மா.
//LOSHAN said...
தேவையானதை எழுதி இருக்கிறீர்கள்..//
ஆமாம் போட்டி நிபந்தனைகளை ஒருக்கால் எழுதட்டோ என நினைத்துவிட்டு வாசிப்பவர்களுக்கு ஏன் இன்னும் தொல்லை கொடுக்கவேண்டும் என்பதால் விட்டுவிட்டேன்.
//இந்த பிரசன்னா என்பவரின் அறுவை பற்றி யாராவது எழுதியே ஆகவேண்டும் என்று யோசித்தேன்..தாங்க முடியல சாமி.. ஒரே தொண தொண..//
ஆஹா நான் முந்திவிட்டேனா? பொது இடத்தில் தொலைக்காட்சிகளில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது இன்னமும் பலருக்குத் தெரியவில்லை.
//பாடகர் என்ற மரியாதை எல்லாம் அவரது வழிதல்/அலட்டலில் இல்லாமல் போய் விட்டது..//
ஒருமுறை நேரில் கூட இவரது பாடும் திறனைப் பார்த்தேன் கசல் எல்லாம் நன்றாகப் பாடுவார். ஒரு நிகழ்ச்சியால் தன் மேல் பலர் வைத்திருந்த மரியாதையை கெடுத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
//யோ (Yoga) said...
நானும் பார்த்தேன், உண்மையில் தாரிகா தைரியசாலி தான் நான் போட்டியில் சொன்னேன், //
ஹா ஹா தாரிகா சின்னத்திரையிலும் கொஞ்சம் நாட்டுச் சரக்கு கவர்ச்சியுடன் தான் வருகிறார். இதுவும் அவரது ஒருவகைத் தைரியம் தான்.
//ஆனால் இப்படி ஒரு ரிஸ்க்கான நிகழ்ச்சி தேவையா? எல்லாம் அழகான பொண்ணுங்க பாம்பு ஏதும் கொத்திட்டா என்னா செய்ய? //
ஆமாங்க சில தடவை பாம்புகள் அநியாயத்துக்கு அவர்களின் கைகளையும் கால்களையும் சுற்றியது.
//வேண்டுமென்றால் நம்ம ரஜனி மாதிரி பாம்பு புடிக்கும் நடிகர்களை கொண்டு வந்து முயற்சி பண்ணலாமே.//
கூல் ரஜனி ரசிகர்கள் பார்த்தால் அடிக்கவருவார்கள்.
//மேலும் அபிராமியின் குரலில் தமிழ் பாட்டு அழகாக இருக்கிறது. (சில ஹிந்தி பாடகர்கள் தமிழ் பாடல் பாடுவதை காட்டிலும்)//
உண்மை ஹிந்திபாடகர்கள் மொழியை குத்தி குதறுவார்கள்.
//புல்லட் said...
ஒருக்கா கலாமாஸ்டர் உணர்ச்சி வசப்பட்டு ஆடியபோது என் பூஸ்டர் எரிந்து போய் விட்டது.உவங்கள் உப்பிடி ஸ்டார் வேல்ட் ஐயும் AXN ஐயும் கொப்பி பண்ணி தமிழ்ப்டுததினால் காமெடியாகத்தான் முடியுமு்...//
புல்லட் ஒருமுறை கலா அக்கா மறைந்திரு பார்க்கும் மர்மம் என்னவிற்க்கு அபிநயம் பிடித்தார் உடனே எல்லோரும் அவரை பத்மினி போல் இருக்கிறது எனப் பாராட்டித் தள்ளினார்கள். அன்றைக்கு என்ரை டீவி ஸ்ரக் ஆனது அதன் பின்னர் மானாட மயிலாட பக்கம் ரிமோட்டில் மாத்தினால் வேறு சனல்களுக்கு மாறுகிறது.
//வர்மா said...
உதுக்குமுந்தினபோட்டியிலையும் பாம்புக்கை படுத்தபிள்ளை பாம்முக்கு தண்ணிகாட்டினது.//
ஓம் ஓம் அந்தப் போட்டியை நானும் பார்த்தேன்.
//உப்பிடி ஒருபோட்டி நடத்தவேணுமெண்டு நானும் நினைச்சனாந்தான். நான் ரெடி பதிவுபோடுற பொடியள் நீங்கள் ரெடியே?//
ஆஹா தமிழ்ச்சங்கத்திலை நடத்தினால் போச்சு புல்லட் ஆதிரை எல்லாம் நல்லாப் பாம்பு பிடிப்பார்களாம். ஆனால் முதலில் நீங்கள் ஒரு டெமோ செய்துகாட்டணும்.
வாய்ப்பாடி குமார் said...
இதக் கூட எதோனு உட்டறலாம். ஆனா இதுக்கெல்லாம் முன்னோடி ஒருத்தர் இருக்காரு. அவர்தான் விஜய் டிவீக்காரரு. அவிங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியல சாமி.
நைட்டு 9 மணீன்னு நெனைக்கிறேன். பாத்தா ஆறு ,ஏழு புள்ளைங்களா ஏணில ஏற வைச்சு அங்கே பாம்பை படமெடுக்க வைக்கிறது. அதை தொட வெக்கிறது. அதுமில்லாம போனவாரம் கண்ணாடி பொட்டிக்குள்ள புள்ளைய படுக்க வெச்சு அங்க பாம்புகள போட்டு எத்தன நேரம் தாங்குறாங்க. எத்தன செகண்டு தாங்கறாங்க அப்படினு நோட் பண்றது.
இதெல்லாம் தேவையானு கேட்டா அணு அளவும் பயம் இல்லைனு புரோகிராம் தலைப்பு வேற.
ஆனா ஒண்ணு பாம்பு கொடுத்து வெச்சது. எங்கெங்கியோ ஊருது. ம்ம் பாம்புக்கு ஒரு நேரம். நம்ம கண்ணுலதான் பாத்துக்கோணும்.
பணம் வருதுன்னா பெனாயில கூட குடிப்பாங்க நம்ம சின்ன திரை ஆளுங்க.//
Blogger LOSHAN said...
அன்புள்ள குமாரு.. நான் கூடப் பார்த்தேன் இந்தக் கூத்தை.. வெறுத்துப் போச்சு.. அருவருப்பும் அசிங்கமும்.. இதைப் பற்றி வந்தியத்தேவன் கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு.. போய் கும்முங்க..
அதிரடி ராணிகளாம் .. அலட்டல் கேசுங்க..
Kumar Said..
என்ன பண்ண எல்லா டிவியையும் கெடுக்கறதே விஜய் டிவிக்காரங்கதான்.
தடை பண்ண வழியே இல்லையா ? சுதந்திர தினத்தன்னிக்கு தமிழ் நாட்டுல பள்ளிகளில் சாகச நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாதிரி ஏதாவது பண்ணோனும்.
Post a Comment