விநாயகருக்கு நேர்ந்த கதி.

விநாயகருக்கு நேர்ந்த கதி.

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது.
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.

இனி மின்னஞ்சலைப் படியுங்கள்.

Truth Hurts-Wake Up Call !

IDOL Worship ?
or
IDLE Worship ?
or
IDEAL Worship ?


After immersion...?


The Day after ...



Would you like your Gods bulldozed like garbage?



And treated like this?


Or dumped like this ?



Left to rot for scavengers to feast?



Lying at your feet … Helpless … Abandoned by worshipers


Maimed ? Desecrated ?

And you create a hue and cry when some statue in your city get Desecrated ?

You burn down buses and call for bands?



Was that statue a God?
Or
Is this God only a statue ?
You decide



Wake up

இந்துக்களே இனியாவது விழிமின் எழுமின்

20 கருத்துக் கூறியவர்கள்:

கோவி.கண்ணன் சொல்வது:

:))

உசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டதால் வயிறு எரிவாதாக ஒருவர் எழுதி இருந்ததை படித்தேன். அவர்களுக்கெல்லாம் இதெல்லாம் கண்ணில் படாது.

வந்தியத்தேவன் சொல்வது:

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் கோபி கண்ணன் அவர்களே.
தமிழ் சினிமாவில் இந்து மதத்தை அவமதிப்பதுபோல் வேறு யாரும் அவமதிப்பதில்லை,. ஆனால் படம் தொடங்கும்போதும் முடியும் போதும் மட்டும் பூஜை போடுவார்கள்.

ஜெகதீசன் சொல்வது:

பாவம் விநாயகர்....

"கோவி.கண்ணனை" "கோபி கண்ணன்" ஆக்கிவிட்டீர்களே..... :)

கூடுதுறை சொல்வது:

ஒவ்வொரு வருடமும் நாத்திகர்கள் அலரும் அலறல்தான் இது.

பலமுறை ஆன்மீக அன்பர்கள் இதற்கு பதில் அளித்து விட்டனர்.

விஜர்ண பூஜை செய்துவிடுவதால் விநாயாகரை நீர்நிலையில் கரைக்கலாம்.

ஆனால் அவற்றை முழுமையாக செய்யவேண்டும். நம் மக்கள் பெரிய சிலை செய்யும் ஆர்வம் அதை கரைப்பதிலும் இருக்கவேண்டும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்வது:

இதைப் பலவருடங்களாகப் படமாகப் பார்க்கிறேன். இவர்கள் பக்தியே புரியவில்லை;இதை விடப் பிள்ளையாரை அவமதிக்க முடியாது. ஏனைய மதத்தவர்களுக்கு நம் நம்பிக்கையில் இதைப் பார்த்தபின் எப்படி மதிப்பு வரும். கடல்நீர் அடையும் அசுத்தம் போதாதென இது வேறு...
ஏதோ இந்தக் கூத்து நம் ஈழத்தில் இல்லையென மகிழ்வோம்.( நான் கண்டதில்லை)
அப்பு ராசாக்களே...அங்கேயும் இந்தக் கேலிக் கூத்தைத் தொடங்கிவிட வேண்டாம்.

தாசன் சொல்வது:

இந்து மதத்தின் முடிவு இனி கடல்லா? மதத்தை பேணுவதற்கு எத்தனையோ அமைப்புகள். இவர்கள் எல்லாம் நிந்திரையோ?

வந்தியத்தேவன் சொல்வது:

//கோவி.கண்ணனை" "கோபி கண்ணன்" ஆக்கிவிட்டீர்களே..... :)//

நன்றிகள் ஜெகதீசன்
தட்டச்சு செய்யும் பொழுது தவறுதலாக கோவி கண்ணன் கோபி கண்ணனாக மாறிவிட்டார். ஆனால் அதற்க்கு அவர் கோபிக்கவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் ஜோகன் மற்றும் தாசன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

//ஏதோ இந்தக் கூத்து நம் ஈழத்தில் இல்லையென மகிழ்வோம். //

ஜோகன் அண்ணாச்சி இந்தக் கொடுமை ஈழத்தில் இல்லை. இங்கே சதுர்த்தியை திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் SCSsunder மற்றும் தாசன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

நான் நாஸ்திகன் அல்ல. விநாயகரை இப்படி அவமதிப்பதை என்னால் சகிக்கமுடியவில்லை.

Unknown சொல்வது:

இதற்கு காரணம் பெரும்பாலான மக்களின் அரியாமையும் மற்றும் அதை பயன்படுத்தி அந்த அப்பாவி மக்களிடம் மேலும் அறியாமையை வளர்த்து அதை ஓட்டு வங்கிகளாக மாற்றத் துடிக்கும் சில அரசியல் கட்சிகளும் அத்தகைய அமைப்புகளே காரணம். இத்தகைய ஜொலிக்கும் நிறமுடைய விநாயகர்கள் மராத்தியர்களிடமும் மற்றும் வட இந்தியாவிலும் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் தென்னிந்தியாவில் இந்த வழக்கம் பறவுவது புதிது. நான் சிருவனாக இருந்தபோது கரையும் மண் விநாயகர்களையே அனைவரும் உபயோகிதார்கள். எல்லாம் நல்லபடியாக இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கரையாத கலர் வினாயகரை பயன்படுத்திவிட்டு வீசினால் பல புள்டோசர்களையும் பெரிய அரவை இயந்திரங்களையும் இறக்குமதி செய்யவேண்டி இருக்கும்.. பக்தர்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க.

கோவி எனும் கோவிந்து

Thamizhan சொல்வது:

எது நடக்குமோ அது நன்றாகவே நட்க்கும்.
பிள்ளையாரைச் செய்வோம்,உடைப்போம்.கரைப்போம் பாதியிலே விடுவோம்.
ஆனால் பூணூலுக்கு வரும்படி ஒழுங்காகக் கொடுப்போம். அவர்கள் மற்ற "இந்து"க்களுக்கு மூளை இல்லாததை நன்கு பயன் படுத்திக் கொண்டு நன்றாக நடந்து கொண்டே இருப்பார்கள்.

Anonymous சொல்வது:

பிள்ளையார் இந்த நிலையை அடைவதற்கு தான் ஊர்வலம் எடுத்து, மாற்று மதத்தினரை பற்றி கேவலமாக கோஷம் எழுப்பி அந்த ஊர்வலத்தில் கலவரம் எல்லாம் உண்டு பண்ணுகிறார்களோ?

லெனின் பொன்னுசாமி சொல்வது:

என் அண்ணன் வந்தி என்று கூறிக்கொள்வதை பெருமையாக நினைக்கிறேன்..

நல்ல பதிவு.

Thamizhan சொல்வது:

பொம்மை ஊர்வல்ம் கூச்சல் குழப்பமிவை
நாலுங் கலந்து நாங்கள் செய்வோம்
கோல்ஞ்செய் துங்கக் கலர் முகத்து இளிச்சவாயா
போட்டுடைப்போம் போய்வா நீ!

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கு நன்றிகள் திரு கோபி மற்றும் அனானி அவர்களே.
என் அன்புத்தம்பி பூக்குட்டிக்கு நீ கொடுத்த ஆதரவிலும் ஊக்கத்திலும் தான் நானும் ஏதோ தானோ என எழுதுகின்றேன். என் ஒரு நல்ல எழுத்தாளன்(?) என மற்றவர்கள் சொன்னால் அதில் பெரும் பங்கு உன்னைத் தான் சாரும்.

லீனாரோய் சொல்வது:

நல்லதொரு ஆக்கம் வந்தி.

கடவுளிடம் மனிதர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத கோபம் உண்டு.

அந்தக் கோவத்தை அவன் ஏதோ ஒரு வகையில் வெளிக்காட்டிக் கொள்கிறான். இந்த நிகய்வு அவனுக்கு ஒரு வடிகாலாகிறது.
நல்ல காலம் கடவுள் நேரில் வரவில்லை.
வந்தால்.........

Anonymous சொல்வது:

மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பருவத்திற்கேற்ப ஏதேதோ விளையாட்டுகள் விளையாடிக் காலத்தைக் கழிக்கிறான். பயமும் ஆசையும் கொண்ட அறிவிலிகளுக்கு கடவுள் பொம்மைகளே விளையாட்டுப் பொருட்களாகின்றன. உயிருக்குப் பயந்து எப்படி எப்படியோ ஈழத்தை விட்டு வெளிநாடுகளில் வந்துவாழும் தமிழர்களும் இநத வெக்கக்கேட்டைச் செய்துத் தங்கள் முட்டாள் தனத்தைப் பறைசாற்றிக் கொள்வதைக் காணுவதைவிட பெருங் கொடுமை வேரொன்றுமில்லை< துளசி.

வந்தியத்தேவன் சொல்வது:

//உயிருக்குப் பயந்து எப்படி எப்படியோ ஈழத்தை விட்டு வெளிநாடுகளில் வந்துவாழும் தமிழர்களும் இநத வெக்கக்கேட்டைச் செய்துத் தங்கள் முட்டாள் தனத்தைப் பறைசாற்றிக் கொள்வதைக் காணுவதைவிட பெருங் கொடுமை வேரொன்றுமில்லை//

வாருங்கள் துளசி
உங்கள் பதிவில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. ஈழத்தில் இப்படி விநாயகரைக் கரைப்பதில்லை. அத்துடன் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த எந்த நாடுகளிலும் இந்த வேலை செய்ததில்லை. வீணாக ஏன் தெரியாத விடயத்தில் மூக்கை நுழைக்கின்றீர்கள். விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று கடலில் கரைப்பது இந்தியாவில் மட்டுமே நடக்கின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கும் கருத்துக்களும் நன்றிகள் லீனா அண்ணா.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வருடாவரும் இப்படித்தான் வந்தியத்தேவன். இந்தத்தடவை தான் இணையத்தில் நீங்கள் வெளிக்கொண்டுவந்திருக்கிறீர்கள். இலங்கையில் இரத்தினபுரி நகரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இப்படி விநாயகர் சிலையை களுகங்கையில் கரைத்தார்கள்.மறுநாள் அதனைக் காலால் உதைத்துவிட்டு சென்றார்கள்.அவர்களுக்கும் கடவுள் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்...