தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு சேனலில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடு நிலையான நடுவர்) நீங்களும் பங்கபற்ற விருப்பமா? உடனடியாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தேவையான தகைமைகள்:
1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.
2. தலைமயிர் நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம்.
3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம்
பெயர் கிடைக்கும்.
4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு
பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.
5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினேர்கள் என ஆண்களைக்
கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின்
விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :
கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும்.
நடனாமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம்
அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஆர்கானி போன்றவை
மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்த்பின்னர் தான் நடனம் ஆடவும்
கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.)
2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத்
தெரிந்திருக்கவேண்டும்.
3. பன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த
வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன்
பன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.
4. எனர்ஜி :கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர்
சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என
ஆடிய்வரையே ஆச்சரியப்படவைக்கவேண்டும்.
5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள்
எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல்
சொல்லவேண்டும்.
6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால்
உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.
இது தவிர வேறு வார்த்தைகள் இருந்தால் அன்பான நண்பர்களே தெரிவியுங்கள்.
மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன், மஸ்தானா மஸ்தானா போன்ற நடன நிகழ்ச்சிகள் பார்த்த பாதிப்பில் எழுதிய பதிவு இது.
வேதனையுடன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்
-
*கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த
இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து
ஓய்வுபெற...
2 days ago
8 கருத்துக் கூறியவர்கள்:
Other words used in mastana mas..
"Jive"
Used like ..
Unga dance la oru "Jive" missing.
அந்த "ஜோஷ்" இல்லை.. உங்ககிட்ட.. எல்லாம் இருந்துது.. பாடி லேங்குவேஜ் அட்டகாசம்..கெமிஸ்ட்ரி சூப்பர்.. ஆனா ஒரு "ஜோஷ்"இல்லை -- இதுவும் வழக்கமாக வரும் வாசகம்தான், ஆனால் என்ன எழவு, அந்த வார்த்தைக்குதான் எனக்கு அர்த்தம் புரியவில்லை..
சொல்ல மறந்துவிட்டேன், பதிவு நன்றாக இருந்தது, வாய்விட்டுச் சிரித்தேன், நன்றி.
Awesome and Mind blowing என்ற வார்த்தைகளும் தெரிந்திருக்கவேண்டும்.
சுரேஸ் மற்றும் அனானிக்கு வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்
//எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என
ஆடிய்வரையே ஆச்சரியப்படவைக்கவேண்டும்.
//
:-))))))
பாட்டுகள் கூட ஸ்டாண்டர்டுதான்..
அப்படிப்போடு போடு,மாம்பழமாம் மாம்பழம்,கண்ணம்மா கண்ணம்மா, என் ஆச மைதிலியே..
தலைப்பை பார்த்ததும் என்ன விசித்திரமான செய்தி இருக்கக்கூடும் என வாசித்தேன்... உண்மையை நகைச்சுவையாக தந்திருக்கிறீர்கள்..
( தாங்க முடியலப்பா இந்த டான்ஸ் தொல்ல... ஐயோ ஐயோ..! எங்க போய் முடியுமோ? )
Yes its true. where we going on..?!
Why don't these TV channels try some BFs. Thats better than this..!!!
நாயையும் நரியையும் ஒரு தரமற்ற இடத்தில் ஒப்பிட்ட வந்தியத்தேவன் ஒழிக.இது வேணுமெண்டே செய்தது போல கிடக்கு வேணாம் வலிக்கிறது................
Post a Comment