ஓய்வெடுங்கள் சச்சின்
சமீபகாலமாக சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டம் குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக சோபிக்க வில்லை. இன்று சண்டிகரில் நடந்துகொண்டிருக்கும் போட்டியில் கூட ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக விளையாடி (ஒரு கட்டத்தில் சச்சின் 22 பந்துகளுக்கு வெறும் 3 ஓட்டங்கள் மட்டும் பெற்றிருந்தார்), பின்னர் சற்று அடித்து அதிலும் 119 பந்துகளில் வெறும் ஏழே எழு நான்கு ஓட்டங்களுடன் மொத்தமாக 79 ஓட்டங்கள் எடுத்தார். 119 பந்துகளில் சச்சின் விளையாடாமல் அல்லது ஓட்டம் எடுக்காமல் விட்ட பந்துகளின் எண்ணிக்கை 73 பந்துகள். ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 73 பந்துகளை சச்சின் வீணாக்கினார் என்பது கிட்டத்தட்ட 12 ஓவர்களை சச்சின் வீணடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் மூத்த வீரர்கள் பற்றி திலிப் வெங்சகார் கூறிய கருத்து உண்மையாகும் போல் தெரிகின்றது. மூத்த வீரர்கள் இளம் தலைமுறைக்கு இடம் விட்டு விட்டு மரியாதையாக ஒதுங்குவது நல்லது.
இன்றைய சச்சினின் ஆட்டம் தனது இடத்தை தக்கவைக்க ஆடியதுபோல் உள்ளது. இறுதி நேரத்தில் மகேந்திர சிங் டோணியும் ரொபின் உத்தப்பாவும் ஆடியபோல் மூத்த வீரர்களான சச்சினும் கங்குலியும் ஆடவில்லை. இருவரும் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே ஆடியதுபோல் ஆடினார்கள். அடுத்த மூத்த வீரரான ராகுல் ராவிட் யார் என்ன சொன்னாலும் என் இடத்தை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன் என்ற எண்ணத்தில் 14 பந்துகளில் 13 ஓட்டங்களை மட்டும் எடுத்து (அதில் 7 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை ) அவுட்டாகினார்.
கங்குலியும் தான் சச்சினுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் 59 பந்துகளீல் 41 ஓட்டங்களை மட்டும் எடுத்தார். இதில் 46 பந்துகளுக்கு ஓட்டம் ஏதும் எடுகவில்லை.
ஆரம்பத்தில் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஏதோ டெஸ்ட் மேட்ச் நடக்கின்றதோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்.
சச்சின் உங்கள் சாதனைகளை நாங்கள் மறக்கவில்லை. அதே நேரம் உங்கள் சாதனைகளை முறியடிக்கவும் வருங்கால வீரர்களுக்கு நீண்டகாலம் எடுக்கும். அதனால் மிகவும் மரியாதையாக ஒரு நாள் போட்டியிலிருந்து விலகி புதிய இளம் சிங்கங்களுக்கு வழிவிடுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல கங்குலி ராவிட் போன்ற ஏனைய மூத்த வீரர்களுக்கும் பொருந்து. நீங்கள் மூவரும் வழி விட்டதினால் தான் இளம் வீரர்களால் 20க்கு 20 போட்டியில் சாம்பியன்ஸ் ஆக முடிந்தது.
வாழ்க சச்சின் வளர்க அவர் சாதனைகள்.
ஸ்பெயினின் தங்க மகன் ரஃபெல் நடால் ஓய்வு பெற்றார்
-
மலகாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் களிமண் ராஜா
ரஃ...
20 hours ago
32 கருத்துக் கூறியவர்கள்:
உங்கள் கருத்துக்கள் அருமை !
ஒருவருடத்திற்கு முன்பே இதே கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.
வந்தியதேவன்,
எல்லா பந்துகளையும் அடித்து ஆடுவதுதான் ஆட்டம் என்று எண்ணி விடாதீர்கள். இன்றைய ஆட்டம் இந்தியாவிற்கு மிக முக்கியமான ஆட்டம். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ள ஆட்டம். ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. அந்த நோக்கில் பார்க்கையில் சச்சின், கங்கூலி இருவரின் ஆட்டமும் பொறுப்பானதே. இல்லை என்றால் தோனி, உத்தப்பாவினால் அவ்வளவு எளிதாக அழுத்தமின்றி விளையாடி இருக்க முடியாது. விக்கெட் கையிலிருந்ததே அவர்கள் தயக்கமின்றி ஆடக்காரணம் என்பதை நினைவில் கொள்க. அணியில் ஒவ்வொருவருக்கு ஒரு பணி இருக்கிறது. அவரவர் அதைச் செய்தால் போதுமானது. ஏன் ஒரே மாதிரி செய்யவில்லை என்று கேட்பது சரியானதாக இருக்காது
வருகைக்கு நன்றிகள் கோவி கண்ணன், முத்துகுமரன்.
நண்பர் முத்துகுமரன் நீங்கள் சொல்வதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவர்கள் இருவரும் சாதாரண வீரர்கள் அல்ல நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற வீரர்கள். எதற்க்கும் இன்றைய ஆட்டம் முடிவடைந்த பின்னர் என் முழுமையான கருத்தைச் சொல்கிறேன்.
வந்தியத்தேவ, இது ஒருநாட் போட்டி. இருபது20 அல்ல. சச்சினுக்கு வக்காளத்துக்கு வாங்க நான் வரவில்லை. இந்திய அணியின் கிழடுகள் ஓய்வெடுப்பது புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும். ஆனால் சச்சின் மிக் நன்றாகவே ஆடிய ஓர் ஆட்டத்தைச் சுட்டிக் காட்டி ஓய்வெடுக்கச் சொல்வது நகைச்சுவை||
இங்கிலாந்திற்குஎதிரானஆட்டங்களில்நமதுமானத்தை காப்பாற்றியதுயாரோ ????
ஒருமூன்றுஆட்டங்களில்ரன்எடுக்கவில்லை என்றவுடன்ஒருஆட்டக்காரரை அணியில்இருந்துநீக்கவேண்டும்என்றுகூறுவதுடூ மச்
//உங்கள் கருத்துக்கள் அருமை !
ஒருவருடத்திற்கு முன்பே இதே கருத்தைச் சொல்லி இருக்கிறேன்//
அப்படிஅவர்ஓய்வுபெற்றிருந்தால்இங்கிலாந்தில்7-0 என்றுமானம்போயிருக்கும்
எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி வந்தி. சச்சின், கங்குலி, டிராவிட் எல்லாம் புதியவர்களுக்கு வழிவிட்டு அவர்களை தக்க முறையில் செயல்பட ஆலோசனை சொல்லலாம்.
கடைசி 10 ஆட்டங்களில்
Mat Runs HS BatAv 100 50
10 433 99 43.30 0 4
17 v Eng
99 v Eng
8 v Eng
55 v Eng
71 v Eng
94 v Eng
30 v Eng
0 v Aus
16 v Aus
43 v Aus
கடைசி 15 ஆட்டங்களில்
Mat Runs HS BatAv 100 50
15 637 99 42.46 0 6
0 v SL
4 v Ire
99 v SA
93 v SA
8 v SA
17 v Eng
99 v Eng
8 v Eng
55 v Eng
71 v Eng
94 v Eng
30 v Eng
0 v Aus
16 v Aus
43 v Aus
Ithe thaane pa Gnaani kooda sonnar?
பூக்குட்டின் பிரியன் மற்றும் அனானி உங்கள் வருகைக்கு நன்றிகள்.
எப்படியோ இந்தியா ஜெயிச்சிடுச்சு. இதற்கான காரணம் இறுதி நேரத்தில் தோணி உத்தப்பாவின் அதிரடி ஆட்டம். பந்துவீச்சாளர்களில் பதான் முரளி கார்த்திக் ஹர்பஜனின் பந்துவீச்சு. இன்றைய ஆட்டனாயகனாக டோணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
//Ithe thaane pa Gnaani kooda sonnar?//
அனானி இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை
Please note that in the past 10 matches, India has own only when Sachin and Ganguly has scored well....
All these Yuvrajs, Uthappas and Dhonis were there in the past three matches also
But when the openers were out early these guys were exposed....
Age is not a criteria
Please list India's last 6 one day victories and see who has contributed in these matches
Then you can decide who has to be sent out of the team
தோனி தானே அணித் தலைவர்? அவர் நினைத்தால் அடுத்த வரும் போட்டிகளில் அவரும் உத்தப்பாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கலாமே? அவர்களும் தான் ஆடிப் பார்க்கட்டுமே முதல் 10-15 ஓவரில் பந்து எப்படி எகிரும் என்று!
வந்தியத்தேவன், உங்கள் கருத்துக்களோடு நான் ஒத்துப் போகவில்லை என்றாலும் உங்கள் எழுத்தில் இருக்கும் நாகரீகத்தை நான் பாராட்டுகின்றேன்.
Leeading Run Scorers for India in 2007
Sachin - 1026
Sourav Ganguly - 1,065 runs
யார் அணியில் நீடிக்க வேண்டும் யார் நீக்க பட வேண்டும்...
--
By the way, India have not won against australia in the past 12 matches. Before that, when India won in Brisbane, Sachin scored 86 and VVS Laxman 103
India's middle order of Yuvraj and Co is totally waste against Good Teams and only when the Senior score some runs they are able to capitalise
கடந்த 17 ஆட்டங்களில், இந்தியா, 8 முறை மட்டுமே வென்றுள்ளது
அதில் இரு முறை மட்டுமே சச்சின் 50 அடிக்காமல் வென்றுல்லோம். (ஒரு அட்டம் அயர்னாந்துடன், இன்னொரு அட்டத்தில் தேவைப்பட்ட ஓட்டங்கள் 149 மட்டும்)
சச்சின் மற்றும் கங்குலிக்கு வயசாகிவிட்டது ...ஆனால் அவர்களை விட அதிக ஒட்டங்களை எடுக்க கூடிய வீரர்கள் இல்லாதது இந்தியாவின் துரதிருஷ்டம் தான்
புருனோ உங்கள் புள்ளி விபரங்களுக்கு நன்றிகள்
நான் ஏன் சச்சினை ஓய்வு பெறச் சொல்கிறேன் என்றால் அவரிடம் முன்னைய அடித்து ஆடும் ஆற்றல் குறைந்ததனாலும் வெங்சகார் போன்றவர்கள் தற்போது அவரைக் குறை சொல்வதனாலும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான சச்சின் ரசிகர்களின் மனம் புண்படுகின்றது. ஆகவே சச்சின் இனி வரும் ஏதாவது ஒரு மேட்சில் சதமடித்தபின் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தால் சிங்கம் வெற்றியுடன் தான் போகின்றது என நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். கடந்த ஆண்டு கங்குலிக்கு நடந்த நிலை இப்பொழுது சேவாக்கு ஏற்பட்ட நிலை சச்சினுக்கும் வரக்கூடாது என்பதுதான் என் ஆதங்கம்.
நேற்றைய ஆட்டத்தில் சச்சின் செய்த தவறுகளைப் பாருங்கள் எத்தனை பந்துகளை வீணடித்தார். முத்துகுமரன் சொல்வது போல் இது பின்னால் வரும் வீரர்களுக்கு சிறந்த அடித்தளத்தை இட்டுத் தந்ததை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் கொஞ்சம் அதிரடியாக் ஆடி இருந்தால் இந்தியா 300 ஓட்டங்களைத் தாண்டியிருகும் நாமும் நகத்தைக் கடித்துக்கொண்டு இறுதி ஒவர் வரை காத்திருக்கத் தேவையில்லை.
//தோனி தானே அணித் தலைவர்? அவர் நினைத்தால் அடுத்த வரும் போட்டிகளில் அவரும் உத்தப்பாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கலாமே? அவர்களும் தான் ஆடிப் பார்க்கட்டுமே முதல் 10-15 ஓவரில் பந்து எப்படி எகிரும் என்று!//
சாப்பல் இருந்திருந்தால் இப்படிப் பரிசோதனை செய்திருப்பார். கங்குலி சச்சின் ஜோடி போல் ஆரம்ப ஆட்டக்காரர்களாக சிறந்த ஜோடி இந்தியாவில் வேறை யாரும் இல்லை. நேற்றைய மேட்சில் தற்சமயம் கங்குலியுடன் காம்பீர் இறங்கியிருந்தால் சிலவேளைகளில் முடிவு வேறை மாதிரி ஆகியிருக்கும்
//வந்தியத்தேவன், உங்கள் கருத்துக்களோடு நான் ஒத்துப் போகவில்லை என்றாலும் உங்கள் எழுத்தில் இருக்கும் நாகரீகத்தை நான் பாராட்டுகின்றேன்.
//
திரு இலவசக் கொத்தனார் உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள். அப்படியே எனக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுக்கிறது.
சச்சின் போன்ற ஓர் சிறந்த வீரரின் ஓய்வினைப் பற்றி பேச நம்மை போன்ற சாதாரண நபர்கள் பேசுவது சரியல்ல என்பது என் கருத்து. இது அவரது மதிப்பினைக் கெடுக்கும் செயல் கூட.
சென்ற தொடரில் கூட நன்றாக தான் விளையாடினாரே? அதிகபட்ச ரன்கள் குவித்தவரும் அவரே இல்லையா?
அவரைத் தவிர, ஏன் இது அவரது மனைவிக்கு கூட பொருந்தும், அவரது ஓய்வினைப் பற்றி முடிவெடுக்கவும், பேசவும் மற்றவர்களுக்கு உரிமையில்லை.
எவ்வளவு பெரிய வீரர்? எனக்கு பி.சி.சி.ஐ அணி தோற்றாலும் கவலையில்லை. சச்சின் ஆடுவதைப் பார்த்தால் போதும்..
ஒருத்தர் இருக்கும் போது அவரோட அருமை தெரியாது... என்ற பழைய வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரால் ஆட முடியும் என்று தெரியவில்லை. அது வரை நாம் கொடுத்து வைத்தவர்கள்.
//எவ்வளவு பெரிய வீரர்? எனக்கு பி.சி.சி.ஐ அணி தோற்றாலும் கவலையில்லை. சச்சின் ஆடுவதைப் பார்த்தால் போதும்..//
நீங்கள் மட்டுமல்ல ஸ்ருசல் நாமும் தான் சச்சின் மைதானத்தில் இறங்கினாலே எதிரணி வீரர்களுக்கு கிலி பிடிக்கும். மக்ராத் கூட பந்துவீசும் போது தடுமாறுவார்.
என்னொரு கவலை என்றால் சச்சின் ஆடும்பொழுது இந்தியா இதுவரை உலகக் கிண்ணம் கைப்பற்றவில்லை என்பதுதான். 2003ல் சாதித்திருக்கலாம் ஆனால் துரதிஸ்டவசமாக முடியவில்லை.
என்ன வந்தி.. ஞானியை விட தர்ம அடி உனக்கு கிடக்குது போல இருக்கு.. சந்தோசமா இருக்கு..:D
வயதாவது என்பது இயல்புதான். சச்சினிடம் பழைய வேகம் இல்லை. முன்பிருந்த வேகத்தை விட படிப்படியாக குறந்துக்கொண்டுதான் வருகிறது. இனி அது இன்னும் அதிகரிக்கும்.. லேசான பயமும் உதறலும் அவர் ஆட்டத்தில் தெரிகிறது.. ஏன் நேற்றே பாருங்கள் எத்தனை பந்துகளை தின்றுவிட்டு அந்த ஸ்கோர்..? வழக்கமான முன்னால் சச்சினாக இருந்திருந்தால் அது கடினமே..
இப்போதும் அணியில் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் அளவு ஆட்டம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை.
// தவறுகளைப் பாருங்கள் //
சச்சின் அடித்து ஆடி அவுட்ஆனால் நமது அணியின் பாடு என்ன என்பதை தெரிந்த பின்னும் அவர் நிலைத்து ஆடுவதை தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்....
//ஆனால் அவர் கொஞ்சம் அதிரடியாக் ஆடி இருந்தால் இந்தியா 300 ஓட்டங்களைத் தாண்டியிருகும் //
அவுட் ஆகியிருந்தால் 250 தாண்டியிருக்க மாட்டோம்.....(refer the previous match scores)
//நாமும் நகத்தைக் கடித்துக்கொண்டு இறுதி ஒவர் வரை காத்திருக்கத் தேவையில்லை.//
கண்டிப்பாக நகம் கடிக்க தேவையில்லை.... எனென்றால் தோல்வி உறுதி !!!!!!
//எவ்வளவு பெரிய வீரர்? எனக்கு பி.சி.சி.ஐ அணி தோற்றாலும் கவலையில்லை. சச்சின் ஆடுவதைப் பார்த்தால் போதும்..//
அவர் சிறந்த வீரர் என்பாதாலொ அல்லது அவரது பழைய சாதனைகளுக்காகவோ அவர் ஆட வேண்டும் என்று நான் கூறவில்லை... ஆனால், இன்றைய இந்திய அணியில் (இந்த வயதிலும்) சச்சின் தான் சிறந்த வீரர் என்பது வருத்தப்படவேண்ட்ய விஷயம்
சச்சின் 50 எடுக்காவிட்டால் irelandஐ தவிர இதர அணிகளிடம் தோல்வி (அதுவும் படு தோல்வி) அடைய வேண்டிய நிலையில் அணி இருக்கிறதே.....
http://bruno.penandscale.com/2007/03/what-about-dropping-sachin.html
//அவரிடம் முன்னைய அடித்து ஆடும் ஆற்றல் குறைந்ததனாலும்//
உண்மை..Sachin of today is 50 % of Sachin of 1998... ஆனால் அவரை விடஅதிகம் அடிக்க கூடிய வீரர்கள்இல்லையே....... but still he is the best batsman in Indian Team :) :) :)
இது குறித்து நான் 6 மாதங்களுக்கு முன்னர் எழுதியது
http://bruno.penandscale.com/2007/03/what-about-dropping-sachin.html
http://bruno.penandscale.com/2007/03/selectors-to-be-trained-to-use-evidence.html
இன்றுகூட இந்த நிலைமை மாறவில்லை என்பதுமிகப் பெரிய வருத்தம்
டெம்ப்ளேட் நல்லா இருக்கு வந்தி அண்ணா..:)
இன்றைய ஆட்டத்தில் சச்சின் 47 ஓட்டங்கள் எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா மொய் (101) எழுதியிருக்கும்! :)
இன்றைய (11.10.2007) ஆட்டத்தை பார்த்தீர்களா
நன்றிகள் டாக்டர் புருனோ மற்றும் மர்மவீரன்.
இன்று சச்சின் இல்லையென்றால் இந்தியாவின் நிலை மகா கேவலமாக இருந்திருக்கும்.
டாக்டர் புருனோ உங்களின் புள்ளிவிவரங்களுக்கு மிகவும் நன்றிகள். உங்கள் வலையிலும் சென்று உங்களது பதிவைப் பார்த்தேன். சச்சினின் தேவை இப்பொழுது நாட்டுக்கு மிகவும் தேவையாக இருக்கின்றது. ஆனாலும் சில வேளைகளில் பிசிசிஐ சச்சினை தகுந்த மரியாதை கொடுக்காமல் வெளியேற்றினாலும் வெளியேற்றும் காரணம் அவர்களுக்கு குறிப்பாக வெங்சகாருக்கும் சச்சினினுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்.
சச்சின் ஓய்வு பெறுவதின் பார்க்க வெகு விரைவில் ராவிட் ஓய்வு பெறுவார் போல் இருக்கின்றது.
சச்சின் விடயம் சர்ச்சைக்குரியது. ஒரு நாட்டுக்கு அதிக ரண் எடுத்த சாதனை. கூடிய சதங்கள் எடுத்த ஆட்டக்காரர். கூடிய அரைச்சதம் அடித்தவர் என்று அடுக்கி கொண்டே போகலாம். அவரவர் தாங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு விட்டு கொடுத்தாலே மாத்திரமே நல்லது.
இந்திய அணியில் இளைஞர்களுக்கு வழிவிட்டு சச்சின், கங்குலி, ராவிட் விலகவேண்டும்
அக்ரம் கூறுகிறார்
டெண்டுல்கர், கங்குலி, ராவிட் ஆகியோர் இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகவேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பபதாவது;
இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 20 ஓவர் உலகக்கிண்ணத்தை வென்றது. இளமை பொங்கும் அந்த அணியே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஆடியிருக்கவேண்டும். அணிதோற்றாலும் கடைசிவரை போராடும் குணம் இளைஞர்களிடம் இருக்கிறது. சிரேஷ்ட வீரர்கள் வந்த பிறகு அணியின் மனோதிடம் மிகவும் நன்றாக இருப்பதாகத் தெரியவில்லை.
டெண்டுல்கர், கங்குலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் தான். இருப்பினும் அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு கட்டாயம் விலகவேண்டும். 20 ஓவர் உலககிண்ணப்போட்டியில் இந்திய அணியின் சாதனை 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியின் மீதும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
எனவே, எப்போது அணியில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பது என்பது குறித்து இந்திய தேர்வுக்குழு முடிவுசெய்யவேண்டும்.
ராகுல் ராவிட் போர்மில் இல்லை. அவருக்குப் பதிலாக முகமது கைப்பை சேர்க்கலாம். கைவ் இடம்பெற்றால் கூடுதலாக களத்தடுப்பிலும் முன்னேற்றம் கிடைக்கும். இதேபோல் இந்திய அணியில் மீண்டும் விரேந்திர ஷேவாக்கை சேர்க்கவேண்டும். அவர் 20 ஓவர் உலகக்கிண்ணப்போட்டியில் நன்றாக ஆடினார். அவர் சிறந்த ஒருநாள் போட்டி வீரர். அவரால் அந்த அணிக்கு எதிராகவும் அணியை வெற்றி பெற வைக்க முடியுமென்றார்.
வந்தி உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்
சச்சின்கூடவே கங்குலி, டிராவிட் போன்றவருக்கும் வழியனுப்பு விழா நடத்த வேண்டும்.
வயதை காரணமாக சொல்லவில்லை. இன்னமும் ஜெயசூரியா நன்றாக தான் ஆடி கொண்டு வருகிறார்..
சச்சின் கவனம் வேறு பக்கம் திரும்பி விட்டது போல தோன்றுகிறது. மும்பையில் 45 கோடி மதிப்பில் பஙகளா வாங்க போவதாக டைம்ஸில் படித்தேன்..
சென்ற ஆட்டத்தில் இந்தியா தோற்க்க காரணம் கங்குலியின் ஆமை வேக ஆட்டம் தான். அவர் தனது சுய எண்ணிக்கையை கூட்டவே விளையாடுவது போல தெரிகிறது
சச்சின் கங்குலி இடட்தை நிரப்ப தமிழகத்தின் பத்திரி நாத் முதல் பல பேர் இருக்கிறார்கள்.
Post a Comment