"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). நன்றி கானாப்பிரபா,
1976 லேயே சுஜாதாவால் கண்டுகொள்ளப்பட்ட பலவித பரிணாம கமல் என்ற ஒப்பற்ற கலைஞர்(ன்) கலைஞானி, பத்மஸ்ரீ, டாக்டர், உலக நாயகன் கமலை இன்னமும் நம்மவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்ற ஆதங்கம் எனக்கு பல நாட்களாக உண்டு. (சுஜாதா என்ன பெரிய ஆளா? எனச் சிலர் கேட்கலாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டியது அவரின் வரிகளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் மட்டுமே). இதற்கான காரணம் அல்லது அரசியல் என்ன?
முதன்மைக் காரணம்:
கமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் " சீ அவனா? என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist?) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.
2.
கமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.
3
சில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள்.
4.
வேண்டுமென்று எதிர்ப்பவர்கள்:
இந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.
5.
இறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.
இப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.
பின்குறிப்பு : இது ஒரு மீள்பதிவு. தலைப்பை மட்டும் மாற்றியுள்ளேன். கலைஞானி பத்மஸ்ரீ கமலின் பொன்விழாக் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் முதல் நாளிலேயே அவரைப் பற்றி பதிவுபோடவேண்டும் என்ற ஆதங்கத்தில் நேரமின்மை காரணமாக மீள்பதிவைப் போடுகின்றேன். கமல் பற்றிய புதிய பதிவுகள் தொடரும்.
பட உதவி ஆர்குட் கமல் குழுமம்
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
4 கருத்துக் கூறியவர்கள்:
kalai gnani kamal vaazhka
கமல் தமிழ் சினிமாவின் மோசமான வணிக சூழ்நிலகளால் பாதிக்கப்பட்ட அற்புதமான கலைஞன். கமல் கொடுத்த - ஆன்ந்த விகடனில் கமல் சரிகா பிரிவின் பின்னர் ச்வெளியான பேட்டி, தீராநதிக்கு கொடுத்த பேட்டி, விருமாண்டி பட ஒலி நாடா வெளியீடு , மற்றும் பேட்டிகள், ஜெயா டிவியில் வெளியான ஒரு பேட்டி, விஜய் டிவி செயத “கலக்கப் போவது கமல் போன்ற நிகழ்வுகள்- அவர் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.
கமல் நிஜங்க்ளை நேசிக்கத் தெரிந்த உண்மையான கலைஞன்..
அவரை கண்டு கொள்ளாமல் இருப்பது எமக்கான சாபக்கேடு தவிர வேறொன்றில்லை
சும்மா இருங்க வந்தியத்தேவன்... உங்களுக்குத் தெரியுமா கமலோட ஆரம்பகாலப் படங்களில் நம்ம அமீர் கானோட மருமகன் இம்ரான் கானோட நடிப்பின் சாயல் ரொம்பவே இருக்கும்.. முத்தக் காட்சிகளை வேலு பிரபாகரனின் காமக் கதை ஹீரோகிட்ட காப்பி அடித்தார். சூரசம்ஹாரம் படத்து மீசையை ஜே.கே. ரித்தீஷைப் பார்த்து வைத்துக்கொண்டார் தெரியுமா?...ம்ஹூம்.. கடுப்பு சகா கடுப்பு... நாயகனில் மார்லன் பிராண்டோவைக் காப்பி பண்ணினார் என்று கண்மூடிக்கொண்டு சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு ‘காட் ஃபாதர்- பாகம்-1' மார்லன் பிராண்டோ செய்தது ‘Leading Role' என்று எப்படி ஆஸ்கர் விருதுக்குழு தீர்மானித்தது என்று இன்றைக்கும் புரிவதில்லை. உண்மையாகப் பார்த்தால் ‘அல் பசினோ'வைச் சுற்றித்தான் கதையோட்டம் இருக்கும்.. நம்மவர்களில் முக்கால்வாசிப்பேர் பத்திரிகைகளில் அரைகுறையாக வாசித்த செய்திகளை வைத்து கமலை சும்மா சும்மா மட்டம் தட்டுகிறார்கள் எனபது என் கருத்து.
என்ன கமலை புறக்கணிக்கிறார்களா...? யார்.. எப்போது... கமலுக்கு உள்ள பாப்புலாரிட்டி ஒரு அமர்த்யா சென்னுக்குகோ நம் பிரதமருக்கோ கூட கிடையாது என்பதை உணருங்கள்.. அவர் மீது தாக்குதல் வருகிறது.. உண்மைதான்... காய்த்த மரம்தான் கல்லடி படும்... அதைத் தாண்டி கமல் வரவேண்டும்... அதைத்தான் அவர் செய்ய வேண்டும்.. அதை விட்டு அவரை புறக்கணிக்கிறார்கள் புலம்புவதை ஏற்க இயலவில்லை... ....... உங்கள் ஆதர்ச நாயகனாக அவர் இருப்பதால் ்அப்படித் தோன்றுகிறது...
Post a Comment