சுதந்திரத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?
நாளை இந்தியாவின் 60வதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு ஜோராக களை கட்ட இருக்கிறது. சகல டீவிகளிலும் அரை மணித்தியாலம் சுதந்திரத தினம் பற்றி யாரோ பாடுகிறார்கள் அல்லது கதைக்கிறார்கள். பின்னர் சகல நிகழ்ச்சிகளும் சினிமா சினிமா. ட்ரையிலர்களைப் பார்த்தாலே புரியும்.
சன் டீவியில் சிறப்பு வணக்கம் தமிழகத்தில் நடிகை சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர் இந்திய சுதந்திரத்துக்கு என்ன செய்தார்?
ஜெயா டீவியில் நடிகை சதா (தமிழ் தெரியாது) ஆங்கிலத்தில் பேட்டி.
கேடிவியில் நடிகை ஷெரின் பேட்டி.
விஜய் டீவியில் சரோஜா சாமா நிக்காலோ என்ற சென்னை 28ன் நூறாம் நாள் விழா.
மற்றும்படி வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா விஜய்யில் லியோனி பட்டிமன்றம்.
சன்னில் காலையில் ஸ்ரீ காந்த் சினேகாவுடன் ஆடிப்பாடிய பார்த்தீபன் கனவு படம் . சுதந்திர தினத்துக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம். பாரதியார் கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களைப் போடலாம். ஜெயாவில் பாலசந்தரின் பொய். சன்னில் மீண்டும் ரீமெக் மன்னன் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் படம்.
சுதந்திரதினம் என்பது இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டது. பொதிகையில் மட்டும் சுதந்திரதின விழா நேரடியாக ஒளிபரப்புவார்கள்.
நல்ல காலம் பாரதி இன்றில்லை இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த நிலைகெட்ட திரையுலகை நினைத்துவிட்டால் எனப்பாடியிருப்பார்.
வேதனையுடன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்
-
*கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த
இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து
ஓய்வுபெற...
2 days ago
6 கருத்துக் கூறியவர்கள்:
வந்தியத்தேவன் ஐயா!
டி.வி காரவங்களுக்கு நிகழ்ச்சியோ அதில் வருகிற விசயங்களோ அல்லது எடுத்து நடத்துற ஆட்களோ முக்கியமில்லைங்க. நிகழ்ச்சிகளை எத்தன பேரு பாப்பாங்க இங்கிறதுதான் கவலையே. அவங்களுடைய பார்வையாளர் அளவுகோள் காட்டுற தரத்த வெச்சிதான் ஐயா விளம்பரத்துக்கு காசு அதிகம் வாங்கறதும் கொறச்சி வாங்கறதும். மத்தது எல்லாம் ச்சும்மா உல்டா சார்.
யாருக்கிட்ட எதஎத எதிர்பாக்கனுங்ற வெவஸ்த தெரியாம போயிடுச்சிங்க உங்களுக்கு. கடைசியில உங்கள நெனச்சாதான் பாவமா இருக்குதுங்க.
இந்தமாதிரி எல்லாம் காமெடி பண்ணாதீங்க. அப்புறம் நான் அழுதுடுவேங்!
மரியாதையுடன் மாசிலா.
நன்றிகள் திரு மாசிலா அவர்களே
sivagirirajan@gmail.com
Don’t worry sir why do you consider about cine field and TV Channels. I will not consider the cine peoples as human beings because they are slowly corrupting our society they where slowly changing our culture to western because only western peoples gives importance for fun they live for fun that is their policy is “Work for week end” . but we are living for love . love parents, love family, love Childs, love society , love language , love religious . So when our culture becomes like western they can sell their product [masala cenima] very well . And so on. They are money minded. The true Indians and the true tamilan always remember our historic heroes . so be cool we are here
நன்றிகள் திரு கிரி அவர்களே உங்கள் போஸ்ட் மூன்று தரம் பதிவாகிவிட்டது என்னுடைய தவறுதான். அதனை நான் அழித்துவிட்டேன்.
Post a Comment